சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.
இறைவனின் மக்கள் ஒற்றுமையுடன் ஒருமித்து வாழ்வது எவ்வளவு நல்லதும், 1 கொரி 1:101 பேது 3:8யோவா 13:35எபி 13:1பிலி 2:2-5எபே 4:3-6யோவா 17:21எரே 32:39
எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதுமாய் இருக்கிறது!
அது தலையில் ஊற்றப்பட்டு தாடியில் வடிகின்ற லேவி 8:12யாத் 30:25-30யாத் 29:7நீதி 27:9யாத் 39:24யோவா 12:3உன்னத 1:3சங் 141:5
விலையேறப்பெற்ற எண்ணெய்போல் இருக்கிறது;
ஆரோனின் தாடியில் வடிந்து,
அவனுடைய அங்கிகளின் கழுத்துப்பட்டியில் இறங்கும் எண்ணெய்போல் இருக்கிறது.
எர்மோன் மலையின் பனி உபா 28:8லேவி 25:21சங் 42:8உபா 4:481 யோவா 5:11மீகா 5:7ரோம 5:21சங் 16:11
சீயோனின் மலைகள்மேல் இறங்குவதைப்போல் அது இருக்கிறது;
ஏனெனில் அங்கே யெகோவா தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறார்;
வாழ்வையும் என்றென்றைக்கும் வழங்குகிறார்.