ஏசாயா 52

Isaiah 52

விழித்தெழு சீயோனே, விழித்தெழு, வெளி 21:27ஏசா 51:17சகரி 3:4வெளி 21:2ஏசா 51:9ஏசா 35:8எபே 6:10ஏசா 48:2

உன்னைப் பெலத்தினால் உடுத்திக்கொள்!

எருசலேமே, பரிசுத்த நகரமே,

உன்னுடைய மகத்துவத்தின் உடைகளை உடுத்திக்கொள்.

விருத்தசேதனம் செய்யாதவர்களும்,

அசுத்தரும் இனி உனக்குள் வரமாட்டார்கள்.

எருசலேமே, உன்னிலிருக்கும் தூசியை உதறிப் போடு; ஏசா 51:14ஏசா 61:1எரே 51:45எரே 51:50லூக் 4:18வெளி 18:4சகரி 2:6ஏசா 29:4

நீ எழுந்து அரியணையில் அமர்ந்திரு.

சிறைபட்ட சீயோன் மகளே,

உன் கழுத்தில் இருக்கும் கட்டுகளைக் கழற்றி, உன்னை விடுவித்துக்கொள்.

யெகோவா கூறுவது இதுவே: 1 பேது 1:18ஏசா 45:13சங் 44:12ஏசா 50:1எரே 15:13ரோம 7:14-25

நீ பணம் எதுவும் பெறாமல் விற்கப்பட்டாயே,

“நீ பணமின்றி மீட்கப்படுவாய்.”

ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ஆதி 46:6சங் 69:4அப் 7:14-15யோபு 2:3சங் 25:3ஏசா 14:25ஏசா 36:1-22எரே 50:17

“ஆரம்பத்தில் எனது மக்கள் எகிப்திலே வாழ்வதற்காகப் போனார்கள்;

பின்னர் அசீரியர் அவர்களை ஒடுக்கினார்கள்.

“இப்பொழுதோ இங்கு எனக்கு என்ன இருக்கிறது?” என்று யெகோவா கேட்கிறார். ரோம 2:24யாத் 1:13-16யாத் 2:23-24யாத் 3:7எசேக் 20:14எசேக் 20:9எசேக் 36:20-23ஏசா 22:16

“எனது மக்கள் காரணமில்லாமல் கொண்டுசெல்லப்பட்டார்கள்;

அவர்களை ஆளுகிறவர்கள் அலறச் செய்கிறார்கள்,

எனது பெயரும் நாளெல்லாம்

தொடர்ந்து தூஷிக்கப்படுகிறது”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

“ஆகையால், எனது மக்கள் எனது பெயரை அறிந்துகொள்வார்கள்; எசேக் 37:13-14எசேக் 20:44எபி 8:10-11சகரி 10:9-12யாத் 33:19எசேக் 39:27-29எண் 23:19சங் 48:10

அந்த நாளிலே,

அதை முன்னறிவித்தவர் நானே என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

ஆம், அவர் நானே.”

நற்செய்தியைக் கொண்டுவருவோரின் பாதங்கள் ரோம 10:12-15நாகூ 1:15ஏசா 61:1-3மாற் 16:15எபே 6:15ஏசா 40:9சங் 93:1மத் 28:18

மலைகளின்மீது எவ்வளவு அழகாக இருக்கின்றன!

அவர்கள் சமாதானத்தைப் பிரசித்தப்படுத்தி,

நல்ல செய்திகளைக் கொண்டுவருவார்கள்.

இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி,

சீயோனிடம்,

“உங்கள் இறைவனே ஆளுகை செய்கிறார்” என்று சொல்வார்கள்.

கேளுங்கள், உங்களுடைய காவலர் தங்கள் குரல்களை எழுப்புகிறார்கள்; ஏசா 62:6எசேக் 33:7எரே 32:391 கொரி 1:101 கொரி 13:12எசேக் 3:17ஏசா 30:26ஏசா 35:10

அவர்கள் ஒன்றுசேர்ந்து ஆனந்த சத்தமிடுகிறார்கள்.

யெகோவா சீயோனுக்குத் திரும்பும்போது,

அதை அவர்கள் தங்கள் சொந்தக் கண்களால் காண்பார்கள்.

எருசலேமின் பாழிடங்களே, ஏசா 51:3சங் 98:4ஏசா 48:20ஏசா 14:7ஏசா 42:10-11ஏசா 44:23ஏசா 44:26ஏசா 49:13

நீங்கள் ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சியின் கீதம் பாடுங்கள்.

ஏனெனில் யெகோவா தனது மக்களைத் தேற்றி,

எருசலேமை மீட்டுக்கொண்டார்.

யெகோவா எல்லா ஜனங்களின் பார்வையிலும் லூக் 3:6வெளி 14:6ஏசா 51:9சங் 98:1-3வெளி 15:4அப் 13:47அப் 2:5-11ஏசா 49:6

தம் பரிசுத்த கரத்தை நீட்டுவார்.

அப்பொழுது பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாம்

நமது இறைவனின் இரட்சிப்பைக் காணுவார்கள்.

புறப்படுங்கள், புறப்படுங்கள், அங்கிருந்து வெளியேறுங்கள்! 2 கொரி 6:17சகரி 2:6-7எபே 5:11ஏசா 48:20ஏசா 1:16லேவி 10:3எஸ்றா 1:7-11ஆகா 2:13-14

அசுத்தமான எதையும் தொடாதேயுங்கள்!

யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கும் நீங்கள்

அங்கிருந்து வெளியேறி சுத்தமாயிருங்கள்.

ஆனால், நீங்கள் அவசரமாய் வெளியேறப்போவதில்லை, உபா 20:4ஏசா 58:8யாத் 14:19-20யாத் 13:21-22ஏசா 45:2யாத் 12:11மீகா 2:131 நாளாக 14:15

தப்பியோடிப்போகிறவர்கள் போல ஓடிப்போவதில்லை.

ஏனெனில், யெகோவா உங்கள்முன் செல்வார்,

இஸ்ரயேலின் இறைவனே உங்களுக்குப் பின்னால் காவலாகவும் இருப்பார்.

அடியவரின் பாடுகள்

பாருங்கள், என் ஊழியன் ஞானமாய் செயலாற்றுவார்; பிலி 2:7-11மத் 28:18ஏசா 42:1யோவா 3:31எரே 23:5வெளி 5:6-13ஏசா 9:6-7யோவா 5:22-23

அவர் எழுப்பப்பட்டு, உயர்த்தப்பட்டு, அதிக மேன்மைப்படுத்தப்படுவார்.

அவரைக்கண்டு பிரமிப்படைந்தவர்கள் அநேகர்; ஏசா 50:6மத் 26:67ஏசா 53:2-5சங் 22:17சங் 22:6-7மத் 27:14லூக் 22:64மத் 27:29-30

அவரது தோற்றம் மனிதர் போலன்றி உருக்குலைந்ததாய் இருந்தது;

அவரது சாயலும் மனிதர் போலன்றி சிதைக்கப்பட்டிருந்தது.

அநேக நாடுகள் அவரைக்கண்டு திகைப்பார்கள்; ரோம 15:20-21ஏசா 49:71 பேது 1:2எசேக் 36:25ஏசா 55:5சங் 72:9-11அப் 2:33எபே 3:5-9

அவரின் நிமித்தம் அரசர்களும் தங்கள் வாய்களை மூடிக்கொள்வார்கள்.

அவர்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பார்கள்,

அவர்கள் கேள்விப்படாததை அவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.