சங்கீதங்கள் 103

Psalms 103
சங்கீதம் 103

தாவீதின் சங்கீதம்.

என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி; சங் 146:1-2சங் 57:7-11யோவா 4:241 கொரி 14:15சங் 111:1சங் 103:22கொலோ 3:16சங் 99:3

என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைத் துதி.

என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி; ஏசா 63:7சங் 116:12சங் 105:5லூக் 17:15-18உபா 6:12உபா 32:18உபா 32:62 நாளாக 32:25

அவர் செய்த நன்மைகள் யாவற்றையும் மறவாதே.

அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கிறார்; யாத் 15:26ஏசா 53:5எரே 17:14சங் 30:2சங் 41:3-4சங் 147:3மாற் 2:10-11யாக் 5:15

உன்னுடைய நோய்களையெல்லாம் சுகமாக்குகிறார்.

அவர் உன் உயிரை மரணக் குழியிலிருந்து மீட்கிறார், சங் 56:13சங் 71:23சங் 103:12சங் 34:221 பேது 5:4சங் 8:5யாக் 1:12சங் 5:12

உடன்படிக்கையின் அன்பினாலும், இரக்கங்களினாலும் உன்னை முடிசூட்டுகிறார் 1.

அவர் உன் வாழ்வை நன்மையான காரியங்களால் திருப்தியாக்குகிறார்; ஏசா 40:31சங் 107:91 தீமோ 6:172 கொரி 4:16சங் 63:5சங் 104:28சங் 23:5சங் 65:4

அதினால் உன் இளமை கழுகின் இளமையைப்போல் புதுப்பிக்கப்படுகிறது.

ஒடுக்கப்படுகிற யாவருக்கும் யெகோவா சங் 12:5சங் 9:9சங் 146:7நீதி 14:31சங் 72:12உபா 24:14-15நீதி 22:22-23சங் 109:31

நியாயத்தையும் நீதியையும் செய்கிறார்.

அவர் தமது வழியை மோசேக்கு வெளிப்படுத்தினார், யாத் 33:13சங் 147:19சங் 78:11நெகே 9:14உபா 34:10சங் 77:20யோவா 5:45-47சங் 99:7

தமது செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படிச் செய்தார்.

யெகோவா கருணையும் கிருபையும் உள்ளவர், சங் 86:15யோவே 2:13யாத் 34:6-7சங் 145:8நாகூ 1:3சங் 86:5எபே 1:7-8யோனா 4:2

அவர் கோபிக்கிறதில் தாமதிப்பவரும்

உடன்படிக்கையின் அன்பு நிறைந்தவருமாய் இருக்கிறார்.

அவர் எப்பொழுதும் நம்மேல் குற்றம் சுமத்துகிறவரல்ல; ஏசா 57:16சங் 30:5எரே 3:5மீகா 7:18-19எரே 3:12

தமது கோபத்தை என்றென்றும் வைத்திருக்கவுமாட்டார்.

நமது பாவங்களுக்கு ஏற்றபடி அவர் நமக்கு செய்யவில்லை, எஸ்றா 9:13புலம் 3:22நெகே 9:31சங் 130:3தானி 9:18-19யோபு 11:6ஆப 3:2

நமது அநியாயங்களுக்குத் தக்கதாக நம்மைத் தண்டிப்பதும் இல்லை.

ஏனெனில் பூமிக்கு மேலாய் வானங்கள் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, சங் 57:10லூக் 1:50எபே 2:4-7சங் 103:17சங் 36:5நீதி 25:3ஏசா 55:9சங் 89:2

அவருக்குப் பயபக்தியாய் இருக்கிறவர்கள்மேல்

அவருடைய உடன்படிக்கையின் அன்பும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது.

மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ, ஏசா 43:251 யோவா 1:7மீகா 7:18ஏசா 38:17எரே 31:34எபி 10:22 சாமு 12:13எரே 50:20

அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய மீறுதல்களை நம்மைவிட்டு விலக்கிவிட்டார்.

தகப்பன் தன் பிள்ளைகளுக்குத் தயை காட்டுவதுபோல், லூக் 11:11-12எபி 12:5-11லூக் 15:21-22சங் 103:17எரே 31:20நீதி 3:12எரே 31:9மல்கி 4:2

யெகோவாவும் தம்மிடத்தில் பயபக்தியாய் இருக்கிறவர்களுக்கு தயை காட்டுகிறார்;

ஏனெனில் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவர் அறிவார்; பிரச 12:7யோபு 10:9சங் 78:38-39சங் 89:47ஆதி 3:19யோபு 7:21யோபு 7:5-7யோபு 13:25

நாம் தூசி என்பதையும் அவர் நினைவுகூருகிறார்.

மனிதர்களுடைய வாழ்க்கை புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; 1 பேது 1:24யாக் 1:10-11ஏசா 51:12ஏசா 28:1ஏசா 40:6-8யோபு 14:1-3ஏசா 28:4நாகூ 1:4

அவர்கள் வயல்வெளியின் பூவைப்போல் பூக்கிறார்கள்.

காற்று அதின்மேல் வீசுகிறது, அது உதிர்ந்து விழுகிறது; ஏசா 40:7யோபு 20:9யோபு 14:10ஆதி 5:24யோபு 7:6-10யோபு 27:20-21யோபு 8:18-19

அது இருந்த இடமும் அதை நினைவில் கொள்ளாது.

ஆனால் யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பு சங் 100:52 தீமோ 1:9எபே 2:4-7யாத் 20:6ரோம 1:17ஏசா 51:62 தெச 2:13-14எபே 1:4-8

அவர்மேல் பயபக்தியாய் இருக்கிறவர்களோடும்,

அவருடைய நீதி அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளோடும் என்றைக்கும் இருக்கிறது;

அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, உபா 7:9லூக் 1:6மத் 28:20சங் 132:12யாத் 24:8நீதி 3:1சங் 25:10அப் 24:16

அவருடைய ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிய கவனமாயிருப்பவர்கள் மேல்,

அவருடைய உடன்படிக்கையின் அன்பு நிலைத்திருக்கும்.

யெகோவா தமது சிங்காசனத்தை பரலோகத்தில் நிலைப்படுத்தியிருக்கிறார்; சங் 47:2பிலி 2:9-10சங் 9:71 பேது 3:22சங் 11:4தானி 4:34-35எபி 8:1ஏசா 66:1

அவருடைய அரசு அனைத்தையும் ஆளுகை செய்கிறது.

யெகோவாவினுடைய தூதர்களே, எபி 1:14சங் 148:2லூக் 1:19மத் 26:532இராஜா 19:35லூக் 2:13-14சங் 78:25யோவே 2:11

அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து,

அவர் கட்டளையிடுகிறதைச் செய்கிற பலவான்களே, அவரைத் துதியுங்கள்.

பரலோகத்தில் உள்ள யெகோவாவினுடைய சேனைகளே, 1 இராஜா 22:19நெகே 9:6லூக் 2:13சங் 104:4எபி 1:14யோசு 5:14வெளி 22:8-9ஆதி 32:2

அவருடைய திட்டத்தைச் செய்கிற அவருடைய பணியாளர்களே, அவரைத் துதியுங்கள்.

யெகோவா ஆளுகை செய்கிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய படைப்புகளே, ஏசா 49:13ஏசா 42:10-12சங் 145:10சங் 148:3-12சங் 150:6ஏசா 44:23ஏசா 43:20வெளி 5:12-14

அவரைத் துதியுங்கள்.

என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.