நீதிமொழிகள் 8

Proverbs 8

ஞானத்தின் அழைப்பு

ஞானம் அழைக்கிறதில்லையோ? நீதி 1:20-21மத் 3:3யோவா 7:37அப் 1:8நீதி 9:1-3ஏசா 49:1-6ஏசா 55:1-3லூக் 24:47

புரிந்துகொள்ளுதல் குரல் எழுப்புகிறதில்லையோ?

அது வழியிலுள்ள மேடுகளிலும் நீதி 9:14நீதி 9:3

தெருக்கள் சந்திக்கும் இடங்களிலும் நிற்கிறது.

அது பட்டணத்திற்குப் போகும் வாசல்களின் அருகில், யோபு 29:7அப் 5:20யோவா 18:20லூக் 14:21-23மத் 22:9

அதின் நுழைவாசலில் நின்று, சத்தமிட்டுக் கூப்பிடுகிறது:

“மனிதர்களே, நான் உங்களைக் கூப்பிடுகிறேன்; மத் 11:15யோவா 3:16சங் 49:1-3சங் 50:1வெளி 22:171 தீமோ 2:4-62 கொரி 5:19-20கொலோ 1:23

மனுக்குலம் எல்லாம் கேட்கும்படி என் சத்தத்தை உயர்த்துகிறேன்.

அறிவில்லாதவர்களே, விவேகத்தை அடையுங்கள்; நீதி 1:22அப் 26:18நீதி 9:4வெளி 3:17-181 கொரி 6:9-11நீதி 1:4சங் 19:71 கொரி 1:28

மூடர்களே, விவேகத்தின்மேல் மனதை வைத்துக்கொள்ளுங்கள்.

கேளுங்கள், சொல்லுவதற்கு நம்பகமான காரியங்கள் என்னிடம் இருக்கிறது; கொலோ 1:26மத் 7:28-29மத் 13:35நீதி 4:2நீதி 23:161 கொரி 2:6-7யோபு 33:1-3மத் 5:2-12

என் உதடுகள் நேர்மையான காரியங்களைப் பேசும்.

உண்மையானது எதுவோ, அதையே என் வாய் பேசுகிறது; சங் 37:30யோவா 8:14யோவா 17:17நீதி 12:22யோவா 1:17யோவா 18:37யோவா 8:45-46யோபு 36:4

கொடுமையை என் உதடுகள் வெறுக்கிறது.

என் வாயின் வார்த்தைகள் எல்லாம் நீதியானவை; யோவா 7:46நீதி 8:13சங் 12:6உபா 32:5ஏசா 45:23ஏசா 63:1

அவற்றில் கபடமோ, வஞ்சனையோ இல்லை.

பகுத்தறிவு உள்ளவர்களுக்கு அவை தெளிவானவை; நீதி 14:6யாக் 1:5யோவா 7:17யோவா 6:45சங் 25:12-14மத் 13:11-12நீதி 15:24நீதி 18:1-2

அறிவுடையோருக்கு அவை நேர்மையானவை.

வெள்ளியைவிட என் அறிவுரைகளையும் நீதி 2:4-5சங் 119:127சங் 119:72நீதி 23:23நீதி 3:13-15அப் 3:6பிரச 7:11நீதி 10:20

தங்கத்தைவிட அறிவையும் தெரிந்தெடு.

ஏனெனில் ஞானம் பவளத்தைவிட அதிக மதிப்புள்ளது; நீதி 3:14-15நீதி 4:5-7நீதி 16:16சங் 119:127சங் 19:10யோபு 28:15-19மத் 16:26நீதி 20:15

நீ விரும்பும் எதுவும் அதற்கு நிகரானது அல்ல.

“ஞானமாகிய நான், விவேகத்துடன் ஒன்றாக குடியிருக்கிறேன்; ஏசா 28:26யாத் 35:30யாத் 31:3-6நீதி 1:4ரோம 11:331 நாளாக 28:19கொலோ 2:3எபே 1:11

எனக்கு அறிவும் பகுத்தறிவும் இருக்கிறது.

தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயந்து நடப்பதாகும்; சங் 97:10நீதி 16:61 சாமு 2:3நீதி 4:241 தெச 5:221 பேது 5:5ஆமோ 5:15சங் 119:128

பெருமையையும் அகந்தையையும்

தீய நடத்தையையும் வஞ்சகப்பேச்சையும் நான் வெறுக்கிறேன்.

ஆலோசனையும் நிதானிக்கும் ஆற்றலும் என்னுடையவை; பிரச 7:19ஏசா 9:6ஏசா 40:14ரோம 11:33-34கொலோ 2:3பிரச 9:16-18நீதி 2:6-7நீதி 24:5

என்னிடம் மெய்யறிவும் வல்லமையும் உண்டு.

என்னால் அரசர்கள் ஆட்சி செய்கிறார்கள், ரோம 13:1தானி 2:21மத் 28:18வெளி 19:16தானி 4:32தானி 5:18-31தானி 7:13-14எரே 27:5-7

ஆளுநர்களும் நீதியான சட்டங்களை இயற்றுகிறார்கள்.

என்னால் இளவரசர்கள் ஆள்கிறார்கள்,

நீதிபதிகள் யாவரும் நீதித்தீர்ப்பை வழங்குகிறார்கள்.

என்னை நேசிக்கிறவர்களை நானும் நேசிக்கிறேன்; யோவா 14:23யோவா 14:21சங் 91:14ஏசா 55:61 யோவா 4:191 சாமு 2:30மத் 7:7-8மத் 6:33

என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டுகொள்வார்கள்.

என்னிடத்தில் செல்வமும் கனமும் நீதி 3:16மத் 6:33லூக் 16:11-12பிலி 4:19எபே 3:8லூக் 10:42வெளி 3:181 தீமோ 6:17-19

நிலையான சொத்தும் நீதியும் இருக்கின்றன.

என்னால் வரும் பலன் தங்கத்திலும் சிறந்தது; நீதி 10:20நீதி 3:14பிரச 7:12நீதி 8:10

தரமான வெள்ளியிலும் மேன்மையானது.

நான் நீதியான வழியிலும் யோவா 10:27-28உபா 5:32சங் 32:8நீதி 4:11-12ஏசா 2:3நீதி 3:6நீதி 6:22சங் 25:4-5

நியாயமான பாதைகளிலும் நடக்கிறேன்.

என்னை நேசிப்பவர்களுக்கு செல்வத்தை வழங்குகிறேன், 1 பேது 1:4நீதி 24:4ஆதி 15:14மத் 25:461 சாமு 2:8எபி 10:34நீதி 1:13சங் 16:11

அவர்களுடைய களஞ்சியத்தையும் நிரப்புகிறேன்.

“யெகோவா தம் பூர்வீக செயல்களுக்கு முன்பே, கொலோ 1:17யோவா 1:1-2நீதி 3:19சங் 104:24யோபு 28:26-28

தமது வேலைப்பாடுகளில் முதன்மையாக என்னைப் படைத்திருந்தார்;

நீண்ட காலத்திற்கு முன்பு நான் உருவாக்கப்பட்டேன், யோவா 17:24ஆதி 1:26யோவா 17:5மீகா 5:2சங் 2:61 யோவா 1:1-2எபே 1:10-11

உலகம் உண்டாவதற்கு முன்பே, ஆரம்பத்திலிருந்தே நான் படைக்கப்பட்டேன்.

சமுத்திரங்கள் உண்டாவதற்கு முன்பே நான் பிறந்தேன், 1 யோவா 4:9நீதி 3:20ஆதி 1:2எபி 1:5யோவா 1:14யோவா 3:16யோவா 5:20சங் 2:7

அப்பொழுது தண்ணீர் நிறைந்த ஊற்றுக்களும் இருக்கவில்லை.

மலைகளும் குன்றுகளும் அவற்றுக்குரிய இடங்களில் அமையுமுன்பே சங் 90:2யோபு 15:7-8யோபு 38:4-11சங் 102:25-28எபி 1:10

நான் பிறந்திருந்தேன்.

அவர் பூமியையோ அதின் நிலங்களையோ ஆதி 1:1-31

உலகத்தில் மண்ணையோ உண்டாக்குவதற்கு முன்பே நான் இருந்தேன்.

அவர் வானங்களை அதற்குரிய இடத்தில் அமைத்தபோதும், ஏசா 40:22யோபு 26:10நீதி 3:19கொலோ 1:16சங் 136:5ஏசா 40:11எரே 10:12எபி 1:2

ஆழத்தின் மேற்பரப்பில் அவர் அடிவானத்தை குறித்தபோதும் நான் அங்கிருந்தேன்.

அத்துடன் மேலே மேகத்தை நிலைநிறுத்தும் போதும்,

ஆழத்தின் ஊற்றுகளை கவனமாய் அமைத்தபோதும் நான் அங்கிருந்தேன்.

கடலுக்கு எல்லையை அமைத்து, சங் 104:9எரே 5:22ஆதி 1:9-10சங் 104:5சங் 33:7யோபு 38:4-11

தண்ணீர் அவருடைய கட்டளையை மீறி வெளியேறாதபடி

அவர் பூமிக்கு அதின் அஸ்திபாரத்தைக் குறியிட்டபோதும் நான் அங்கேயே இருந்தேன்.

அப்பொழுது நான் யெகோவாவின் அருகில் ஒரு திறமைவாய்ந்த சிற்பியாக இருந்தேன். யோவா 1:1-3யோவா 1:18மத் 3:17ஏசா 42:1யோவா 12:28யோவா 16:28கொலோ 1:13மத் 17:5

நான் நாள்தோறும் அவருக்குப் பிரியமாயிருந்து,

எப்பொழுதும் அவருக்கு முன்பாகக் களிகூர்ந்தேன்.

அவருடைய உலகம் முழுவதிலும் நான் சந்தோஷமாய் செயலாற்றி, சங் 16:3யோவா 13:1சங் 40:6-82 கொரி 8:9யோவா 4:34

மனுமக்களில் நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

“ஆகையால் என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; லூக் 11:28சங் 119:1-2சங் 1:1-4சங் 128:1நீதி 5:7நீதி 7:24

எனது வழியைக் கைக்கொள்ளுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

எனது அறிவுறுத்தலைக் கேட்டு ஞானமுள்ளவர்களாயிருங்கள்; நீதி 4:1சங் 81:11-12நீதி 1:8நீதி 5:1நீதி 1:2-3ரோம 10:16-17எபி 12:25ஏசா 55:1-3

அதை அலட்சியம் செய்யவேண்டாம்.

நாள்தோறும் என் வாசலில் காவல் செய்து, லூக் 11:28மத் 7:24நீதி 3:13அப் 2:42லூக் 10:39சங் 27:4அப் 17:11-12சங் 84:10

என் கதவருகே காத்திருந்து,

எனக்குச் செவிகொடுப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

என்னைத் தேடிக் கண்டடைகிறவர்கள் வாழ்வைக் கண்டடைவார்கள்; யோவா 3:361 யோவா 5:11-12நீதி 12:2பிலி 3:8யோவா 17:3கொலோ 3:3நீதி 3:13-18யோவா 14:6

யெகோவாவிடமிருந்து தயவையும் பெறுவார்கள்.

ஆனால் என்னைத் தேடிக் கண்டடையாதவர்கள் தங்களுக்கே தீமை செய்கிறார்கள்; நீதி 15:32நீதி 1:311 கொரி 16:22யோவா 15:23-24நீதி 12:1நீதி 20:2எபி 10:29யோவா 3:19-20

என்னை வெறுக்கிறவர்கள் மரணத்தையே விரும்புகிறார்கள்.”