லூக்கா 23

Luke 23

இதற்கு பின்பு கூடியிருந்த முழுக்கூட்டமும் எழுந்து, இயேசுவைப் பிலாத்துவிடம் கொண்டுசென்றார்கள். மத் 27:1-2லூக் 22:66மத் 27:11-14மாற் 15:1-5யோவா 18:28-38 அங்கே அவர்கள், “இவன் மக்களை கிளர்ச்சியில் ஈடுபடுத்த முயன்றதை நாங்கள் கண்டோம். ரோமப் பேரரசனாகிய சீசருக்கு வரி செலுத்துவதை இவன் எதிர்க்கிறான். தன்னைக் கிறிஸ்து எனப்பட்ட அரசன் என்றும் சொல்லிக்கொள்கிறான்” என்று, அவர்மேல் குற்றம் சாட்டினார்கள். அப் 17:6-7யோவா 19:12லூக் 23:141 இராஜா 21:10-131 பேது 3:16-18அப் 16:20-21அப் 24:5எரே 20:10

எனவே பிலாத்து இயேசுவிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான். 1 தீமோ 6:13யோவா 1:49லூக் 1:32-33லூக் 22:70மாற் 15:2யோவா 19:3லூக் 19:38-40லூக் 23:38

அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கிறபடியேதான்” என்றார்.

பிலாத்து தலைமை ஆசாரியர்களையும், கூடியிருந்த மக்களையும் பார்த்து, “இவனுக்கு விரோதமாய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை” என்றான். யோவா 18:381 பேது 1:191 பேது 2:22எபி 7:26லூக் 23:14-15லூக் 23:22மாற் 15:141 பேது 3:18

ஆனால் அவர்களோ, “இவன் தனது போதனையினாலே, யூதேயா முழுவதிலுமுள்ள மக்களைக் கலகப்படுத்துகிறான். இவன் கலிலேயா தொடங்கி, இங்கு வரை வந்துவிட்டான்” என்றார்கள். யோவா 1:43யோவா 2:11மாற் 1:14மத் 4:23அப் 10:37அப் 23:10அப் 5:33அப் 7:54

அதைக்கேட்ட பிலாத்து, “இவன் கலிலேயனா?” என்றான். அப் 5:37லூக் 13:1 இயேசு ஏரோதுவின் அதிகாரத்துக்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்தபோது, அவன் இயேசுவை ஏரோதுவினிடத்திற்கு அனுப்பிவைத்தான். அவ்வேளையில், ஏரோதுவும் எருசலேமுக்கு வந்திருந்தான். லூக் 3:1லூக் 13:31மத் 14:1

ஏரோது இயேசுவைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டான். ஏனெனில், நீண்டகாலமாக அவன் அவரைப் பார்க்க விரும்பியிருந்தான். அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டிருந்ததினால், அவரால் செய்யப்படும் சில அற்புதங்களைப் பார்க்க விரும்பினான். லூக் 9:7-9மத் 14:1மாற் 6:142இராஜா 5:11அப் 8:19லூக் 4:232இராஜா 5:3-6 அவன் இயேசுவிடம் அநேக கேள்விகளைக் கேட்டான். ஆனால் இயேசுவோ அவனுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை. மத் 27:141 பேது 2:23அப் 8:32ஏசா 53:7லூக் 13:32மத் 7:6சங் 38:13-14சங் 39:1-2 தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும் அங்கே நின்று ஆவேசத்தோடு குற்றம் சாட்டினார்கள். அப் 24:5லூக் 11:53லூக் 23:14-15லூக் 23:2லூக் 23:5 அப்பொழுது ஏரோதுவும், அவனுடைய படைவீரரும் அவரை அவமதித்து, அவரைக் கேலி செய்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு அலங்காரமான ஒரு மேலுடையை உடுத்தி, அவரைத் திரும்பவும் பிலாத்துவிடம் அனுப்பினார்கள். மாற் 15:16-20மத் 27:27-30ஏசா 53:3சங் 69:19-20யோவா 19:5மாற் 9:12ஏசா 49:7சங் 22:6 அன்று முதல் ஏரோதுவும், பிலாத்துவும் நண்பர்களாயினர். அதற்குமுன், அவர்கள் இருவரும் பகைவர்களாக இருந்தார்கள். அப் 4:27வெளி 17:13-14மத் 16:1சங் 83:4-6

பிலாத்து தலைமை ஆசாரியர்களையும், ஆட்சியாளர்களையும், மக்களையும் ஒன்றாகக் கூப்பிட்டு, யோவா 18:38மத் 27:21-23மாற் 15:14யோவா 19:4 அவர்களிடம், “நீங்கள் இந்த மனிதனை, மக்களை கிளர்ச்சி செய்யத் தூண்டும் ஒருவனாக என்னிடம் கொண்டுவந்தீர்கள். உங்கள் முன்பாகவே அவனை விசாரித்தேன். ஆனால், அவனுக்கு விரோதமாக நீங்கள் சாட்டும் குற்றத்திற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை. தானி 6:4எபி 7:26அப் 13:28லூக் 23:1-2லூக் 23:4-5மத் 27:19மத் 27:24மத் 27:4 ஏரோதுவும் குற்றம் காணவில்லை. ஏனெனில், நீங்கள் காண்கிறபடி ஏரோது இவனை நம்மிடத்திற்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். மரண தண்டனை பெற்றுக்கொள்ளத்தக்க குற்றம் எதையும் இவன் செய்யவில்லை. எனவே, நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான். மத் 27:26லூக் 23:22மாற் 15:15அப் 16:37அப் 5:40-41ஏசா 53:5யோவா 19:1-4 பண்டிகையின்போது, வழக்கத்தின்படி யாராவது ஒருவனை மக்களுக்கு விடுதலைசெய்ய வேண்டியிருந்தது. 1 2

அவர்களோ ஒரே குரலில், “இவன் வேண்டாம்! பரபாஸை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள். அப் 21:36அப் 22:22அப் 3:14யோவா 18:39-40யோவா 19:15-16மாற் 15:6-15மத் 27:15-26 பரபாஸ் என்பவனோ பட்டணத்தில் கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலைசெய்ததற்காகவும் சிறையில் வைக்கப்பட்டிருந்தான். அப் 3:14லூக் 23:2லூக் 23:5

பிலாத்து இயேசுவை விடுதலைசெய்ய விரும்பி, அவர்களிடம் மீண்டும் பேசினான். மாற் 15:15யோவா 19:12மத் 14:8-9மத் 27:19 ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்! அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். யோவா 19:15லூக் 23:23மத் 27:22-25மாற் 15:13

மூன்றாவது முறையும் பிலாத்து அவர்களிடம் பேசி, “ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? இவனுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை. ஆகவே, நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான். லூக் 23:141 பேது 1:191 பேது 3:18லூக் 23:16லூக் 23:20

ஆனால் அவர்களோ, “அவன் சிலுவையில் அறையப்படவே வேண்டும்” என்று உரத்த சத்தமாய் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்களுடைய சத்தமே மேற்கொண்டது. சகரி 11:8சங் 57:4லூக் 23:5சங் 22:12-13 பிலாத்துவும், அவர்கள் கேட்டபடியே செய்யத் தீர்மானித்தான். மத் 27:26நீதி 17:15யாத் 23:2மாற் 15:15யோவா 19:1 எனவே, அவர்கள் கேட்டுக்கொண்டபடியே, கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலைசெய்ததற்காகவும் சிறையில் போடப்பட்டிருந்த பரபாஸை பிலாத்து விடுதலை செய்தான்; இயேசுவையோ, அவர்கள் விருப்பத்தின்படி செய்வதற்காக ஒப்படைத்தான். அப் 3:14மாற் 15:15மாற் 15:6-71 சாமு 12:13லூக் 23:2லூக் 23:5மத் 27:26யோவா 18:40

இயேசு சிலுவையில் அறையப்படுல்

அவர்கள் இயேசுவைக் கூட்டிக் கொண்டுபோகையில், நாட்டுப் புறத்திலிருந்து அவ்வழியே, சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் வந்துகொண்டிருந்தான். அவர்கள் அவனைப் பிடித்து, சிலுவையை அவன்மேல் வைத்து, இயேசுவுக்குப் பின்னாக அதைச் சுமந்துபோகும்படி செய்தார்கள். மத் 27:32-44மாற் 15:21-32அப் 13:1அப் 2:10அப் 6:6அப் 6:9யோவா 19:16-17லூக் 14:27 அதிக எண்ணிக்கையான மக்கள் கூட்டம், அவருக்குப் பின்னே சென்றார்கள். அவர்களில் சிலர், இயேசுவுக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்த பெண்களும் இருந்தார்கள். லூக் 8:52லூக் 8:2மாற் 15:40லூக் 23:55மத் 27:55 இயேசு அவர்களைத் திரும்பிப்பார்த்து, “எருசலேமின் பெண்களே, எனக்காக அழவேண்டாம்; நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள். உன்னத 8:4உன்னத 1:5உன்னத 2:7உன்னத 3:10உன்னத 3:5உன்னத 5:16உன்னத 5:8 ஏனெனில், ‘மலடியாய் இருக்கிற பெண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; குழந்தையைப் பிரசவிக்காதவர்களும், குழந்தைக்குப் பால் கொடுக்காதவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்று சொல்லும் காலம் வரும். மத் 24:19லூக் 21:23-24மாற் 13:17-19ஓசி 9:12-16ஓசி 13:16உபா 28:53-57

“ ‘அப்பொழுது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும், வெளி 6:16ஓசி 10:8ஏசா 2:19வெளி 9:6

குன்றுகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” ’ 3

என்றும் சொல்வார்கள்.

ஏனெனில், மரம் பச்சையாய் இருக்கும்போதே, இவர்கள் இப்படிச் செய்வார்களானால், அது காய்ந்து போகும்போது, என்னதான் செய்யமாட்டார்கள்?” என்றார். 1 பேது 4:17-18யோவா 15:6நீதி 11:31எசேக் 20:47-48எசேக் 15:2-7எசேக் 21:3-4மத் 3:12எரே 25:29

குற்றவாளிகளான வேறு இரண்டுபேரையும், மரணதண்டனைக்காக இயேசுவுடனேகூட கொண்டுபோனார்கள். மாற் 15:27ஏசா 53:12மத் 27:38யோவா 19:18எபி 12:2லூக் 22:37 அவர்கள் மண்டையோடு என்ற இடத்திற்கு வந்தபோது, அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அந்தக் குற்றவாளிகளில், ஒருவனை அவருடைய வலதுபக்கத்திலும், மற்றவனை அவருடைய இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள். மாற் 15:22-23யோவா 19:17-18சகரி 12:101 பேது 2:24உபா 21:23யோவா 18:32மத் 27:33-34அப் 13:29 அப்பொழுது இயேசு, “பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். படைவீரர்கள் சீட்டுப்போட்டு அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள். மத் 5:44அப் 7:601 பேது 3:91 பேது 2:20-23லூக் 6:27-28ரோம 12:14ஆதி 50:171 கொரி 2:8

மக்கள் இதைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அதிகாரிகள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான்; இவன் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, அவருடைய கிறிஸ்துவாய் இருந்தால், தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளட்டும்” என்று சொல்லி, ஏளனம் செய்தார்கள். சங் 22:17ஏசா 42:11 பேது 2:4மத் 12:18மாற் 15:29-32ஏசா 53:3லூக் 16:14சங் 22:6-8

படைவீரர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, சங் 69:21மத் 27:48மத் 27:34மாற் 15:36யோவா 19:28-30லூக் 23:11மத் 27:29-30மாற் 15:19-20 “நீ யூதருடைய அரசனாய் இருந்தால், உன்னை நீயே விடுவித்துக்கொள்” என்றார்கள்.

அவருக்கு மேலாக ஒரு அறிவிப்புப் பலகை இருந்தது, அதில் இப்படி எழுதியிருந்தது. மத் 27:37மாற் 15:26யோவா 19:19-22லூக் 23:3மாற் 15:32யோவா 19:3மத் 27:11மாற் 15:18

இவர் யூதருடைய அரசன்.

அங்கே தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், “நீர் கிறிஸ்து அல்லவா? உன்னையும், எங்களையும் விடுவியும்” என்று அவரை இகழ்ந்தான். மத் 27:44மாற் 15:32லூக் 23:35லூக் 23:37லூக் 17:34-35

ஆனால் மற்ற குற்றவாளியோ, அவனைக் கண்டித்து, “நீ இறைவனுக்குப் பயப்படுவதில்லையா? நீயும் இதே தண்டனைக்கு உட்பட்டிருக்கிறாயே. 2 நாளாக 28:22எபே 5:11எரே 5:3லூக் 12:5சங் 36:1வெளி 15:4லேவி 19:17வெளி 16:11 நாம் நியாயப்படி தண்டனை பெற்றிருக்கிறோம். நமது செயல்களுக்கேற்றதையே பெற்றிருக்கிறோம். இவரோ, எந்த தவறும் செய்யவில்லை” என்றான். லேவி 26:40-41எஸ்றா 9:131 பேது 1:19மத் 27:24மத் 27:42 நாளாக 33:12தானி 9:4யாக் 4:7

பின்பு அவன் இயேசுவிடம், “இயேசுவே, உமது அரசில் நீர் வரும்போது, என்னையும் நினைவில் வைத்துக்கொள்ளும்” என்றான். அப் 16:31ரோம 10:9-141 யோவா 5:11-131 கொரி 6:10-11லூக் 12:8லூக் 18:13அப் 20:211 யோவா 5:1

அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இன்றைக்கே நீ என்னுடன்கூட சொர்க்கத்தில் இருப்பாய்” என்றார். வெளி 2:7சங் 50:151 தீமோ 1:15-16லூக் 19:10சங் 32:5யோவா 14:3எபி 7:25யோவா 17:24

இயேசுவின் மரணம்

அப்பொழுது பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது, பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது. மத் 27:45மாற் 15:33-34ஆமோ 8:9அப் 2:20யோவா 19:14மத் 27:52ஆமோ 5:18மாற் 15:39 சூரியன் இருளடைந்தது. ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. எபி 10:19-22மத் 27:51எபி 9:3-8மாற் 15:38எபே 2:14-18லேவி 16:12-162 நாளாக 3:14எபி 6:19 இயேசு உரத்த குரலில், “பிதாவே, உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்” 4 என்று சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொல்லி, அவருடைய கடைசி மூச்சைவிட்டார். சங் 31:5அப் 7:59யோவா 19:301 பேது 2:23மாற் 15:34-41மத் 27:46-56

நூற்றுக்குத் தலைவன் நடந்தவற்றையெல்லாம் கண்டு, “நிச்சயமாகவே, இவர் நீதிமான்” என்று இறைவனை மகிமைப்படுத்தினான். மத் 27:54மாற் 15:39லூக் 23:41மத் 9:8யோவா 19:7 இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக, கூடியிருந்த மக்கள் எல்லோரும் நடந்ததைக் கண்டபோது, அவர்கள் தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிச் சென்றார்கள். லூக் 18:13அப் 2:37எரே 31:19 ஆனால் இயேசுவை அறிந்தவர்களும், கலிலேயாவில் இருந்து அவரைப் பின்பற்றி வந்த பெண்களும், தூரத்தில் நின்று இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். லூக் 8:2சங் 38:11லூக் 23:55மத் 27:55-56லூக் 23:27மாற் 15:40-41மாற் 15:47சங் 142:4

இயேசுவின் அடக்கம்

நீதிமன்றத்தின் அங்கத்தினராயிருந்த, யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒருவன் இருந்தான். அவன் நல்லவனும், நீதிமானாயிருந்தான். யோவா 19:38-42அப் 10:22அப் 11:24அப் 10:2மத் 27:57-61மாற் 15:42-47லூக் 2:25 அவன் அவர்களுடைய தீர்மானத்திற்கோ, அவர்களுடைய செயலுக்கோ உடன்பட்டிருக்கவில்லை. அவன் யூதேயாவின் ஒரு பட்டணமான, அரிமத்தியா என்ற இடத்தைச் சேர்ந்தவன். அவன் இறைவனுடைய அரசுக்காகக் காத்திருந்தான். லூக் 2:25லூக் 2:38ஆதி 37:21-22ஆதி 42:21-22ஆதி 49:18ஏசா 8:12மாற் 15:431 சாமு 1:1 அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவினுடைய உடலைத் தரும்படி கேட்டான். யோவா 19:38-42 பின்பு அவன் உடலைக் கீழே இறக்கி, ஒரு மெல்லிய துணியில் சுற்றி, கற்பாறையில் வெட்டியிருந்த ஒரு கல்லறையில் வைத்தான். கல்லறையில், இதுவரை எவருடைய உடலுமே வைக்கப்படவில்லை. மத் 27:59-60ஏசா 53:9மாற் 15:46 அது ஓய்வுநாளுக்கு முந்தின நாளான ஆயத்த நாளாயிருந்தது. ஓய்வுநாளின் தொடக்கமோ நெருங்கிக் கொண்டிருந்தது. மத் 27:62யோவா 19:31மாற் 15:42யோவா 19:14யோவா 19:42

கலிலேயாவிலிருந்து இயேசுவுடன் வந்திருந்த பெண்கள், யோசேப்புக்குப் பின்னேசென்று கல்லறையையும், அதில் எப்படி இயேசுவினுடைய உடல் கிடத்தப்பட்டது என்பதையும் பார்த்தார்கள். லூக் 23:49லூக் 8:2மத் 27:61மாற் 15:47 பின்பு அவர்கள் வீட்டுக்குப்போய், நறுமணப் பொருட்களையும், நறுமணத் தைலங்களையும் ஆயத்தம் செய்தார்கள். ஆனால் கட்டளையின்படியே, ஓய்வுநாளில் அவர்கள் ஓய்ந்திருந்தார்கள். லூக் 24:1மாற் 16:1உபா 5:14யாத் 20:8-10யாத் 31:14யாத் 35:2-3ஏசா 58:13-14எரே 17:24-25