பிலிப்பியர் 2

Philippians 2

கிறிஸ்துவின் தாழ்மை

எனவே கிறிஸ்துவோடு இணைந்திருப்பதனால், உங்களுக்கு ஏதாவது உற்சாகம் இருந்தால், அவருடைய அன்பில் ஏதாவது ஆறுதலோ, ஆவியானவரோடு ஏதாவது ஐக்கியமோ, ஏதாவது தயவோ, கருணையோ உங்களுக்கு இருக்குமானால், கொலோ 3:121 யோவா 4:121 யோவா 4:7-82 கொரி 13:14கொலோ 2:2சங் 133:11 கொரி 12:13எபே 2:18-22 ஒரே மனதுடனும், ஒரே அன்புடனும், இருதயத்திலும் நோக்கத்திலும் ஒற்றுமையாயிருந்து, எனது மகிழ்ச்சியை முழுமையாக்குங்கள். ரோம 12:161 பேது 3:8-91 கொரி 1:102 கொரி 13:113 யோவா 1:4ரோம 15:5-6பிலி 1:26-27பிலி 2:16 சுயநலத்திற்காகவும் வீண்பெருமைக்காகவும் ஒன்றும் செய்யவேண்டாம். மாறாக, தாழ்மையான மனதுடன் மற்றவர்களை உங்களைவிடச் சிறந்தவர்களாக எண்ணுங்கள். ரோம 12:10கலா 5:26எபே 5:21எபே 4:21 பேது 5:5யாக் 3:14-16யாக் 4:5-6பிலி 2:14 நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் சொந்த நலன்களில் மட்டும் அக்கறைகொள்ளாமல், மற்றவர்களுடைய நலன்களிலும் அக்கறைகொள்ள வேண்டும். 1 கொரி 10:24ரோம 15:1யாக் 2:81 கொரி 13:4-51 கொரி 10:32-33ரோம 12:151 கொரி 12:22-26ரோம 14:19-22

கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த மனப்பான்மையே உங்களுக்கும் இருக்கவேண்டும்: 1 யோவா 2:6மத் 11:291 பேது 2:211 பேது 4:11 கொரி 10:33மத் 20:26-28ரோம 15:5யோவா 13:14-15

அவர் தன் முழுத்தன்மையிலும் இறைவனாயிருந்தும், யோவா 5:182 கொரி 4:4எபி 1:3யோவா 17:5கொலோ 1:15-16யோவா 10:30ஏசா 9:6வெளி 21:6

இறைவனுடன் சமமாயிருக்கும் சிறப்புரிமையை விடாது

பற்றிப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டுமென்று எண்ணவில்லை.

ஆனால் அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கி, 2 கொரி 8:9மத் 20:28யோவா 1:14ரோம 8:3ஏசா 53:2-3கலா 4:4எபி 4:15ரோம 15:3

அடிமைத் தன்மையை ஏற்றுக்கொண்டு,

மனிதனின் சாயலுடையவரானார்.

தோற்றத்தில் ஒரு மனிதனைப்போல் காணப்பட்டு, யோவா 10:18எபி 12:2ரோம 5:191 பேது 2:241 பேது 3:182 கொரி 8:9மத் 26:39அப் 8:33

அவர் தம்மைத்தாமே தாழ்த்தி,

சாகும் அளவுக்கு கீழ்ப்படிந்தார்.

அதாவது சிலுவையின்மேல் சாகுமளவுக்கு முற்றுமாகக் கீழ்ப்படிந்தார்.

அதனாலே இறைவன் அவரை மிக மேலான இடத்திற்கு உயர்த்தி, வெளி 19:16மத் 28:181 பேது 3:22எபி 2:9ஏசா 52:13எபே 1:20-23தானி 7:14வெளி 5:12

எல்லாப் பெயர்களையும்விட உன்னதமான பெயரை அவருக்குக் கொடுத்தார்.

அதனால் இயேசுவின் பெயருக்கு ஒவ்வொரு முழங்காலும் முடங்கும். ஏசா 45:23-25மத் 28:18வெளி 5:13-14எபி 1:6ரோம 14:10-11எபே 3:14வெளி 4:10எபே 1:10

பரலோகத்திலும் பூமியிலும் பூமியின்கீழும் உள்ளவர்களின்

எல்லா முழங்கால்களும் முடங்கும்.

பிதாவாகிய இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி, 1 யோவா 4:15ரோம 14:11யோவா 13:13ரோம 14:91 யோவா 4:21 கொரி 12:3யோவா 14:13ரோம 10:9-12

ஒவ்வொரு நாவும் இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று அறிக்கையிடும்.

முறுமுறுப்பில்லாமல் எல்லாவற்றையும் செய்யுங்கள்

ஆகையால் என் அன்புக்குரிய நண்பர்களே, நீங்கள் எப்போதும் கீழ்ப்படிகிறது போலவே, நான் இருக்கும்போது மட்டுல்ல, நான் இப்போது இல்லாதிருக்கையிலும் அதிகமாகக் கீழ்ப்படிந்திருங்கள். தொடர்ந்து உங்கள் இரட்சிப்பை பயத்துடனும், நடுக்கத்துடனும் செயல்படுத்துங்கள். 2 பேது 1:5-10லூக் 13:23-241 கொரி 15:58எபி 4:111 பேது 2:11பிலி 3:13-14யோவா 6:27-29மத் 11:29 ஏனெனில், இறைவனே தனது நல்ல நோக்கத்திற்கு ஏற்றபடி, நீங்கள் செயலாற்றுவதற்கான விருப்பங்களையும், ஆற்றலையும் கொடுத்து உங்களுக்குள் செயலாற்றுகிறார். எபி 13:212 கொரி 3:52 தீமோ 1:9ரோம 9:161 கொரி 15:10எபே 1:11யாக் 1:16-18யோவா 3:27

முறுமுறுப்பில்லாமலும், வாதாடாமலும் எல்லாவற்றையும் செய்யுங்கள். 1 பேது 4:91 கொரி 10:10எபே 4:31-32யாக் 5:9பிலி 2:3ரோம 12:18யாத் 16:7-81 தெச 5:15 அப்பொழுதுதான் நீங்கள் குற்றமற்றவர்களும், தூய்மையானவர்களுமான “பிழையேதுமில்லாத இறைவனுடைய பிள்ளைகளாய், நெறிகெட்ட சீர்கேடான இந்தத் தலைமுறையினரிடையே இருப்பீர்கள்.” 1 அவர்களிடையே, நீங்கள் வான மண்டலங்களிலுள்ள நட்சத்திரங்களைப்போல் பிரகாசிப்பீர்கள். மத் 5:14-161 பேது 2:12மத் 5:45ஏசா 60:11 யோவா 3:1-3உபா 32:51 தெச 5:231 பேது 1:14-17 நீங்கள் வாழ்வின் வார்த்தையைப் பற்றிப்பிடித்து கொண்டவர்களாயிருந்தால் நான் ஓடிய ஓட்டமும், எனது உழைப்பும் வீணாகவில்லை என்று நான் கிறிஸ்து திரும்பிவரும் நாளில் பெருமையடைவேன். 1 கொரி 9:26கலா 2:21 யோவா 1:11 தெச 3:52 கொரி 1:14யோவா 6:68யோவா 6:63லூக் 12:8 ஆனால் உங்கள் விசுவாசத்தினால் வரும் பலியின்மேலும், ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக ஊற்றப்பட்டாலும், நான் உங்கள் எல்லோருடனும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடைகிறேன். 2 தீமோ 4:6எபி 13:15-16ரோம 15:162 கொரி 12:151 யோவா 3:162 கொரி 7:4கொலோ 1:24பிலி 1:20 எனவே நீங்களும்கூட என்னுடன் சந்தோஷமும் மகிழ்ச்சியுமாயிருக்க வேண்டும். யாக் 1:2-4பிலி 4:4பிலி 3:1எபே 3:13

தீமோத்தேயுவும் எப்பாப்பிராத்துவும்

அன்றியும் தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவில் நான் எதிர்பார்க்கிறேன். அப்பொழுது அவன்மூலம் உங்களைப்பற்றிய செய்திகளை அறிந்து நானும் உற்சாகமடைவேன். 1 கொரி 4:171 தெச 3:6-81 தெச 3:2பிலி 1:1கொலோ 4:8-9பிலே 1:5-7பிலி 2:23-25பிலி 2:28 அவனைப்போல் உங்கள் சுகநலன்களில் உண்மையான கரிசனைக் கொள்வதற்கு அவனைத்தவிர வேறொருவனும் என்னிடம் இல்லை. பிலி 2:21 கொரி 16:101 சாமு 18:3பிலி 2:221 சாமு 18:12 தீமோ 1:5யோவா 10:13யோவா 12:6 ஏனெனில் ஒவ்வொருவனும், தன் சொந்த நலன்களில் கரிசனை கொள்கிறானேதவிர, இயேசுகிறிஸ்துவுக்கு உரியவைகளில் கரிசனைகொள்வதில்லை. 1 கொரி 10:241 கொரி 10:33பிலி 2:4மத் 16:241 கொரி 13:52 தீமோ 3:2ஏசா 56:112 கொரி 5:14-15 ஆனால் தீமோத்தேயுவோ, ஒரு மகன் தன் தந்தையுடன் வேலையில் இருப்பதுபோல், என்னுடன் சேர்ந்து நற்செய்திப் பணியில் ஊழியம் செய்திருக்கிறான். இதன்மூலம், அவன் தன்னை நிரூபித்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். 1 கொரி 4:171 தீமோ 1:22 கொரி 2:92 தீமோ 1:21 தீமோ 1:182 கொரி 8:22அப் 16:3-122 கொரி 8:24 எனக்கு இங்கே என்ன நடக்கும் என்று நான் அறிந்தவுடனே, அவனை உங்களிடம் அனுப்பலாம் என எதிர்பார்க்கிறேன். 1 சாமு 22:3பிலி 2:19 நானும் உங்களிடம் விரைவில் வருவேன் என்று கர்த்தரில் மனவுறுதியாயிருக்கிறேன். 3 யோவா 1:14பிலே 1:22பிலி 1:25-262 யோவா 1:12பிலி 2:19ரோம 15:28-29

ஆனால் இப்பொழுது என்னுடைய தேவைகளில் எனக்கு உதவிசெய்யும்படி நீங்கள் அனுப்பிய உங்கள் தூதுவனான எப்பாப்பிராத்துவைத் திரும்பவும் உங்களிடம் அனுப்புவது அவசியம் என எண்ணுகிறேன். அவன் என் சகோதரனும் உடன் ஊழியனும், என் உடனொத்த போர் வீரனுமாயிருக்கிறான். பிலி 4:18பிலே 1:1-2பிலி 4:31 கொரி 3:9கொலோ 1:71 தெச 3:22 கொரி 8:22-232 தீமோ 2:3-4 அவன் உங்கள் எல்லோரையும் காண ஆவலாயிருக்கிறான். தான் சுகவீனமாய் இருந்ததை நீங்கள் கேள்விப்பட்டதினால் அவன் மிகவும் துக்கமடைந்திருக்கிறான். எபே 3:13ஏசா 61:3பிலி 1:8நீதி 12:25ரோம 12:152 சாமு 13:39மத் 11:28மத் 26:37 அவன் நோயினால் சாகும் தருவாயில் இருந்தது உண்மையே. ஆனால் இறைவன் அவன்மேல் இரக்கம் கொண்டார். அவனில் மட்டும் அல்ல, துக்கத்தின்மேல் துக்கம் எனக்கும் வராமல் அவர் என்மேலும் இரக்கம் கொண்டார். சங் 34:19பிலி 2:301 கொரி 10:132 கொரி 2:7அப் 9:37யோவா 11:3-4யோபு 5:19சங் 103:3-4 ஆகையால், நீங்கள் மீண்டும் அவனைக் கண்டு மகிழ்ச்சியடையும்படி, அவனை அனுப்புவதற்கு நான் மிகவும் ஆவலாய் இருக்கிறேன். அப்பொழுது என் கவலை குறையும். யோவா 16:222 தீமோ 1:4பிலி 2:26-272 கொரி 2:3அப் 20:38ஆதி 45:27-28ஆதி 46:29-301 யோவா 1:3-4 எனவே, அவனைக் கர்த்தரில் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக்கொள்ளுங்கள். இவனைப் போன்றவர்களுக்கு அதிக மதிப்புக்கொடுங்கள். 1 தெச 5:121 கொரி 16:181 தீமோ 5:17மத் 10:40-41ரோம 16:21 கொரி 16:102 கொரி 10:182 கொரி 7:2 ஏனெனில் உங்களால் எனக்கு செய்யமுடியாத உதவியை, அவன் எனக்குச் செய்யும்படி, தனது உயிரையும் பொருட்படுத்தவில்லை. இவ்வாறு, கிறிஸ்துவின் ஊழியத்திற்காக சாகவும் தயங்கவில்லை. 1 கொரி 16:17அப் 20:24பிலி 4:10பிலி 4:181 கொரி 15:531 கொரி 16:102 கொரி 12:15மத் 25:36-40