சங்கீதங்கள் 55

Psalms 55
சங்கீதம் 55

கம்பியிசைக் கருவிகளுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்குப் ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்.

இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; 1 பேது 3:12சங் 86:6சங் 61:1சங் 27:9சங் 64:1சங் 80:1சங் 143:7சங் 54:1-2

என் வேண்டுதலை அசட்டை பண்ணாதிரும்.

எனக்குச் செவிகொடுத்து, எனக்குப் பதில் தாரும்; ஏசா 38:14சங் 66:19சங் 77:3ஏசா 59:11சங் 64:1சங் 102:9-10சங் 38:6சங் 43:2

என் சிந்தனைகள் என்னைக் கலங்கப்பண்ணுகின்றன; நான் மிகவும் கலக்கமடைந்துள்ளேன்.

எதிரியின் வார்த்தையினாலும் 2 சாமு 16:7-8சங் 35:11சங் 27:122 சாமு 15:32 சாமு 19:19புலம் 3:34-36மத் 26:59சங் 12:5

கொடியவர்களின் அழுத்தத்தினாலும் கலக்கமடைந்துள்ளேன்;

அவர்கள் என்மேல் வேதனையைக் கொண்டுவந்து,

கோபத்தில் என்னை பகைக்கிறார்கள்.

என் இருதயம் எனக்குள்ளே கடுந்துயரப்படுகிறது; சங் 116:3மாற் 14:33-342 கொரி 1:8-10எபி 5:7சங் 18:4-5ஏசா 38:10-13மத் 26:37-38சங் 102:3-5

மரணபயம் என்னைத் தாக்குகின்றன.

பயமும் நடுக்கமும் என்னைப் பற்றிக்கொண்டன; யோபு 21:6சங் 119:120லூக் 22:442 சாமு 15:14எசேக் 7:18ஏசா 21:4யோபு 23:15-16யோபு 6:4

பயங்கரம் என்னை மூடிக்கொண்டது.

நானோ, “புறாவின் சிறகுகள் எனக்கு இருந்திருந்தால்! சங் 11:1வெளி 12:14சங் 139:9

பறந்துபோய் இளைப்பாறுவேன்.

நான் தொலைவில் தப்பிப்போய் எரே 9:22 சாமு 15:14எரே 37:122 சாமு 17:21-22நீதி 6:4-51 சாமு 27:1

பாலைவனத்தில் தங்குவேன்.

கடும் காற்றுக்கும் புயலுக்கும் ஏசா 4:6மத் 7:25-27சங் 18:4ஏசா 17:12-13

தப்பிக்கும்படி விரைந்து செல்வேன்” என்றேன்.

யெகோவாவே, அவர்களுக்கு குழப்பத்தை உண்டுபண்ணி, எரே 6:72 சாமு 15:31அப் 23:6-10ஆதி 11:7-92 சாமு 17:1-14எரே 23:14யோவா 7:45-53மத் 23:37-38

அவர்களுடைய பேச்சிலும் பிளவுண்டாக்கும்;

ஏனெனில், நான் வன்முறையையும் போராட்டத்தையுமே பட்டணத்தில் காண்கிறேன்.

அவர்கள் இரவும் பகலும் பட்டண மதில்களின்மேல் பதுங்கித் திரிகிறார்கள்; சங் 59:14-15ஏசா 59:6-15யோவா 18:28அப் 9:24எசேக் 9:4சங் 59:61 சாமு 19:112 சாமு 16:21-22

கொடுமையும் பிரச்சனையும் அதனுள்ளே காணப்படுகின்றன.

பேரழிவு பட்டணத்தின் நடுவே இருக்கிறது; ஏசா 59:7சங் 5:9அப் 7:51-52எரே 5:26-27சங் 10:7எசேக் 22:1-12எரே 9:3-5மத் 26:4

அச்சுறுத்தல்களும் பொய்களும் அதின் வீதிகளைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.

என்னை நிந்திப்பவன் என் பகைவனல்ல; சங் 41:9யோவா 13:18மத் 26:21-23சங் 35:26யோவா 18:2-3ஏசா 10:15சங் 38:16

அப்படியிருந்தால், அதை நான் சகித்துக்கொள்ளலாம்;

எனக்கு விரோதமாக ஒரு எதிரி எழும்பியிருந்தால்,

நான் அவனிடமிருந்து மறைந்துகொள்வேன்.

ஆனால் எதிர்த்தவன் என்னைப்போன்ற மனிதனும், மீகா 7:52 சாமு 15:12எரே 9:4மாற் 14:44-452 சாமு 16:23லூக் 22:47-48சங் 41:9லூக் 22:21

எனக்கு அறிமுகமான, என் நெருங்கிய நண்பனுமே.

நாங்கள் ஒன்றுகூடி சங் 42:4எசேக் 33:31ஏசா 2:3சங் 122:1

இனிய ஆலோசனைபண்ணி,

மக்கள் கூட்டத்துடன்

இறைவனின் ஆலயத்திற்குச் சென்றோம்.

மரணம் என் எதிரிகளைத் திடீரெனப் பற்றிக்கொள்ளட்டும்; சங் 59:13அப் 1:18-20சங் 109:6-20சங் 64:7சங் 9:172 சாமு 18:14அப் 1:25மத் 26:24

தீமை அவர்கள் மத்தியில் குடியிருப்பதால்,

அவர்கள் உயிருடன் பாதாளத்தில் இறங்குவார்களாக.

நானோ இறைவனை நோக்கிக் கூப்பிடுகிறேன்; சங் 50:15லூக் 6:11-12சங் 73:28சங் 91:15சங் 109:4

யெகோவா என்னைக் காப்பாற்றுவார்.

மாலையிலும் காலையிலும் 1 தெச 5:17எபே 6:18சங் 141:2அப் 3:1எபி 5:7அப் 10:9தானி 6:10மாற் 1:35

மத்தியான வேளையிலும் நான் துயரத்தால் முறையிடுவேன்;

அவர் என் குரலைக் கேட்பார்.

பலர் என்னை எதிர்த்தபோதும், 1 யோவா 4:4மத் 26:53சங் 3:6-7சங் 57:32 நாளாக 32:7-82 சாமு 22:1சங் 27:1-32இராஜா 6:16

எனக்கு விரோதமாய் நடத்தப்படும் யுத்தத்தில் இருந்து

அவர் என்னைத் தீங்கின்றி மீட்டுக்கொண்டார்.

சிங்காசனத்தில் என்றென்றும் அமர்ந்திருக்கும் இறைவன் கேட்டு, உபா 33:27செப்ப 1:12பிரச 8:11கொலோ 1:17எரே 48:11மீகா 5:2வெளி 6:10-111 தெச 2:15-16

அவர்களைத் தாழ்த்திவிடுவார்;

அவர்கள் இறைவனுக்குப் பயப்படவும் இல்லை,

ஒருபோதும் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளவுமில்லை.

என் தோழன் தனது நண்பர்களைத் தாக்குகிறான்; அப் 12:1சங் 7:4சங் 89:34சங் 109:5சங் 120:6-71 சாமு 22:171 சாமு 24:10பிரச 8:2

அவன் தன் உடன்படிக்கையையும் மீறுகிறான்.

அவனுடைய பேச்சு வெண்ணெயைப் போல் மிருதுவானது, சங் 57:4நீதி 5:3-4நீதி 26:28சங் 28:3லூக் 20:20-21நீதி 26:24-26சங் 12:2சங் 64:3

ஆனாலும் அவனுடைய இருதயத்தில் யுத்தம் மறைந்திருக்கிறது;

அவனுடைய வார்த்தைகள் எண்ணெயைப் பார்க்கிலும் மென்மையானவை,

ஆனாலும் அவை கூர்மையான வாள்களைப்போல் இருக்கின்றன.

உங்கள் கவலைகளை யெகோவாமேல் வைத்து விடுங்கள்; 1 பேது 5:7சங் 37:5பிலி 4:6-7மத் 6:25சங் 62:6சங் 16:8சங் 27:14சங் 37:24

அவர் உங்களைத் தாங்குவார்;

நீதிமான்களை அவர்

ஒருபோதும் விழுந்துபோக விடமாட்டார்.

ஆனால் இறைவனே, நீரோ கொடுமையானவனை நீதி 10:27சங் 5:6யோபு 15:32சங் 7:15-16சங் 73:18பிரச 7:17ஏசா 38:17மத் 27:4-5

அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்;

இரத்த வெறியரும் ஏமாற்றுக்காரர்களும்

தங்கள் ஆயுளின் பாதிநாட்கள்கூட உயிர் வாழமாட்டார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில், நான் உம்மிடத்திலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன்.