கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக; சங் 4:62 கொரி 4:6எண் 6:24-27சங் 4:1சங் 119:135சங் 31:16சங் 80:1-3சங் 80:19
அவர் தமது முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்வாராக.
இறைவனே, உமது வழிகள் பூமியிலும், தீத் 2:11சங் 98:2-3அப் 18:25ஏசா 52:10லூக் 2:30-31லூக் 3:6சங் 43:5அப் 13:10
உமது இரட்சிப்பு எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் அறியப்படும்.
இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; சங் 67:5சங் 74:21ஏசா 38:18-19சங் 119:175சங் 45:17சங் 142:7
எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
நீர் மக்கள் கூட்டத்தை நீதியாய் ஆட்சிசெய்து, சங் 98:9ரோம 15:10-11சங் 9:8ஏசா 42:10-12ஏசா 24:14-16சங் 138:4-5சங் 82:6உபா 32:43
பூமியின் நாடுகளுக்கு வழிகாட்டுவதால்,
மக்கள் மகிழ்ந்து களிப்புடன் பாடுவார்களாக.
இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; சங் 67:3மத் 6:9-10
எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
அப்பொழுது நிலம் விளைச்சலைக் கொடுக்கும்; லேவி 26:4யாத் 3:15எசேக் 34:26-27ஆதி 17:7ஓசி 2:21-22ஏசா 30:23-24எரே 31:33சங் 85:9-12
இறைவனாகிய எங்கள் இறைவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்; சங் 22:27ஏசா 45:22அப் 13:26அப் 13:47ஆதி 12:2-3மல்கி 1:11சங் 65:5வெளி 15:4
ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள்.