இறைவனுக்கு உனது நேர்த்திக்கடனை நிறைவேற்று
இறைவனின் ஆலயத்திற்குச் செல்லும்போது, உன் நடையில் கவனமாய் இரு. மூடரைப் போல பலி செலுத்துவதைவிட, செவிகொடுத்துக் கேட்க அங்கு போ; ஏனெனில் அவர்கள் தாங்கள் செய்கிறது தவறு என்று அறியாதிருக்கிறார்கள். யாக் 1:19எபி 12:28-29நீதி 15:8ஏசா 1:12-201 பேது 2:1-2நீதி 21:27யாத் 3:5ஏசா 66:3
இறைவனுக்குமுன் எதையாவது சொல்வதற்கு மத் 6:7நீதி 10:19ஏசா 55:9மத் 6:9பிரச 5:3பிரச 5:7ஆதி 18:27எண் 30:2-5
உன் இருதயத்தில் அவசரப்பட்டு,
உன் வாயை விரைவாய்த் திறவாதே.
இறைவன் பரலோகத்தில் இருக்கிறார்,
நீ பூமியிலிருக்கிறாய்;
எனவே உன் வார்த்தைகள் அளவாய் இருக்கட்டும்.
அதிக கவலைகள் மிகுதியாகும்போது, கனவு வருவதுபோல, நீதி 15:2பிரச 10:12-14நீதி 10:19யோபு 11:2
சொற்கள் மிகுதியானால் மூடத்தனம் வெளிப்படும்.
இறைவனுக்கு நீ நேர்ந்ததை நிறைவேற்றத் தாமதியாதே. இறைவன் மூடரில் பிரியமாயிருப்பதில்லை; உனது நேர்த்திக்கடனை நிறைவேற்று. எண் 30:2உபா 23:21-23சங் 76:11மத் 5:33சங் 66:13-14சங் 50:14சங் 119:106எபி 10:6 நேர்த்திக்கடனைச் செய்து, அதை நிறைவேற்றாமல் விடுவதைவிட, நேர்த்திக்கடன் செய்யாமல் இருப்பது மிக நல்லது. அப் 5:4உபா 23:22நீதி 20:25 உன்னை பாவத்திற்குள் வழிநடத்த உன் வாய்க்கு இடங்கொடாதே. ஆலய தூதனுக்கு முன்பாக, “எனது நேர்த்திக்கடன் தவறுதலாகச் செய்யப்பட்டது” என்று மறுத்துச் சொல்லாதே. இறைவன் நீ சொல்வதைக் கேட்டு கோபப்பட்டு, அவர் உன் கையின் வேலையை ஏன் அழித்துப் போடவேண்டும்? யாக் 1:262 யோவா 1:8யாக் 3:2பிரச 5:1-2மல்கி 2:7லேவி 5:4-6ஆதி 48:161 கொரி 3:13-15 அதிக கனவும், அதிக வார்த்தைகளும் அர்த்தமற்றவை. எனவே இறைவனுக்குமுன் பயந்திரு. மத் 12:36பிரச 12:13பிரச 8:12பிரச 5:3ஏசா 50:10-11நீதி 23:17பிரச 7:18பிரச 3:14
செல்வங்களும் அர்த்தமற்றவை
எந்த மாகாணத்திலாவது ஏழைகள் ஒடுக்கப்படுவதையும், நீதியும் உரிமைகளும் மறுக்கப்படுவதையும் நீ கண்டால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; ஏனெனில் ஒரு அதிகாரியை ஒடுக்கி ஆதாயம் பெற அவனுக்கு மேற்பட்ட அதிகாரி காத்திருக்கிறான். அவர்கள் இருவருக்கும் மேலாக இன்னும் உயர் அதிகாரிகளும் இருக்கிறார்கள். சங் 12:5பிரச 4:1பிரச 3:161 இராஜா 21:19-20மத் 13:41-42சங் 58:10-11சங் 82:1வெளி 17:6-7 நிலத்திலிருந்து பெறப்படும் இவர்களுடைய விளைச்சலை எல்லோரும் எடுத்துக்கொள்கிறார்கள்; அரசனுங்கூட வயல்வெளிகளிலிருந்தே ஆதாயம் பெறுகிறான். 1 இராஜா 4:7-23சங் 115:16ஆதி 1:29-30சங் 104:14-151 நாளாக 27:26-311 சாமு 8:12-17ஆதி 3:17-19எரே 40:10-12
பணத்தில் ஆசைகொள்கிற எவனுக்கும் 1 தீமோ 6:10மத் 6:24லூக் 12:15மத் 6:19பிரச 4:8பிரச 4:4பிரச 2:26சங் 62:10
தனக்கு இருக்கும் பணம் ஒருபோதும் போதுமானதாயிராது;
செல்வத்தில் ஆசைகொள்கிற எவனும் தன் வருமானத்தில்
ஒருபோதும் திருப்தி அடைவதில்லை;
இதுவும்கூட அர்த்தமற்றதே.
பொருள்கள் அதிகரிக்கிறபோது, 1 யோவா 2:16ஆப 2:13நீதி 23:5சங் 119:36-37பிரச 6:91 இராஜா 5:13-16பிரச 11:9ஆதி 12:16
அதைப் பயன்படுத்துவோரும் அதிகரிக்கிறார்கள்.
அவற்றைத் தமது கண்களால் பார்த்து மகிழ்வதைத் தவிர,
எஜமானனுக்கு வேறு என்ன பயன்?
தொழிலாளி கொஞ்சம் சாப்பிட்டாலும், நீதி 3:24சங் 4:8எரே 31:26சங் 127:2
அதிகம் சாப்பிட்டாலும் அவனுடைய நித்திரை இனிமையாயிருக்கும்.
ஆனால் பணக்காரனின் நிறைவோ
அவனுக்கு நித்திரையைக் கொடுப்பதில்லை.
சூரியனுக்குக் கீழே பெருந்தீமை ஒன்றை நான் கண்டேன்: பிரச 6:1-2லூக் 18:22-23ஆதி 19:14லூக் 16:22-23யாக் 5:1-4பிரச 4:8பிரச 8:9ஆதி 14:16
அதாவது, செல்வம் தன் எஜமானனுக்கே கேடுண்டாகும்படி சேர்த்து வைக்கப்படுவதும்,
அவல நிகழ்வினால் அந்தச் செல்வம் தொலைந்துபோகிறதுமே. பிரச 2:26ஆகா 1:9ஆகா 2:16-17யோபு 20:15-29யோபு 5:5மத் 6:19-20நீதி 23:51 இராஜா 14:26
அதினால் அந்த எஜமானனுக்கு ஒரு மகன் இருந்தும்
அவனுக்குக் கொடுப்பதற்கு ஒன்றுமிருப்பதில்லை.
மனிதன் தன் தாயின் கருப்பையிலிருந்து நிர்வாணியாய் வருகிறான்; யோபு 1:21சங் 49:171 தீமோ 6:7லூக் 12:20
வருவதுபோலவே போகிறான்.
அவன் தன் உழைப்பிலிருந்து தன் கைகளில் ஒன்றும்
எடுத்துக் கொண்டுபோவதில்லை.
இதுவும் ஒரு கொடுமையான தீமையே: பிரச 1:3நீதி 11:29மாற் 8:36பிரச 5:13யோவா 6:271 சாமு 12:21பிரச 2:22-23ஓசி 8:7
மனிதன் தான் வருவதுபோலவே புறப்பட்டுப் போகிறான்;
இதினால் அவன் பெறுவது என்ன?
அவனுடைய கஷ்ட உழைப்பும் வீணே.
அவன் தனது வாழ்நாட்களில் விரக்தியுடனும், நோயுடனும், சங் 127:21 கொரி 11:30-321 இராஜா 17:122 நாளாக 16:10-122 நாளாக 24:24-252இராஜா 1:22இராஜா 1:62இராஜா 5:27
கோபத்துடனும், இருளில் சாப்பிடுகிறான்.
ஆகவே ஒரு மனிதன் சாப்பிட்டுக் குடித்து சூரியனுக்குக் கீழே தனது கடும் உழைப்பில் திருப்தி காண்பதே நல்லது என நான் கண்டேன்; இறைவன் அவனுக்குக் கொடுத்திருக்கும் குறுகிய வாழ்நாள் காலத்தில் இது தகுதியானது. ஏனெனில் இதுவே அவன் பங்கு. பிரச 2:24பிரச 3:12-13பிரச 3:22பிரச 9:71 தீமோ 6:17பிரச 2:10பிரச 8:15பிரச 11:9 மேலும் இறைவன் எவனுக்காவது செல்வத்தையும், சொத்தையும் கொடுத்து, அத்துடன் அவற்றை அனுபவிக்கவும், தன் பங்கை ஏற்றுக்கொண்டு தன் உழைப்பில் மகிழ்ச்சியாய் இருக்கவும் செய்வது இறைவனின் ஒரு கொடையே. உபா 8:18பிரச 3:13பிரச 6:22 நாளாக 1:12பிரச 2:24-261 இராஜா 3:13 இறைவன் அவனுடைய இருதயத்தை மகிழ்ச்சியின் எண்ணங்களால் நிரப்பியிருப்பதினால், அவன் தனது வாழ்நாட்கள் கடந்துபோவதைக் குறித்து நினைப்பதில்லை. ஏசா 65:13-14ஏசா 65:21-24சங் 37:16சங் 4:6-7ரோம 5:1உபா 28:47உபா 28:8-12ஏசா 64:5