பிரியமானவர்களே, இஸ்ரயேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என்னுடைய இருதயத்தின் ஆசையும், இறைவனிடம் எனது மன்றாட்டுமாய் இருக்கிறது. 1 கொரி 9:20-22யோவா 5:34ரோம 9:1-3யாத் 32:13எரே 17:16எரே 18:201 சாமு 12:23யாத் 32:10 அவர்கள் இறைவனைக் குறித்த வைராக்கியம் உடையவர்கள் என்று நான் அவர்களைக்குறித்து இதைச் சாட்சியாகச் சொல்கிறேன். ஆனால் அவர்களுடைய வைராக்கியம் அறிவை அடிப்படையாகக் கொண்டது அல்ல. அப் 21:20ரோம 9:31-32நீதி 19:2பிலி 1:9பிலி 3:6ரோம 10:3கலா 1:142 கொரி 4:4 அவர்கள் இறைவனிடமிருந்து வரும் நீதியைக் குறித்து அறியாதபடியால், தங்கள் நீதியைத் தாங்களே ஏற்படுத்திக்கொள்ள முயன்றார்கள். இதனால் அவர்கள் இறைவனுடைய நீதிக்குப் பணிந்து நடக்கவில்லை. லூக் 16:15பிலி 3:92 கொரி 5:21லூக் 18:9-12வெளி 3:17-18ரோம 5:19ரோம 1:17ஏசா 51:8 கிறிஸ்துவே மோசேயின் சட்டத்தின் முடிவாக இருக்கிறார். இதனால் அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்கிறது. கலா 3:24ரோம 8:3-4மத் 5:17-18அப் 13:38-39யோவா 1:17எபி 10:14ஏசா 53:11கொலோ 2:10
சட்டத்தினால் வரக்கூடிய நீதியைக் குறித்து மோசே எழுதியிருக்கிறதாவது: “சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைச் செய்கிறவனே, அவற்றால் வாழ்வு பெறுவான்.” 1 லேவி 18:5எசேக் 20:11நெகே 9:29எசேக் 20:13எசேக் 20:21கலா 3:12லூக் 10:27-28ரோம 7:10 ஆனால் விசுவாசத்தினால் வருகின்ற நீதியைக் குறித்து வேதவசனத்தில் சொல்லப்படுவது: “பரலோகத்துக்கு ஏறிச்செல்கிறவன் யார்?” 2 அதாவது பரலோகத்திற்குப் போய் கிறிஸ்துவைக் கீழே வரும்படி அழைப்பவன் யார்? என்று உன் இருதயத்தில் சொல்லாதே. உபா 30:11-14நீதி 30:4எபே 4:8-10யோவா 3:12-13யோவா 6:58பிலி 3:9ரோம 3:22ரோம 4:13 “அல்லது ‘பாதாளத்துக்குள்ளே இறங்குபவன் யார்?’ ” 3 அதாவது இறந்தவர்களிடமிருந்து கிறிஸ்துவை மேலே கொண்டுவருபவன் யார்? என்றும் சொல்லாதே. எபி 13:20வெளி 1:18ரோம 4:251 பேது 3:181 பேது 3:22 ஆனால், வேதவசனம் என்ன சொல்கிறது? “இறைவனின் வார்த்தை உனக்கு அருகே இருக்கிறது, அது உன் வாயிலும், உன் இருதயத்திலும் இருக்கிறது” 4 என்றே அறிவிக்கப்படுகிறது. அந்த விசுவாசத்தின் வார்த்தையைத்தான் நாங்கள் பிரசித்தப்படுத்துகின்றோம்: உபா 30:14ரோம 1:16-171 தீமோ 4:61 பேது 1:25கலா 3:2அப் 10:43கலா 3:5ரோம 10:17 அதாவது, “இயேசுவே கர்த்தர்” என்று நீங்கள் உங்கள் வாயினால் அறிக்கையிட்டு, இறைவன் அவரை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பினார் என்று உங்கள் இருதயத்தில் விசுவாசித்தால், நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். லூக் 12:8அப் 16:31பிலி 2:11மத் 10:32-331 யோவா 4:2-31 பேது 1:21ரோம 8:341 கொரி 15:14-18 ஏனெனில் நீங்கள் இருதயத்தில் விசுவாசிப்பதினாலேயே நீதிமான் ஆக்கப்படுகிறீர்கள். உங்கள் வாயினால் உங்களுடைய விசுவாசத்தை அறிக்கையிடுவதினாலேயே இரட்சிக்கப்படுகிறீர்கள். 1 யோவா 4:15ரோம 10:9கலா 2:16யோவா 1:12-13யோவா 3:19-21எபி 10:22எபி 3:12லூக் 8:15 இதை வேதவசனம் சொல்கிறது, “அவரில் விசுவாசம் கொண்டிருக்கிற எவரும் ஒருபோதும் வெட்கப்பட்டு போகமாட்டார்கள்.” 5 ஏசா 28:16ரோம 9:331 பேது 2:6ஏசா 49:23எரே 17:7 ஏனெனில் விசுவாசிக்கிறவர்களிடையே யூதர் என்றோ, யூதரல்லாதவர் என்றோ வேறுபாடு இல்லை; ஒரே கர்த்தரே அவர்கள் எல்லோருக்கும் கர்த்தராய் இருக்கிறார், அவரே தம்மை நோக்கி கூப்பிடுகிற எல்லோரையும் நிறைவாய் ஆசீர்வதிக்கிறார். பிலி 4:19வெளி 17:14கலா 3:28ரோம 3:22கொலோ 3:11சங் 86:5சங் 145:18எபே 1:7 ஏனெனில், “கர்த்தரின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்” 6 என்று எழுதியிருக்கிறது. அப் 2:21யோவே 2:32
அப்படியானால் தாங்கள் விசுவாசிக்காத ஒருவரை நோக்கி அவர்கள் எப்படிக் கூப்பிடுவார்கள்? தாங்கள் கேள்விப்படாத ஒருவர்மேல் அவர்கள் எப்படி விசுவாசம் வைப்பார்கள்? யாராவது ஒருவர் அவரைப்பற்றி அவர்களுக்குப் பிரசங்கிக்காவிட்டால் அவர்கள் எப்படிக் கேள்விப்படுவார்கள்? மாற் 16:15-16அப் 26:17-18தீத் 1:3அப் 8:31எபி 11:62 தீமோ 4:17எபே 4:21யாக் 5:15 இறைவனால் அனுப்பப்படாவிட்டால் அவர்கள் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? அதனாலேயே, “நற்செய்தியைக் கொண்டுவருவோரின் பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!” 7 என்று வேதவசனத்தில் எழுதியிருக்கிறது. ஏசா 52:7நாகூ 1:15எபே 2:17மத் 28:18-20ஏசா 61:1எபே 6:15ஏசா 40:9எபே 3:8
ஆனால் எல்லா இஸ்ரயேலரும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவேதான் ஏசாயா, “கர்த்தாவே, எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்?” 8 என்று கேட்கிறான். ஏசா 53:1ரோம 3:3யோவா 12:38-40எபி 4:22 தெச 1:8கலா 5:71 பேது 2:8எபி 11:8 எனவே வார்த்தையைக் கேட்கிறதினாலேயே தனிப்பட்ட விசுவாசம் வருகிறது; அது கிறிஸ்துவைப்பற்றிய வார்த்தையின் மூலமாகவே வருகிறது. கலா 3:2கலா 3:5லூக் 11:28கொலோ 3:161 தெச 2:13மாற் 4:24லூக் 8:21ரோம 1:16 எனவே அவர்கள் கேள்விப்படவில்லையா என்று நான் கேட்கிறேன்? நிச்சயமாகவே அவர்கள் கேள்விப்பட்டார்கள். ஏனெனில் வேதவசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறபடி: சங் 19:4மத் 24:14ரோம 1:81 தெச 1:8கொலோ 1:23கொலோ 1:6மாற் 16:15மத் 28:19
“அவர்களின் குரல் பூமியெங்கும் சென்றது,
அவர்களுடைய வார்த்தைகள் உலகத்தின் கடைசிவரைக்கும் சென்றன.” 9
மீண்டும் நான் கேட்கிறேன்: இஸ்ரயேலர்கள் அதை விளங்கிக்கொள்ளவில்லையா? முதலாவதாக மோசேயே சொல்கிறார், உபா 32:21ரோம 11:11ரோம 11:141 பேது 2:10தீத் 3:31 கொரி 1:12ஏசா 44:18-20சங் 115:5-8
“ஒரு ஜனமாகக் கருதப்படாதவர்களைக் கொண்டு, நான் உங்களுக்கு எரிச்சல் மூட்டுவேன்;
விளங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லாத ஒரு ஜனங்களைக் கொண்டு,
நான் உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்கிறார்.” 10
ஏசாயா இன்னும் துணிச்சலுடன் சொல்கிறார், ஏசா 65:1-2ரோம 9:30ஏசா 55:4-5மத் 22:9-10ஏசா 49:6எபே 6:19-20ஏசா 52:15லூக் 14:23
“என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுகொண்டார்கள்.
என்னைப்பற்றி விசாரிக்காதவர்களுக்கு என்னை நான் வெளிப்படுத்தினேன் என்கிறார்.” 11
ஆனால், அவன் இஸ்ரயேலரைக் குறித்தோ, ஏசா 65:2-51 பேது 2:8எரே 35:15மத் 21:33-43நெகே 9:26நீதி 1:241 தெச 2:16அப் 13:46-47
“கீழ்ப்படியாதவர்களும், பிடிவாதமுள்ளவர்களுமான மக்களுக்கு
நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன்” 12
என்கிறார்.