சகரியா 6

Zechariah 6

நான்கு தேர்கள்

திரும்பவும் நான் பார்த்தபோது, இரண்டு வெண்கல மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு தேர்கள் வெளியே வரக்கண்டேன். எபே 1:11அப் 4:28தானி 8:22சகரி 1:18-19சகரி 6:5தானி 4:15தானி 4:35தானி 7:3-7 முதலாம் தேரில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் தேரில் கருப்புக் குதிரைகளும், சகரி 1:8வெளி 6:2-6வெளி 12:3வெளி 17:3சகரி 6:6 மூன்றாம் தேரில் வெள்ளைக் குதிரைகளும், நான்காம் தேரில் புள்ளிகளுடைய குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன. அவைகளெல்லாம் வலிமை நிறைந்தனவாய் இருந்தன. வெளி 6:2வெளி 6:8சகரி 1:8தானி 2:33தானி 2:40-41வெளி 19:11வெளி 20:11சகரி 6:6-7 அப்பொழுது நான் என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “இவை என்ன ஐயா?” எனக் கேட்டேன். சகரி 1:9சகரி 1:19-21சகரி 5:10சகரி 5:5-6

அதற்கு அந்தத் தூதன் என்னிடம், “இவை சர்வலோகத்திற்கும் ஆண்டவராக இருப்பவரின் முன்னின்று புறப்படுகிற வானத்தின் நான்கு காற்றுகளாகும். எசேக் 10:9-19எசேக் 37:9எபி 1:14எபி 1:72 நாளாக 18:18-19சங் 104:3-4வெளி 7:11 இராஜா 22:19 கருப்புக் குதிரைகள் பூட்டப்பட்டது வட தேசத்தை நோக்கியும், வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்டது மேற்கு நோக்கியும், புள்ளிகளுடைய குதிரைகள் பூட்டப்பட்டது தெற்கு நோக்கியும் போகின்றன.” எசேக் 1:4தானி 11:40எரே 1:14-15எரே 4:6எரே 51:48எரே 6:1தானி 11:3-6தானி 7:5-6

வலிமைவாய்ந்த குதிரைகள் வெளியே வந்து, அவை பூமியை சுற்றிப்போகத் துடித்துக் கொண்டிருந்தன. அப்போது அவன், “பூமி முழுவதையும் சுற்றிப் போங்கள்!” என்றான். உடனே அவை பூமி முழுவதையும் சுற்றிப்போனது. 2 நாளாக 16:9சகரி 1:10தானி 7:19தானி 7:24ஆதி 13:17யோபு 1:6-7யோபு 2:1-2

அப்போது அவர் என்னைக் கூப்பிட்டு, “பார்! வட தேசத்தை நோக்கிப் போகின்றவை வடநாட்டில் என் ஆவிக்கு அமைதியைக் கொடுத்திருக்கின்றன என்றான்.” எசேக் 5:13எசேக் 24:13எரே 51:48-49சகரி 1:15பிரச 10:4எசேக் 16:42எசேக் 16:63ஏசா 1:24

யோசுவாவுக்கு மகுடம்

திரும்பவும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. சகரி 1:1சகரி 7:1சகரி 8:1 “நாடுகடத்தப்பட்டு, பாபிலோனிலிருந்து திரும்பி வந்த எல்தாய், தொபியா, யெதாயா ஆகியோரிடமிருந்து வெள்ளியையும் தங்கத்தையும் பெற்றுக்கொள். அன்றைக்கே புறப்பட்டு செப்பனியாவின் மகன் யோசியாவின் வீட்டிற்குப் போ. எஸ்றா 7:14-16எஸ்றா 8:26-30அப் 24:17ஏசா 66:20எரே 28:6ரோம 15:25-26 அங்கே வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து ஒரு மகுடம் செய்து அதை யெகோசாதாக்கின் மகன் யோசுவா என்னும் தலைமை ஆசாரியனின் தலையில் வை. சங் 21:3சகரி 3:1உன்னத 3:11யாத் 39:30ஆகா 1:1லேவி 8:9வெளி 19:12சகரி 3:5 சேனைகளின் யெகோவா அறிவிப்பது இதுவே என நீ அவனிடம் சொல்: ‘கிளை என்னும் பெயரைக்கொண்டவர் இவரே; அவர், தான் இருக்குமிடத்திலிருந்து கிளைவிட்டு யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவார். எரே 33:15சகரி 3:8ஏசா 11:1ஏசா 4:2எரே 23:5ஏசா 53:2சகரி 4:6-9அப் 17:31 யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுகிறவர் அவரே. அவர் மாட்சிமையை அணிந்து, தம் அரியணையின்மேல் அமர்ந்திருந்து அரசனாக ஆட்சி செய்வார். அவ்வாறு அவர் தம் அரியணையில் ஒரு ஆசாரியனாகவும் இருப்பார். இந்த இரண்டு பணிகளுக்கும் இடையே ஒரு நல்லிணக்கம் இருக்கும்.’ சங் 110:4எபி 3:1ஏசா 49:5-6ஏசா 11:10சங் 21:5ஏசா 22:24சங் 45:3-4சங் 85:9-11 அந்த மகுடம் ஏலேம், தொபியா, யெதாயா ஆகியோருக்கும், செப்பனியாவின் மகன் யோசியா எனப்பட்ட ஏனுக்கும் நினைவுச் சின்னமாகக் கொடுக்கப்படும். அதை யெகோவாவின் ஆலயத்தில் வைத்திருக்கவேண்டும். யாத் 12:14மத் 26:13மாற் 14:91 கொரி 11:23-261 சாமு 2:30அப் 10:4யாத் 28:12யாத் 28:29 வெகுதொலைவில் இருப்பவர்கள் வந்து, யெகோவாவின் ஆலயத்தைக் கட்ட உதவி செய்வார்கள்; அப்பொழுது என்னை சேனைகளின் யெகோவாவே உங்களிடம் அனுப்பினார் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முழுவதுமாய் கீழ்ப்படிவீர்களானால் இது நிறைவேறும் என்றார்.” ஏசா 60:101 பேது 2:4-5சகரி 3:72 பேது 1:5-10அப் 2:39ஏசா 56:6-8ஏசா 57:19ஏசா 58:10-14