சங்கீதங்கள் 19

Psalms 19
சங்கீதம் 19

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

வானங்கள் இறைவனுடைய மகிமையை அறிவிக்கின்றன, சங் 8:3ரோம 1:19-20சங் 50:6சங் 148:3-4சங் 33:6ஆதி 1:14-15சங் 150:1-2தானி 12:3

ஆகாயங்கள் அவருடைய கரங்களின் செயலைப் பிரசித்தப்படுத்துகின்றன.

அவைகள் நாள்தோறும் பேசுகின்றன; சங் 74:16சங் 134:1-3ஆதி 1:17-18ஆதி 8:22சங் 24:7-10ஏசா 38:19சங் 136:8-9சங் 78:3-6

இரவுதோறும் அறிவை வெளிப்படுத்துகின்றன.

அவைகள் சொற்கள் இல்லாமல் பேசுகின்றன; உபா 4:19

அங்கே அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.

ஆனாலும் அவைகளின் குரல் பூமியெங்கும் செல்கிறது; ரோம 10:18ஆதி 1:14-18மல்கி 4:2சங் 104:2சங் 98:32 கொரி 10:13-16ஏசா 49:6

அவைகளின் வார்த்தைகள் உலகத்தின் கடைமுனை வரைக்கும் செல்கின்றன.

யெகோவா வானங்களில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை அமைத்திருக்கிறார்.

சூரியனோ, மணவறையிலிருந்து புறப்படும் ஒரு மணமகனைப் போலவும், ஏசா 62:5பிலி 3:13-14ஏசா 61:101 கொரி 9:24-26எபி 12:1-2பிரச 1:5யோவா 3:29

பந்தயத்திற்காக ஓட மகிழ்ச்சியுடனிருக்கும் விளையாட்டு வீரனைப்போலவும் இருக்கிறது.

அது வானங்களின் ஒரு முனையில் உதித்து, பிரச 1:5யோபு 22:14கொலோ 1:23யோபு 25:3சங் 113:3சங் 139:9

மறுமுனைவரை சுற்றிவருகிறது.

அதின் வெப்பத்திற்குத் ஒன்றும் தப்புவதில்லை.

யெகோவாவினுடைய சட்டம் முழு நிறைவானது, சங் 119:130சங் 111:7கொலோ 3:16நீதி 1:4சங் 23:32 தீமோ 3:15-17சங் 119:105உபா 32:4

அது ஆத்துமாவுக்குப் புத்துயிரளிக்கிறது.

யெகோவாவினுடைய நியமங்கள் நம்பகமானவை,

அவை பேதையை ஞானியாக்குகின்றன.

யெகோவாவினுடைய ஒழுங்குவிதிகள் நியாயமானவை, சங் 12:6சங் 119:105எரே 15:16நீதி 30:5நீதி 2:6சங் 119:128சங் 119:92சங் 119:80

அவை இருதயத்திற்கு மகிழ்வைக் கொடுக்கின்றன.

யெகோவாவினுடைய கட்டளைகள் பிரகாசமானவை,

அவை கண்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கின்றன.

யெகோவாவுக்குரிய பயபக்தி தூய்மையானது, 1 சாமு 12:24சங் 119:142சங் 119:137-138சங் 111:10சங் 119:1சங் 34:11-14சங் 115:13வெளி 15:3

அது என்றென்றும் நிலைத்திருக்கிறது.

யெகோவாவினுடைய விதிமுறைகள் நிலையானவை,

அவை முற்றிலும் நீதியானவை.

அவை தங்கத்தைவிட, சங் 119:103சங் 119:72நீதி 16:16நீதி 3:13-15சங் 119:127யோபு 23:12நீதி 8:10-11நீதி 8:19

சுத்தத் தங்கத்தைவிட மிகுந்த விலையுயர்ந்தவை.

அவை தேனைப் பார்க்கிலும்,

கூட்டிலிருந்து வடியும் தெளித்தேனைப் பார்க்கிலும் இனிமையானவை.

அவைகளால் உமது அடியேன் எச்சரிப்படைகிறேன்; சங் 119:112 யோவா 1:8யாக் 1:25எபி 11:6-7நீதி 29:18மத் 6:4நீதி 6:22-23வெளி 14:13

அவைகளைக் கைக்கொள்வதால் மிகுந்த பலனுண்டு.

தன் தவறுகளை அறிந்துணர யாரால் முடியும்? சங் 90:8சங் 139:23-24யோபு 6:24எரே 17:9சங் 40:121 கொரி 4:41 யோவா 1:7சங் 139:6

என் மறைவான குற்றங்களை எனக்கு மன்னியும்.

விரும்பி செய்யும் பாவங்களிலிருந்து உமது அடியேனைக் காத்துக்கொள்ளும்; சங் 119:133ரோம 6:12-14சங் 7:101 சாமு 25:39அப் 24:16சங் 84:11உபா 17:12-13ஆதி 20:6

அவைகள் என்னை ஆளுகை செய்யாதிருப்பதாக.

அப்பொழுது நான் குற்றமற்றவனாயும்,

பெரும் மீறுதல்கள் அறியாதவனாயும் இருப்பேன்.

என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, சங் 104:34சங் 51:15சங் 119:1081 பேது 2:5சங் 66:18-20நீதி 15:8சங் 18:1-2எபி 11:4

என் வாயின் வார்த்தைகளும்

என் இருதயத்தின் தியானமும் உமது பார்வையில் பிரியமாய் இருப்பதாக.