உபாகமம் 21

Deuteronomy 21

மர்மக் கொலைக்கான பாவநிவிர்த்தி

உங்கள் இறைவனாகிய யெகோவா, உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கிற நாட்டிலே கொலைசெய்யப்பட்ட ஒருவன், வெளியில் கிடப்பதைக் கண்டு, அவனைக் கொலைசெய்தவன் யார் என்று தெரியாதிருக்கக்கூடும். ஏசா 26:21அப் 28:4நீதி 28:17சங் 5:6சங் 9:12 அப்படியானால் உங்களுடைய சபைத்தலைவர்களும், நீதிபதிகளும் அங்குபோய், பிரேதம் கிடக்கும் இடத்திற்கும், சூழ இருக்கும் பட்டணங்களுக்கும் உள்ள தூரத்தை அளக்கவேண்டும். உபா 16:18-19ரோம 13:3-4 பிரேதத்துக்குக் நெருங்கிய பட்டணத்திலுள்ள சபைத்தலைவர்கள், வேலைசெய்யாததும் நுகம் பூட்டப்படாததுமான ஒரு இளம்பசுவை எடுக்கவேண்டும். எண் 19:2எரே 31:18மத் 11:28-30பிலி 2:8 அம்முதியவர்கள் உழப்படாததும், விதைக்கப்படாததும், ஓடும் நீருள்ளதுமான பள்ளத்தாக்கில் அதைக் கொண்டுபோக வேண்டும். அங்கே அந்தப் பள்ளத்தாக்கில் அந்தப் பசுவின் கழுத்தை முறித்துப்போடவேண்டும். 1 பேது 2:21-241 பேது 3:18 லேவியின் மகன்களான ஆசாரியர்கள் அங்கு வரவேண்டும். ஏனெனில், உங்கள் இறைவனாகிய யெகோவா, தமக்கு ஊழியம்செய்யவும், யெகோவா பேரில் ஆசீர்வாதம் கூறவும், எல்லா வழக்குகளும், தாக்குதலுமான வழக்குகளுக்கும் தீர்ப்புவழங்கவும் அவர்களையே தெரிந்தெடுத்தார். 1 நாளாக 23:13உபா 10:8மல்கி 2:7உபா 19:17உபா 18:5எண் 6:22-27உபா 17:8-12 பிரேதத்துக்குக்கு நெருங்கிய பட்டணங்களிலுள்ள சபைத்தலைவர்கள் பள்ளத்தாக்கில் முறிக்கப்பட்ட பசுவுக்குமேலாகத் தங்கள் கைகளைக் கழுவவேண்டும். சங் 26:6சங் 73:13எபி 9:10எரே 2:22யோபு 9:30மத் 27:24-25சங் 19:12சங் 51:14 அப்பொழுது தலைவர்கள், “நமது கைகள் இந்த இரத்தத்தைச் சிந்தவுமில்லை, நமது கண்கள் இக்கொலையைக் காணவுமில்லை; 2 சாமு 16:8யோபு 21:21-23யோபு 21:31-34எண் 5:19-28சங் 7:3-4 யெகோவாவே! நீர் மீட்டுக்கொண்ட உமது இஸ்ரயேல் மக்களுக்காக இப்பாவநிவிர்த்தியை ஏற்றுக்கொள்ளும். குற்றமற்ற இம்மனிதனுடைய இரத்தப்பழியை உம்முடைய மக்கள்மேல் சுமத்தவேண்டாம்” என்று சொல்லவேண்டும். இவ்விதம் இரத்தம் சிந்துதலுக்கான பாவநிவிர்த்தி செய்யப்படும். யோனா 1:141 தெச 2:15-162இராஜா 24:42 சாமு 3:28எசேக் 23:24-25எசேக் 23:3எரே 26:15மத் 23:35 இப்படியாக யெகோவாவின் பார்வையில், நீங்கள் சரியானதைச் செய்திருப்பதால், குற்றமில்லாத இரத்தம் சிந்திய பழியை உங்களிலிருந்து நீக்கிவிடுவீர்கள். 2இராஜா 10:30-31உபா 13:18உபா 19:12-13

கைதியான பெண்ணைத் திருமணம் செய்தல்

உங்கள் பகைவர்களை எதிர்த்து நீங்கள் போர் செய்கையில் உங்கள் இறைவனாகிய யெகோவா, உங்களுக்கு அவர்கள்மேல் வெற்றிகொடுத்து கைதிகளையும் கொடுப்பார். உபா 20:10-16யோசு 21:44 அப்பொழுது அந்த கைதிகள் மத்தியில் அழகான ஒரு பெண்ணை நீ கண்டு, அவளை நீ விரும்பினால் நீ அவளை உன் மனைவியாக்கிக்கொள்ளலாம். ஆதி 12:14-15ஆதி 29:18-20ஆதி 34:3ஆதி 34:8ஆதி 6:2நியாயாதி 14:2-3எண் 31:18நீதி 31:10 அவளை உன் வீட்டிற்கு அழைத்துப்போய் அங்கே அவளைத் தன் தலையைச் சவரம்செய்யும்படி செய்து, விரல் நகங்களை வெட்டவேண்டும். 1 கொரி 11:6எபே 4:22லேவி 14:9எண் 6:9 அவள் தான் கைதியாகும்பொழுது உடுத்தியிருந்த உடையைக் கழற்றி அதை ஒரு பக்கத்தில் வைக்கவேண்டும். அவள் ஒரு மாதம்முழுவதும் உன் வீட்டில் வசித்து, தனது தாய்க்காகவும், தகப்பனுக்காகவும் துக்கங்கொண்டாட வேண்டும். லூக் 14:26-27சங் 45:10-11 அதன்பின் நீ அவளிடம் போய், அவளுக்குக் கணவனாகவும், அவள் உனக்கு மனைவியாகவும் இருக்கவேண்டும். அவளில் உனக்கு விருப்பம் இல்லாதிருந்தால், அவளை அவள் விரும்பிய எந்த இடத்துக்கும் போகவிடு. நீ அவளை அவமானப்படுத்தியபடியால், அவளை அடிமையைப்போல் விற்கவோ, நடத்தவோ வேண்டாம். உபா 22:29ஆதி 34:2உபா 22:19உபா 22:24யாத் 21:7-11நியாயாதி 19:24

முதற்பேறானவர்களின் உரிமைகள்

ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்து, ஒருத்தியில் அன்பு செலுத்தி, மற்றவளில் அன்பு செலுத்தாமல் இருக்கும்போது, இருவரும் அவனுக்கு மகன்களைப் பெற்றிருக்கையில், அவன் அன்பு செலுத்தாதவளின் மகன் மூத்த பிள்ளையாக இருக்கக்கூடும். ஆதி 29:33ஆதி 29:201 சாமு 1:4-5ஆதி 29:18ஆதி 29:30-31 அப்படியிருந்தால் தகப்பன் தன் சொத்தை மகன்களுக்குப் பிரித்துக்கொடுக்கும்போது, தான் அன்பு செலுத்தாத மனைவியின் மகனான மூத்த பிள்ளை இருக்க, முதற்பேறான மகனுக்குக் கொடுக்கவேண்டிய உரிமையைத்தான் அன்பு செலுத்திய மனைவியின் மகனுக்குக் கொடுக்கக்கூடாது. 1 நாளாக 26:101 நாளாக 5:22 நாளாக 21:3எபி 12:16-17பிலி 4:8ரோம 8:292 நாளாக 11:19-22 ஆனால் தான் அன்பு செலுத்தாத மனைவியின் மகனுக்குத் தன் சொத்தில் மற்றவனுக்குக் கொடுப்பதைப்போல் இரண்டு மடங்கு கொடுத்து, அவனைத் தன் மூத்த பிள்ளையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த மகனே தன் தகப்பனின் வல்லமையின் முன் அடையாளமானவன். முதற்பேறானவனின் உரிமை அவனுக்கே உரியதாகும். ஆதி 49:3ஆதி 25:31-341 நாளாக 5:1-2சங் 105:36ஆதி 25:5-6

அடங்காத மகன்

தாய் தகப்பனுக்குக் கீழ்ப்படியாதவனும், அவர்கள் கண்டித்து நடத்தும்போது, அவர்களுக்குச் செவிகொடாதவனும், பிடிவாதமும், கலகமும் செய்யும் ஒரு மகன் ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடும். யாத் 20:12லேவி 19:3ஆமோ 4:11-12எபி 12:9-11எபே 6:1-3ஏசா 1:2ஏசா 1:5நீதி 19:18 அவனுடைய தகப்பனும் தாயும் அவனைப் பிடித்து, தங்கள் பட்டணத்து வாசலிலுள்ள சபைத்தலைவர்களிடம் கொண்டுபோக வேண்டும். உபா 16:18உபா 21:2உபா 25:7சகரி 13:3 பெற்றோர் அந்த சபைத்தலைவர்களிடம் எங்களுடைய இந்த மகன், “பிடிவாதக்காரனும், கலகம் பண்ணுகிறவனுமாய் இருக்கிறான்; இவன் எங்களுக்குக் கீழ்ப்படியமாட்டான். இவன் வீண்விரயம் செய்பவனும், குடிகாரனுமாய் இருக்கிறான்” என்று சொல்லவேண்டும். நீதி 20:1நீதி 23:29-35நீதி 23:19-21நீதி 29:17நீதி 19:26 அப்பொழுது அப்பட்டணத்திலுள்ள மனிதர் எல்லோரும் அவன்மீது கல்லெறிந்து கொல்லவேண்டும். இவ்விதமாய் உங்கள் மத்தியிலுள்ள தீமையை நீங்கள் அகற்றவேண்டும். அப்பொழுது இஸ்ரயேலர் யாவரும் இதைக் கேட்டுப் பயப்படுவார்கள். உபா 19:19-20உபா 13:10-11உபா 13:5லேவி 24:16உபா 17:5உபா 22:21உபா 22:24

பலவித நீதிச்சட்டங்கள்

மரணத்துக்கு ஏதுவான குற்றம்செய்த ஒருவன் கொல்லப்பட்டு, அவனுடைய உடல் மரத்தில் தொங்கவிடப்பட்டால், அப் 26:31யோவா 19:31-38அப் 23:29உபா 22:26லூக் 23:33மத் 26:661 சாமு 26:162 சாமு 21:6 அவனுடைய உடலை இரவு முழுவதும் மரத்தில் தொங்கவிடக்கூடாது. தூக்கின அன்றே அவனை அடக்கம்பண்ண கவனமாயிருங்கள். ஏனெனில் மரத்திலே தொங்கவிடப்பட்டவன் இறைவனின் சாபத்திற்குள்ளானவன். உங்கள் இறைவனாகிய யெகோவா உரிமைச்சொத்தாகக் கொடுக்கிற நாட்டை அசுத்தப்படுத்த வேண்டாம். கலா 3:13யோவா 19:312 கொரி 5:21லேவி 18:25யோசு 10:26-27யோசு 8:29எண் 25:4எண் 35:33-34