நான் யெகோவாவிடம் அன்பாயிருக்கிறேன், ஏனெனில் அவர் என் குரலைக் கேட்டார்; 1 யோவா 4:19சங் 66:19-201 யோவா 5:2-3யோவா 16:24சங் 34:3-4மாற் 12:33சங் 69:33சங் 40:1
இரக்கத்திற்காக நான் கதறியதை அவர் கேட்டார்.
அவர் எனக்குச் செவிகொடுத்தபடியால், சங் 145:18-19சங் 40:1பிலி 4:6சங் 55:16-17லூக் 18:1சங் 31:2சங் 86:6-7கொலோ 4:2
நான் என் வாழ்நாளெல்லாம் அவரை வழிபடுவேன்.
மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன; சங் 18:4-6சங் 38:6சங் 32:3-4சங் 88:6-7லூக் 22:44எபி 5:7யோனா 2:2-3ஏசா 53:3-4
பாதாளத்தின் வேதனைகள் என்மீது வந்தன;
கஷ்டமும் கவலையும் என்னை மேற்கொண்டன.
அப்பொழுது நான் யெகோவாவின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டுச் சொன்னதாவது: சங் 118:5சங் 22:20லூக் 23:42-43சங் 143:6-9லூக் 18:13சங் 142:4-6சங் 30:7-8சங் 50:15
“யெகோவாவே, என்னைக் காப்பாற்றும்!”
யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர்; சங் 103:8சங் 145:17சங் 119:137எஸ்றா 9:151 தீமோ 1:14எபே 1:6-8நெகே 9:8சங் 86:15
நம்முடைய இறைவன் கருணை நிறைந்தவர்.
யெகோவா கற்றுக்கொள்ளவிருக்கும் இருதயமுள்ளவர்களைப் பாதுகாக்கிறார்; மத் 11:25சங் 142:6சங் 19:7சங் 79:8சங் 25:21ஏசா 35:8சங் 106:432 கொரி 1:12
நான் தாழ்த்தப்பட்டபோது, அவர் என்னை இரட்சித்தார்.
என் ஆத்துமாவே, மீண்டும் நீ இளைப்பாறு; சங் 13:6மத் 11:28-29எரே 30:10எரே 6:16சங் 119:17சங் 95:11எபி 4:8-10ஓசி 2:7
யெகோவா உனக்கு எவ்வளவு நல்லவராய் இருக்கிறார்.
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து விடுவித்தீர்; சங் 56:13வெளி 21:4சங் 86:13வெளி 7:17ஏசா 25:8சங் 37:24ஏசா 38:5சங் 49:15
என் கண்களைக் கண்ணீர் சிந்துவதிலிருந்தும்,
என் கால்களை இடறுவதிலிருந்தும் விடுவித்தீர்.
நான் உயிருள்ளோரின் நாட்டிலே சங் 27:13லூக் 1:751 இராஜா 2:41 இராஜா 8:251 இராஜா 9:4ஆதி 17:1ஏசா 53:8லூக் 1:6
யெகோவாவுக்கு முன்பாக நடப்பேன்.
“நான் மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன்” என்று நான் சொன்னபோதிலும், 2 கொரி 4:13எபி 11:12 பேது 1:21நீதி 21:282 பேது 1:16எண் 14:6-9
நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்.
ஆனாலும் என் மனச்சோர்வினாலே, எரே 9:4-5ரோம 3:4சங் 31:22சங் 62:91 சாமு 27:12இராஜா 4:16
“எல்லா மனிதரும் பொய்யர்” என்று நான் சொன்னேன்.
யெகோவா எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும் பதிலாக, 1 கொரி 6:20சங் 103:22 கொரி 5:14-15ரோம 12:12 நாளாக 32:25சங் 51:12-14ஏசா 6:5-8
நான் அவருக்கு எதைத்தான் கொடுப்பேன்?
நான் இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திக்கொண்டு 1 சங் 16:5சங் 105:1சங் 116:2சங் 80:181 கொரி 10:21சங் 116:171 கொரி 10:161 கொரி 11:25-27
யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன்.
நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக் கடன்களை சங் 22:25யோனா 2:9சங் 116:18சங் 50:14சங் 66:13-15மத் 5:33சங் 56:12யோனா 1:16
அவருடைய மக்கள் எல்லாருக்கும் முன்பாக நிறைவேற்றுவேன்.
யெகோவாவினுடைய பரிசுத்தவான்களின் மரணம் சங் 72:141 சாமு 25:29லூக் 16:22சங் 37:32-33வெளி 14:3வெளி 1:18யோபு 5:26
அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
யெகோவாவே, உண்மையாகவே நான் உமது பணியாளனாய் இருக்கிறேன்; சங் 86:16சங் 143:12சங் 119:125யாக் 1:12 நாளாக 33:11-13அப் 27:23ஏசா 61:1யோவா 12:26
நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாய் இருக்கிறேன்;
என்னைக் கட்டியிருந்த சங்கிலியிலிருந்து நீர் என்னை விடுதலையாக்கினீர்.
நான் உமக்கு ஒரு நன்றிக் காணிக்கையைப் பலியிட்டு, சங் 50:14லேவி 7:12சங் 107:22எபி 13:15சங் 116:13அப் 2:42
யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன்.
நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக்கடனை, சங் 116:14சங் 22:25சங் 76:11பிரச 5:5
அவருடைய மக்கள் எல்லோருக்கும் சமுகத்தில் நிறைவேற்றுவேன்.
எருசலேமே உன் நடுவில் சங் 135:2சங் 96:82 நாளாக 6:6சங் 100:4சங் 118:19-20சங் 122:3-4
யெகோவாவினுடைய ஆலய முற்றங்களில், நான் எனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவேன்.
அல்லேலூயா.