கலாத்தியர் 5

Galatians 5

கிறிஸ்துவில் சுதந்திரம்

நாம் சுதந்திரமுடையவர்களாய் இருப்பதற்காகவே கிறிஸ்து நம்மை விடுதலையாக்கியிருக்கிறார். எனவே நீங்கள், உறுதியாய் நிலைத்திருங்கள். மீண்டும் நீங்கள் உங்களை அடிமைத்தன நுகத்தின் சுமைக்கு உட்படுத்தாதபடி காத்துக்கொள்ளுங்கள். 2 கொரி 3:17கலா 5:131 பேது 2:16ரோம 6:14யோவா 8:32-36ரோம 8:2கலா 4:9எபி 10:23

பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால், கிறிஸ்துவால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லை என்றே சொல்கிறேன். கலா 5:6அப் 15:1கலா 2:3-5ரோம 9:31-32அப் 16:3-4கலா 5:11கலா 5:3-4எபி 4:2 நான் மீண்டும் சொல்கிறேன், விருத்தசேதனம் செய்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவனும், மோசேயின் சட்டம் முழுவதையும் கைக்கொள்வதற்கு கடமைப்பட்டிருக்கிறான். கலா 3:10ரோம 2:25யாக் 2:10-11உபா 27:26உபா 31:21உபா 8:19எபே 4:17மத் 23:18 மோசேயின் சட்டத்தினால் நீதிமான்கள் ஆக்கப்பட முயற்சிக்கிற நீங்கள் கிறிஸ்துவிலிருந்து விலகிவிட்டீர்கள்; நீங்கள் கிருபையிலிருந்து விழுந்துவிட்டீர்கள். 2 பேது 2:20-22ரோம 9:31-32கலா 2:21எபி 12:15ரோம 11:6ரோம 3:20ரோம 4:4-5கலா 5:2 ஆனால் நாங்களோ, எதிர்பார்த்திருக்கும் நீதிக்காக பரிசுத்த ஆவியானவர் மூலமாய் விசுவாசத்தில் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம். சங் 130:51 தெச 1:10சங் 62:5ரோம 8:23-252 தீமோ 4:8ஆதி 49:18பிலி 3:9தீத் 2:13 ஏனெனில் கிறிஸ்து இயேசுவில் ஒருவன் விருத்தசேதனத்தைச் செய்துகொண்டானா அல்லது அதைச் செய்யாதிருக்கிறானா என்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. அன்பின் செயல்களினால் வெளிக்காட்டப்படுகிற விசுவாசம் மட்டுமே முக்கியமானது. கலா 6:151 கொரி 7:191 தெச 1:3யாக் 2:14-261 யோவா 3:14-20மத் 25:31-401 பேது 1:82 கொரி 5:14

இந்தப் பந்தயத்தில் நீங்கள் நன்றாய் ஓடிக்கொண்டிருந்தீர்கள். சத்தியத்திற்குக் கீழ்ப்படியாதபடி உங்களைத் தடைசெய்தது யார்? 1 கொரி 9:24கலா 3:1எபி 12:1மத் 13:211 பேது 1:222 கொரி 10:5எபி 5:9ரோம 10:16 இவ்விதமான தூண்டுதல் உங்களை அழைத்த இறைவனால் ஏற்பட்ட ஒன்று அல்ல. கலா 1:6ரோம 8:28 “ஒரு சிறிதளவு புளித்தமாவு பிசைந்தமாவு முழுவதையும் புளிப்பூட்டுகிறதே.” 1 கொரி 15:33மாற் 8:151 கொரி 5:6-7லூக் 12:1லூக் 13:21மத் 16:6-122 தீமோ 2:17மத் 23:33 நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்கள் என்று நான் உங்களைக்குறித்து கர்த்தரில் மனவுறுதி கொண்டிருக்கிறேன். ஆனால், உங்களைக் குழப்பமடையச் செய்கிறவன் எவனோ, அவன் யாராயிருந்தாலும் தண்டனையைப் பெறுவான். கலா 5:12பிலி 3:152 கொரி 2:3கலா 1:71 கொரி 5:51 யோவா 2:18-261 தீமோ 1:202 கொரி 10:2 பிரியமானவர்களே, விருத்தசேதனம் அவசியம்தான் என்று நான் இன்னும் பிரசங்கித்தால், நான் ஏன் இன்னும் யூதர்களால் துன்புறுத்தப்படுகிறேன்? அப்படி நான் பிரசங்கிப்பது உண்மை என்றால், கிறிஸ்துவின் சிலுவையின் காரணமாய் வரும் துன்புறுத்தல் நின்று போயிருக்குமே. 1 கொரி 1:23கலா 6:12கலா 4:291 கொரி 1:181 கொரி 15:301 பேது 2:8-9அப் 21:21கலா 2:3 விருத்தசேதனம் அவசியம் என்று உங்களைக் குழப்பமடையச் செய்கிறவர்களோ, இன்னும்கூட தங்கள் முழு உறுப்பையுமே வெட்டிக்கொள்வதையே நான் விரும்புகிறேன். கலா 5:101 கொரி 5:13யாத் 12:15யாத் 30:33கலா 2:4ஆதி 17:14யோசு 7:25லேவி 22:3

ஆவியானவரால் வரும் வாழ்வு

எனக்கு பிரியமானவர்களே, சுதந்திரமாய் இருப்பதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் சுதந்திரத்தை மாம்சத்தின் ஆசைகளை அனுபவிப்பதற்குச் சாதகமாகப் பயன்படுத்தாதீர்கள். அன்பினாலே ஒருவருக்கு ஒருவர் பணிசெய்யுங்கள். 1 பேது 2:161 கொரி 9:191 கொரி 8:9ரோம 15:1-2கலா 5:14எபே 5:21ரோம 6:18-22கலா 6:2 “நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல், உன் அயலவனிலும் அன்பாய் இரு” 1 என்கிற, ஒரே கட்டளையிலே மோசேயின் சட்டம் முழுவதுமே அடங்கியிருக்கிறது. மத் 7:12லேவி 19:18கலா 6:2மாற் 12:31ரோம 13:8-10யோவா 13:34மத் 22:39-40லேவி 19:34 ஆனால் நீங்கள் ஒருவரையொருவர் கடித்து விழுங்குகிறவர்களாய் இருந்தால், கவனமாயிருங்கள். ஏனென்றால், நீங்கள் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். 1 கொரி 3:3யாக் 3:14கலா 5:262 கொரி 11:202 கொரி 12:201 கொரி 6:6-8ஏசா 11:13ஏசா 9:20-21

எனவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலின்படி வாழுங்கள். அப்பொழுது உங்கள் மாம்சத்தின்படி எழும் ஆசைகளைத் தீர்த்துக்கொள்வதில் ஈடுபடமாட்டீர்கள். கலா 5:24-25ரோம 8:12-14கலா 6:8கலா 5:19-21கொலோ 3:5-10ரோம 8:4-51 யோவா 2:15-161 பேது 2:11 ஏனெனில் மாம்ச இயல்பு, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு முரண்பாடான ஆசைகளைத் தூண்டுகிறது. பரிசுத்த ஆவியானவரோ, மாம்ச இயல்புக்கு முரண்பட்ட விதத்திலேயே வழிநடத்துகிறார். அவை இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பாடாய் இருக்கின்றன. இதனாலேயே நீங்கள் விரும்புவதை உங்களால் செய்ய முடியாதிருக்கிறது. ரோம 8:13ரோம 8:5-8யோவா 3:6மத் 26:41சங் 119:20சங் 51:10-12பிரச 7:20சங் 119:32 ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டால், நீங்கள் மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. ரோம 6:14-15ரோம 8:14நீதி 8:20கலா 5:25எசேக் 36:27கலா 4:5-6கலா 5:16யோவா 16:13

மாம்ச இயல்பின் செயற்பாடுகள் வெளிப்படையானவை, அவையாவன: முறைகேடான பாலுறவு, அசுத்த பழக்கங்கள், காமவேட்கை; 1 கொரி 6:9-10கொலோ 3:5-8மத் 15:18-191 பேது 4:2-4வெளி 21:8எபே 5:3-6கலா 6:81 கொரி 3:3 விக்கிரக வழிபாடு, மாந்திரீகம்; பகைமை, தகராறு, எரிச்சல் குணம், கோபம், சுயநலம், பிரிவினைகள், பேதங்கள், 1 கொரி 11:19வெளி 21:8தீத் 3:102 கொரி 11:19அப் 8:9-111 நாளாக 10:13-14உபா 18:10அப் 16:16-19 பொறாமை; குடிவெறி, களியாட்டம் போன்றவைகளே. நான் உங்களை முன்பு எச்சரித்ததுபோலவே இப்பொழுதும் எச்சரிக்கிறேன். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள், இறைவனுடைய அரசில் உரிமை பெறுவதில்லை. 1 கொரி 6:9-10ரோம 13:13ரோம 8:13எபே 5:5-61 கொரி 5:11எபே 5:18கொலோ 3:6வெளி 21:27

ஆனால் ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், உண்மைத்தனம், கொலோ 3:12-171 கொரி 13:4-7யோவா 15:5யாக் 3:17-18யோவா 15:2எபே 5:9சங் 1:3யோவா 15:16 சாந்தகுணம், சுயக்கட்டுப்பாடு என்பனவாகும். இவைகளுக்கு முரணான எந்தவித சட்டமும் இல்லை. 1 தீமோ 1:9அப் 24:25தீத் 2:2தீத் 1:81 கொரி 9:25 கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள், தங்கள் மாம்சத்தின் இயல்பை, அதன் தீவிர உணர்ச்சிகளுடனும் ஆசைகளுடனும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். ரோம 6:6ரோம 13:14ரோம 8:13கலா 5:16-18ரோம 8:91 பேது 2:11கலா 6:141 கொரி 3:23 நாம் பரிசுத்த ஆவியானவரால் வாழ்கிறபடியால், ஆவியானவருடனேயே ஒவ்வொரு காலடியையும் எடுத்துவைப்போம். கலா 5:16ரோம 8:4-5யோவா 6:63ரோம 8:22 கொரி 3:61 பேது 4:6ரோம 8:101 கொரி 15:45 நாம் வீண்பெருமை கொண்டவர்களாய் இருக்கக்கூடாது. மற்றவர்களை எரிச்சல் மூட்டுகிறவர்களாகவோ, ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்கிறவர்களாகவோ இருக்கக்கூடாது. யாக் 3:14-16பிலி 2:1-3யாக் 4:161 கொரி 3:7கலா 5:15லூக் 14:101 பேது 5:5