உபாகமம் 23

Deuteronomy 23

ஒன்றுகூடுதலைத் தவிர்த்தல்

விதைகள் நசுக்கப்பட்டதினாலோ, ஆணுறுப்பு வெட்டப்பட்டதினாலோ ஆண்மையிழந்தவன் எவனும் யெகோவாவின் சபைக்குள் வரக்கூடாது. கலா 3:28ஏசா 56:3-4உபா 23:2-3லேவி 21:17-21நெகே 13:1-3உபா 23:8புலம் 1:10லேவி 22:22-24

முறைகேடான உறவினால் பிறந்தவனும், அவன் சந்ததியும் பத்தாம் தலைமுறைவரை யெகோவாவின் சபைக்குள் வரக்கூடாது. சகரி 9:6ஏசா 57:3எபி 12:8யோவா 8:41

அம்மோனியராவது மோவாபியராவது பத்தாம் தலைமுறைவரைக்கும் உள்ள அவர்களுடைய சந்ததிகளாவது யெகோவாவின், சபைக்குள் வரக்கூடாது. நெகே 13:1-2ரூத் 4:6ஏசா 56:3நெகே 13:23ரூத் 4:10-22நெகே 4:3நெகே 4:7 ஏனெனில், நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்பொழுது, அவர்கள் வழியிலே உங்களைச் சந்திக்க உணவுடனும், தண்ணீருடனும் வரவில்லை. அவர்கள் மெசொப்பொத்தோமியாவிலுள்ள பெத்தோரிலிருந்த பேயோரின் மகன் பிலேயாமை, உங்கள்மேல் சாபம் கூறும்படி கூலிக்கு அமர்த்தினார்கள். நெகே 13:22 பேது 2:151 இராஜா 18:4உபா 2:28-291 சாமு 25:11அப் 9:4மத் 25:40எண் 22:17 ஆனாலும், உங்களுடைய இறைவனாகிய யெகோவா பிலேயாமுக்கும செவிசாய்க்கவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள்மேல் அன்பு கூர்ந்ததினால், அவனுடைய சாபத்தை உங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றினார். உபா 7:7-8ரோம 8:31எபே 2:4-5எண் 24:92 கொரி 4:17எரே 31:3மீகா 6:5எண் 23:5-12 ஆகையால் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை செய்துகொள்ள வேண்டாம். எஸ்றா 9:122 சாமு 12:312 சாமு 8:2நெகே 13:23-25

ஏதோமியனை வெறுக்காதீர்கள், அவன் உங்கள் சகோதரன். எகிப்தியனை வெறுக்காதீர்கள். அவனுடைய நாட்டில் நீங்கள் அந்நியராய் இருந்தீர்கள். உபா 10:19யாத் 22:21யாத் 23:9லேவி 19:34ஆதி 25:24-26ஆதி 25:30எண் 20:14அப் 7:10-18 எகிப்தியரின் பிள்ளைகளின் மூன்றாம் தலைமுறையினர் யெகோவாவின் சபைக்குள் வரலாம். யாத் 20:5-6உபா 23:1-3எபே 2:12-13ரோம 3:29-30

முகாமில் அசுத்தம்

நீங்கள் உங்கள் பகைவர்களுக்கு எதிராக முகாமிட்டிருக்கும்பொழுது அசுத்தமான எல்லாவற்றிலுமிருந்து விலகியிருங்கள். யோசு 6:18வெளி 19:11-142 நாளாக 19:42 நாளாக 20:3-132 நாளாக 31:20நியாயாதி 20:26யோசு 7:11-13லூக் 3:14 இராக்காலத்தில் விந்து வெளிப்படுவதினால், உங்கள் மத்தியில் ஒருவன் அசுத்தப்பட்டிருந்தால், அவன் முகாமுக்கு வெளியே போய் அங்கே இருக்கவேண்டும். லேவி 15:16எண் 5:2-31 கொரி 5:11-13 ஆனால் மாலை நேரம் வந்ததும் அவன் குளித்து சூரியன் மறையும் நேரத்தில் முகாமுக்கு மீண்டும் வரலாம். எபே 5:26-27எபி 10:22லேவி 14:9லேவி 15:5லூக் 11:38-391 பேது 3:21எசேக் 36:25எபி 9:9-10

முகாமுக்கு வெளியே மலசலம் கழிப்பதற்கு உங்களுக்கு ஒரு இடத்தை வைத்திருக்கவேண்டும். உங்கள் ஆயுதங்களுடன் ஒன்றாக மண் தோண்டுவதற்கு எதையாவது வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வெளியே போய் மலசலம் கழித்தபின் ஒரு குழியைத் தோண்டி மலத்தை மண்ணால் மூடிவிடுங்கள். எசேக் 24:6-8 ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களைப் பாதுகாக்கவும், உங்கள் பகைவர்களை உங்களிடம் ஒப்படைக்கவும், உங்கள் முகாமில் உலாவுகிறார். ஆகவே அவர் உங்கள் மத்தியில் வெட்கக்கேடான எதையும் கண்டு உங்களைவிட்டு விலகிக்போகாதபடி, நீங்கள் முகாமைப் பரிசுத்தமாக வைத்திருக்கவேண்டும். 2 கொரி 6:16ஆதி 17:1லேவி 26:12யாத் 3:5

மற்ற சட்டங்கள்

ஒரு அடிமை தப்பி ஓடிவந்து உன்னிடம் அடைக்கலம் புகுந்தால், அவனை அவனுடைய எஜமானிடம் பிடித்துக்கொடுக்க வேண்டாம். 1 சாமு 30:15ஒபதி 1:14 அவன் தான் தெரிந்துகொள்கிற பட்டணத்தில் தான் விரும்பிய எங்காவது உங்கள் மத்தியில் வாழட்டும். அவனை ஒடுக்கவேண்டாம். யாத் 22:21யாத் 23:9ஏசா 16:3-4யாக் 2:6எரே 7:6மல்கி 3:5தீத் 3:2-3சகரி 7:10

இஸ்ரயேலில் ஒரு பெண்ணும் கோயில் வேசியாய் இருக்கக்கூடாது 1. ஒரு ஆணும் அப்படியிருக்கக் கூடாது. 2இராஜா 23:71 இராஜா 14:24லேவி 19:291 இராஜா 15:121 இராஜா 22:46உபா 22:211 தீமோ 1:101 கொரி 6:9 வேசித்தனம் பண்ணும் ஆணோ, வேசித்தனம் பண்ணும் பெண்ணோ தங்கள் வேசித்தனத்தினால் பெறும் வருமானத்தை, உங்கள் இறைவனாகிய யெகோவாவின் வீட்டுக்குள் எந்தவித நேர்த்திக்கடனை செலுத்தும்படிக்கும் கொண்டுவரக்கூடாது. ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா அவற்றை அருவருக்கிறார். பிலி 3:2வெளி 22:15மத் 7:6எசேக் 16:33ஏசா 61:8லேவி 18:22சங் 5:4-62 பேது 2:22

நீங்கள் உங்கள் சகோதரனிடம் வட்டி வசூலிக்கக்கூடாது. வட்டிக்குக் கடனாகக் கொடுக்கக்கூடிய பணத்திற்கோ, உணவுப்பொருளுக்கோ, வேறு எதற்கோ வட்டி வசூலிக்கவேண்டாம். யாத் 22:25லேவி 25:35-37சங் 15:5எசேக் 18:13எசேக் 18:16-18எசேக் 18:7-8எசேக் 22:12லூக் 6:34-35 நீங்கள் அந்நியனிடம் வட்டிவாங்கலாம். ஆனால் உங்கள் சகோதர இஸ்ரயேலனிடம் வட்டி வசூலிக்கவேண்டாம். அப்படிச் செய்யும்போது, உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி போகும் அந்நாட்டில், நீங்கள் கையிட்டுசெய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். உபா 15:10உபா 15:31 கொரி 15:58உபா 14:21லூக் 14:14உபா 28:12ஏசா 1:19நீதி 19:17

உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் நேர்த்திக்கடன் செய்திருந்தால், நீங்கள் அதைச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களிடம் நிச்சயமாய் அதைக் கேட்பார். தாமதித்தால் நீங்கள் பாவம் செய்த குற்றவாளியாவீர்கள். பிரச 5:4-5சங் 66:13-14சங் 116:18எண் 30:1-16சங் 56:12சங் 76:11உபா 23:18ஆதி 28:20 ஆகையினால் நீங்கள் நேர்த்திக்கடன் செய்வதைத் தவிர்த்துக்கொண்டால், நீங்கள் குற்றவாளிகளாகமாட்டீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வாயினால் சொல்லும் எதையும் செய்ய நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் சொந்த வாயினால் சுயவிருப்பத்துடன் உங்கள் நேர்த்திக்கடனை செய்தீர்கள். நீதி 20:25நியாயாதி 11:30-311 சாமு 1:111 சாமு 14:24அப் 23:12அப் 23:21பிரச 5:4-5எரே 44:25-27

உங்கள் அயலானுடைய திராட்சைத் தோட்டத்திற்குள்போனால், விரும்பிய அளவு திராட்சைப் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். ஆனால் ஒன்றையும் உங்கள் கூடையில் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். 1 கொரி 10:26ரோம 12:13எபி 13:5 நீங்கள் உங்கள் அயலானுடைய வயலுக்குள்போனால் உங்கள் கையினால் கதிர்களைப் பறிக்கலாம், ஆனால் அவனுடைய தானியக் கதிர்களை அரிவாளினால் வெட்டவேண்டாம். மத் 12:1-2மாற் 2:23லூக் 6:1-2