தாவீதின் மன்றாட்டு.
யெகோவாவே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும், சங் 31:2தானி 9:18சங் 40:17மத் 5:3சங் 34:6யாக் 1:9-10யாக் 2:5லூக் 4:18
ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன்.
நான் உமக்கு உண்மையாயிருப்பதால் என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; சங் 25:2சங் 4:3ஏசா 26:3-4யோவா 17:11சங் 119:94சங் 13:5சங் 18:19சங் 31:1
உம்மில் நம்பிக்கை வைத்திருக்கும் உமது அடியேனைக் காப்பாற்றும்.
நீரே என் இறைவன்; என்மேல் இரக்கமாய் இரும், யெகோவாவே, சங் 57:1சங் 88:9எபே 6:18சங் 25:5லூக் 2:37சங் 4:1சங் 55:17சங் 56:1
நான் நாளெல்லாம் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
யெகோவாவே உமது அடியேனுக்கு மகிழ்ச்சியைத் தாரும்; சங் 143:8சங் 25:1ஏசா 66:13-14சங் 51:12ஏசா 61:3சங் 62:8ஏசா 65:18
ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மேல் வைக்கிறேன்.
யெகோவாவே, நீர் மன்னிக்கிறவரும் நல்லவருமாய் இருக்கிறீர்; சங் 145:8-9யோவே 2:13யாத் 34:6சங் 103:8நெகே 9:17அப் 2:211 யோவா 4:8-9எசேக் 36:37
உம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் அன்பு மிகுந்தவராயும் இருக்கிறீர்.
யெகோவாவே என் மன்றாட்டுக்குச் செவிகொடும்; சங் 5:1-2சங் 17:1சங் 130:2சங் 55:1
இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும்.
என் துன்ப நாளிலே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; யோனா 2:2சங் 34:4-6சங் 17:6சங் 50:15எபி 5:7ஏசா 26:16புலம் 3:55-57சங் 142:1
ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுப்பீர்.
யெகோவாவே, தெய்வங்களில் உம்மைப் போன்றவர் ஒருவரும் இல்லை; யாத் 15:11உபா 3:24சங் 89:6தானி 3:29ஏசா 40:25சங் 89:8எரே 10:16உபா 4:34
உமது செயல்களை யாராலும் செய்யமுடியாது.
யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும் வெளி 15:4ஏசா 66:23சங் 66:4ஏசா 2:2-4சங் 102:15வெளி 11:15ரோம 15:9ஏசா 11:9
உமக்கு முன்பாக வந்து வழிபடுவார்கள்;
அவர்கள் உமது பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவார்கள்.
நீர் பெரியவராய் இருக்கிறீர், மகத்துவமான செயல்களைச் செய்கிறீர்; ஏசா 37:16மாற் 12:29சங் 72:181 கொரி 8:4உபா 32:39யாத் 15:11ஏசா 37:20ஏசா 44:6-8
நீர் ஒருவரே இறைவன்.
யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; எரே 32:38-39சங் 25:4-5சங் 5:8சங் 119:33சங் 143:8-10யோபு 34:32சங் 25:12சங் 26:3
அதினால் நான் உமது உண்மையைச் சார்ந்திருப்பேன்;
நான் உமது பெயரில் பயந்து நடக்கும்படி
ஒரே சிந்தையுள்ள இருதயத்தை எனக்குத் தாரும்.
என் இறைவனாகிய யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உபா 6:5சங் 146:1-2வெளி 19:5-6ரோம 15:61 கொரி 10:31ஏசா 12:11 கொரி 6:20நீதி 3:5-6
உமது பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன்.
நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; சங் 103:8-12சங் 116:8சங் 57:101 தெச 1:10லூக் 1:58சங் 56:13யோபு 33:28சங் 30:3
நீர் என்னை ஆழங்களிலிருந்தும்
பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர்.
இறைவனே, அகங்காரிகள் என்னைத் தாக்குகிறார்கள்; சங் 54:3மத் 27:1-2மத் 26:3-4சங் 14:4சங் 36:12 சாமு 15:1-122 சாமு 16:202 சாமு 17:14
கொடூரமான கூட்டத்தார் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர்,
அவர்கள் உம்மை மதிக்காதவர்கள்.
ஆனாலும் யெகோவாவே, நீரோ கருணையும் கிருபையுமுள்ள இறைவனாய் இருக்கிறீர்; எபே 2:4-7சங் 103:8சங் 130:7எபே 1:7சங் 145:8சங் 86:5யோவே 2:13நெகே 9:17
கோபப்படுவதில் தாமதிப்பவராயும், அன்பும் உண்மையும் நிறைந்தவராயும் இருக்கிறீர்.
என் பக்கமாய்த் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்; எபே 6:10பிலி 4:13ஏசா 40:29-31சங் 116:16சங் 25:16கொலோ 1:11எபே 3:16சங் 138:3
உமது அடியேனுக்கு உமது பெலத்தைக் காண்பியும்;
என்னைக் காப்பாற்றும்,
ஏனெனில் என் தாயைப்போலவே நானும் உமக்கு சேவை செய்கிறேன்.
என் பகைவர் கண்டு வெட்கப்படும்படியாக, சங் 41:10-11நியாயாதி 6:17சங் 71:20-21சங் 71:9-13மீகா 7:8-10சங் 40:11 கொரி 5:5சங் 109:29
உமது நன்மைக்கான ஓர் அடையாளத்தை எனக்குத் தாரும்;
ஏனெனில் யெகோவாவே, நீர் எனக்கு உதவிசெய்து, என்னைத் தேற்றியிருக்கிறீர்.