ஆபிராமும் லோத்தும் பிரிதல்
ஆகையால், ஆபிராம் தன் மனைவியுடனும் தன் எல்லா உடைமைகளுடனும், எகிப்திலிருந்து நெகேப்புக்குப் போனான்; லோத்தும் அவனுடன் போனான். 2 சாமு 24:7ஆதி 12:9-20யோசு 10:401 சாமு 27:10ஆதி 20:1ஆதி 21:33யோசு 18:5 ஆபிராம் வளர்ப்பு மிருகங்களையும், தங்கத்தையும் வெள்ளியையும் கொண்ட பெரிய செல்வந்தனாக இருந்தான். ஆதி 24:35சங் 112:1-3ஆதி 26:12-13யோபு 22:21-25நீதி 10:22உபா 8:18யோபு 1:10யோபு 1:3
அவன் நெகேப்பிலிருந்து இடம்விட்டு இடம்பெயர்ந்து பெத்தேலுக்கு வந்து, அங்கே பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் தான் முன்பு கூடாரம் போட்டிருந்த இடத்துக்கு வந்தான். ஆதி 12:6ஆதி 12:8-9 அவன் தான் முதலாவதாகப் பலிபீடத்தைக் கட்டியிருந்த இடத்துக்குச் சென்று, அங்கே ஆபிராம் யெகோவாவினுடைய பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான். எரே 29:12எபே 6:18-19ஆதி 12:7-8ஏசா 58:9சங் 116:2சங் 65:1-2செப்ப 3:91 கொரி 1:2
ஆபிராமுடன் பயணம் செய்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன. ஆதி 25:27ஆதி 4:20எரே 49:29 அவர்கள் இருவரது உடைமைகளும் ஏராளமாய் இருந்தபடியால், அவர்கள் சேர்ந்து வாழ அங்கிருந்த நிலவளம் போதாமல் இருந்தது. ஆதி 36:6-71 தீமோ 6:9பிரச 5:10-11லூக் 12:17-18 அதனால் ஆபிராமின் மந்தை மேய்ப்பர்களுக்கும், லோத்தின் மந்தை மேய்ப்பர்களுக்கும் இடையில் சச்சரவுகள் உண்டாயின. அக்காலத்தில் கானானியரும், பெரிசியரும் அதே நாட்டில் குடியிருந்தார்கள். ஆதி 26:20ஆதி 12:6யாக் 3:161 பேது 2:12கலா 5:20ஆதி 34:30யாக் 4:11 கொரி 3:3
இதனால் ஆபிராம் லோத்திடம், “எனக்கும் உனக்கும் இடையிலோ அல்லது எனது மந்தை மேய்ப்பருக்கும் உனது மந்தை மேய்ப்பருக்கும் இடையிலோ சச்சரவுகள் வேண்டாம்; ஏனெனில் நாம் நெருங்கிய உறவினர்கள். 1 கொரி 6:6-7அப் 7:26சங் 133:11 யோவா 2:9-111 யோவா 3:14-191 யோவா 4:20-211 பேது 3:81 பேது 4:8 இதோ நாடு முழுவதும் உனக்கு முன்பாக இருக்கிறது அல்லவா? நாம் இருவரும் பிரிந்து போவோம். நீ இடது பக்கம் போனால், நான் வலதுபக்கம் போவேன்; நீ வலதுபக்கம் போனால் நான் இடது பக்கம் போவேன்” என்றான். 1 பேது 3:8-12ஆதி 20:15ஆதி 34:10எபி 12:141 கொரி 6:7சங் 120:7ரோம 12:18யாக் 3:13-18
லோத்து சுற்றிலும் பார்த்தபோது, சோவார் வரையுள்ள யோர்தான் சமபூமி முழுவதும் நீர்வளம் நிறைந்திருந்ததைக் கண்டான்; அது யெகோவாவினுடைய தோட்டத்தைப் போலவும், எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது. யெகோவா சோதோமையும் கொமோராவையும் அழிக்குமுன் அவ்வாறு இருந்தது. உபா 34:3ஏசா 51:3ஆதி 14:8ஆதி 2:8-10எசேக் 28:13ஆதி 14:2யோவே 2:31 யோவா 2:15-16 எனவே லோத்து, யோர்தான் சமபூமி முழுவதையும் தனக்காகத் தெரிந்துகொண்டு, கிழக்குப் பக்கமாகப் போனான். அவர்கள் இருவரும், ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தார்கள். ஆதி 13:91 பேது 2:17எபி 10:25நீதி 27:10சங் 119:63ஆதி 13:14சங் 16:3ஆதி 19:17 ஆபிராம் கானான் நாட்டில் குடியிருந்தான், லோத்து யோர்தான் சமபூமியின் பட்டணங்கள் நடுவில் குடியிருந்து, சோதோமுக்கு அருகே தன் கூடாரங்களைப் போட்டான். ஆதி 19:29ஆதி 14:12ஆதி 19:11 கொரி 15:332 பேது 2:7-8ஆதி 19:25சங் 26:5 சோதோமின் மனிதர் கொடியவர்களாய், யெகோவாவுக்கு விரோதமாகப் பெரும் பாவம் செய்துகொண்டிருந்தார்கள். 2 பேது 2:102 பேது 2:6-8யூதா 1:7ஏசா 3:8-9எரே 23:24ரோம 1:27எசேக் 16:46-50ஆதி 18:20
லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின் யெகோவா ஆபிராமிடம், “நீ இருக்கிற இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி, வடக்கேயும் தெற்கேயும், கிழக்கேயும் மேற்கேயும் பார். உபா 3:27ஆதி 28:14ஏசா 49:18ஏசா 60:4ஆதி 13:10 நீ காண்கிற இடம் முழுவதையும், உனக்கும் உன் சந்ததிக்கும் நான் என்றென்றைக்கும் கொடுப்பேன். 2 நாளாக 20:7ஆதி 12:7ஆதி 15:18அப் 7:5ஆதி 35:12சங் 37:22நெகே 9:7-8சங் 105:9-12 நான் உன் சந்ததியைப் பூமியின் புழுதியைப்போல் பெருகப்பண்ணுவேன், பூமியின் புழுதியை ஒருவனால் எண்ண முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணலாம். ஆதி 28:14எண் 23:10யாத் 32:13ஆதி 22:17ஆதி 32:121 இராஜா 3:8ரோம 4:16-18ஆதி 15:5 நீ நாட்டின் நீளமும் அகலமும் எவ்வளவோ அதுவரை நடந்து செல், ஏனெனில் நான் அதை உனக்குத் தருவேன்” என்றார். ஆதி 13:15எண் 13:17-24
ஆபிராம் தன் கூடாரங்களைக் கழற்றிக்கொண்டு, எப்ரோனில் இருக்கும் மம்ரேயின் கருவாலி மரங்களின் அருகே குடியிருக்கச் சென்றான். அங்கே அவன் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். ஆதி 14:13ஆதி 18:1ஆதி 35:27ஆதி 8:20ஆதி 12:7-8சங் 16:81 தீமோ 2:8ஆதி 13:4