சங்கீதங்கள் 128

Psalms 128
சங்கீதம் 128

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும் சங் 112:1சங் 119:1சங் 103:13லூக் 1:50அப் 9:31சங் 1:1-3சங் 147:11சங் 127:1

அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்; ஏசா 3:10ஏசா 62:8ஏசா 65:21-23பிரச 5:18-19உபா 28:4உபா 28:111 கொரி 15:58பிரச 8:12

ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும்.

உன் மனைவி உன் வீட்டிற்குள் எசேக் 19:10சங் 52:8ஆதி 49:22நீதி 5:15-18ரோம 11:24எரே 11:16ஓசி 14:6-7சங் 127:5

கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்;

ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல்,

உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள்.

ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன்

இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான்.

யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக; சங் 134:3சங் 20:2ஏசா 33:20சங் 118:26சங் 122:6எபே 1:3ஏசா 2:3சங் 135:21

உன் வாழ்நாட்களெல்லாம்

எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக.

நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக; யோபு 42:16ஆதி 50:23ஏசா 66:12நீதி 17:6சங் 125:5கலா 1:16

இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக.