சங்கீதங்கள் 74

Psalms 74
சங்கீதம் 74

மஸ்கீல் என்னும் ஆசாபின் சங்கீதம்.

இறைவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் புறக்கணித்துவிட்டீர்? உபா 29:20சங் 100:3சங் 79:13யோவா 10:26-30எசேக் 34:31சங் 44:9எரே 23:1எரே 31:37

உமது கோபம் உமது மேய்ச்சல் நிலத்தின் செம்மறியாடுகளுக்கு விரோதமாக ஏன் புகைகிறது?

நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்துக்கொண்ட உமது மக்களையும், எரே 10:16உபா 32:9யாத் 15:13யாத் 15:16உபா 4:20சங் 135:4சங் 78:68-69அப் 20:28

நீர் மீட்டுக்கொண்ட உமது உரிமைச்சொத்தான கோத்திரத்தையும் நினைவிற்கொள்ளும்;

உமது தங்குமிடமான சீயோன் மலையையும் நினைவிற்கொள்ளும்.

என்றென்றும் பாழாய்க்கிடக்கும் இடங்களைப் பாரும்; புலம் 1:10தானி 9:17சங் 79:1ஏசா 64:10-11லூக் 21:24மாற் 11:172 சாமு 22:39-43தானி 11:31

எதிரி பரிசுத்த இடத்திற்குள் அனைத்தையும் பாழாக்கிவிட்டான்.

நீர் எங்களைச் சந்தித்த இடத்திலே, உமது எதிரிகள் கர்ஜித்தார்கள்; புலம் 2:7மத் 24:152 நாளாக 36:17தானி 6:27எண் 2:2எரே 6:1-5லூக் 13:1லூக் 21:20

அவர்கள் தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டினார்கள்.

அடர்ந்த காட்டில் மரங்களை வெட்டுவதற்கு 1 இராஜா 5:62 நாளாக 2:14எரே 46:22-23

கோடாரிகளைக் கையாளும் மனிதரைப்போல் அவர்கள் நடந்துகொண்டார்கள்.

அவர்கள் தங்கள் கோடாரிகளாலும், 1 இராஜா 6:181 இராஜா 6:291 இராஜா 6:321 இராஜா 6:35

கைக்கோடரிகளாலும் சித்திரவேலைகள் எல்லாவற்றையும் அழித்தார்கள்.

அவர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துத் தரைமட்டமாக்கினார்கள்; 2இராஜா 25:9உபா 12:5எசேக் 24:21ஏசா 64:11மத் 22:7சங் 89:391 இராஜா 8:20யாத் 20:24

அவர்கள் உமது பெயருக்குரிய தங்குமிடத்தை அசுத்தமாக்கினார்கள்.

அவர்கள் தங்கள் இருதயங்களில், சங் 83:42இராஜா 2:32இராஜா 2:52இராஜா 4:23எஸ்த 3:8-9மத் 4:23சங் 137:72 நாளாக 17:9

“நாங்கள் அவர்களை அடியோடு அழித்துவிடுவோம்!” என்றார்கள்;

நாட்டில் இறைவனை வழிபட்ட எல்லா இடங்களையும் அவர்கள் எரித்துப்போட்டார்கள்.

எங்களுக்கு நீர் செய்த அற்புத அடையாளங்கள் எதையும் நாங்கள் காணவில்லை; ஆமோ 8:11எசேக் 7:261 சாமு 3:1புலம் 2:9யாத் 12:13யாத் 13:9-10எசேக் 20:12மீகா 3:6

இறைவாக்கினரும் இல்லை;

இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் எங்களில் யாருக்கும் தெரியாது.

இறைவனே, பகைவன் எவ்வளவு காலத்துக்கு உம்மை நிந்திப்பான்? சங் 89:50-51வெளி 6:10தானி 12:6சங் 13:1-2சங் 44:16சங் 79:12சங் 79:4-5சங் 89:46

எதிரி உமது பெயரை என்றென்றும் உதறித் தள்ளிவிடுவானோ?

நீர் ஏன் உமது கரத்தை, உமது வலது கரத்தை மடக்கிக் கொள்கிறீர்? புலம் 2:3ஏசா 64:12சங் 78:65-66சங் 44:23

மறைந்திருக்கும் உமது கையை நீட்டி அவர்களை அழித்துப்போடும்.

ஆனால் பூர்வகாலத்திலிருந்து இறைவனே நீரே என் அரசர்; ஏசா 33:22சங் 44:4யாத் 19:5-61 சாமு 19:5யாத் 15:2-15ஆப 3:12-14ஏசா 63:8நியாயாதி 4:23-24

அவர் பூமியின்மேல் இரட்சிப்பைச் செய்துவருகிறார்.

உமது வல்லமையினால் கடலை இரண்டாகப் பிளந்தவர் நீரே; யாத் 14:21சங் 78:13எசேக் 29:3ஏசா 51:9-10எசேக் 32:2யாத் 14:28ஏசா 11:15-16நெகே 9:11

நீரே கடலிலுள்ள இராட்சத விலங்கின் தலைகளையும் உடைத்தீர்.

லிவியாதான் தலைகளை நசுக்கி, ஏசா 27:1யோபு 41:1-34சங் 72:9சங் 104:25-26யோபு 3:8எண் 14:9யாத் 12:35-36யாத் 14:30

அதைப் பாலைவனப் பிராணிகளுக்கு உணவாகக் கொடுத்தவரும் நீரே.

ஊற்றுகளையும் நீரோடைகளையும் திறந்தவர் நீரே; எண் 20:11யாத் 17:5-6ஏசா 48:21யோசு 3:13-17சங் 105:41ஏசா 44:27யோசு 2:102இராஜா 2:14

எப்பொழுதும் நிரம்பி வழிந்தோடும் ஆறுகளை வற்றப் பண்ணினவரும் நீரே.

பகல் உம்முடையது, இரவும் உம்முடையதே; ஆதி 1:3-5மத் 5:45சங் 136:7-9ஆதி 1:14-18சங் 104:19சங் 19:1-6சங் 8:3

சூரியனையும் சந்திரனையும் நிலைப்படுத்தியவர் நீரே.

பூமியின் சகல எல்லைகளையும் அமைத்தவர் நீரே; உபா 32:8அப் 17:26அப் 14:17ஆதி 8:22சங் 24:1-2

நீரே கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் ஏற்படுத்தினீர்.

யெகோவாவே, பகைவன் எவ்வளவாய் உம்மை ஏளனம் செய்தான் என்பதையும், சங் 39:8உபா 32:6வெளி 16:19உபா 32:27எசேக் 20:14ஏசா 37:23-24ஏசா 62:6-7சங் 137:7

மூடர்கள் உமது பெயரை எப்படி நிந்தித்தார்கள் என்பதையும் நினைவிற்கொள்ளும்.

உமது புறாவின் உயிரை காட்டு மிருகங்களுக்கு ஒப்புக்கொடாதிரும்; உன்னத 2:14யாக் 2:5-6மத் 10:16சங் 9:18ஏசா 60:8சங் 68:10சங் 68:13சங் 72:2

துன்புறுத்தப்பட்ட உமது மக்களின் வாழ்வை என்றென்றும் மறவாதிரும்.

உமது உடன்படிக்கையை நினைவிற்கொள்ளும்; ஆதி 17:7-8சங் 106:45எபி 8:10எரே 33:20-26சங் 105:8சங் 89:28சங் 89:34-36உபா 12:31

ஏனெனில் வன்முறையின் இருப்பிடங்கள் நாட்டின் இருண்ட பகுதிகளை நிரப்புகின்றன.

ஒடுக்கப்பட்டவர்கள் அவமானத்துடன் பின்னடைய விடாதிரும்; சங் 12:5எஸ்றா 3:11சங் 103:6சங் 35:10சங் 9:18ஏசா 45:17எரே 33:11சங் 102:19-21

ஏழைகளும் எளியவர்களும் உமது பெயரைத் துதிப்பார்களாக.

இறைவனே, எழுந்தருளும்; உமது சார்பாக நீரே வாதாடும்; சங் 74:18ஏசா 52:5சங் 53:1சங் 75:4-5சங் 79:9-10சங் 9:19-20சங் 89:50-51

நாள்தோறும் மூடர்கள் உம்மை எவ்வளவாய் நிந்திக்கிறார்கள் என்பதை நினைவிற்கொள்ளும்.

உமது விரோதிகளின் கூக்குரலையும், ஏசா 37:29சங் 65:7வெளி 17:14யோனா 1:2புலம் 2:16சங் 10:11-12சங் 13:1சங் 2:1-2

தொடர்ந்தெழும் உமது பகைவரின் ஆரவாரத்தையும் அசட்டை பண்ணாதிரும்.