அக்கிரம மனிதன்
பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையைக் குறித்தும், நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவதைக் குறித்தும், நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது இதுவே: 1 தெச 4:14-17மாற் 13:27மத் 24:311 தெச 2:191 தெச 3:132 தீமோ 4:1மத் 25:32எபே 1:10 ஏதாவது இறைவாக்கினாலோ, அறிக்கையினாலோ, எங்களிடமிருந்து வந்தது என சொல்லப்படுகிற கடிதத்தினாலோ, கர்த்தருடைய நாள் ஏற்கெனவே வந்துவிட்டதென சொல்லப்பட்டால், அதைக்குறித்து நீங்கள் நிலைகுலைந்து போகவோ, திகிலடையவோ வேண்டாம். 1 யோவா 4:1-2மாற் 13:7மத் 24:4-62 பேது 3:4-82 தெச 3:17லூக் 21:91 கொரி 1:81 தெச 4:15 யாராவது உங்களை எவ்வகையிலும் ஏமாற்றுவதற்கு சிறிதளவும் இடங்கொடுக்க வேண்டாம். ஏனெனில், இறைவனுக்கெதிரான பெரும் கலகம் ஏற்பட்டு, அக்கிரம மனிதன் வெளிப்படும்வரைக்கும், அந்த நாள் வராது; அந்த மனிதனே அழிவுக்கு நியமிக்கப்பட்டவன். மத் 24:4-61 யோவா 2:18எபே 5:61 தீமோ 4:1-32 தெச 2:8-10தானி 7:25தானி 8:252 தீமோ 3:1-3 அவன் இறைவன் என்று சொல்லப்படும் எல்லாவற்றிற்கும், வழிபாட்டுக்குரியவைகள் எல்லாவற்றிற்கும் எதிர்த்து நிற்பான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவன் தன்னை உயர்த்துவான். இதனால், இறைவனின் ஆலயத்தில் தேவன்போல அமர்த்திக்கொண்டு, தன்னையே இறைவன் என்று பிரசித்தப்படுத்துவான். தானி 7:25எசேக் 28:2ஏசா 14:13-14வெளி 13:6-7எசேக் 28:6தானி 11:451 கொரி 8:5தானி 7:8
நான் உங்களுடன் இருந்தபோது, நான் இவற்றைக்குறித்து உங்களுக்குச் சொன்னது ஞாபகம் இல்லையா? 2 பேது 1:15கலா 5:21யோவா 16:4மத் 16:91 தெச 2:112 தெச 3:10அப் 20:31லூக் 24:6-7 அவனை இப்போது வெளிப்படாதபடி தடுத்துக்கொண்டிருப்பவர் யாரென்று, உங்களுக்குத் தெரியும். இதனால், அவன் ஏற்ற காலத்திலேதான் வெளிப்படுவான். 2 தெச 2:32 தெச 2:8 ஏனெனில், அக்கிரமத்தின் இரகசியம், ஏற்கெனவே வல்லமை செயலாற்றிக்கொண்டு இருக்கிறது. ஆனால், அதை இப்பொழுது தடுத்துக்கொண்டிருப்பவர், தாம் எடுத்துக்கொள்ளப்படும்வரை தொடர்ந்து, அதைத் தடுத்துக்கொண்டே இருப்பார். 1 யோவா 4:32 தீமோ 2:17-18வெளி 17:71 யோவா 2:18அப் 20:29வெளி 17:5கொலோ 2:18-231 தீமோ 3:16 அதற்குப் பின்பு, அந்த அக்கிரம மனிதன் வெளிப்படுவான். அவனை கர்த்தராகிய இயேசு தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தமது வருகையின் மகிமையினாலே அவனை அழித்துப்போடுவார். 2 தெச 2:3வெளி 19:20-21ஏசா 11:4வெளி 20:10வெளி 19:15தானி 7:10-11வெளி 2:16தீத் 2:13 அந்த அக்கிரம மனிதன் வரும்போது, சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும், பலவித போலியான அற்புதங்களும், அடையாளங்களும், அதிசயங்களும் செய்து காட்டுவான். மத் 24:24வெளி 19:20எபே 2:22 கொரி 11:3யோவா 4:48மாற் 13:22உபா 13:1-2அப் 13:10 அழிந்துபோகிறவர்களை ஏமாற்றி எல்லா விதமான தீமையான செயல்களும் செய்துகாட்டப்படும். இறைவனுடைய சத்தியத்தை அன்புடன் ஏற்றுக்கொள்ளவும், அதனால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளவும் மறுத்ததினாலேயே, அவர்கள் அழிந்துபோகிறார்கள். 1 கொரி 1:18நீதி 1:72 கொரி 4:2-32 பேது 2:12யோவா 8:45-47ரோம 16:181 கொரி 16:22எபே 4:14 இந்தக் காரணத்தினாலே, இறைவன் அவர்களுக்குள்ளே ஏமாற்றத்தை நம்பும் வண்ணமாக, தவறான தன்மையை வரவிடுவார். அதனால் அவர்கள் பொய்யையே நம்புவார்கள். ரோம 1:28யோவா 12:39-431 தீமோ 4:1மத் 24:11சங் 81:11-12எசேக் 21:29ரோம 1:21-251 தெச 2:3 இவ்வாறு சத்தியத்தை விசுவாசிக்காமல், கொடுமையான செயல்களில் மகிழ்ச்சி கொண்டவர்கள் எல்லோரும் குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படுவார்கள். ரோம 1:32ரோம 8:7-8மாற் 16:16ரோம 2:81 தெச 5:92 பேது 2:13-15ஓசி 7:3யோவா 3:36
உறுதியாய் நில்லுங்கள்
ஆனால், கர்த்தரின் அன்புக்குரிய பிரியமானவர்களே, உங்களையோ, இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி ஆரம்பத்திலிருந்தே இறைவன் தெரிந்துகொண்டார். பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குகிற செயலினாலும், சத்தியத்தை நம்பி விசுவாசிக்கிறதினாலும், இந்த இரட்சிப்பு வருகிறது. இதனாலேயே உங்களுக்காக, நாங்கள் எப்பொழுதும் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். 2 தீமோ 1:9எபே 1:4-51 தெச 1:41 தெச 5:9ரோம 9:11அப் 13:482 தெச 1:3தானி 9:23 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையில், நீங்களும் பங்குடையவர்களாகும்படியே, எங்களுடைய நற்செய்தியின் மூலமாய், அவர் உங்களை அழைத்திருக்கிறார். 1 தெச 2:121 பேது 5:101 தெச 1:5ரோம 8:171 பேது 1:4-5ரோம 2:16ரோம 8:28-302 தீமோ 2:12
ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் உறுதியுடன் நின்று, எங்களுடைய வாயின் வார்த்தை மூலமாகவோ, அல்லது கடிதத்தின் மூலமாகவோ, நாங்கள் உங்களுக்குக் கொடுத்த போதனைகளைக் கைக்கொள்ளுங்கள். 1 கொரி 11:22 தெச 3:61 கொரி 16:132 தெச 2:2பிலி 4:1ரோம 16:171 கொரி 15:582 தெச 3:14
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், பிதாவாகிய இறைவனும் நம்மில் அன்பு செலுத்தி, தமது கிருபையினால் நமக்கு நித்திய தைரியத்தையும், நல்ல எதிர்பார்ப்பையும் தந்துள்ளார். யோவா 3:16ரோம 5:2-51 பேது 1:3-8தீத் 3:4-71 தெச 3:11ரோம 8:24-25தீத் 1:22 கொரி 4:17-18 அவர் உங்களுடைய இருதயங்களை உற்சாகப்படுத்தி, உங்களை எல்லா நற்செயலிலும் நற்சொல்லிலும் பெலப்படுத்துவாராக. 2 தெச 3:31 தெச 3:131 தெச 3:21 கொரி 1:8கொலோ 2:7எபி 13:9யூதா 1:24ரோம 15:13