எரேமியா 33

Jeremiah 33

புதுப்பித்தலுக்கு வாக்குத்தத்தம்

எரேமியா இன்னும் காவற்கூடத்தின் முற்றத்திலேயே சிறைப்பட்டிருக்கும்போது, இரண்டாம் முறையும் யெகோவாவின் வார்த்தை அவனுக்கு வந்தது: எரே 32:2-3எரே 37:21எரே 38:282 தீமோ 2:9எரே 32:8 பூமியைப் படைத்து அதை உருவாக்கி நிறுத்தியவர் யெகோவா. யெகோவா என்பது அவரது பெயர். அவர் கூறுவது இதுவே: யாத் 15:3யாத் 6:3ஏசா 37:26யாத் 3:14-15எபி 11:10ஏசா 14:32ஏசா 43:1ஏசா 43:21 நீ என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உனக்குப் பதிலளிப்பேன். நீ அறியாததும், உன்னால் ஆராய்ந்து அறிய முடியாததுமான பெரிய காரியங்களையும் நான் உனக்குச் சொல்லித்தருவேன். எரே 29:12ஏசா 65:24எபே 3:20ஏசா 48:6சங் 91:15லூக் 11:9-10சங் 50:15உபா 4:29 இப்பட்டணத்திலுள்ள வீடுகளைக் குறித்தும், யூதாவின் அரண்மனைகளைக் குறித்தும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுவதாவது: இவற்றை நீங்கள் பாபிலோனியருடன் நடக்கும் சண்டையில் அவர்களுடைய வாளுக்கும், முற்றுகைக் கோட்டைகளுக்கும் எதிராகப் பயன்படுத்துவதற்காக உடைத்தீர்கள். எசேக் 4:2ஆப 1:10எரே 32:24எசேக் 21:22எசேக் 26:8 பாபிலோனியரோ உள்ளே வருவார்கள். இந்த வீடுகளும், அரச அரண்மனைகளும் இறந்துபோன மனித உடல்களினால் நிரப்பப்படும். அவர்களை என்னுடைய கோபத்தினாலும், கடுங்கோபத்தினாலும் நானே கொல்லுவேன். இப்பட்டணத்தின் எல்லாக் கொடுமைகளினிமித்தம் நான் என் முகத்தை அதைவிட்டு மறைத்துக்கொள்வேன். ஏசா 8:17எரே 21:10எரே 21:4-7எரே 32:5உபா 31:17ஏசா 1:15-16ஏசா 64:7எரே 37:9-10

ஆயினும், நான் இப்பட்டணத்திற்குச் சுகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் காலம் வரும். என்னுடைய மக்களை நான் குணப்படுத்தி, அவர்கள் நிறைவான சமாதானத்தையும், சத்தியத்தையும் அனுபவித்து மகிழும்படி செய்வேன். யோவா 10:10ஏசா 30:26தீத் 3:5-6சங் 67:2ஓசி 6:1ஏசா 58:8கலா 5:22-23ஏசா 66:12 நான் யூதாவையும், இஸ்ரயேலையும் சிறையிருப்பில் இருந்து மீட்டு, அவர்கள் முன்பிருந்த நிலைக்கு அவர்களைத் திரும்பவும் கட்டி எழுப்புவேன். ஆமோ 9:14-15ஏசா 1:26எரே 30:3எரே 29:14எரே 31:4எரே 32:44எரே 23:3எரே 24:6 அவர்கள் எனக்கு விரோதமாக செய்த எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர்களைத் தூய்மையாக்குவேன். அவர்கள் எனக்கு விரோதமாகச் செய்த எல்லா அக்கிரமங்களையும் பாவங்களையும் அவர்களுக்கு மன்னிப்பேன். சகரி 13:1மீகா 7:18-19எசேக் 36:25எரே 31:34சங் 51:2வெளி 1:5எசேக் 36:331 யோவா 1:7-9 நான் இப்பட்டணத்திற்குச் செய்த எல்லா நற்செயல்களையும் பூமியின் எல்லா தேசத்தார்களும் கேட்கும்போது, இந்தப் பட்டணம் எனக்குப் புகழையும், மகிழ்ச்சியையும், துதியையும், மகிமையையும் கொண்டுவரும். நான் அந்தப் பட்டணத்திற்குக் கொடுக்கும் நிறைவான செல்வத்தையும், சமாதானத்தையும் கண்டு அவர்கள் பிரமித்து நடுங்குவார்கள். ஏசா 60:5சங் 126:2-3செப்ப 3:17-20ஏசா 62:7எரே 13:11நெகே 6:16ஓசி 3:5ஏசா 62:12

யெகோவா கூறுவது இதுவே: மக்கள் இந்த இடத்தைக் குறித்து, இது மனிதரோ, மிருகங்களோ குடியிராத பாழிடம் என்பார்கள். அப்படியிருந்தும் மனிதரோ மிருகங்களோ குடியிராமல் பாழாய் கிடக்கின்ற, யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும், எரே 32:43எசேக் 37:11எரே 32:36 சந்தோஷத்தின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணமகளின் குரலும், மணமகனின் குரலும் கேட்கும். அத்துடன், யெகோவாவின் ஆலயத்திற்கு நன்றிக் காணிக்கைகளைக் கொண்டுவருபவர்களின் குரல்களும் கேட்கும்: 1 நாளாக 16:34சங் 106:1சங் 107:1சங் 107:22எபி 13:152 நாளாக 29:312 நாளாக 5:13ஏசா 51:11

“சேனைகளின் யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள்;

யெகோவா நல்லவர்;

அவருடைய அன்பு என்றும் நிலைத்து நிற்கும்” என்று சொல்வார்கள்.

நான், அவர்களுடைய நாட்டிற்கு முன்பு இருந்ததுபோல் செல்வத்தையெல்லாம் திரும்பவும் கொடுப்பேன் என்று யெகோவா கூறுகிறார்.

சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இந்த இடம் மனிதர்களோ, மிருகங்களோ இல்லாமல் பாழடைந்திருக்கும். ஆயினும் இதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களிலும் மீண்டும் தங்கள் மந்தையை மேய்ப்பதற்கான மேய்ச்சலிடங்கள் மேய்ப்பர்களுக்கு உண்டாயிருக்கும். ஏசா 65:10எசேக் 34:12-15எரே 31:24எரே 36:29எரே 51:62செப்ப 2:6-7எசேக் 36:8-11எரே 17:26 மேற்கு மலைச்சரிவிலுள்ள பட்டணங்களிலும், நெகேவ் பிரதேசத்திலுள்ள பட்டணங்களிலும், பென்யமீன் பிரதேசத்திலும், எருசலேமைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் மீண்டும் தங்களைக் கணக்கெடுப்பவனின் கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று யெகோவா கூறுகிறார். லேவி 27:32எரே 17:26லூக் 15:4யோவா 10:3-4

இஸ்ரயேல் குடும்பத்திற்கும், யூதா குடும்பத்திற்கும் நான் கொடுத்த கிருபையான வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும் நாட்கள் வருகின்றன என்று யெகோவா அறிவிக்கிறார். ஆகா 2:6-9எரே 23:51 நாளாக 17:13-142 கொரி 1:20ஆதி 49:10ஆமோ 9:11எசேக் 34:23-25ஆதி 22:18

“ ‘அந்த நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதின் சந்ததியிலிருந்து எரே 23:5-6ஏசா 11:1-5ஏசா 4:2சகரி 3:8ஏசா 53:2சங் 72:1-52 சாமு 23:2-3எசேக் 17:22-23

ஒரு நேர்மையான கிளை முளைக்கும்படி செய்வேன்.

அவர் நாட்டில் நீதியானதையும், நியாயமானதையும் செய்வார்.

அந்நாட்களில் யூதா காப்பாற்றப்படும். எரே 23:61 கொரி 1:30ஏசா 45:172 கொரி 5:21பிலி 3:9ரோம 11:262 பேது 1:1ஏசா 45:22

எருசலேம் பாதுகாப்புடன் வாழும்.

அது யெகோவாவே நமது நேர்மை

என்ற பெயரால் அழைக்கப்படும்.’

ஏனெனில் யெகோவா கூறுவது இதுவே: ‘இஸ்ரயேல் குடும்பத்தின் அரியணையில் இருக்க தாவீதுக்கு ஒருவனாவது இல்லாமல் போவதில்லை. 1 இராஜா 2:4லூக் 1:32-33சங் 89:29-371 நாளாக 17:11-141 இராஜா 8:25ஏசா 9:71 நாளாக 17:272 சாமு 7:14-16 லேவியரான ஆசாரியர்களில் எனக்கு முன்பாக நின்று தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், மற்ற பலிகளையும் தொடர்ந்து செலுத்துவதற்கு ஒருவனாவது இல்லாமல் போவதும் இல்லை’ ” என்கிறார். ஏசா 56:71 பேது 2:51 பேது 2:9உபா 18:1எசேக் 43:19-27எசேக் 44:9-11எசேக் 45:5எபி 13:15-16

யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது: யெகோவா சொல்வது இதுவே: “பகலும் இரவும் அவற்றிற்கென குறிக்கப்பட்ட காலத்தில் இனிமேல் வராதபடிக்கு, நான் அவைகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை உங்களால் உடைக்க முடியுமானால், ஆதி 8:22ஏசா 54:9-10சங் 89:37சங் 104:19-23எரே 31:35-37எரே 33:25-26 அப்பொழுது என் தாசனாகிய தாவீதுடனும், எனக்கு முன்பாக ஊழியம் செய்யும் லேவிய ஆசாரியருடனும் நான் செய்துகொண்ட உடன்படிக்கையையும் உடைக்க முடியும். தாவீதுக்கும் தன் அரியணையில் இருந்து ஆட்சிசெய்ய ஒரு சந்ததி இல்லாது போகும். சங் 89:342 நாளாக 7:182 நாளாக 21:72 சாமு 23:5லூக் 1:32-33லூக் 1:69-70மத் 24:35வெளி 5:10 நான் என் தாசனாகிய தாவீதின் வம்சத்தையும், எனக்கு முன்பாக ஊழியம் செய்கிற லேவியரையும் வானத்திலுள்ள எண்ணமுடியாத நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரையின் அளவற்ற மணலைப்போலவும் பெருகப்பண்ணுவேன் என்கிறார்” என்றான். ஆதி 22:17ஆதி 15:5எபி 11:12எசேக் 37:24-27ஏசா 66:21எரே 31:37எசேக் 44:15ஆதி 13:16

யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது: “ ‘யெகோவா தாம் தெரிந்துகொண்ட இரு அரசுகளையும் நிராகரித்துவிட்டார் என்று இந்த மக்கள் சொல்வதை நீ கவனிக்கவில்லையோ’? ஆகவே அவர்கள் என் மக்களை அவமதித்து, அவர்களை ஒரு நாடாக எண்ணாதிருக்கிறார்கள். நெகே 4:2-4சங் 44:13-14சங் 83:4எஸ்த 3:6-8எசேக் 25:3எசேக் 26:2எசேக் 36:2எசேக் 37:22 யெகோவா கூறுவது இதுவே: ‘பகலோடும், இரவோடும் நான் பண்ணின உடன்படிக்கையையும், வானத்திற்கும், பூமிக்கும் நான் விதித்த சட்டங்களையும் நான் நிலை நிறுத்தாமல் இருப்பேனானால், எரே 31:35-36சங் 74:16-17எரே 33:20சங் 104:19ஆதி 8:22ஆதி 9:9-17 யாக்கோபின் வம்சத்தையும், என் தாசனாகிய தாவீதையும் நான் நிராகரிப்பேன். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் சந்ததிகளை அரசாளுவதற்கு, தாவீதினுடைய மகன்களில் ஒருவனையும் நான் தெரிந்துகொள்ளவும் மாட்டேன். ஆனால் நானோ அவர்களுடைய செல்வங்கள் யாவற்றையும் திரும்பக் கொடுத்து, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்’ என்கிறார்” என்றான். எரே 31:37ஏசா 14:1ஓசி 2:23எசேக் 39:25ஓசி 1:7ஏசா 54:8எரே 31:20ஆதி 49:10