சங்கீதங்கள் 30

Psalms 30
சங்கீதம் 30

ஆலய பிரதிஷ்டையின் பாட்டாகிய தாவீதின் சங்கீதம்.

யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன், சங் 25:2தானி 4:37சங் 35:19சங் 27:62 சாமு 5:11சங் 13:4உபா 20:5புலம் 2:15

ஏனெனில், ஆழங்களிலிருந்து நீர் என்னை வெளியே தூக்கியெடுத்தீர்;

என் பகைவர் என்னைப் பழித்து மகிழ நீர் இடமளிக்கவில்லை.

என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; 2இராஜா 20:5சங் 103:3-4சங் 147:3சங் 6:2யாத் 15:26ஆதி 20:17யாக் 5:14-15சங் 88:13

நீர் என்னை சுகமாக்கினீர்.

யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்; சங் 16:10சங் 86:13ஏசா 38:17-18யோனா 2:4-6சங் 28:1சங் 40:1-2சங் 71:20யோபு 33:19-22

குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர்.

யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குத் துதி பாடுங்கள்; சங் 97:121 நாளாக 16:4சங் 132:9சங் 148:14வெளி 4:8யாத் 15:11ஏசா 6:3சங் 103:20-22

அவருடைய பரிசுத்தத்தை நினைத்து நன்றி கூறுங்கள்.

அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே, ஏசா 54:7-82 கொரி 4:17சங் 126:5-6மத் 5:4யோவா 16:20-22ஏசா 26:20சங் 103:9சங் 16:11

ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்;

இரவிலே அழுகை இருந்தாலும்,

காலையிலோ மகிழ்ச்சி வரும்.

நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது, 2 கொரி 12:7லூக் 12:19சங் 119:117தானி 4:30சங் 16:8ஏசா 47:7ஏசா 56:12யோபு 29:18-20

“நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்” என்று சொன்னேன்.

யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது, சங் 104:29சங் 143:7சங் 30:51 நாளாக 17:26-27உபா 31:17ஏசா 38:17யோபு 10:12சங் 40:2

என்னுடைய மலையை 1 உறுதியாய் நிற்கப்பண்ணினீர்;

ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது,

நான் மனம்சோர்ந்து போனேன்.

யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்; பிலி 4:6-7சங் 34:6சங் 130:1-2சங் 77:1-21 கொரி 12:8-9

யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன்.

“நான் அழிந்து சங் 6:5ஏசா 38:18சங் 115:17-18சங் 118:17சங் 88:10-12பிரச 9:10

குழிக்குள் போவதால் என்ன பயன்?

தூசி உம்மைத் துதிக்குமோ?

அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ?

யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும். சங் 54:4சங் 143:1சங் 143:7-9சங் 28:7சங் 27:7சங் 51:1-2

யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.”

என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்; எரே 31:4பிரச 3:4எரே 31:13-142 நாளாக 20:12ஏசா 25:8சங் 149:3சங் 150:4சங் 30:5

நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு,

மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர்.

ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்; சங் 145:2லூக் 19:40சங் 146:1-2சங் 16:9சங் 44:8அப் 4:20வெளி 4:8-9சங் 13:6

என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.