தாவீது தங்களிடம் ஒளிந்திருக்கிறான் என்று சீப்பூரார் சவுலுக்கு சொன்னபோது, கம்பியிசைக் கருவிகளுடன் தாவீது பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம்.
இறைவனே, உமது பெயரால் என்னைக் காப்பாற்றும், நீதி 18:101 சாமு 26:1அப் 4:12சங் 20:1சங் 79:9சங் 48:10மத் 1:21யாத் 3:14-15
உமது வல்லமையால் எனக்கு நியாயம் செய்யும்.
இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; சங் 130:2சங் 13:3சங் 143:7சங் 5:1-3சங் 55:1-2
என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
தற்பெருமையுள்ளவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்; சங் 86:14சங் 36:1யோவா 16:3சங் 53:4யோபு 19:13-15சங் 16:8சங் 22:16சங் 40:14
இறைவனை மதியாத, ஈவு இரக்கமற்ற மனிதர்
என் உயிரை வாங்கத் தேடுகிறார்கள்.
நிச்சயமாக இறைவனே எனக்கு உதவுபவர்; எபி 13:6சங் 118:6-7ஏசா 41:10ரோம 8:31சங் 118:13ஏசா 50:7-91 நாளாக 12:18ஏசா 42:1
யெகோவாவே என்னை ஆதரிக்கிறவர்.
எனக்குத் தீமை செய்கிறவர்கள் மேலேயே அவர்களுடைய தீமை திரும்பட்டும்; சங் 143:12சங் 89:49சங் 31:23சங் 94:232 தீமோ 4:14சங் 137:8வெளி 18:6சங் 27:11
உமது உண்மையின் நிமித்தம் அவர்களை தண்டித்துவிடும்.
நான் உமக்கு சுயவிருப்பக் காணிக்கையைப் பலியிடுவேன்; சங் 52:9சங் 140:13சங் 147:1சங் 7:17உபா 12:6-7சங் 107:22சங் 116:17சங் 21:13
யெகோவாவே, நான் உமது பெயரைத் துதிப்பேன், ஏனெனில் அது நல்லது.
நீர் என்னை என்னுடைய எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்தீர்; சங் 59:10சங் 112:8சங் 92:11சங் 118:72 தீமோ 4:18சங் 37:34சங் 34:19சங் 34:6
என் கண்கள் என் எதிரிகளின் வீழ்ச்சியைப் பார்த்தன.