யோவான் 14

John 14

இயேசு தமது சீடர்களை ஆறுதல்படுத்துதல்

“உங்கள் இருதயம் கலங்குவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். இறைவனில் விசுவாசமாயிருங்கள்; என்னிலும் விசுவாசமாயிருங்கள். ஏசா 26:3யோவா 16:22-23ஏசா 12:2-32 கொரி 12:9-10யோவா 14:27-28யோவா 6:40சங் 42:5-6யோவா 12:44 என்னுடைய பிதாவின் வீட்டிலே அநேக உறைவிடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாதிருந்தால் நான் எப்படி உங்களுக்குச் சொல்லியிருப்பேன். உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தும்படி நான் அங்கு போகிறேன். 2 கொரி 5:1யோவா 13:36எபி 13:14வெளி 21:2எபி 11:10வெளி 3:12எபி 11:14-16யோவா 12:25-26 நான் போய், உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்திய பின்பு, மீண்டும் வந்து, நீங்கள் என்னுடன் இருக்கும்படி உங்களைக் கூட்டிச் செல்வேன். அப்பொழுது நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள். 1 தெச 4:16-17யோவா 12:262 தீமோ 2:12அப் 1:11எபி 9:28யோவா 14:18-23யோவா 14:28யோவா 17:24 நான் போகிற இடத்திற்கான வழியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” என்றார். யோவா 10:9யோவா 16:28யோவா 12:26யோவா 13:3யோவா 14:2யோவா 3:16-17யோவா 3:36யோவா 6:40

இயேசுவானவர் தந்தையைச் சென்றடையும் வழி

தோமா இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்று எங்களுக்குத் தெரியாதே. அப்படியிருக்க, அங்கு போகும் வழி எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான். யோவா 11:16மாற் 9:19யோவா 20:25-28யோவா 15:12லூக் 24:25மாற் 8:17-18எபி 5:11-12

அதற்கு இயேசு, “வழியும், சத்தியமும், ஜீவனும் நானே. என் மூலமாய் அன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரமுடியாது. அப் 4:12யோவா 10:9எபே 2:18யோவா 11:25-26யோவா 1:41 யோவா 5:20யோவா 1:141 யோவா 5:11-12 நீங்கள் உண்மையாக என்னை அறிந்திருந்தால், என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள். இதுமுதல் நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். அவரைக்கண்டும் இருக்கிறீர்கள்” என்றார். கொலோ 1:15-17யோவா 8:19லூக் 10:22யோவா 17:8யோவா 17:61 யோவா 2:132 கொரி 4:6கொலோ 2:2-3

அதற்குப் பிலிப்பு, “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும். அது எங்களுக்குப் போதும்” என்றான். யாத் 33:18-23வெளி 22:3-5யோவா 1:43-46யோவா 16:25சங் 17:15யோவா 6:5-7யோவா 12:21-22யோபு 33:26

அப்பொழுது இயேசு அவனிடம் சொன்னதாவது: “பிலிப்புவே, நான் இவ்வளவு காலம் உங்களோடிருந்தும், நீ இன்னும் என்னை அறிந்துக்கொள்ளவில்லையா? என்னைக் கண்டிருக்கிறவன் பிதாவைக் கண்டிருக்கிறான். அப்படியிருக்க, ‘பிதாவை எங்களுக்குக் காண்பியும்’ என்று நீ எப்படிச் சொல்லலாம்? கொலோ 1:15யோவா 12:45யோவா 14:7எபி 1:3யோவா 10:30யோவா 1:14பிலி 2:6யோவா 14:20 நான் பிதாவில் இருக்கிறதையும், பிதா என்னில் இருக்கிறதையும் நீ விசுவாசிக்கவில்லையா? நான் உங்களுக்குச் சொல்கிற இந்த வார்த்தைகள் என்னுடையதல்ல. அவை என் பிதாவின் வார்த்தைகளே. அவர் எனக்குள் இருந்து தமது செயல்களைச் செய்கிறார். யோவா 5:19யோவா 10:38அப் 10:38யோவா 10:30யோவா 8:28யோவா 12:49கொலோ 2:9யோவா 6:38-40 நான் பிதாவில் இருக்கிறேன் என்றும், பிதா என்னில் இருக்கிறார் என்றும் நான் சொல்லும்போது அதை நம்புங்கள்; இல்லாவிட்டால் நான் செய்த கிரியைகளின் நிமித்தமாவது அதை நம்புங்கள். யோவா 10:25யோவா 10:38யோவா 5:36யோவா 14:10அப் 2:22எபி 2:4யோவா 10:32மத் 11:4-5 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னில் விசுவாசம் வைக்கிறவர்கள் நான் செய்த கிரியைகளை அவர்களும் செய்வார்கள். நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியால், அவர்கள் இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் செய்வார்கள். மத் 21:21மாற் 16:17லூக் 10:17-19அப் 16:18அப் 19:12அப் 9:34அப் 3:6-8அப் 5:15 நீங்கள் என் பெயரில் எதைக் கேட்கிறீர்களோ, அதை நான் செய்வேன். மகனால் பிதாவுக்கு மகிமை உண்டாகும்படியாக அதைச் செய்வேன். யோவா 15:7மாற் 11:24மத் 7:7மத் 21:221 யோவா 5:14யோவா 16:23யோவா 14:14யோவா 15:16 என்னுடைய பெயரில் நீங்கள் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்.

பரிசுத்த ஆவியானவரை வாக்களித்தல்

“நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், நான் கொடுக்கும் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். 1 யோவா 2:3-51 யோவா 5:2-3யோவா 14:21-242 யோவா 1:6யோவா 15:10-141 யோவா 4:19-202 கொரி 5:14-151 பேது 1:8 நான் உங்களுக்காகப் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அப்பொழுது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி மற்றொரு உதவியாளரை உங்களுக்குக் கொடுப்பார். யோவா 14:26யோவா 15:26யோவா 16:7-15ரோம 15:13ரோம 8:26-27கலா 5:22ரோம 14:171 யோவா 2:1 அவரே சத்திய ஆவியானவர். இந்த உலகத்தினரால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர்கள் அவரைக் காணாமலும், அறியாமலும் இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ அவரை அறிந்திருக்கிறீர்கள். அவர் உங்களுடனேகூட இருக்கிறார்; மேலும் உங்களுக்குள்ளும் இருப்பார். எசேக் 36:27யோவா 16:131 யோவா 2:271 யோவா 4:6யோவா 15:261 கொரி 2:141 கொரி 3:162 தீமோ 1:14 நான் உங்களை திக்கற்றோராய் விடமாட்டேன்; நான் உங்களிடத்தில் மீண்டும் வருவேன். யோவா 14:3சங் 23:4யோவா 14:16யோவா 14:27-28மத் 18:20மத் 28:20யோவா 16:33எபி 2:18 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் வாழ்கிறேன், நீங்களும் வாழ்வீர்கள். யோவா 16:16எபி 7:25யோவா 6:56-58யோவா 7:33கொலோ 3:3-4யோவா 11:251 கொரி 15:452 கொரி 4:10-12 அந்த நாள் வரும்போது, நான் பிதாவில் இருப்பதையும், நீங்கள் என்னில் இருப்பதையும், நான் உங்களில் இருப்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். யோவா 15:5-7கலா 2:20யோவா 17:21-23யோவா 17:26யோவா 14:101 யோவா 4:12யோவா 10:38ரோம 8:1 என்னுடைய கட்டளைகளை ஏற்று, அவைகளுக்குக் கீழ்ப்படிகிறவன் எவனோ, அவனே என்னில் அன்பாயிருக்கிறவன். என்னில் அன்பாயிருக்கிறவன் பிதாவினால் அன்பு செலுத்தப்படுவான். நானும் அவனில் அன்பாயிருந்து, என்னை அவனுக்கு வெளிப்படுத்துவேன்.” யோவா 14:151 யோவா 5:31 யோவா 2:52 யோவா 1:6யோவா 15:9-10யோவா 16:27உபா 11:13லூக் 11:28

அப்பொழுது யூதாஸ் ஸ்காரியோத் அல்லாத மற்ற யூதா அவரிடம், “ஆண்டவரே உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப் போகிறீரே, அது ஏன்?” என்று கேட்டான். அப் 1:13லூக் 6:16அப் 10:40-41மத் 10:3யோவா 3:4யோவா 3:9யோவா 6:60யூதா 1:1

அதற்கு இயேசு, “யாராவது என்னில் அன்பாயிருந்தால், அவர்கள் என்னுடைய போதனைக்குக் கீழ்ப்படிவார்கள். என்னுடைய பிதா அவர்களில் அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து, அவனுடன் குடியிருப்போம். யோவா 14:21யோவா 14:15வெளி 3:20-211 யோவா 4:15-161 யோவா 2:241 யோவா 4:42 கொரி 6:16யோவா 10:30 என்னில் அன்பாயிராதவன் என்னுடைய போதனைக்குக் கீழ்ப்படியமாட்டான். நீங்கள் கேட்கிற இந்த வார்த்தைகள் என்னுடைய வார்த்தைகள் அல்ல; அவை என்னை அனுப்பிய பிதாவுக்குரிய வார்த்தைகள். யோவா 7:16யோவா 14:10யோவா 3:34யோவா 5:19யோவா 8:42யோவா 14:21-231 யோவா 3:16-20யோவா 14:15

“நான் உங்களோடு இருக்கும்போதே இவைகளையெல்லாம் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். யோவா 17:6-8யோவா 13:19யோவா 16:1-4யோவா 16:12யோவா 14:29யோவா 15:11 ஆனால், என்னுடைய பெயரிலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவரான உதவியாளர், உங்களுக்கு எல்லாவற்றையும் போதிப்பார். அவர் நான் உங்களுக்குச் சொன்ன ஒவ்வொன்றையும் உங்களுக்கு நினைவு படுத்துவார். யோவா 15:26யோவா 14:161 கொரி 2:10-131 யோவா 2:27யோவா 16:71 யோவா 2:20எபே 1:17ரோம 15:13 சமாதானத்தை உங்களுக்கு கொடுத்துவிட்டுப் போகிறேன். என்னுடைய சமாதனத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் கொடுக்கிற இந்த சமாதானமோ உலகம் கொடுக்கும் சமாதானத்தைப் போன்றது அல்ல, ஆகையால் உங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்; பயப்படவும் வேண்டாம். பிலி 4:7யோவா 16:33ஏசா 41:102 தெச 3:16கொலோ 3:152 தீமோ 1:7ரோம 15:13எண் 6:26

“ ‘நான் உங்களைவிட்டுப் போகப்போகிறேன்’ என்றும், ‘உங்களிடத்தில் திரும்பிவருவேன்’ என்றும் நான் சொன்னதைக் கேட்டீர்கள். நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், நான் பிதாவினிடத்தில் போகிறதைக் குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் பிதா, என்னிலும் பெரியவராயிருக்கிறார். யோவா 10:29-301 கொரி 15:24-281 கொரி 11:3எபி 1:2-3எபி 2:9-15யோவா 13:16யோவா 20:17பிலி 2:6-11 அது நிகழும் முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். அதனால் அது நிகழும்போது நீங்கள் என்னை விசுவாசிப்பீர்கள். யோவா 13:19யோவா 16:4-31மத் 24:24-25 இன்னும் நான் உங்களுடன் மிகுதியாக பேசப்போவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்குரியது என்னிடத்தில் ஒன்றுமில்லை. 1 யோவா 5:191 யோவா 4:4எபே 6:12யோவா 12:31வெளி 12:9எபே 2:21 பேது 2:222 கொரி 4:4 ஆனால் நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டிருப்பதை மட்டுமே நான் செய்கிறேன் என்றும் உலகம் அறிந்துகொள்ளவேண்டும். யோவா 10:18யோவா 12:49யோவா 4:34லூக் 12:50பிலி 2:8எபி 5:7-8சங் 40:8யோவா 15:9

“எழுந்திருங்கள்; இப்பொழுது நாம் இங்கிருந்து போவோம்” என்றார்.