சங்கீதங்கள் 69

Psalms 69
சங்கீதம் 69

“லீலிமலர்” என்ற இசையில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

இறைவனே, என்னைக் காப்பாற்றும்; ஏசா 43:2சங் 69:14-15புலம் 3:54யோனா 2:3-5சங் 42:7சங் 69:2வெளி 12:15-16வெளி 17:15

வெள்ளம் என் கழுத்துமட்டும் வந்துவிட்டது.

கால் ஊன்ற முடியாத சேறு நிறைந்த ஆழங்களில் நான் அமிழ்ந்திருக்கிறேன்; சங் 40:2மத் 7:25எரே 38:6சங் 32:6சங் 88:6-7எரே 38:22ஆதி 7:17-23மத் 26:37-38

ஆழமான வெள்ளத்தில்

நான் அகப்பட்டு விட்டேன்;

வெள்ளம் என்னை மூடுகிறது.

சத்தமிட்டுக் கூப்பிட்டு நான் களைத்துப் போனேன்; சங் 6:6ஏசா 38:14சங் 119:123சங் 119:82உபா 28:32சங் 25:21எபி 5:7யோவா 19:28

என் தொண்டையும் வறண்டுபோயிற்று;

என் இறைவனைத் தேடி

என் கண்கள் மங்கிப்போயின.

காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறவர்கள் யோவா 15:25சங் 35:19சங் 109:3-5சங் 35:11-122 கொரி 5:21ஏசா 53:4-7சங் 38:19-20சங் 40:12

என் தலைமுடியைவிட அதிகமாய் இருக்கிறார்கள்;

அநேகர் காரணமில்லாமல் எனக்குப் பகைவர்களாய் இருக்கிறார்கள்;

அவர்கள் என்னை அழிக்கத் தேடுகிறார்கள்.

நான் திருடாததைத் திருப்பிக் கொடுக்க

கட்டாயப்படுத்தப்படுகிறேன்.

இறைவனே, என் புத்தியீனத்தை நீர் அறிந்திருக்கிறீர்; சங் 38:9எரே 16:17சங் 17:3சங் 19:12சங் 38:5சங் 44:20-21

என் குற்றம் உமக்கு மறைக்கப்பட்டிருக்கவில்லை.

சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவரே, சங் 25:3சங் 35:26லூக் 24:19-21ஏசா 49:23சங் 72:18சங் 7:72 சாமு 23:3அப் 13:23

உமக்காகக் காத்திருக்கிறவர்கள்

என் நிமித்தம் அவமானம் அடையாதிருப்பார்களாக;

இஸ்ரயேலின் இறைவனே,

உம்மைத் தேடுகிறவர்கள்

என் நிமித்தம் வெட்கம் அடையாதிருப்பார்களாக.

உமக்காக நான் நிந்தையை சகித்திருக்கிறேன்; ஏசா 50:6எரே 15:15சங் 44:22எபி 12:2ஏசா 53:3யோவா 15:21-24லூக் 23:11லூக் 23:35-37

வெட்கம் என் முகத்தை மூடியிருக்கிறது

நான் என் சகோதரர்களுக்கு வேறுநாட்டைச் சேர்ந்தவனாகவும் சங் 31:11யோவா 1:11யோவா 7:5மத் 10:35-36மத் 26:70-74மீகா 7:5-6சங் 38:111 சாமு 17:28

என் சொந்தத் தாயின் மகன்களுக்கு அறியாதவனாகவும் இருக்கிறேன்.

ஏனெனில் உமது ஆலயத்தைப் பற்றிய வைராக்கியம் என்னை எரித்துவிடுகிறது; ரோம 15:3யோவா 2:14-17சங் 119:139மாற் 11:15-171 இராஜா 19:10சங் 89:41சங் 89:50-511 நாளாக 29:3

உம்மை இகழ்கிறவர்களின் இகழ்ச்சி என்மேல் விழுகிறது.

நான் அழுது உபவாசித்தபோது, லூக் 7:33-34சங் 102:8-9சங் 109:24-25சங் 35:13

அவர்கள் என்னை நிந்தித்தார்கள்.

நான் துக்கவுடை உடுத்தும் போது, 1 இராஜா 9:7எரே 24:9யோபு 17:6உபா 28:37ஏசா 20:2ஏசா 22:12யோவே 1:8சங் 35:13-14

அவர்களுக்குப் பழமொழியானேன்.

நகர வாசலில் அமர்ந்திருக்கிறவர்கள் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள்; அப் 4:26-27சங் 35:15-16மத் 27:41-42தானி 5:2-4தானி 5:23உபா 16:18ஆதி 19:1யோபு 30:8-9

நான் குடிகாரரின் பாடலாக இருக்கிறேன்.

ஆனாலும் யெகோவாவே, உம்முடைய தயவின் காலத்திலே, 2 கொரி 6:2ஏசா 49:8சங் 55:16-17சங் 91:15ஏசா 55:6சங் 40:10-111 பேது 2:231 சாமு 25:8

நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;

இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம்

நிச்சயமான உமது மீட்பைத் தந்து பதிலளியும்.

சேற்றிலிருந்து என்னைத் தப்புவியும், சங் 144:7எரே 38:6-13சங் 109:21சங் 69:1-2புலம் 3:55லூக் 19:14லூக் 19:27மாற் 14:34-42

என்னை மூழ்கிப்போக விடாதேயும்;

என்னை வெறுக்கிறவர்களிடம் இருந்தும்

ஆழ்கடலினின்றும் என்னை விடுவியும்.

வெள்ளப்பெருக்கு என்னை மூடிக்கொள்ள விடாதேயும்; வெளி 12:15-16அப் 2:24ஏசா 43:1-2யோனா 2:2-7சங் 16:10அப் 2:31எண் 16:33-34சங் 124:4-5

ஆழங்கள் என்னை விழுங்க விடாதேயும்;

சவக்குழி என்மீது தன் வாயை மூடிக்கொள்ள விடாதேயும்.

யெகோவாவே, எனக்குப் பதில் தாரும், உமது உடன்படிக்கையின் அன்பு நல்லது; சங் 109:21சங் 25:16சங் 63:3மீகா 7:19சங் 106:45சங் 26:11சங் 69:13சங் 51:1

உமது பெரிதான இரக்கத்தால் என்னிடம் திரும்பும்.

உமது முகத்தை அடியேனுக்கு மறையாதிரும், சங் 27:9சங் 102:2மத் 27:46சங் 143:9சங் 70:1சங் 13:1சங் 44:24சங் 66:14

விரைவாய் எனக்குப் பதில் தாரும்; நான் துயரத்தில் இருக்கிறேன்.

என்னருகே வந்து என்னைத் தப்புவியும்; சங் 111:9சங் 22:1சங் 22:19சங் 49:15உபா 32:27எரே 14:8யோபு 6:23யோசு 7:9

என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.

என் நிந்தையும் என் அவமானமும் என் இழிவும் உமக்குத் தெரியும்; எபி 12:2ஏசா 53:31 பேது 2:23சங் 2:2-4சங் 38:9யோவா 8:49சங் 69:7-9சங் 22:6-7

என் பகைவர் எல்லோருமே உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.

நிந்தை என் உள்ளத்தை நொறுக்கியதால் ஏசா 63:5யோபு 16:2சங் 142:4மாற் 14:50மத் 26:562 தீமோ 4:16-17யோவா 12:27யோவா 16:32

நான் களைத்துப் போனேன்.

நான் அனுதாபத்தைத் தேடினேன், அது கிடைக்கவில்லை;

ஆறுதல்படுத்துகிறவர்களைத் தேடினேன், ஆனால் ஒருவரையும் நான் காணவில்லை.

அவர்கள் என் உணவில் கசப்பான நஞ்சைக் கொடுத்தார்கள்; மத் 27:34லூக் 23:36மாற் 15:23மத் 27:48மாற் 15:36யோவா 19:28-30எரே 9:15எரே 8:14

என் தாகத்துக்குக் குடிக்க எனக்கு காடியைக் கொடுத்தார்கள்.

அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும் 1 தெச 5:3ரோம 11:8-101 பேது 2:8ஏசா 8:14-15நீதி 1:32மல்கி 2:2

அவர்களுடைய செல்வம் அவர்களுக்குப் பொறியாயும் இருப்பதாக.

அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருளடையட்டும், தானி 5:6ரோம 11:10ஏசா 6:9-102 கொரி 3:14அப் 28:26-27ஏசா 21:3-4எரே 30:6உபா 28:65-67

அவர்களுடைய முதுகுகள் என்றென்றுமாக கூனிப்போகட்டும்.

உமது கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்; சங் 79:6ஓசி 5:10வெளி 16:1லூக் 21:221 தெச 2:15-16உபா 28:15-68உபா 29:18-28உபா 31:17

உமது சினம் அவர்களைப் பின்தொடர்வதாக.

அவர்களுடைய இருப்பிடங்கள் பாழடைவதாக; அப் 1:20மத் 23:38எரே 7:12-14ஏசா 6:11லூக் 13:351 இராஜா 9:8மத் 24:1-2ஏசா 5:1

அவர்களுடைய கூடாரங்களில் யாரும் குடியேறாதிருப்பார்களாக.

ஏனெனில் நீர் அடித்தவர்களை அவர்கள் துன்புறுத்தி, ஏசா 53:4மாற் 15:27-32சகரி 1:15ஏசா 53:101 தெச 2:152 நாளாக 28:9சகரி 13:7யோபு 19:21-22

நீர் காயப்படுத்தியவர்களின் வேதனையைக் குறித்து தூற்றிப் பேசுகிறார்கள்.

அவர்களுடைய அநீதியின்மேல் அநீதியை சுமத்தும்; ஏசா 26:10நெகே 4:5ரோம 1:28வெளி 22:10-112 தெச 2:11-122 தீமோ 4:14ரோம 10:2-3யாத் 8:15

அவர்கள் உமது இரட்சிப்பில் பங்குபெற இடமளியாதேயும்.

வாழ்வின் புத்தகத்திலிருந்து அவர்கள் நீக்கப்பட்டுப் போவார்களாக; யாத் 32:32-33லூக் 10:20பிலி 4:3எசேக் 13:9வெளி 13:8வெளி 20:12-15எபி 12:23வெளி 22:19

நீதிமான்களின் பெயர்ப்பட்டியலில் அவர்கள் சேர்க்கப்படாதிருப்பார்களாக.

நான் வருத்தத்திலும் துன்பத்திலும் இருக்கிறேன்; சங் 91:14-16சங் 40:17சங் 109:22சங் 70:52 கொரி 8:9எபே 1:21-22ஏசா 53:2-3பிலி 2:9-11

இறைவனே, உமது இரட்சிப்பு என்னைப் பாதுகாப்பதாக.

நான் இறைவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து, சங் 28:7சங் 118:28-29சங் 34:3சங் 40:1-3சங் 118:21சங் 50:14

நன்றி செலுத்தி அவரை மகிமைப்படுத்துவேன்.

காணிக்கையாகக் கொடுக்கும் எபி 13:15சங் 50:13-141 பேது 2:5எபே 5:19-20சங் 50:23ஓசி 14:2

கொம்பும், விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட,

மகிமைப்படுத்துவதே யெகோவாவுக்கு அதிக மகிழ்வைக் கொடுக்கும்.

இதைக்கண்டு ஏழைகள் மகிழ்ச்சியடைவார்கள்; யோவா 16:22சங் 22:26ஏசா 55:6-7ஏசா 61:1-3சங் 34:2சங் 25:9யோவா 20:20சங் 22:29

இறைவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழ்வடைவதாக!

யெகோவா தேவையுள்ளோருக்குச் செவிகொடுக்கிறார்; அப் 5:18-19சங் 68:6சகரி 9:11-12வெளி 2:10லூக் 4:18சங் 146:7எபே 3:1சங் 12:5

சிறைப்பட்ட தமது மக்களை அவர் இழிவாகக் கருதுவதில்லை.

வானமும் பூமியும் அவரைத் துதிக்கட்டும்; ஏசா 49:13சங் 150:6சங் 96:11ஏசா 55:12ஏசா 44:22-23சங் 148:1-14சங் 98:7-8வெளி 7:11-13

கடலும் அவற்றில் வாழும் அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்.

இறைவன் சீயோனை மீட்டு, ஏசா 44:26ஏசா 46:13சங் 51:18ஒபதி 1:17சங் 102:16சங் 48:11-13எசேக் 36:35-36வெளி 14:1

யூதாவின் பட்டணங்களை மீண்டும் கட்டுவார்;

அப்பொழுது அவருடைய மக்கள் அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.

அவருடைய பணியாளரின் பிள்ளைகள் அதை உரிமைச்சொத்தாகப் பெறுவார்கள்; சங் 102:28அப் 2:39யாக் 1:12சங் 37:29ஏசா 61:9யோவா 14:23யாக் 2:5சங் 91:14

அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அங்கே குடியிருப்பார்கள்.