நோயுற்றவன் சுகமடைதல்
இவைகளுக்குப் பின்பு, யூதர்களுடைய ஒரு பண்டிகைக்கு இயேசு எருசலேமுக்குச் சென்றார். உபா 16:16யாத் 23:14-17லேவி 23:2-4யாத் 34:23யோவா 2:13கலா 4:4மத் 3:15 எருசலேமிலே ஆட்டு வாசலின் அருகே ஒரு குளம் இருந்தது. அது எபிரெய மொழியிலே பெதஸ்தா 1 என்று அழைக்கப்பட்டது. அதைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன. நெகே 12:39நெகே 3:1ஏசா 22:11நெகே 3:32அப் 21:40ஏசா 22:9யோவா 19:13யோவா 19:17 அங்கே பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் போன்ற அநேக நோயாளிகள் படுத்திருப்பது வழக்கம். அவர்கள் தண்ணீர் கலங்கும் வேளைக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். மாற் 3:1-4லூக் 7:22மத் 15:30சகரி 11:17புலம் 3:26யாக் 5:71 இராஜா 13:4நீதி 8:34 சிலவேளைகளில் கர்த்தருடைய தூதன் ஒருவன் இறங்கிவந்து அந்தத் தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலங்கிய உடனே அந்தக் குளத்தில் முதலாவது இறங்குபவன் என்ன வியாதியுடையவனாய் இருந்தாலும் அவன் சுகமடைவான். 2 அங்கிருந்த ஒருவன் முப்பத்தெட்டு வருடங்களாக நோயாளியாயிருந்தான். அப் 3:2லூக் 8:43மாற் 9:21அப் 14:8லூக் 13:16அப் 9:33யோவா 5:14யோவா 9:1 இயேசு அவனைக் கண்டு, அங்கே அவன் அநேக காலமாக இந்நிலையில் கிடப்பதை அறிந்துகொண்டார். அவர் அவனிடம், “நீ சுகமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார். லூக் 18:41எபி 4:15எபி 4:13ஏசா 65:1யோவா 21:17சங் 142:3எரே 13:27
அதற்கு அந்த நோயுற்ற மனிதன், “ஐயா, தண்ணீர் கலக்கப்படும்போது, நான் குளத்தில் இறங்குவதற்கு எனக்கு உதவிசெய்ய ஒருவரும் இல்லை. நான் இறங்குவதற்கு முயற்சி செய்கையில், வேறொருவன் எனக்கு முன்பாகவே இறங்கி விடுகிறான்” என்றான். சங் 72:121 கொரி 9:24உபா 32:36சங் 142:42 கொரி 1:8-10ரோம 5:6யோவா 5:3
அப்பொழுது இயேசு அவனிடம், “எழுந்திரு! உன் படுக்கையை தூக்கிக்கொண்டு நட” என்றார். லூக் 5:24மத் 9:6மாற் 2:11அப் 9:34 உடனே அவன் குணமடைந்தான்; மேலும் தன் படுக்கையையும் எடுத்துக்கொண்டு நடந்துபோனான். அப் 3:7-8யோவா 9:14மாற் 3:2-4லூக் 13:10-16மத் 12:10-13மாற் 1:31மாற் 1:42மாற் 10:52
இது நிகழ்ந்த நாள் யூதருடைய ஒரு ஓய்வுநாளாயிருந்தது. எனவே யூதத்தலைவர்கள், குணமடைந்த அவனிடம், “இது ஓய்வுநாள்; நீ உனது படுக்கையை எடுத்துக்கொண்டு போவதை மோசேயின் சட்டம் தடைசெய்கிறது” என்றார்கள். எரே 17:21யோவா 9:16லூக் 6:2லூக் 13:14மாற் 3:4மாற் 2:24நெகே 13:15-21யோவா 5:16
அவன் அதற்கு, “என்னைக் குணமாக்கியவர், ‘உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று எனக்குச் சொன்னார்” என்றான். மாற் 2:9-11யோவா 9:16
எனவே அவர்கள் அவனிடம், “உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று உனக்குச் சொன்னது யார்?” என்று கேட்டார்கள். மத் 21:23நியாயாதி 6:29ரோம 10:21 சாமு 14:38
சுகமடைந்தவனுக்கோ, தன்னை குணமாக்கினவர் யார் என்று தெரியாதிருந்தது. ஏனெனில் இயேசு அங்கு கூடியிருந்த மக்களிடையே போய் மறைந்துவிட்டார். லூக் 24:31லூக் 4:30யோவா 14:9யோவா 8:59
பின்பு இயேசு அவனை ஆலயத்தில் கண்டு அவனிடம், “பார், நீ சுகமடைந்திருக்கிறாயே. இனிமேல் பாவம் செய்யாதே. செய்தால் இதைவிட மோசமானது ஏதாவது உனக்கு நேரிடலாம்” என்றார். யோவா 8:11லேவி 26:23-24சங் 118:18மத் 12:45நெகே 9:28சங் 107:20-22வெளி 2:21-23ஏசா 38:20 அவன் பிறகு புறப்பட்டுப்போய் தன்னை குணமாக்கியது இயேசுவே என்று யூதருக்குச் சொன்னான். யோவா 4:29யோவா 9:11-12யோவா 9:25மாற் 1:45யோவா 1:19யோவா 5:12யோவா 9:15யோவா 9:30
இறைமகனின் மூலமாக நித்திய ஜீவன்
இந்தக் காரியங்களை இயேசு ஓய்வுநாளிலே செய்தபடியால், யூதர் இயேசுவைத் துன்புறுத்தினார்கள். அப் 9:4-5யோவா 10:39யோவா 15:20யோவா 5:13யோவா 7:19-20யோவா 7:25லூக் 6:11மத் 12:13 இயேசு அவர்களிடம், “இன்றுவரை என் பிதா ஓய்வில்லாமல் தன் வேலைகளைச் செய்கிறார்; நானும் வேலைசெய்கிறேன்” என்றார். யோவா 14:10யோவா 9:41 கொரி 12:6கொலோ 1:16எபி 1:3ஆதி 2:1-2ஏசா 40:26அப் 14:17 இயேசு ஓய்வுநாளின் முறைமையை மீறியது மட்டுமல்லாமல், இறைவனைத் தன்னுடைய சொந்தத் தந்தை என்றும் சொல்லி தன்னை இறைவனுக்குச் சமமாக்கினார் என்பதால், யூதர் அவரைக் கொலைசெய்ய இன்னும் அதிகமாய் முயற்சிசெய்தார்கள். யோவா 10:30யோவா 10:33யோவா 19:7யோவா 8:58யோவா 14:23யோவா 5:23யோவா 7:1யோவா 7:19
இயேசு அவர்களுக்கு சொன்னது: “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், எவைகளையெல்லாம் பிதாவானர் செய்கிறதை மகன் காண்கிறாரோ, அவைகளையே அன்றி தாமாக வேறொன்றையும் செய்யமாட்டார்; பிதா எவைகளை செய்கிறாரோ அவைகளையே மகனும் செய்கிறார். யோவா 12:49யோவா 8:28யோவா 14:10யோவா 10:18யோவா 5:28-30ரோம 8:11யோவா 14:16-23லூக் 21:15 ஏனெனில் பிதா மகனில் அன்பாயிருந்து, தாம் செய்வதையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார். ஆம், நீங்கள் வியப்படையும்படி பிதா இவற்றை விடவும் பெரிதான செயல்களைக் காண்பிப்பார். யோவா 3:35மத் 3:17நீதி 8:22-312 பேது 1:17யோவா 15:15யோவா 17:26யோவா 1:18யோவா 10:32 பிதா மரித்தவர்களை உயிருடன் எழுப்பி, அவர்களுக்கு ஜீவன் கொடுப்பது போலவே, மகனும் தமக்கு விருப்பமுள்ளவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கிறார். ரோம 8:11உபா 32:39யோவா 11:25அப் 26:8லூக் 7:14-15யோவா 17:2யோவா 11:43-44லூக் 8:54-55 மேலும், பிதா ஒருவரையும் நியாயந்தீர்ப்பதில்லை. நியாயத்தீர்ப்பை கொடுக்கும் வேலை முழுவதையும் மகனிடமே ஒப்படைத்திருக்கிறார். யோவா 5:27அப் 17:312 கொரி 5:10மத் 28:18அப் 10:42யோவா 9:392 தீமோ 4:1ரோம 2:16 எல்லா மனிதரும் பிதாவைக் கனம் பண்ணுவதுபோல, மகனையும் கனம்பண்ணும்படி இப்படிச் செய்தார். மகனுக்கு கனம் கொடாத எவனும், அவரை அனுப்பிய பிதாவுக்கும் கனம் கொடாதிருக்கிறான். 1 யோவா 2:23லூக் 10:162 யோவா 1:9மத் 11:27யோவா 15:23-24எரே 17:5-7லூக் 12:8-91 தெச 3:11-13
“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவர்கள் யாரோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் மரணத்தைக் கடந்துசென்று ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறார்கள். யோவா 3:36யோவா 6:401 யோவா 5:11-13யோவா 3:18ரோம 8:1யோவா 11:26யோவா 6:47யோவா 10:27-30 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. இக்காலத்திலேயே மரித்தவர்கள் இறைவனுடைய மகனின் குரலைக் கேட்பார்கள்; அதைக் கேட்கிறவர்கள் ஜீவனைப் பெறுவார்கள். யோவா 5:28எபே 5:14எபே 2:5யோவா 4:23கொலோ 2:13யோவா 8:47வெளி 3:1ரோம 6:4 பிதா தம்மில்தாமே ஜீவனாய் இருப்பதுபோல, மகனும் தம்மில்தாமே நித்திய ஜீவனாய் இருக்கும்படி செய்கிறார். யோவா 1:4யோவா 11:26யாத் 3:14யோவா 14:6யோவா 17:2-31 கொரி 15:451 தீமோ 1:17எரே 10:10 நான் மானிடமகனாய் இருப்பதால், நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் அதிகாரத்தையும் பிதா அவருக்கே கொடுத்திருக்கிறார். அப் 10:42அப் 17:31யோவா 5:221 கொரி 15:251 பேது 3:22தானி 7:13-14எபே 1:20-23எபி 2:7-9
“இதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம். ஏனெனில் காலம் வருகிறது, கல்லறைகளில் இருக்கிறவர்கள் எல்லோரும் மானிடமகனுடைய குரலைக் கேட்டு, வெளியே வருவார்கள். வெளி 20:121 தெச 4:14-17ஏசா 26:19யோவா 11:24-251 கொரி 15:42-54யோபு 19:25-261 கொரி 15:22யோவா 6:39-40 நல்ல செயல்களைச் செய்தவர்கள் ஜீவன் பெறும்படி எழுந்திருப்பார்கள். தீய செயல்களைச் செய்தவர்கள் தண்டனைத் தீர்ப்பைப் பெறும்படி எழுந்திருப்பார்கள். தானி 12:2-3ரோம 2:6-10அப் 24:15லூக் 14:14மத் 25:31-46கலா 6:8-101 தீமோ 6:18எபி 13:16 சுயமாய் நான் எதையும் செய்ய முடியாதிருக்கிறேன்; பிதா சொல்கிறபடி மட்டுமே நான் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறேன். எனது நியாயத்தீர்ப்பு நீதியானது. ஏனெனில் நான் என் சித்தத்தை அல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தை நிறைவேற்றவே நாடுகிறேன். யோவா 6:38யோவா 5:19யோவா 4:34யோவா 14:10மத் 26:39யோவா 8:28சங் 40:7-8யோவா 8:15-16
இயேசுவைக்குறித்த சாட்சிகள்
“என்னைப்பற்றி நானே சாட்சி கூறினால், எனது சாட்சி உண்மையற்றது. நீதி 27:2யோவா 8:54யோவா 8:13-14வெளி 3:14 எனக்காகச் சாட்சி கூறுகிற இன்னொருவர் இருக்கிறார். என்னைப்பற்றிய அவருடைய சாட்சி உண்மையானது என்று நான் அறிவேன். 1 யோவா 5:6-9யோவா 1:33யோவா 12:28-30யோவா 12:50யோவா 5:36-37யோவா 8:17-18மத் 17:5மத் 3:17
“நீங்கள் யோவானிடம் ஆட்களை அனுப்பினீர்கள். அவன் சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தான். யோவா 1:15-27யோவா 1:29-34யோவா 1:6-8யோவா 3:26-36 மனிதனுடைய சாட்சியை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை; நீங்கள் இரட்சிக்கப்படும்படியாகவே நான் இதைச் சொல்கிறேன். 1 யோவா 5:91 தீமோ 4:16யோவா 20:31லூக் 19:41-421 கொரி 9:221 தீமோ 2:3-4யோவா 5:41ரோம 10:1 யோவான் எரிந்து வெளிச்சம் கொடுத்த ஒரு விளக்காய் இருந்தான். நீங்களும் அவனுடைய வெளிச்சத்தில் சொற்ப காலத்திற்கு மகிழ்ச்சியடைவதைத் தெரிந்துகொண்டீர்கள். 2 பேது 1:19யோவா 1:7-8மத் 11:11லூக் 1:76-77மத் 3:5-7யோவா 6:66லூக் 1:15-17லூக் 7:28
“யோவான் கொடுத்த சாட்சியைப் பார்க்கிலும், அதிக மதிப்புள்ள சாட்சி எனக்கு இருக்கிறது. நான் செய்து முடிக்கும்படி பிதா எனக்கு ஒரு வேலையைக் கொடுத்திருக்கிறார். அதையே நான் செய்கிறேன். அந்த வேலையே பிதா என்னை அனுப்பினார் என்பதற்குச் சாட்சி கொடுக்கிறது. யோவா 10:25யோவா 10:37-38யோவா 15:24யோவா 2:231 யோவா 5:9யோவா 9:30-33யோவா 3:21 யோவா 5:11-12 என்னை அனுப்பிய பிதா தாமே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தார். நீங்கள் ஒருபோதும் அவருடைய குரலைக் கேட்டதுமில்லை, அவருடைய உருவத்தைக் கண்டதும் இல்லை, யோவா 8:18யோவா 1:18மத் 3:171 தீமோ 1:171 யோவா 4:121 யோவா 4:201 தீமோ 6:161 யோவா 1:1-2 அவருடைய வார்த்தை உங்களில் தங்கியிருப்பதும் இல்லை. ஏனெனில் நீங்கள் அவர் அனுப்பியவரை விசுவாசியாமல் இருக்கிறீர்கள். 1 யோவா 2:14உபா 6:6-9யோவா 12:44-48ஏசா 53:1-3யாக் 1:21-22நீதி 7:1-2ஏசா 49:7யோவா 1:11 நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஏனெனில் அவற்றின் மூலமாய் நித்திய ஜீவனை உரிமையாக்கிக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கின்றன. லூக் 24:27லூக் 24:442 பேது 1:19-21அப் 26:22-23நீதி 8:33-34மத் 22:291 பேது 1:10-112 தீமோ 3:14-17 ஆனால் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி என்னிடம் வருவதற்கு உங்களுக்கு விருப்பமில்லை. யோவா 3:19யோவா 1:11யோவா 6:37சங் 81:111 யோவா 5:11-13ஏசா 49:7ஏசா 50:2யோவா 6:40
“மனிதரிடமிருந்து வரும் புகழ்ச்சியை நான் ஏற்றுக்கொள்கிறதில்லை. யோவா 7:18யோவா 8:501 தெச 2:6யோவா 5:34யோவா 5:44யோவா 8:541 பேது 2:21யோவா 6:15 ஆனால் உங்களை எனக்குத் தெரியும். உங்கள் இருதயத்தில் இறைவனுக்கு அன்பு இல்லை என்பதை நான் அறிவேன். 1 யோவா 4:201 யோவா 2:151 யோவா 3:17யோவா 2:25ரோம 8:7யோவா 8:47எபி 4:12-13யோவா 1:47-49 நான் என் பிதாவின் பெயரில் வந்திருக்கிறேன். நீங்களோ என்னை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்; இன்னொருவன் தன் சொந்தப் பெயரில் வந்தால், நீங்கள் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். மத் 24:5யோவா 10:25யோவா 17:4-6எபி 5:4-5யோவா 8:28-29யோவா 6:38மத் 24:24யோவா 12:28 நீங்களோ ஒருவரிடமிருந்து இன்னொருவர் புகழ்ச்சியை பெற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் ஒரே இறைவனாயிருக்கும் அவரிடமிருந்து வரும் புகழைத் தேட முயற்சியாமல் இருக்கிறீர்கள். இப்படியிருக்க நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? யோவா 12:43ரோம 2:29பிலி 2:3மத் 23:5ரோம 8:7-81 பேது 1:71 சாமு 2:30ரோம 2:10
“பிதாவுக்கு முன் நான் உங்களைக் குற்றம் சாட்டுவேன் என்று நினைக்கவேண்டாம். நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் அந்த மோசேயே உங்களைக் குற்றம் சாட்டுவான். கலா 3:10ரோம 3:19-202 கொரி 3:7-11ரோம 2:12யோவா 9:28-29ரோம 10:5-10யோவா 7:19மத் 19:7-8 நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள். ஏனெனில் அவன் என்னைக் குறித்தே எழுதியிருக்கிறான். உபா 18:15உபா 18:18-19யோவா 1:45லூக் 24:27எண் 24:17-18அப் 26:22ஆதி 49:10ஆதி 22:18 மோசே எழுதி வைத்திருப்பதையே நீங்கள் விசுவாசிக்கவில்லை. அப்படியிருக்க நான் சொல்வதை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்றார். லூக் 16:31லூக் 16:29