சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.
“யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்” சங் 84:10மீகா 4:2ஏசா 2:3சங் 84:1-2சங் 128:1சங் 134:1சங் 120:1சங் 121:1
என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன்.
எருசலேமே, எங்கள் கால்கள் 2 நாளாக 6:6சங் 100:4சங் 84:7யாத் 20:24சங் 87:1-3
உன் வாசல்களில் நிற்கின்றன.
நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல், 2 சாமு 5:9எபே 2:20-21எபே 4:4-7நெகே 4:6சங் 147:2வெளி 21:10-27
எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது.
யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு, உபா 16:16சங் 66:13-16யாத் 23:17யாத் 34:23-24சங் 107:1-3சங் 118:19சங் 132:13உபா 12:11
கோத்திரங்கள் அங்கு போவார்கள்;
இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்தின்படி,
யெகோவாவினுடைய கோத்திரங்கள் அங்கு போவார்கள்.
தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன; உபா 17:82 நாளாக 19:82 நாளாக 11:222 சாமு 8:18உபா 17:18
அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள்.
எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்: சங் 51:18ஆதி 12:3எரே 29:7சங் 137:6-7எண் 24:9எரே 51:501 யோவா 3:142 தெச 3:16
“உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள்.
உன் மதில்களுக்குள் சமாதானமும், யோவா 14:27ஏசா 54:13யாக் 3:18சங் 48:3ஏசா 9:7சங் 48:131 நாளாக 12:18
உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக.”
என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும் 1 சாமு 25:6பிலி 2:2-5சங் 119:63சங் 16:3சங் 42:4எபே 4:4-6யாக் 3:13-18
“உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் வாழ்த்துகிறேன்.
எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால், நெகே 2:10சங் 84:101 நாளாக 29:3எஸ்த 10:3யோவா 2:17நெகே 13:14சங் 26:8சங் 69:9
நான் உன் செழிப்பைத் தேடுவேன்.