அப்போஸ்தலருடைய நடபடிகள் 2

Acts 2

பரிசுத்த ஆவியானவரின் வருகை

பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். ரோம 15:6பிலி 2:2அப் 1:13-15பிலி 1:271 கொரி 16:8அப் 4:32செப்ப 3:9அப் 4:24 அப்பொழுது திடீரென பலத்த காற்று வீசுவதுபோன்ற ஒரு முழக்கம் பரத்திலிருந்து வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அப் 4:311 இராஜா 19:11யோவா 3:8சங் 18:10அப் 16:25-26எசேக் 3:12-13எசேக் 37:9-10ஏசா 65:24 அவர்கள் நெருப்புப்போன்ற பிரிந்திருக்கும் நாவுகளைக் கண்டார்கள். அவை அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தன. மத் 3:11யோவா 1:32-33அப் 2:4எரே 23:29ஏசா 11:2-3லூக் 24:32ஆதி 11:61 கொரி 12:10 அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். ஆவியானவர் கொடுத்த ஆற்றலின்படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளிலே பேசத் தொடங்கினார்கள். மாற் 16:17அப் 13:52அப் 4:31எபே 5:181 கொரி 12:101 கொரி 14:21-23யோவா 14:26அப் 7:55

அப்பொழுது இறைவனிடம் பயபக்தியாயிருந்த யூதர்கள் வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் வந்து எருசலேமில் தங்கியிருந்தார்கள். அப் 8:2லூக் 2:25கொலோ 1:23அப் 10:2அப் 10:7அப் 13:50அப் 2:1அப் 22:12 அவர்கள் இந்த சத்தத்தைக் கேட்டபோது, பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். தங்களுடைய சொந்த மொழிகளில் அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தார்கள். 1 கொரி 16:92 கொரி 2:12அப் 2:2அப் 3:11மத் 2:3 அவர்கள் முற்றுமாய் வியப்படைந்து, “இங்கு பேசிக்கொண்டிருக்கிற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அப் 2:12அப் 1:11அப் 14:11-12யோவா 7:52அப் 3:10மத் 21:11மத் 26:73மத் 4:18-22 அப்படியிருக்க, இவர்கள் நமது சொந்த மொழிகளில் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்கிறோமே, அது எப்படி? பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, 1 பேது 1:12 தீமோ 1:15அப் 16:6அப் 18:2வெளி 1:42இராஜா 17:6அப் 19:10அப் 19:31 பிரிகியா, பம்பிலியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், சிரேனே அருகேயுள்ள லீபியாவின் சில பகுதிகளிலுள்ளவர்களும், ரோமிலிருந்து வந்தவர்களும் இங்கிருக்கிறார்களே. அப் 16:6சகரி 8:23அப் 13:13அப் 13:43அப் 15:38அப் 18:23சகரி 8:202 தீமோ 1:17 இன்னும் யூதரும், யூத விசுவாசத்திற்கு வந்தவர்களும் இருக்கிறார்களே! அத்துடன் கிரேத்தரும், அரபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே இறைவனின் அதிசயங்களை இவர்கள் அறிவிப்பதைக் கேட்கிறோமே!” என்றார்கள். 1 கொரி 12:10யாத் 15:11எபி 2:4எரே 25:24யோபு 9:10சங் 26:7சங் 78:4தீத் 1:12 அவர்கள் வியப்பும் குழப்பமும் அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்து, “இதன் அர்த்தம் என்ன?” என்றார்கள். அப் 17:20லூக் 15:26லூக் 18:36அப் 10:17அப் 2:7

ஆனால் சிலர், அவர்களைக்குறித்து கேலிசெய்து, “இவர்கள் மதுபானத்தை நிறைய குடித்திருக்கிறார்கள்” என்றார்கள். 1 கொரி 14:231 சாமு 1:14அப் 2:15சகரி 10:7ஏசா 25:6யோபு 32:19எபே 5:18சகரி 9:15

பேதுரு உரையாற்றுதல்

அப்பொழுது பேதுரு மற்ற பதினொரு பேருடனும் எழுந்து நின்று, உரத்த சத்தமாய் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசத் தொடங்கினான்: “யூதமக்களே, எருசலேமில் வாழுகிறவர்களே, உங்கள் எல்லோருக்கும் நான் இதை விளக்கிச் சொல்லுகிறேன்; நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். ஏசா 51:7அப் 2:22அப் 5:35அப் 7:2உபா 27:9ஓசி 8:1ஏசா 51:1ஏசா 52:8 நீங்கள் நினைப்பதுபோல இவர்கள் குடிவெறி கொண்டவர்கள் அல்ல. நேரமோ இன்னும் காலை ஒன்பது மணிதானே! 1 தெச 5:5-81 சாமு 1:15மத் 20:3 இறைவாக்கினன் யோவேலினால் கூறப்பட்டபடி இது நிறைவேறுகிறது: யோவே 2:28-32

“ ‘இறைவன் சொல்லியபடி, யோவே 2:28-32ஏசா 44:3தீத் 3:4-6அப் 10:45யோவா 7:39சகரி 12:10எசேக் 11:19எபி 1:2

கடைசி நாட்களில், நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன்.

உங்கள் மகன்களும் மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள்,

உங்கள் இளைஞர் தரிசனங்களைக் காண்பார்கள்,

உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.

மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், கொலோ 3:11கலா 3:281 கொரி 7:21-22அப் 21:10

என் ஆவியைப் பொழிவேன்.

அப்பொழுது அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள்.

உயரே வானத்தில் நான் அதிசயங்களைக் காண்பிப்பேன், யோவே 2:30-31செப்ப 1:14-18மல்கி 4:1-6

கீழே பூமியில் அடையாளங்களாக

இரத்தத்தையும், நெருப்பையும், புகை மண்டலங்களையும் காண்பிப்பேன்.

பெரிதும் மகிமையானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே, 2 பேது 3:10ஆமோ 8:9மத் 24:291 தெச 5:2மல்கி 4:5யோவே 2:12 பேது 3:7யோவே 3:14

சூரியன் இருண்டுபோகும்;

சந்திரன் இரத்தமாக மாறும்.

கர்த்தரின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற ரோம 10:12-13யோவே 2:32சங் 86:5அப் 22:16எபி 4:161 கொரி 1:2மத் 28:19அப் 9:15

யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’ 1

“இஸ்ரயேலரே, இதைக் கேளுங்கள்: நீங்கள் அறிந்திருக்கிறபடி, இறைவன் உங்கள் மத்தியில் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் மூலமாக செய்த அற்புதங்கள், அதிசயங்கள், அடையாளங்களினால் அவர் இறைவனால் அங்கீகாரம் பெற்ற மனிதர் என்பதை நிரூபித்தார். யோவா 3:2அப் 4:10யோவா 14:10-11லூக் 11:20மத் 12:28மத் 9:8எபி 2:42 கொரி 12:12 இறைவன் தாம் தீர்மானித்திருந்த நோக்கத்தின்படியும், தமது முன்னறிவின்படியும், அவர் அந்த இயேசுவை உங்களிடம் ஒப்படைத்தார். நீங்களோ கொடியவர்களின் உதவியோடு, அவரைச் சிலுவையில் ஆணி அடித்துக் கொலைசெய்தீர்கள். அப் 4:28அப் 3:18ஆதி 50:20லூக் 22:22ஏசா 46:10-111 பேது 1:20அப் 3:13-15அப் 13:27 ஆனால் இறைவனோ, மரணத்தின் வேதனையிலிருந்து இயேசுவை விடுவித்து, அவரை உயிரோடு எழுப்பினார். ஏனெனில், மரணத்தினால் அவரைப் பிடித்து வைத்திருக்க முடியவில்லை. 1 கொரி 6:141 பேது 1:21அப் 2:32கொலோ 2:12ரோம 8:11ரோம 6:42 கொரி 4:14யோவா 10:18 தாவீது கிறிஸ்துவைக்குறித்துச் சொல்லியிருப்பதாவது: சங் 16:8-11ஏசா 41:13சங் 109:31சங் 62:6ஏசா 50:7-9சங் 62:2சங் 110:5சங் 73:23

“ ‘நான் கர்த்தரை எப்பொழுதும் என் கண்முன் வைத்துக்கொண்டிருக்கிறேன்.

அவர் எனது வலதுபக்கத்தில் இருக்கிறபடியால்,

நான் அசைக்கப்படமாட்டேன்.

ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; சங் 16:9சங் 63:5சங் 71:23சங் 30:11சங் 22:22-24

என் உடலும் எதிர்பார்ப்புடன் வாழும்.

ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர், சங் 16:10அப் 2:31வெளி 1:18வெளி 20:131 கொரி 15:521 கொரி 15:55யோவா 11:39சங் 86:13

உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்.

நீர் வாழ்வின் பாதைகளை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர். சங் 16:11சங் 21:6சங் 25:4சங் 42:5யோவா 11:25-26நீதி 2:19நீதி 8:20சங் 17:15

உமது சமுகத்தில் உமது மகிழ்ச்சியினால் என்னை நிரப்புவீர்’ 2

என்பதே.

“சகோதரரே, இதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். நமது முற்பிதாவான தாவீது இறந்து அடக்கம்பண்ணப்பட்டானே. அவனது கல்லறை இந்நாள்வரை இங்கே இருக்கிறதே. அப் 13:361 இராஜா 2:10அப் 7:8-9எபி 7:4நெகே 3:16அப் 26:26 ஆனால் தாவீது இறைவாக்கினனாய் இருந்ததால், தனது சந்ததியிலே ஒருவரை தனது அரியணையில் அமர்த்துவார் என்று இறைவன் தனக்கு ஆணையிட்டு வாக்குக் கொடுத்திருந்ததை அவன் அறிந்திருந்தான். சங் 132:11-18சங் 89:3-4எரே 33:14-152 சாமு 7:11-162 சாமு 23:22 பேது 1:21ஏசா 9:6-7லூக் 1:31-33 நிகழப்போவதை தாவீது முன்னமே கண்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்துப் பேசினான். அதனாலேயே அவர் பாதாளத்தில் கைவிடப்படுவதில்லை என்றும், அவரின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னான். அப் 2:27சங் 16:10அப் 13:351 பேது 1:11-12 இறைவன் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். அதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகளாய் இருக்கிறோம். அப் 3:15அப் 1:8அப் 1:22அப் 2:24அப் 4:33லூக் 24:46-48யோவா 15:27யோவா 20:26-31 கிறிஸ்து இறைவனுடைய வலதுபக்கத்திற்கு உயர்த்தப்பட்டு, பிதா வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார். நீங்கள் இப்பொழுது காண்கிறபடியும் கேட்கிறபடியும் அவரே அந்த பரிசுத்த ஆவியானவரை ஊற்றியிருக்கிறார். அப் 1:4அப் 5:31அப் 2:17யோவா 14:26யோவா 16:7-151 பேது 3:22அப் 10:45கலா 3:14 தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே, ஆனால் அவன், சங் 110:1மத் 22:42-45எபி 1:13எபே 1:221 கொரி 15:25லூக் 20:42-43மாற் 12:36

“ ‘கர்த்தர் என் கர்த்தரிடம், சொன்னதாவது:

“நான் உமது பகைவரை

உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை, வெளி 19:19ரோம 16:20ஏசா 60:14ஏசா 59:18வெளி 20:8-15ஆதி 3:15ஏசா 63:4-6லூக் 20:16-18

நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.” ’ 3

என்று சொன்னான்.

“ஆகவே இஸ்ரயேலராகிய நீங்கள் அனைவரும் நிச்சயமாய் அறிந்துகொள்ள வேண்டியது: நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே இறைவன், கர்த்தரும் கிறிஸ்துவும் ஆக்கியிருக்கிறார்” என்று பேதுரு சொன்னான். அப் 5:30-31ரோம 14:8-122 கொரி 5:10அப் 4:11-12எசேக் 34:302 தெச 1:7-10சகரி 13:1அப் 10:36-42

அந்த மக்கள் இதைக் கேட்டபோது, இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்றார்கள். லூக் 3:10அப் 22:10அப் 16:29-31எபி 4:12-13லூக் 3:12லூக் 3:14யோவா 8:9அப் 24:25-26

அதற்குப் பேதுரு, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும்படி மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவின் பெயரில் திருமுழுக்கு பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை நன்கொடையாகப் பெறுவீர்கள். அப் 22:16மாற் 16:16அப் 8:12லூக் 24:47அப் 10:48அப் 3:191 பேது 3:21அப் 10:44-45 இந்த வாக்குத்தத்தம் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள அனைவருக்கும் உரியது. நமது இறைவனாகிய கர்த்தர் அழைக்கப்போகிற அனைவருக்கும் இது உரியது” என்றான். ஏசா 44:3ரோம 8:30ஆதி 17:7-8யோவே 2:321 பேது 5:10அப் 15:8எபே 4:4வெளி 19:9

பேதுரு இன்னும் வேறு பல வார்த்தைகள் மூலமாயும் அவர்களை எச்சரித்தான்: “இந்தக் கறைபட்ட தலைமுறையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர்களை எச்சரித்தான். பிலி 2:15உபா 32:51 தீமோ 4:162 கொரி 6:17எபே 4:17மத் 17:17எபி 3:12-13மத் 16:4 பேதுருவினுடைய செய்தியை ஏற்றுக்கொண்ட அனைவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். திருச்சபையில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அன்று சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அப் 4:4அப் 2:47அப் 16:31-34யோவா 14:12அப் 1:15அப் 2:37அப் 13:48அப் 8:6-8

விசுவாசிகளின் ஐக்கியம்

அவர்கள் அப்போஸ்தலருடைய போதித்தலுக்கும், ஐக்கியத்திற்கும், அப்பம் பிட்குதலுக்கும், மன்றாட்டுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள். எபி 10:25அப் 1:141 யோவா 1:31 யோவா 1:7அப் 2:46அப் 20:7கொலோ 1:23எபே 6:18 அனைவரும் பயபக்தியினால் நிறைந்திருந்தார்கள். அப்போஸ்தலர்களால் அநேக அதிசயங்களும் அற்புத அடையாளங்களும் செய்யப்பட்டன. யோவா 14:12லூக் 7:16லூக் 8:37மாற் 16:17எரே 33:9அப் 3:6-9அப் 4:33அப் 5:15-16 விசுவாசிகள் அனைவரும் ஒன்றுகூடியிருந்தார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பொதுவானதாக வைத்துக்கொண்டார்கள். அப் 4:321 யோவா 3:16-182 கொரி 8:14-152 கொரி 8:92 கொரி 9:6-15அப் 6:1-3அப் 5:4 அவர்கள் தங்கள் சொத்துக்களையும், பொருட்களையும் விற்று, தேவையானவர்களுக்கு ஏற்றவிதமாய் பகிர்ந்துகொடுத்தார்கள். 1 யோவா 3:171 தீமோ 6:18-19அப் 4:34யாக் 2:14-16லூக் 18:22நீதி 19:172 கொரி 9:9அப் 11:29 ஒவ்வொரு நாளும், அவர்கள் ஆலயத்தின் முற்றத்தில் ஒன்றுகூடி சந்தித்தார்கள். அவர்கள் தங்களுடைய வீடுகள்தோறும் அப்பம் பிட்டார்கள். அவர்கள் எளிய இருதயத்துடனும், சந்தோஷத்துடனும் ஒன்றாய்ச் சாப்பிட்டார்கள். அப் 5:42அப் 2:42அப் 20:7சங் 86:112 கொரி 1:12அப் 16:34கொலோ 3:22அப் 1:13-14 அவர்கள் இறைவனைத் துதிக்கிறவர்களாயும், எல்லா மக்களுடைய தயவையும் பெற்றவர்களாயும் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அவர்களின் எண்ணிக்கையுடனே சேர்த்துக்கொண்டு வந்தார். அப் 16:5அப் 5:13-14அப் 2:411 கொரி 1:18அப் 2:39ரோம 14:18அப் 11:24அப் 13:48