எபிரெயர் 1

Hebrews 1

இறைவனின் கடைசி வார்த்தை: அவருடைய மகன்

முற்காலத்தில் இறைவன் பலமுறை, வெவ்வேறு விதங்களில் இறைவாக்கினர்கள் மூலமாய் நமது முற்பிதாக்களுடன் பேசினார். 2 பேது 1:20-21யோவே 2:28எண் 12:6-8லூக் 24:271 பேது 1:10-12ஆதி 46:2-4லூக் 1:55அப் 2:30 ஆனால் இந்தக் கடைசி நாட்களில் அவர் தமது மகன் மூலமாகவே நம்மோடு பேசியுள்ளார். இவரையே இறைவன் எல்லாவற்றிற்கும் உரிமையாளராய் நியமித்திருக்கிறார். இவர் மூலமாகவே இறைவன் அண்ட சராசரங்களையும் படைத்தார். யோவா 1:31 கொரி 8:6கொலோ 1:16-18யோவா 1:141 பேது 1:20மத் 28:18யோவா 13:3பிலி 2:9-11 இறைவனுடைய மகனே அவருடைய மகிமையின் ஒளியாயும், அவருடைய தன்மையின் ரூபமாயும் இருக்கிறார். இந்த கிறிஸ்துவே தம்முடைய வல்லமையான வார்த்தையினாலே எல்லாவற்றையும் தாங்குகிறார். இவர் பாவங்களுக்கான சுத்திகரிப்பை ஏற்படுத்தி முடித்தபின்பு, பரலோகத்தில் உன்னதமான இறைவனுடைய வலதுபக்கத்தில் 1 உட்கார்ந்திருக்கிறார். கொலோ 1:15-17வெளி 4:11யோவா 14:9-10யோவா 1:142 கொரி 4:4எபி 10:12எபி 12:2யோவா 1:4 இவ்விதமாய் இறைவனின் மகனாகிய கிறிஸ்து இறைத்தூதர்களிலும் மேன்மையானவர் ஆனார். இவருக்கு இறைவன் கொடுத்த பெயரும் இறைத்தூதர்களின் பெயரிலும் மேன்மையானதே. எபே 1:21பிலி 2:9-111 பேது 3:22எபி 2:9வெளி 5:11-122 தெச 1:7சங் 2:7-8கொலோ 1:18

மகன் இறைத்தூதர்களிலும் மேன்மையானவர்

ஏனெனில் இறைவன் இறைத்தூதர்களில் யாரையாவது பார்த்து எப்பொழுதாவது இவ்வாறு சொல்லியிருக்கிறாரா? சங் 2:7அப் 13:33எபி 5:52 சாமு 7:141 நாளாக 17:131 நாளாக 22:10சங் 89:26-271 நாளாக 28:6

“நீர் என்னுடைய மகன்;

இன்று நான் உமக்குத் தந்தையானேன்” 2

அல்லது,

“நான் இவருடைய தந்தையாயிருப்பேன்;

அவர் என்னுடைய மகனாயிருப்பார்.” 3

மேலும், இறைவன் தம்முடைய முதற்பேறானவரை உலகத்திற்குள் கொண்டுவந்தபோது அவர் கூறியது, 1 பேது 3:22உபா 32:43சங் 97:7கொலோ 1:18கொலோ 1:15யோவா 1:14வெளி 5:9-12வெளி 1:5

“இறைவனுடைய தூதர்கள் எல்லோரும் அவரை வழிபடவேண்டும்.” 4

ஆனால் இறைத்தூதர்களைக்குறித்து பேசும்போது இறைவன் சொல்லுகிறதாவது, சங் 104:4எபி 1:142இராஜா 6:172இராஜா 2:11எசேக் 1:13-14சகரி 6:5தானி 7:10ஏசா 6:2

“அவர் தம்முடைய இறைத்தூதர்களைக் காற்றுகளாகவும்,

தம்முடைய ஊழியர்களை நெருப்பு ஜுவாலைகளாகவும் ஆக்குகிறார்.” 5

ஆனால் தம்முடைய மகனைக் குறித்தோ அவர் சொல்கிறதாவது, சங் 45:6-7ஏசா 9:6-7எரே 23:5-6ரோம 9:51 யோவா 5:20யோவா 10:30ஏசா 7:14மத் 1:23

“இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும்.

நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும்.

நீர் நீதியை விரும்பி, அநீதியை வெறுத்தீர்; சங் 45:7சங் 23:5ஏசா 61:3கலா 5:22ஏசா 61:1ரோம 15:13ஆமோ 5:15லூக் 4:18

ஆகையால் இறைவனே, உமது இறைவனே உம்மை மகிழ்ச்சியின் எண்ணெயால் அபிஷேகித்து,

உமது தோழர்களுக்கு மேலாக உம்மை உயர்த்திவைத்தார்.” 6

இறைவன் மேலும் சொன்னதாவது, சங் 102:25-27ஆதி 1:1யோவா 1:1-3எரே 32:17ஏசா 48:13சங் 8:3-4ஏசா 42:5சகரி 12:1

“நீர் ஆதியிலே பூமிக்கு அஸ்திபாரங்களை அமைத்தீர்;

வானங்களும் உமது கரங்களின் வேலைப்பாடாய் இருக்கின்றன.

அவை அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; ஏசா 51:6மாற் 13:31லூக் 21:33மத் 24:35ஏசா 34:4வெளி 21:1சங் 10:16ஏசா 65:17

அவையெல்லாம் உடையைப்போல பழமையாய்ப்போகும்.

அவற்றை ஒரு மேலுடையைப்போல் நீர் சுருட்டிவைப்பீர்; சங் 102:26-27எபி 13:8யாக் 1:17யோவா 8:58யாத் 3:14சங் 90:4

அவை ஒரு உடையைப்போல் மாற்றப்படும்.

நீரோ மாறாதவராய் நிலைத்திருக்கிறீர்.

உம்முடைய வருடங்கள் ஒருபோதும் முடிந்து போவதில்லை.” 7

மேலும், இறைவன் இறைத்தூதர்களில் யாரையாவது பார்த்து எப்பொழுதாவது, சங் 110:1மாற் 12:36எபி 10:12-13மத் 22:441 கொரி 15:25-26அப் 2:34-36எபி 1:3அப் 7:55

“நான் உமது பகைவரை

உமது கால்களுக்குப் பாதபடியாக்கும்வரை

நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்” 8

என்று சொல்லியிருக்கிறாரா?

இறைத்தூதர்களெல்லோரும் ஊழியம் செய்யும் ஆவிகள் அல்லவா? இரட்சிப்பை உரிமையாக்கிக்கொள்ளப் போகிறவர்களுக்குப் பணிசெய்யும்படி அனுப்பப்பட்டவர்களல்லவா? சங் 34:7சங் 103:20-21சங் 91:11-12தானி 6:22மத் 18:10அப் 27:23அப் 5:19அப் 10:3-4