உலகத்தில் பாவம்
பூமியில் மனிதர் பெருகத் தொடங்கியபோது, அவர்களுக்கு மகள்கள் பிறந்தார்கள்; ஆதி 1:28 இறைவனின் மகன்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களுடைய மகள்கள் அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள் தாங்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். சங் 82:6-71 யோவா 2:16ரோம 9:7-82 பேது 2:142 சாமு 11:2உபா 7:3-4நெகே 13:24-27எஸ்றா 9:1-2 அப்பொழுது யெகோவா, “என்னுடைய ஆவி என்றைக்கும் மனிதரோடு போராடுவதில்லை, அவர்கள் அழிவுக்குரிய மாம்சமே; அவர்களின் வாழ்நாள் நூற்று இருபது வருடங்களே” என்றார். நெகே 9:30ஏசா 63:101 பேது 3:18-20எரே 11:11சங் 78:39கலா 5:16-24அப் 7:51எண் 11:17
அதே நாட்களில், நெபிலிம் என்னும் இராட்சதர்கள் பூமியில் இருந்தார்கள்; இறைவனின் மகன்கள் எனப்பட்டவர்கள் மனுக்குலப் பெண்களுடன் உறவுகொண்டு பிள்ளைகளைப் பெற்ற காலத்தில் அவர்கள் இருந்தார்கள். அதற்கு பின்பும் அவர்கள் இருந்தார்கள். அவர்களே முற்காலத்தில் புகழ்பெற்ற மனிதரான மாவீரர்களாய் இருந்தவர்கள். எண் 13:331 சாமு 17:42 சாமு 21:15-22உபா 3:11உபா 2:20-21எண் 16:2ஆதி 11:4
பூமியில் மனிதனின் கொடுமைகள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கின்றன என்பதையும், அவன் எப்பொழுதும் தன் இருதய சிந்தனைகள் ஒவ்வொன்றிலும் தீமையின் பக்கம் மட்டுமே சாய்கிறான் என்பதையும் யெகோவா கண்டார். மத் 15:19ரோம 1:28-31மாற் 7:21-23எரே 4:14எரே 17:9எபே 2:1-3பிரச 9:3பிரச 7:29 அதனால் யெகோவா பூமியில் மனிதனை உண்டாக்கியதைக் குறித்து வருத்தப்பட்டார்; அவருடைய இருதயம் வேதனையால் நிறைந்தது. ஏசா 63:101 சாமு 15:11எபே 4:301 சாமு 15:29எபி 3:102 சாமு 24:16யோனா 3:10எண் 23:19 அப்பொழுது யெகோவா, “நான் படைத்த இந்த மனுக்குலத்தைப் பூமியிலிருந்து அழித்துவிடுவேன்; மனிதரோடு விலங்குகளையும், நிலத்தில் ஊரும் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் அழித்துப்போடுவேன்; அவர்களை உண்டாக்கியதைக் குறித்து எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார். செப்ப 1:3சங் 37:20ரோம 3:20-22எரே 12:3-4நீதி 10:27நீதி 16:4சங் 24:1-2ஓசி 4:3 ஆனால் நோவாவுக்கு யெகோவாவினுடைய பார்வையில் தயவு கிடைத்தது. ஆதி 19:19எபி 4:16சங் 84:11லூக் 1:30சங் 145:201 கொரி 15:10அப் 7:46யாத் 33:12-17
நோவாவும் பெருவெள்ளமும்
நோவாவின் வம்சவரலாறு இதுவே: எபி 11:7லூக் 1:6கலா 3:112 பேது 2:5ஆதி 5:24ஆதி 7:1எசேக் 14:14ஆதி 17:1
நோவா நீதியான மனிதனும் தன் காலத்தில் வாழ்ந்த மக்களில் குற்றமற்றவனுமாய் இருந்தான்; அவன் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான். நோவாவுக்கு சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்கள் இருந்தார்கள். ஆதி 5:32
பூமி, இறைவனின் பார்வையில் சீர்கெட்டதாகவும் வன்முறையால் நிறைந்ததாகவும் இருந்தது. எசேக் 8:17ஓசி 4:1-2ஆப 2:8ரோம 2:13ரோம 3:19எசேக் 28:16ஏசா 60:18ஆப 1:2 பூமியில் உள்ள மனிதர் எல்லோரும் சீர்கெட்ட வழியில் நடந்ததால், பூமி எவ்வளவாய் சீர்கெட்டுவிட்டது என்று இறைவன் கண்டார். சங் 53:2-3நீதி 15:3சங் 14:1-32 பேது 2:5யோபு 22:15-171 பேது 3:19-20ஆதி 6:4-5ஆதி 6:8 எனவே இறைவன் நோவாவிடம், “நான் எல்லா உயிரினங்களையும் அழிக்க முடிவு செய்துள்ளேன். ஏனெனில், பூமி மனிதர்களின் வன்முறையால் நிறைந்துவிட்டது. அதனால் நான் அவர்களையும் பூமியையும் நிச்சயமாய் அழிக்கப்போகிறேன். ஓசி 4:1-21 பேது 4:7எசேக் 7:2-6ஆதி 6:11-122 பேது 3:10-122 பேது 3:6-7ஆமோ 8:2ஆதி 6:4 ஆகவே நீ கொப்பேர் மரத்தால் ஒரு பேழையைச் செய்து, அதில் அறைகளை அமைத்து அதன் உட்புறமும், வெளிப்புறமும் நிலக்கீல் பூசு. 1 பேது 3:20லூக் 17:27மத் 24:38யாத் 2:3 அந்தப் பேழையைச் செய்யவேண்டிய விதம்: நீளம் முந்நூறு முழமாகவும், அகலம் ஐம்பது முழமாகவும், உயரம் முப்பது முழமாகவும் இருக்கவேண்டும். உபா 3:11ஆதி 7:20 பேழையின் மேல்தட்டிலிருந்து ஒரு முழம் உயரத்தில் அதற்கு ஒரு கூரையைச் செய், பேழையின் ஒரு பக்கத்தில் கதவு ஒன்றை வை; பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் ஆகியவற்றை அமைத்துக்கொள். எசேக் 41:16ஆதி 7:16ஆதி 8:62இராஜா 9:302 சாமு 6:16எசேக் 42:3லூக் 13:25 வானத்தின் கீழுள்ள எல்லா உயிர்களையும், அதாவது உயிர்மூச்சுள்ள உயிரினங்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்கு, நான் பூமியின்மேல் பெருவெள்ளத்தைக் கொண்டுவரப் போகிறேன். அதனால் பூமியிலுள்ள எல்லாமே அழிந்துபோகும். 2 பேது 2:5ஆதி 7:4ஆதி 7:21-231 பேது 3:20எபி 11:7சங் 107:34ஆமோ 9:6சங் 29:10 ஆனால், நான் என் உடன்படிக்கையை உன்னுடன் நிலைநிறுத்துவேன்; நீ பேழைக்குள் செல்வாய்; உன்னுடன் உன் மகன்கள், உன் மனைவி, உன் மகன்களின் மனைவிகள் ஆகியோரை அழைத்துக்கொண்டு பேழைக்குள் செல். எபி 11:7ஆதி 7:7ஆதி 17:7ஆதி 7:13ஏசா 26:201 பேது 3:202 பேது 2:5ஆதி 7:1 உயிரினங்கள் எல்லாவற்றிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு வகையிலும், ஒரு ஜோடியை உன்னுடன் சேர்ந்து உயிர்வாழும்படி பேழைக்குள் அழைத்துச் செல். ஆதி 7:15-16ஆதி 7:8-9ஆதி 7:2-3ஆதி 8:17சங் 36:6 பறவைகளின் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு ஜோடியும், விலங்குகளில் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு ஜோடியும், நிலத்தில் ஊர்வனவற்றின் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு ஜோடியும் உயிருடன் வாழும்படி உன்னுடன் வரும். அப் 10:11-12ஆதி 2:19ஆதி 1:20-24ஆதி 7:8-16யோவா 5:40ஆதி 1:28 சாப்பிடக்கூடிய எல்லா வகையான உணவுப் பொருட்களையும் உன்னுடன் எடுத்துச்செல்ல வேண்டும். உனக்கும் அவற்றுக்கும் உணவாகும்படி இவற்றைச் சேமித்து வை” என்றார். ஆதி 1:29-30சங் 136:25சங் 145:16யோபு 38:41யோபு 40:20மத் 6:26சங் 104:27-28சங் 147:9
இறைவன் தனக்குக் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தான். யாத் 40:16யோவா 15:14யோவா 2:5ஆதி 7:5மத் 7:24-27எபி 11:7-8உபா 12:32ஆதி 7:16