பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்திருக்கிறீர், எபி 4:13எரே 12:3எரே 17:9-10சங் 44:21சங் 17:3சங் 139:231 நாளாக 28:91 இராஜா 8:39
நீர் என்னை அறிந்துமிருக்கிறீர்.
நான் உட்காரும்போதும் நான் எழும்பும்போதும் நீர் அறிகிறீர்; மத் 9:42இராஜா 19:27ஏசா 37:28லூக் 9:47சங் 94:11யோவா 2:24-25நீதி 15:3சங் 56:8
நீர் என் எண்ணங்களைத் தூரத்திலிருந்தே அறிகிறீர்.
நான் வெளியே போவதையும் நான் படுப்பதையும் நீர் கவனித்துக்கொள்கிறீர்; எரே 23:24யோபு 31:4ஆதி 28:10-17நீதி 5:20-212 சாமு 11:272 சாமு 12:9-12பிரச 12:14சங் 121:3-8
என்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் நீர் நன்கு அறிவீர்.
என் நாவில் ஒரு வார்த்தை பிறக்குமுன்பே, எபி 4:12-13சங் 19:14சங் 50:19-21யோபு 42:3மத் 12:35-37யாக் 1:26எரே 29:23யோபு 42:6-8
யெகோவாவே, நீர் அதை முற்றிலும் அறிந்திருக்கிறீர்.
நீர் முன்னும் பின்னுமாய் என்னைச் சூழ்ந்து, சங் 34:7உபா 33:27வெளி 1:17யோபு 23:8-9யாத் 24:11யோபு 9:33
நீர் உமது ஆசீர்வாதத்தின் கரத்தை என்மேல் வைத்திருக்கிறீர்.
இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், ரோம 11:33யோபு 42:3யோபு 11:7-9யோபு 26:14சங் 40:5நீதி 30:2-4சங் 13:1
விளங்கிக்கொள்ள முடியாததுமாயிருக்கிறது.
உமது ஆவியானவரைவிட்டு என்னால் எங்கே போகமுடியும்? எரே 23:23-24யோனா 1:3யோனா 1:10அப் 5:9
உமது சந்நிதியைவிட்டு என்னால் எங்கு ஓடமுடியும்?
நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்; ஆமோ 9:2-4யோபு 34:21-22யோனா 2:2ஒபதி 1:4நீதி 15:11யோபு 26:6எசேக் 28:12-17
என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
அதிகாலையின் சிறகுகளை எடுத்து நான் பறந்து சென்றாலும், சங் 19:6சங் 74:16-17மல்கி 4:2ஏசா 24:14-16சங் 18:10
கடல்களின் எல்லைகளுக்கப்பால் போய்த் தங்கினாலும்,
அங்கேயும் உமது கரம் எனக்கு வழிகாட்டும்; சங் 23:3ஏசா 41:13சங் 73:23சங் 63:8சங் 143:9-10
உமது வலதுகரம் என்னை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும்.
“நிச்சயமாகவே இருள் என்னை மறைத்துக்கொள்ளும், யோபு 12:22எரே 23:24சங் 94:7யோபு 22:12-14சங் 10:11-13ஏசா 29:15
ஒளி என்னைச் சுற்றிலும் இரவாகும்” என்று நான் சொன்னாலும்,
இருளும் உமக்கு இருட்டாய் இருக்காது; தானி 2:22யோபு 34:22யாத் 20:21எபி 4:13யோபு 26:6யாத் 14:20
இரவும் பகலைப்போல் பிரகாசிக்கும்;
ஏனெனில் இருள் உமக்கு ஒளியைப் போலவே இருக்கிறது.
என் உள்ளுறுப்புகளை நீரே உருவாக்கினீர்; எரே 1:5சங் 119:73ஏசா 44:2யோபு 31:15யோபு 10:9-12சங் 22:9-10சங் 71:6ஏசா 46:3
என் தாயின் கருப்பையில் என்னை நீரே ஒன்றாய் இணைத்தீர்.
நான் மிக ஆச்சரியமாகவும் அதிசயிக்கத்தக்க வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறபடியால், ஆதி 1:26-27சங் 111:2சங் 104:24சங் 92:4-5சங் 40:5யோபு 5:9வெளி 15:3
நான் உம்மைத் துதிக்கிறேன்;
உமது செயல்கள் ஆச்சரியமானவை,
நான் அதை நன்றாய் அறிந்திருக்கிறேன்.
நான் இரகசியமான இடத்தில் படைக்கப்பட்டபொழுது, பிரச 11:5சங் 139:13யோபு 10:8-11சங் 63:9எபே 4:9யாத் 11:5
நான் பூமியின் ஆழங்களில் ஒன்றாய் இணைக்கப்பட்ட போது,
என் எலும்புகள் உமக்கு மறைவாய் இருக்கவில்லை.
உருவம் பெற்றிராத என் உடலை உம்முடைய கண்கள் கண்டன; சங் 56:8மல்கி 3:16வெளி 20:12
எனக்கு நியமிக்கப்பட்ட எல்லா நாட்களும்,
அவை ஒன்றாகிலும் வருமுன்பே உம்முடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன.
இறைவனே, என்னைப்பற்றிய உம்முடைய எண்ணங்கள் எவ்வளவு அருமையானவை! சங் 40:5எரே 29:11ஏசா 55:8-9சங் 92:5சங் 36:7எபே 3:9-10சங் 31:19நீதி 8:31
அவைகளின் தொகை எவ்வளவு பெரியது!
நான் அவைகளை எண்ணப்போனால், சங் 3:5சங் 139:3சங் 40:51 தெச 5:10சங் 16:8-11சங் 17:15சங் 63:6-7தானி 12:2
அவை மணலைப் பார்க்கிலும் அதிகமாயிருக்கும்;
நான் விழிக்கும்போதோ இன்னும் உம்முடனேயே இருக்கிறேன்.
இறைவனே, கொடியவர்களை நீர் கொன்றுபோட்டால் நலமாயிருக்கும்! சங் 119:115சங் 5:6ஏசா 11:4சங் 6:8சங் 9:172 கொரி 6:17சங் 55:23சங் 64:7
இரத்தவெறியரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்!
அவர்கள் உம்மைக் குறித்துத் தீயநோக்கத்துடன் பேசுகிறார்கள்; யூதா 1:15யாத் 20:7சங் 74:18ஏசா 37:23ஏசா 37:28-29சங் 2:1-3சங் 73:8-9சங் 74:22-23
உம்முடைய விரோதிகள் உமது பெயரைத் தவறாய் பயன்படுத்துகிறார்கள்.
யெகோவாவே, உம்மை வெறுக்கிறவர்களை நான் வெறுக்காதிருக்கிறேனோ? சங் 119:158சங் 31:6வெளி 2:22 நாளாக 19:2சங் 26:5வெளி 2:6எரே 13:17லூக் 19:41
உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமல் இருக்கிறேனோ?
ஆம், நான் அவர்களை முற்றிலும் வெறுக்கிறேன். லூக் 14:26சங் 101:3-8
அவர்களை என் பகைவர்களாகவே நான் எண்ணுகிறேன்.
இறைவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; சங் 26:2யோபு 31:61 பேது 1:7நீதி 17:3உபா 8:2சங் 139:1சகரி 13:9எரே 11:20
என்னை சோதித்து என் வருத்தமான சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
உம்மை வருந்தும்படிச் செய்யும் வழி ஏதாவது என்னில் உண்டோ என்று பார்த்து, சங் 143:10எரே 17:9-10சங் 25:8-9சங் 119:32சங் 16:11சங் 5:8நீதி 28:26சங் 143:8
நித்திய வழியிலே என்னை நடத்தும்.