1 யோவான் 4

1 John 4

ஆவிகளைப் பகுத்தறிதல்

அன்பான நண்பரே, நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் இறைவனிடம் இருந்துதான் வந்தனவா என்று அவர்களைச் சோதித்துப் பாருங்கள். ஏனெனில் பல பொய் தீர்க்கதரிசிகள் உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள். 1 தெச 5:212 பேது 2:11 தீமோ 4:12 யோவா 1:7நீதி 14:15மத் 24:4-5எரே 29:8-9மத் 7:15-16 இறைவனுடைய ஆவியை நீங்கள் இவ்விதமாக அறிந்துகொள்ள முடியும்: இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்று ஏற்றுக்கொள்கிற எந்த ஆவியும் இறைவனிடமிருந்தே வந்திருக்கிறது. யோவா 1:141 கொரி 12:31 தீமோ 3:161 யோவா 4:31 யோவா 5:1யோவா 16:13-151 யோவா 2:23 மாம்சத்தில் வந்த இயேசுவை ஏற்றுக்கொள்ளாத எந்த ஆவியும் இறைவனிடமிருந்து வரவில்லை. இதுவே கிறிஸ்து விரோதியின் ஆவி; இந்த ஆவி வரும் என்று நீங்கள் கேள்விப்பட்டீர்கள். அது இப்பொழுதே உலகத்தில் வந்திருக்கிறது. 1 யோவா 2:222 யோவா 1:71 யோவா 2:182 தெச 2:3-8

அன்பான பிள்ளைகளே, இறைவனுக்குரிய நீங்கள் அந்த பொய் தீர்க்கதரிசிகளை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களில் இருக்கிறவர் மிகப்பெரியவராய் இருக்கிறார். ரோம 8:311 யோவா 5:4ரோம 8:371 யோவா 4:161 கொரி 2:12ரோம 8:10-111 யோவா 5:19எபே 6:12-13 இந்தப் பொய் தீர்க்கதரிசிகள் உலகத்திற்குரியவர்கள். ஆகவே, அவர்கள் உலக நோக்கத்தின்படியே பேசுகிறார்கள். உலகமும் அவர்களுக்கு செவிகொடுக்கிறது. யோவா 8:232 பேது 2:2-3யோவா 17:14யோவா 17:16யோவா 3:312 தீமோ 4:3வெளி 12:9ஏசா 30:10-11 நாம் இறைவனுக்குரியவர்கள். இறைவனை அறிந்தவர்கள் யாரோ அவர்கள் நாம் சொல்வதைச் செவிகொடுத்துக் கேட்கிறார்கள்; இறைவனிடமிருந்து வராதவர்கள் நாம் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். இவ்விதமே, சத்திய ஆவியானவரைப் பெற்றிருக்கிறவர்கள் யார் என்றும் ஏமாற்றும் ஆவியைப் பெற்றிருக்கிறவர்கள் யார் என்றும், நாம் அறிந்துகொள்கிறோம். யோவா 14:17யோவா 10:271 கொரி 2:12-14யோவா 15:261 யோவா 4:1யோவா 8:45-50யோவா 18:371 யோவா 4:4

இறைவனின் அன்பு

அன்பான நண்பரே, நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருப்போமாக. ஏனெனில், அன்பு இறைவனிடமிருந்து வருகிறது. அன்பாயிருக்கிற ஒவ்வொருவரும் இறைவனால் பிறந்திருக்கிறார்கள், அவர்கள் இறைவனை அறிந்திருக்கிறார்கள். 1 யோவா 4:201 யோவா 4:81 பேது 1:221 யோவா 2:10கலா 5:221 தெச 4:9-102 தீமோ 1:71 யோவா 4:12 அன்பாயிருக்காதவர்கள், இறைவனை அறியாதிருக்கிறார்கள். ஏனெனில், இறைவன் அன்பாகவே இருக்கிறார். 1 யோவா 4:161 யோவா 4:7சங் 86:152 கொரி 13:11சங் 86:5எபே 2:4யாத் 34:6-71 யோவா 1:5 இறைவன் நம்மில் வைத்திருக்கும் அன்பினால், நாம் அவர்மூலம் வாழ்வடையும்படி, அவர் தமது ஒரே பேறான மகனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இவ்விதமாய், அவர் தனது அன்பைக் காட்டினார். யோவா 3:161 யோவா 5:11ரோம 8:321 யோவா 4:10யோவா 6:57யோவா 11:25-26யோவா 10:10யோவா 10:28-30 இதுவே அன்பு: நாம் இறைவனிடம் அன்பாயிருக்கவில்லை. ஆனால் அவர் நம்மில் அன்புகாட்டி, நம்முடைய பாவங்களுக்கான நிவாரண பலியாகத் தமது மகனை அனுப்பினார். எபே 2:4-5ரோம 5:8-101 யோவா 4:191 யோவா 2:2யோவா 15:161 யோவா 4:8-9யோவா 3:161 யோவா 3:1 அன்பான நண்பரே, இறைவன் நம்மேல் இவ்வளவு அன்பாயிருந்தபடியால், நாமும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும். யோவா 15:12-13கொலோ 3:13யோவா 13:341 யோவா 3:23லூக் 10:371 யோவா 3:16-172 கொரி 8:8-9எபே 4:31 ஒருவனும் இறைவனை ஒருபோதும் கண்டதில்லை: ஆனால் நாம், ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், இறைவன் நம்மில் குடிகொண்டிருக்கிறார். அவருடைய அன்பும் நம்மில் முழுநிறைவாகிறது. யோவா 1:181 யோவா 2:51 யோவா 4:17-181 தீமோ 6:161 யோவா 4:201 யோவா 3:24யாத் 33:201 யோவா 4:6

இறைவன் தமது ஆவியானவரை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் இறைவனில் வாழுகிறோம் என்றும், அவர் நம்மில் வாழுகிறார் என்றும்: நாம் அறிகிறோம். 1 யோவா 3:24எபே 2:20-221 கொரி 3:16-17கலா 5:22-251 கொரி 2:121 யோவா 4:15-16ரோம 8:9-17யோவா 14:20-26 பிதா, தமது மகனை உலகத்தின் இரட்சகராக அனுப்பினார் என்பதை நாம் கண்டிருக்கிறோம்; அதற்கு நாங்கள் சாட்சியாகவும் இருக்கிறோம். 1 யோவா 4:10யோவா 3:16-17யோவா 1:14யோவா 4:421 யோவா 2:1-2யோவா 1:29யோவா 15:26-271 யோவா 5:9 யாராவது இயேசுவை இறைவனுடைய மகன் என்று ஏற்றுக்கொண்டால், இறைவன் அவனில் வாழ்கிறார்; அவனும் இறைவனில் வாழ்கின்றான். ரோம 10:9மத் 10:321 யோவா 5:51 யோவா 3:241 யோவா 4:2பிலி 2:111 யோவா 4:121 யோவா 5:1 இவ்வாறு இறைவன் நம்மேல் வைத்திருக்கும் அன்பை, நாம் அறிந்தும் இருக்கிறோம். அதை நாம் நம்பியும் இருக்கிறோம். 1 யோவா 3:24சங் 36:7-91 யோவா 3:11 யோவா 4:8-10சங் 18:1-31 யோவா 4:12-131 யோவா 3:16சங் 31:19

இறைவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் வாழ்கிறவன், இறைவனில் வாழ்கிறான், இறைவனும் அவனில் வாழ்கிறார். இவ்விதமாய், அன்பு நமக்குள் முழுநிறைவாய் வளர்கிறது. இதனால், நாம் நியாயத்தீர்ப்பு நாளில் மனவுறுதியுடையவர்களாய் இருப்போம். ஏனெனில், இந்த உலகத்தில் நாம் இயேசுவைப் போலவே இருக்கிறோம். 1 யோவா 2:281 யோவா 4:121 யோவா 2:5ரோம 8:291 யோவா 3:31 யோவா 3:19-21யோவா 15:201 யோவா 3:1 இப்படிப்பட்ட அன்பு இருக்கையில் பயத்திற்கு இடமில்லை. ஏனெனில், முழுநிறைவான அன்பு பயத்தை விரட்டிவிடும். ஆனால், பயம் தண்டனைத் தீர்ப்புடன் சம்பந்தப்படுகிறது. எனவே பயப்படுகிறவன் அன்பில் முழுநிறைவு பெற்றவனல்ல என்று காட்டுகிறது. 2 தீமோ 1:7ரோம 8:151 யோவா 4:12லூக் 1:74-75எபி 12:28யாக் 2:19சங் 119:120சங் 73:19

முதலில், அவர் நம்மில் அன்பாய் இருந்ததினாலேயே, நாமும் அவரில் அன்பாயிருக்கிறோம். 1 யோவா 4:10யோவா 3:16யோவா 15:16தீத் 3:3-52 கொரி 5:14-15லூக் 7:47எபே 2:3-5கலா 5:22 “நான் இறைவனில் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகிற யாராவது தனது சகோதரனை வெறுத்தால், அவன் ஒரு பொய்யன். ஏனெனில், தான் காண்கின்ற தன் சகோதரனில் அன்பாயிராத ஒருவனால், தான் காணாத இறைவனில் அன்பாயிருக்க முடியாது. 1 யோவா 3:171 யோவா 2:91 யோவா 4:121 யோவா 2:41 யோவா 2:111 பேது 1:81 யோவா 1:6 இதனாலேயே, இறைவனிடத்தில் அன்பாயிருக்கிறவன் யாரோ அவன் தன் சகோதரனிடத்திலும் சகோதரியிடத்திலும் அன்பாயிருக்கவேண்டும் என்கிற கட்டளையை இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். மத் 22:37-39லேவி 19:181 யோவா 3:11கலா 5:141 பேது 3:81 தெச 4:9யோவா 13:34-35யோவா 15:12