யோபு 12

Job 12

யோபு

பின்பு யோபு மறுமொழியாக சொன்னது:

“நீங்கள் பெரியவர்கள், சந்தேகம் இல்லை. ஏசா 5:211 கொரி 4:101 கொரி 6:5யோபு 11:12யோபு 11:2யோபு 11:6யோபு 15:2யோபு 17:10

ஞானமும் உங்களுடனே செத்துவிடும்!

எனக்கும் உங்களைப்போல் ஒரு மனம் உண்டு; யோபு 13:2-52 கொரி 11:21-23நீதி 26:42 கொரி 11:5யோபு 26:2-3யோபு 6:6-7

நான் உங்களுக்குக் குறைந்தவனல்ல;

இவற்றையெல்லாம் அறியாதவன் யார்?

“நான் இறைவனை நோக்கிக் கூப்பிடுவேன், அவர் பதிலளிப்பார்; யோபு 30:1யோபு 17:6யோபு 21:3சங் 91:15எரே 33:3யோபு 16:10யோபு 17:2சங் 22:7-8

நான் நீதிமானும், குற்றமற்றவனுமாய் இருந்தபோதிலும்,

என் நண்பர்களின் சிரிப்பிற்கு ஆளாகிவிட்டேன்.

சுகவாழ்வுள்ள மனிதர்கள் அவலத்தை வெறுக்கிறார்கள்; மத் 25:8நீதி 13:9சங் 17:5ஆமோ 6:1-6உபா 32:35எரே 13:16யோபு 16:4யோபு 18:5

அவர்கள் அது, கால் இடறுகிறவர்களின் விதி என்று எண்ணுகிறார்கள்.

திருடர்களுடைய கூடாரங்கள் குழப்பமின்றி இருக்கின்றன; யோபு 9:24சங் 73:11-12யோபு 21:7-15சங் 17:14சங் 37:1சங் 37:35எரே 5:27யோபு 22:18

தெய்வத்தைத் தங்கள் கைகளிலேந்திச் செல்கிறவர்களும்,

இறைவனைக் கோபமூட்டுகிறவர்களும் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.

“ஆனால் மிருகங்களைக் கேளுங்கள்; அவை உங்களுக்குப் போதிக்கும், ஏசா 1:3எரே 8:7நீதி 6:6யோபு 21:29-30

ஆகாயத்துப் பறவைகளைக் கேளுங்கள்; அவை உங்களுக்குச் சொல்லித் தரும்.

பூமியுடன் பேசுங்கள், அது உங்களுக்குப் போதிக்கும்.

அல்லது கடல் மீன்களே உங்களுக்கு அறிவிக்கட்டும்.

யெகோவாவின் கரமே இதைச் செய்தது ஏசா 41:20எரே 27:5-6ரோம 11:361 சாமு 2:7அப் 19:35தானி 9:17தானி 5:18உபா 8:17-18

என்பதை இவற்றுள் எது அறியாதிருக்கிறது?

ஒவ்வொரு உயிரினங்களின் உயிரும், அப் 17:28யோபு 33:4அப் 17:25யோபு 27:3எண் 16:22தானி 5:23சங் 146:3-4யோவா 3:6

எல்லா மனிதரின் சுவாசமும் அவரின் கையிலேயே இருக்கின்றன.

நாவு உணவை ருசிப்பதுபோல, யோபு 34:3எபி 5:141 பேது 2:3யோபு 6:30பிலி 1:101 கொரி 10:15

காது சொற்களைச் சோதிக்கிறது அல்லவோ?

முதியோரிடத்தில் ஞானம் இருக்கும். யோபு 32:7யோபு 15:10யோபு 8:8

வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.

“ஞானமும் வல்லமையும் இறைவனுக்கு உரியன; யோபு 36:5யோபு 9:4நீதி 2:6-7யாக் 1:5யோபு 28:20-28தானி 2:20எபே 1:11நீதி 8:14

ஆலோசனையும், விளங்கும் ஆற்றலும் அவருடையனவே.

அவர் இடித்தால் கட்டமுடியாது; ஏசா 22:22வெளி 3:7யோபு 11:10மல்கி 1:41 சாமு 17:461 சாமு 26:8எரே 51:58யோபு 16:11

அவர் சிறைப்படுத்தும் மனிதனை விடுவிக்கவும் முடியாது.

தண்ணீரை அவர் தடுத்தால், அங்கு வறட்சி உண்டாகிறது; 1 இராஜா 17:1ஆமோ 5:81 இராஜா 8:35-36ஆதி 6:13ஆதி 6:17ஆதி 7:11யாக் 5:17-18எரே 14:22

அவர் தண்ணீரைத் திறந்துவிடும்போது அது நாட்டை அழிக்கிறது.

பெலமும் வெற்றியும் அவருக்குரியன; 1 இராஜா 22:22-23எசேக் 14:9யோபு 12:13யோபு 13:9யோபு 13:7மத் 6:13

ஏமாற்றுகிறவனும், ஏமாறுகிறவனுமான இருவருமே அவருடையவர்கள்.

அவர் ஆலோசகர்களின் ஞானத்தை அகற்றி அனுப்பி விடுகிறார்; ஏசா 29:141 கொரி 1:19-202 சாமு 17:232 சாமு 15:312 சாமு 17:14ஏசா 19:12-14யோபு 3:14யோபு 9:24

நீதிபதிகளையும் மூடராக்குகிறார்.

அரசர்களுடைய கட்டுகளை அவர் அவிழ்த்து, தானி 2:21சங் 116:162 நாளாக 33:11-14எரே 52:31-34வெளி 19:16

அவர்கள் இடுப்புகளில் துணியைக் கட்டுகிறார்.

அவர் ஆசாரியர்களை நீக்கி, ஏசா 37:36-38ஏசா 45:11 சாமு 17:45-46யோபு 24:22யோபு 34:28யோபு 35:9யோசு 10:24யோசு 10:42

நீண்டகால அதிகாரிகளைக் கவிழ்க்கிறார்.

அவர் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களின் உதடுகளை மவுனமாக்குகிறார்; யோபு 32:9யோபு 17:4யோபு 12:24ஏசா 3:1-3யோபு 39:17நீதி 10:21நீதி 12:19நீதி 12:22

முதியோரின் நிதானத்தையும் எடுத்துப் போடுகிறார்.

அவர் உயர்குடி மக்கள்மேல் இகழ்ச்சியை ஊற்றி சங் 107:401 இராஜா 21:23-242இராஜா 9:262இராஜா 9:34-37அப் 12:23தானி 2:21-22தானி 4:32-33எபே 6:10

பலவானைப் பலமிழக்கச் செய்கிறார்.

அவர் இருளின் ஆழ்ந்த செயல்களை வெளிப்படுத்துகிறார்; தானி 2:221 கொரி 4:51 கொரி 2:10யோபு 3:5லூக் 1:79ஆமோ 5:8மத் 10:26யோபு 28:20-23

இருளின் ஆழத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்.

அவர் மக்களைப் பெரிதாக்கி, அவர்களை அழிக்கிறார்; ஏசா 9:3ஏசா 26:15ஏசா 60:22சங் 107:38யாத் 1:20யாத் 1:7ஏசா 27:6ஏசா 51:2

மக்களை விரிவாக்கி அவர்களைச் சிதறப்பண்ணுகிறார்.

பூமியின் தலைவர்களின் சிந்திக்கும் ஆற்றலை இழக்கப்பண்ணுகிறார்; சங் 107:40யோபு 12:20ஓசி 7:11தானி 4:16தானி 4:33ஏசா 19:1ஏசா 6:9-10யோபு 17:4

பாதையில்லாத பாழிடங்களில் அவர்களை அலையப்பண்ணுகிறார்.

அவர்கள் வெளிச்சமில்லாமல் இருளில் தடவித் திரிகிறார்கள்; யோபு 5:14சங் 107:27ஏசா 24:20ஏசா 19:141 யோவா 2:11உபா 28:29ஆதி 19:11ஏசா 59:10

வெறியரைப்போல் அவர்களைத் தள்ளாட வைக்கிறார்.