ஆதியாகமம் 12

Genesis 12

ஆபிராமின் அழைப்பு

யெகோவா ஆபிராமிடம் சொன்னார்: “நீ உன் நாட்டையும், உன் உறவினரையும், உன் தகப்பன் குடும்பத்தாரையும் விட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குப் போ. எபி 11:8அப் 7:2-6நெகே 9:7ஏசா 51:2யோசு 24:2-3ஆதி 11:31-32லூக் 14:26-33ஆதி 15:7

“நான் உன்னை ஒரு பெரிய நாடாக்குவேன், 2 சாமு 7:9கலா 3:14ஆதி 18:18ஆதி 17:4-6ஆதி 28:3-4ஆதி 35:11ஆதி 46:3ஆதி 26:4

உன்னை ஆசீர்வதிப்பேன்;

உன் பெயரை மேன்மைப்படுத்துவேன்,

நீ ஆசீர்வாதமாயிருப்பாய்.

உன்னை ஆசீர்வதிப்பவர்களை நான் ஆசீர்வதிப்பேன், கலா 3:8ஆதி 22:18அப் 3:25-26ஆதி 27:29எண் 24:9ஆதி 26:4ஆதி 28:14ஆதி 18:18

உன்னை சபிக்கும் எவரையும் நான் சபிப்பேன்.

பூமியின் எல்லா மக்கள் கூட்டங்களும்

உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.”

யெகோவா ஆபிராமுக்குச் சொன்னபடியே, ஆபிராம் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனுடன் போனான். ஆபிராம் ஆரானிலிருந்து புறப்படும்போது, அவனுக்கு எழுபத்தைந்து வயதாயிருந்தது. எபி 11:8ஆதி 11:31ஆதி 11:27 ஆபிராம் தன் மனைவி சாராய், தன் சகோதரனின் மகன் லோத்து, ஆரான் நாட்டில் தாங்கள் சம்பாதித்தவைகள், தங்களுடன் இருந்த வேலைக்காரர்கள் எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு கானான் நாட்டிற்குப் போகப் புறப்பட்டு, அங்கு போய்ச்சேர்ந்தார்கள். ஆதி 14:14ஆதி 11:31அப் 7:4எபி 11:8-9ஆதி 10:19ஆதி 14:21ஆதி 46:5-26

ஆபிராம் அந்நாட்டின் வழியாகப் பயணம் செய்து, சீகேமில் உள்ள மோரேயின் கருவாலி மரத்தடிக்கு வந்துசேர்ந்தான். அப்பொழுது கானானியர் அங்கே வசித்தார்கள். உபா 11:30எபி 11:9ஆதி 13:7ஆதி 35:4ஆதி 10:18-19ஆதி 15:18-21நியாயாதி 7:11 இராஜா 12:1 யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து, “உன் சந்ததிக்கு நான் இத்தேசத்தைக் கொடுப்பேன்” என்று சொன்னார். அதனால் ஆபிராம் அங்கே தனக்குக் காட்சியளித்த யெகோவாவுக்கு, ஒரு பலிபீடத்தைக் கட்டினான். ஆதி 17:8ஆதி 13:15ஆதி 17:1கலா 3:16ஆதி 18:1ஆதி 13:4சங் 105:9-12ஆதி 13:18

அவன் அங்கிருந்து பெத்தேலுக்குக் கிழக்கேயுள்ள மலைப்பக்கமாய்ப் போய், பெத்தேல் மேற்கிலும், ஆயி கிழக்கிலும் இருக்கத்தக்கதாக தன் கூடாரத்தை அமைத்தான். அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவின் பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான். ஆதி 4:26நெகே 11:31ஆதி 21:331 கொரி 1:2ஆதி 13:4ஆதி 28:19அப் 2:21ஆதி 35:15-16

பின்பு ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, நெகேப் என்னும் தென்தேசத்தை நோக்கிச் சென்றான். ஆதி 13:3ஆதி 13:1ஆதி 24:62எபி 11:13-14சங் 105:13

எகிப்தில் ஆபிராம்

அந்நாட்களில், அந்த நாட்டிலே பஞ்சம் ஏற்பட்டது; பஞ்சம் மிகவும் கொடியதாய் இருந்தபடியால், ஆபிராம் சிலகாலம் எகிப்தில் குடியிருப்பதற்காகப் போனான். ஆதி 43:1ஆதி 26:1-31 இராஜா 17:1-182இராஜா 4:382இராஜா 6:252இராஜா 7:1-82இராஜா 8:1-22 சாமு 21:1 அவன் எகிப்தின் அருகே வந்தபோது, தன் மனைவி சாராயிடம், “நீ மிகவும் அழகிய பெண் என்பது எனக்குத் தெரியும். ஆதி 26:7ஆதி 12:14ஆதி 29:17நீதி 21:302 சாமு 11:2ஆதி 39:6-7உன்னத 1:14 எகிப்தியர் உன்னைக் காணும்போது, ‘இவள் அவனுடைய மனைவி’ என்று சொல்லி, என்னைக் கொன்றுவிடுவார்கள் ஆனால் உன்னையோ உயிரோடு விட்டுவிடுவார்கள். ஆதி 20:11ஆதி 26:71 யோவா 1:8-10மத் 10:28நீதி 29:251 சாமு 27:1 அதனால் நீ, உன்னை என் சகோதரி என்று சொல், அப்பொழுது அவர்கள் உனக்காக என்னை நன்றாக நடத்துவார்கள்; நானும் உன் நிமித்தம் உயிர் தப்புவேன்” என்றான். ஆதி 26:7ஆதி 20:12-13ஆதி 20:2ஆதி 20:5எசேக் 18:4எரே 17:5-8ஆதி 11:29ஏசா 57:11

ஆபிராம் எகிப்திற்கு வந்தபோது, சாராய் மிகவும் அழகானவள் என்பதை எகிப்தியர் கண்டார்கள். ஆதி 3:6ஆதி 39:7ஆதி 6:2மத் 5:28 பார்வோனின் அதிகாரிகள் அவளைக் கண்டதும், அவளுடைய அழகைப்பற்றிப் பார்வோனிடம் புகழ்ந்தார்கள்; அதனால் சாராய் பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். ஆதி 20:21 இராஜா 3:12இராஜா 18:21எஸ்த 2:2-16யாத் 2:15யாத் 2:5ஆதி 40:2ஆதி 41:1 பார்வோன் சாராயின் நிமித்தம் ஆபிராமை நன்றாக நடத்தினான்; ஆபிராம் செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஆண் பெண் கழுதைகளையும், ஒட்டகங்களையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் பெற்றுக்கொண்டான். ஆதி 20:14ஆதி 13:2ஆதி 24:35ஆதி 26:14ஆதி 32:13-15ஆதி 32:5யோபு 1:3யோபு 42:12

ஆனால் யெகோவா ஆபிராமின் மனைவி சாராயின் நிமித்தம், பார்வோனையும் அவனுடைய வீட்டாரையும் கொடிய வியாதியால் தாக்கினார். 1 நாளாக 16:21ஆதி 20:18சங் 105:14-151 நாளாக 21:22எபி 13:4யோபு 34:19 அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து, “நீ எனக்கு என்ன செய்துவிட்டாய்? இவள் உன் மனைவி என்று ஏன் எனக்குச் சொல்லவில்லை? ஆதி 20:9-10ஆதி 26:9-111 சாமு 14:43நீதி 21:1யாத் 32:21ஆதி 3:13ஆதி 31:26ஆதி 4:10 ‘இவள் என் சகோதரி’ என்று ஏன் எனக்குச் சொன்னாய்? அதனால் அல்லவா அவளை என் மனைவியாக்கிக் கொள்ளும்படி எடுத்தேன்? இதோ, உன் மனைவி; அவளைக் கூட்டிக்கொண்டு போய்விடு!” என்றான். பார்வோன் ஆபிராமைக் குறித்துத் தன் வேலைக்காரருக்கு கட்டளையிட்டான், அவர்கள் அவனை அவன் மனைவியுடனும் அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றுடனும் அவனை நாட்டிற்கு வெளியே அனுப்பிவிட்டார்கள். நீதி 21:1சங் 105:14-151 சாமு 29:6-11யாத் 18:27