சங்கீதங்கள் 41

Psalms 41
சங்கீதம் 41

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

ஏழைகள்மீது கவனம் வைப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; நீதி 19:17நீதி 14:212 கொரி 9:8-14அப் 20:35மத் 25:34-39சங் 37:39-40யாக் 2:13எபி 6:10

துன்ப நாளில் யெகோவா அவர்களை விடுவிப்பார்.

யெகோவா அவர்களைக் காப்பாற்றி அவர்களுடைய உயிரைப் பாதுகாப்பார்; எரே 45:4-5சங் 27:121 தீமோ 4:8சங் 33:19சங் 37:32-33சங் 128:1-6சங் 140:8-9சங் 37:22

அவர்கள் பூமியில் ஆசீர்வாதமாக இருப்பார்கள்;

யெகோவா அவர்களுடைய பகைவர்களின் கைக்கு அவர்களை அவனை ஒப்புவிக்கமாட்டார்.

அவர்களுடைய வியாதிப்படுக்கையில் யெகோவா அவர்களைத் தாங்குவார்; 2இராஜா 20:5-6பிலி 2:26-27சங் 73:262 கொரி 4:16-172இராஜா 1:162இராஜா 1:6

படுக்கையில் வியாதியாய் இருக்கும் அவர்களுக்குச் சுகத்தைக் கொடுப்பார்.

நான், “யெகோவாவே என்மேல் இரக்கமாயிரும்; சங் 103:3யாக் 5:15-16ஓசி 6:12 நாளாக 30:18-20சங் 147:3சங் 32:5சங் 6:2-4சங் 51:1-4

உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்திருக்கிறேன்,

என்னைக் குணமாக்கும்” என்று சொன்னேன்.

என் பகைவர்கள் என்னைக்குறித்து தீமையானதைப் பேசி, நீதி 10:7சங் 102:8சங் 38:12யோபு 20:7யோபு 18:17சங் 22:6-8

“அவன் எப்பொழுது சாவான்? அவன் பெயர் எப்பொழுது அழியும்” என்று சொல்கிறார்கள்.

அவர்களில் ஒருவன் என்னைப் பார்க்க வருகையில், சங் 12:2லூக் 11:53-54நீதி 26:24-26லூக் 20:20-232 கொரி 11:26தானி 11:27எரே 20:10மீகா 7:5-7

தன் உள்ளத்தில் அவதூறை சேகரித்து உதட்டில் வஞ்சனையாகப் பேசுகிறான்;

பின்பு அவன் வெளியே போய் அதைப் பரப்புகிறான்.

என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு விரோதமாய் ஒன்றுகூடி, முணுமுணுத்து, நீதி 16:28மத் 22:15மத் 26:3-4சங் 56:5-62 கொரி 12:20நீதி 26:20சங் 31:13ரோம 1:29

அவர்கள் எனக்குப் பெருங்கேடு நினைத்து சொன்னதாவது:

“ஒரு கொடியநோய் அவனைப் பிடித்துக்கொண்டது; லூக் 13:16மத் 27:41-46சங் 71:11யோபு 2:7-8மத் 27:63-64சங் 3:2சங் 38:3-7

அவன் படுத்திருக்கிற இடத்தைவிட்டு ஒருபோதும் எழுந்திருக்கமாட்டான்.”

நான் நம்பியிருந்தவனும் யோவா 13:18சங் 55:12-14மத் 26:23யோவா 13:26-27சங் 55:20-22எரே 20:10யோபு 19:192 சாமு 15:12

அப்பத்தை என்னுடன் பகிர்ந்து சாப்பிட்டவனுமான,

என் நெருங்கிய நண்பன் தன் குதிகாலை

எனக்கெதிராகத் தூக்கினான்.

ஆனாலும் யெகோவாவே, நீர் என்மேல் இரக்கமாயிரும்; லூக் 19:27சங் 109:6-21சங் 18:37-42சங் 21:8-10சங் 3:3சங் 57:1சங் 69:22-28

நான் அவர்களுக்குப் பதிற்செய்யும்படி என்னை எழுப்பும்.

என் பகைவன் என்னை மேற்கொள்ளாதபடியால், கொலோ 2:15சங் 124:6எரே 20:13சங் 147:11சங் 25:2சங் 31:8சங் 86:17சங் 13:4

நீர் என்னில் பிரியமாய் இருக்கிறீரென்று நான் அறிகிறேன்.

நீர் என் உத்தமத்தில் என்னை ஆதரித்து, யோபு 36:7சங் 73:23-24யோவா 17:24சங் 34:15சங் 37:17சங் 25:21சங் 63:8சங் 16:11

உமது சமுகத்தில் எப்போதும் என்னை வைத்துக்கொள்கிறீர்.

இஸ்ரயேலின் இறைவனான யெகோவாவுக்கு சங் 72:18-19எபே 1:3வெளி 4:8வெளி 5:9-14சங் 89:52சங் 106:48சங் 150:6வெளி 7:12

நித்திய நித்தியமாய் துதி உண்டாகட்டும்.

ஆமென், ஆமென்.