யாத்திராகமம் 31

Exodus 31

சபைக்கூடார கலைஞர்கள்

பின்னும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “பார், நான் யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஊர் என்பவனுடைய பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலைத் தெரிந்திருக்கிறேன். யோவா 3:27யாத் 35:30யாத் 36:1யாத் 33:17ஏசா 45:3-41 நாளாக 2:19-20யாத் 33:12யாத் 37:1 நான் அவனை இறைவனுடைய ஆவியானவரால் நிரப்பியிருக்கிறேன். அத்துடன் எல்லா வகையான வேலைகளையும் பற்றிய ஞானத்தையும், புரிந்துகொள்ளுதலையும், அறிவையும் கொடுத்திருக்கிறேன். யாத் 35:311 இராஜா 7:14ஏசா 28:261 கொரி 12:4-11ஏசா 28:61 இராஜா 3:9 நான் அவனுக்குத் தங்கத்தினாலும், வெள்ளியினாலும், வெண்கலத்தினாலும், சித்திர வேலைப்பாடுகளைச் செய்வதற்கும், 1 இராஜா 7:142 நாளாக 2:13-142 நாளாக 2:7யாத் 25:32-35யாத் 26:1யாத் 28:15 இரத்தினக் கற்களை வெட்டிப் பதிப்பதற்கும், மரத்தைச் செதுக்கி வேலை செய்வதற்கும், இன்னும் பல வகையான வேலைப்பாடுகளில் ஈடுபடுவதற்கும் திறமைகளைக் கொடுத்திருக்கிறேன். யாத் 28:9-21 மேலும் தாண் கோத்திரத்து அகிசாமாகின் மகன் அகோலியாபை அவனுக்கு உதவியாக நியமித்திருக்கிறேன்.” யாத் 28:3யாத் 35:10யாத் 35:34அப் 13:2யாக் 1:16-17லூக் 10:11 இராஜா 3:12பிரச 4:9-12

அத்துடன் நான் உனக்குக் கட்டளையிட்டிருக்கும் யாவற்றையும் செய்யும்படி எல்லா கலைஞர்களுக்கும் வேண்டிய திறமையையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன்:

“சபைக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும், யாத் 36:8யாத் 25:10-22யாத் 26:1-37யாத் 27:9-19

அதன் மேலுள்ள கிருபாசனத்தையும்,

சபைக் கூடாரத்தின் சகல பணிமுட்டுகளையும்,

மேஜையையும், அதன் பொருட்களையும், யாத் 37:10-28யாத் 25:23-40யாத் 30:1-10

சுத்தத் தங்கக்குத்துவிளக்கையும்,

அதன் எல்லா உபகரணங்களையும், தூபபீடத்தையும்,

தகன பலிபீடத்தையும், அதன் எல்லா பாத்திரங்களையும், யாத் 38:1-8யாத் 27:1-8யாத் 30:18-21யாத் 40:11

தொட்டிகளையும், அதன் கால்களையும்,

அத்துடன் ஆசாரியனான ஆரோனும் அவன் மகன்களும், யாத் 28:1-43யாத் 39:1-43லேவி 8:13லேவி 8:7-8எண் 4:5-14

ஆசாரிய ஊழியத்திற்காக பயன்படுத்தும்

பரிசுத்த உடைகளான நெய்யப்பட்ட உடைகளையும்,

அபிஷேக எண்ணெயையும், பரிசுத்த இடத்திற்குத் தேவையான நறுமணத்தூளையும் செய்ய அவர்களுக்குத் திறமையையும் கொடுத்திருக்கிறேன். யாத் 37:29யாத் 30:23-38

“நான் உனக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவற்றைச் செய்யவேண்டும்” என்றார்.

ஓய்வுநாள்

பின்னும் யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியது இதுவே: நீங்கள் என் ஓய்வுநாட்களைக் கைக்கொள்ளவேண்டும். உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற யெகோவா நானே என்பதை நீங்கள் தலைமுறைதோறும் அறியும்படி, இது உங்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு அடையாளமாய் இருக்கும். எசேக் 20:12எசேக் 20:20லேவி 19:301 தெச 5:23யாத் 20:8-11யாத் 31:17லேவி 20:8யோவா 17:17

“ ‘இந்த ஓய்வுநாள், உங்களுக்குப் பரிசுத்த நாள் என்பதால் அதைக் கைக்கொள்ளுங்கள். அதைத் தூய்மைக்கேடாக்கும் எவனும் கொல்லப்படவேண்டும். அந்த நாளில் வேலைசெய்யும் எவனும் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும். யாத் 35:2-3எண் 15:32-36உபா 5:12-15யாத் 20:8எசேக் 20:12-13எசேக் 20:16எசேக் 20:21எசேக் 20:24 ஆறுநாட்கள் வேலைசெய்யவேண்டும். ஆனால் ஏழாம்நாளோ, யெகோவாவுக்கு பரிசுத்தமான ஓய்வுநாள். இந்த ஓய்வுநாளில் எந்தவித வேலையைச் செய்கிற எவனும் கொல்லப்படவேண்டும். ஆதி 2:2யாத் 16:23லேவி 23:3யாத் 34:21யாத் 31:17யாத் 35:2எரே 17:24-27லூக் 13:14 இஸ்ரயேலர் தலைமுறைதோறும், ஓய்வுநாளை கைக்கொண்டு நிரந்தர உடன்படிக்கையாக அதைக் கொண்டாடவேண்டும். எரே 50:5ஆதி 17:11ஆதி 9:13 அது என்றென்றைக்கும் எனக்கும், இஸ்ரயேலருக்கும் இடையில் ஒரு அடையாளமாய் இருக்கும். ஏனெனில், யெகோவா வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, ஏழாம்நாளில் வேலைசெய்யாமல் ஓய்ந்திருந்தார்.’ ” யாத் 31:13ஆதி 1:31ஆதி 2:2-3எசேக் 20:12எபி 4:10எசேக் 20:20எபி 4:3-4எரே 32:41

இவ்வாறு சீனாய் மலையில் யெகோவா மோசேயோடு பேசி முடித்தபின், இறைவனின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளாலான இரண்டு சாட்சிப்பலகைகளை அவனிடம் கொடுத்தார். உபா 4:13யாத் 32:15-16உபா 5:22யாத் 24:122 கொரி 3:3யாத் 8:19உபா 9:9-11யாத் 34:1-4