சங்கீதங்கள் 8

Psalms 8
சங்கீதம் 8

கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, சங் 8:9சங் 113:2-4சங் 57:5சங் 148:13யாத் 15:11சங் 57:10-11யாத் 34:5-7ஆப 3:3

பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு புகழ் உடையதாய் இருக்கிறது!

நீர் வானங்களுக்கு மேலாக

உமது மகிமையை வைத்திருக்கிறீர்.

உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க, மத் 21:162 கொரி 12:9-10ஏசா 40:311 கொரி 1:27சங் 46:10மத் 11:25லூக் 10:21சங் 44:16

உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின்

உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக

வல்லமையை உறுதிப்படுத்தினீர்.

உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் ஆதி 1:1சங் 33:6சங் 104:19சங் 111:2சங் 89:11ரோம 1:20யாத் 8:19லூக் 11:20

அவற்றில் நீர் பதித்து வைத்த

சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி

நான் சிந்திக்கும்போது,

மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும், யோபு 7:17சங் 144:3எபி 2:6-9சங் 146:3லூக் 1:682 நாளாக 6:18ஆதி 21:1சங் 80:17

மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்? 1

நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து, எபி 2:7எபி 2:9ஆதி 1:26-27எபி 2:16பிலி 2:7-11எபே 1:21சங் 103:4சங் 21:3-5

அவர்களை 2 மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.

உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்; ஆதி 1:28ஆதி 1:26மத் 28:18எபி 2:8எபே 1:22ஆதி 9:2சங் 110:11 பேது 3:22

அனைத்தையும்:

எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் ஆதி 2:20

காட்டு மிருகங்களையும்

ஆகாயத்துப் பறவைகளையும் ஆதி 1:20-25சங் 148:10யோபு 38:39யோபு 40:15

கடல் மீன்களையும்

கடற்பரப்பில் நீந்தும் அனைத்தையும் அவர்களுடைய பாதங்களுக்குக்கீழ் வைத்தீர்.

எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, சங் 8:1யோபு 11:7சங் 104:24உபா 33:26

பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது!