யோவான் 17

John 17

இயேசு மகிமைக்காக மன்றாடுவது

இயேசு இதைச் சொன்னபின்பு அவர் பரலோகத்தை நோக்கிப்பார்த்து மன்றாடினார், யோவா 13:31-32யோவா 17:4-5பிலி 2:9-11யோவா 12:23யோவா 12:27-28அப் 3:13யோவா 7:391 பேது 1:21

“பிதாவே, எனது வேளை வந்துவிட்டது. உமது மகனாகிய நான் உம்மை மகிமைப்படுத்தும்படி, நீர் உம்முடைய மகனாகிய என்னை மகிமைப்படுத்தும். நீர் எல்லா மக்கள்மேலும் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறீர். அவரிடம் நீர் ஒப்புக்கொடுத்த அனைவருக்கும் அவர் நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியே நீர் அதிகாரம் கொடுத்தீர். யோவா 10:28-29யோவா 6:39தானி 7:14யோவா 6:37மத் 28:18யோவா 17:241 யோவா 5:20எபி 2:8-9 ஒன்றான சத்திய இறைவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசுகிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொள்வதே நித்தியவாழ்வு. 1 யோவா 5:201 யோவா 5:11-12எரே 9:23-24யோவா 3:17யோவா 17:25ஓசி 6:3யோவா 14:9-10எபி 8:11-12 நீர் செய்யும்படி எனக்குக் கொடுத்த வேலையை நிறைவேற்றி முடித்ததன் மூலம், பூமியிலே உம்மை மகிமைப்படுத்தினேன். யோவா 4:34அப் 20:242 தீமோ 4:7யோவா 14:31யோவா 19:30யோவா 13:31-32யோவா 15:10யோவா 12:28 பிதாவே, உலகம் உண்டாகும் முன்பே எனக்கு உம்மிடம் இருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மில் மகிமைப்படுத்தும். யோவா 1:1-3கொலோ 1:15-17யோவா 10:301 பேது 1:20பிலி 2:6எபி 1:3வெளி 5:9-14எபி 1:10

இயேசு தம்முடைய சீடர்களுக்காக மன்றாடுகிறார்

“உலகத்திலிருந்து நீர் எனக்கு ஒப்புக்கொடுத்த இவர்களுக்கு உம்முடைய பெயரை வெளிப்படுத்தினேன். உம்முடையவர்களாய் இருந்த இவர்களை நீர் எனக்குக் கொடுத்தீர். இவர்களும் நீர் கொடுத்த வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள். யோவா 17:261 யோவா 5:20யோவா 14:21-24யோவா 10:27-29யோவா 17:24யோவா 6:37யாத் 3:13-15யாத் 34:5-7 நீர் எனக்குத் தந்த எல்லாம் உம்மிடத்திலிருந்தே வருகிறது என்று இவர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள். யோவா 7:16-17யோவா 16:15யோவா 10:29-30யோவா 17:10யோவா 8:28யோவா 12:49-50யோவா 14:7-10யோவா 14:20 ஏனெனில் நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளையே நான் இவர்களுக்குக் கொடுத்தேன். இவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். நான் உம்மிடத்திலிருந்து வந்தேன் என்று இவர்கள் நிச்சயமாய் அறிந்திருக்கிறார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்று இவர்கள் விசுவாசிக்கின்றார்கள். யோவா 17:14யோவா 15:15யோவா 16:301 தெச 2:13யோவா 16:27யோவா 12:49யோவா 17:21யோவா 8:42 நான் இவர்களுக்காகவே மன்றாடுகிறேன். நான் உலகத்துக்காக மன்றாடவில்லை. நீர் எனக்குக் கொடுத்திருக்கும் இவர்களுக்காகவே மன்றாடுகிறேன். ஏனெனில் இவர்கள் உம்முடையவர்கள். எபி 9:24யோவா 17:2யோவா 17:6லூக் 22:321 யோவா 2:1-21 யோவா 5:19யோவா 17:20யோவா 14:16 என்னுடையதெல்லாம் உம்முடையதே, உம்முடையதெல்லாம் என்னுடையதே. இவர்கள் மூலமாய் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். யோவா 10:301 பேது 2:9வெளி 5:8-142 தெச 1:101 கொரி 3:21-23கொலோ 1:15-19யோவா 16:14-15கொலோ 2:9 நான் இனிமேலும் உலகத்தில் இருக்கமாட்டேன். நான் உம்மிடத்தில் வருகிறேன்; இவர்களோ இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். ஆகவே பரிசுத்த பிதாவே, உம்முடைய பெயரின் வல்லமையினாலே இவர்களைக் காத்துக்கொள்ளும். அந்தப் பெயரையே நீர் எனக்கும் கொடுத்தீர். எனவே நாம் ஒன்றாய் இருப்பதுபோலவே, இவர்களும் ஒன்றாய் இருக்கட்டும். மத் 6:9நீதி 18:10யோவா 17:12-18எபி 9:24யோவா 10:29-30யோவா 17:21-22எபே 4:4பிலி 2:9 நான் இவர்களோடு இருந்தபோது, நீர் எனக்குக் கொடுத்த உமது பெயராலே இவர்களைக் காப்பாற்றிப் பாதுகாத்து வைத்திருந்தேன். வேதவசனம் நிறைவேறும்படி அழிவின் மகனைத் தவிர வேறு ஒருவரையும் நான் இழந்து போகவில்லை. சங் 109:6-19யோவா 10:27-28யோவா 18:9யோவா 13:18அப் 1:16-20யோவா 6:37யோவா 6:70-71அப் 1:25

“நான் இப்போது உம்மிடத்தில் வருகிறேன். ஆனால் இவர்கள் என்னுடைய சந்தோஷத்தைத் தங்களுக்குள் முழுநிறைவாய்ப் பெற்றுக்கொள்ளும்படி, நான் உலகத்தில் இருக்கும்போதே இவைகளைச் சொல்கிறேன். எபி 12:2கலா 5:22யோவா 15:11யோவா 3:29யோவா 16:22-241 யோவா 1:4யோவா 13:3யோவா 16:33 நான் இவர்களுக்கு உம்முடைய வார்த்தையைக் கொடுத்திருக்கிறேன். உலகமோ இவர்களை வெறுத்திருக்கிறது. ஏனெனில் நான் உலகத்திற்கு உரியவனாய் இராததுபோல, இவர்களும் உலகத்திற்கு உரியவர்கள் அல்ல. யோவா 17:16யோவா 15:18-211 யோவா 5:19-20யோவா 8:231 யோவா 4:5-6யோவா 7:7நீதி 29:271 பேது 4:4-5 இந்த உலகத்தை விட்டு இவர்களை எடுத்துக்கொள்ளும் என்று நான் மன்றாடவில்லை; ஆனால் தீயவனிடமிருந்து இவர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் என்றே மன்றாடுகிறேன். சங் 121:71 யோவா 5:182 தெச 3:3மத் 6:131 நாளாக 4:10கலா 1:4லூக் 11:4ஏசா 38:18-19 நான் உலகத்திற்கு உரியவனாய் இல்லாததுபோல் இவர்களும் உலகத்துக்கு உரியவர்கள் அல்ல. யோவா 17:14 சத்தியத்தினாலே இவர்களை அர்ப்பணியும்; உம்முடைய வார்த்தையே சத்தியம். யோவா 15:3சங் 119:160எபே 5:261 பேது 1:22-23யோவா 17:19யாக் 1:21யோவா 8:322 தெச 2:13 நீர் என்னை உலகத்திற்குள் அனுப்பினதுபோல நானும் இவர்களை உலகத்திற்குள் அனுப்புகிறேன். 2 கொரி 5:20யோவா 20:21யோவா 17:3எபே 3:7யோவா 4:38மத் 10:5ஏசா 61:1-3யோவா 17:21 இவர்கள் தங்களை உண்மையாக அர்ப்பணிக்கும்படி, இவர்களுக்காக நானும் என்னை அர்ப்பணிக்கிறேன். தீத் 2:14எபி 2:11யோவா 17:171 கொரி 1:2எபி 10:5-101 தெச 4:72 கொரி 4:152 கொரி 8:9

விசுவாசிகளுக்கான இயேசுவின் மன்றாட்டு

“நான் என் சீடர்களுக்காக மாத்திரம் மன்றாடவில்லை. இவர்கள் அறிவிக்கும் செய்தியின் மூலமாய் என்னில் விசுவாசம் வைக்கப் போகிறவர்களுக்காகவும் மன்றாடுகிறேன். யோவா 17:6-11அப் 2:41அப் 4:4ரோம 15:18-19எபே 4:11ரோம 16:262 தீமோ 1:2 பிதாவே நீர் என்னில் இருக்கிறது போலவும், நான் உம்மில் இருக்கிறது போலவும் அவர்கள் எல்லோரும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுகிறேன். நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்படி, அவர்களும் நம்மில் ஒன்றாய் இருக்கட்டும். 1 கொரி 12:12கொலோ 3:11-14யோவா 17:111 கொரி 12:25-27பிலி 1:27யோவா 13:35யோவா 10:30யோவா 17:22-23 நாம் ஒன்றாய் இருப்பதுபோலவே அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். 2 கொரி 3:18யோவா 14:20எபே 2:20யோவா 1:16மாற் 16:17-201 யோவா 3:242 கொரி 5:202 கொரி 6:1 இவ்வாறு நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருப்பதனால், அவர்களும் முழுமையான ஒற்றுமைக்குள் கொண்டுவரப்படுவார்கள். அப்பொழுது நீரே என்னை அனுப்பினீர் என்றும், நீர் என்னில் அன்பாயிருந்தது போலவே, அவர்களிலும் அன்பாயிருக்கிறீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும். யோவா 17:21யோவா 16:271 யோவா 3:1யோவா 13:351 யோவா 4:12-16கொலோ 3:14யோவா 17:261 யோவா 1:3

“பிதாவே நீர் எனக்குக் கொடுத்த இவர்கள் நான் இருக்கும் இடத்திலே, என்னுடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். உலகம் படைக்கப்படும் முன்னே நீர் என்னில் அன்பாயிருந்ததினால், நீர் எனக்குக் கொடுத்த மகிமையை இவர்கள் காணவேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். யோவா 12:26யோவா 17:5யோவா 14:32 கொரி 4:6மத் 25:211 யோவா 3:2ஆதி 45:132 கொரி 3:18

“நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியாவிட்டாலும், நான் உம்மை அறிவேன். நான் உம்மாலேயே அனுப்பப்பட்டேன் என்று இவர்களும் அறிந்திருக்கிறார்கள். யோவா 17:11யோவா 15:21யோவா 16:27யோவா 17:8யோவா 7:29எபி 8:112 கொரி 4:4யோவா 10:15 நீர் என்மேல் வைத்திருக்கும் அன்பு இவர்கள்மேல் இருக்கும்படிக்கும், நான் இவர்களில் இருக்கும்படிக்கும் நான் உமது பெயரை இவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன். தொடர்ந்து உம்மைத் தெரியப்படுத்துவேன்” என்றார். யோவா 17:23யோவா 17:6யோவா 15:91 யோவா 4:13-14எபி 2:12யோவா 14:20யோவா 15:15சங் 22:22