மாற்கு 15

Mark 15

பிலாத்துவின் முன் இயேசு

அதிகாலையிலேயே தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், முழு ஆலோசனைச் சங்கத்தினரும் சேர்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அதன்படி அவர்கள் இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்படைத்தார்கள். மத் 27:1-2அப் 3:13யோவா 18:28-38லூக் 22:66லூக் 23:1-5அப் 4:25-28சங் 2:2அப் 4:5-6

பிலாத்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான். மத் 2:2மத் 27:11-141 தீமோ 6:13மாற் 15:18மாற் 15:26யோவா 18:29-38யோவா 19:19-22லூக் 23:2-3

அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கிறபடியேதான்” என்றார்.

தலைமை ஆசாரியர்கள், அநேக குற்றச்சாட்டுகளை அவர்மேல் சுமத்தினார்கள். ஏசா 53:7யோவா 18:29-31யோவா 19:12யோவா 19:6-7லூக் 23:2-5மத் 27:12மாற் 14:60-61மாற் 15:5 அப்பொழுது பிலாத்து மீண்டும் இயேசுவிடம், “நீ பதில் சொல்லமாட்டாயோ? பார், எத்தனை குற்றச்சாட்டுகளை அவர்கள் உன்மேல் சுமத்துகிறார்கள்” என்று கேட்டான். யோவா 19:10மத் 26:62மத் 27:13

இயேசுவோ பதில் எதுவும் சொல்லவில்லை. அதனால் பிலாத்து வியப்படைந்தான். ஏசா 53:7சகரி 3:81 கொரி 4:9மத் 27:14சங் 71:7ஏசா 8:18யோவா 19:9

பண்டிகைக் காலத்தில், மக்கள் விடுதலை செய்யும்படி கேட்கும் ஒரு கைதியை ஆளுநர்கள் விடுதலை செய்வது வழக்கமாயிருந்தது. யோவா 18:39-40அப் 24:27அப் 25:9லூக் 23:16-25மத் 26:2மத் 26:5மத் 27:15-26யோவா 19:16 அந்நாட்களில் சில கிளர்ச்சிக்காரர்களுடன், பரபாஸ் என்னும் பெயருடைய ஒருவனும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். இவன் கிளர்ச்சி ஏற்படுத்தி கொலையும் செய்திருந்தவன். லூக் 23:18-19லூக் 23:25மத் 27:16 மக்கள் கூடிவந்து, பிலாத்துவிடம் வழக்கமாக செய்துவந்ததுபோல், இம்முறையும் தங்களுக்கு ஒருவனை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.

அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து, “யூதருடைய அரசனை நான் விடுதலையாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். அப் 3:13-15யோவா 18:39யோவா 19:14-16யோவா 19:4-5மத் 27:17-21 தலைமை ஆசாரியர்கள் பொறாமையின் காரணமாக இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். நீதி 27:41 சாமு 18:8-9ஆதி 4:4-6மத் 27:18தீத் 3:31 யோவா 3:12அப் 13:45பிரச 4:4 ஆனால் தலைமை ஆசாரியர்களோ, பரபாஸையே பிலாத்து விடுதலை செய்யவேண்டும் என்று அவனைக் கேட்கச்சொல்லி, கூடியிருந்த மக்களைத் தூண்டிவிட்டார்கள். அப் 3:14மத் 27:20ஓசி 5:1யோவா 18:40

எனவே பிலாத்து அவர்களிடம், “அப்படியானால், நீங்கள் யூதருடைய அரசன் என்று சொல்லுகிற இவனுக்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். ஏசா 9:6-7எரே 23:5-6அப் 5:31யோவா 19:14-16லூக் 23:2லூக் 23:20-24மத் 2:2-4மத் 21:5

அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.

“ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என பிலாத்து கேட்டான். லூக் 23:411 பேது 1:19அப் 19:34அப் 22:22-23அப் 7:54-57எபி 7:26ஏசா 53:3ஏசா 53:9

ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாகச் சத்தமிட்டார்கள்.

பிலாத்து கூடியிருந்த மக்களை திருப்திப்படுத்த விரும்பி, பரபாஸை அவர்களுக்கு விடுதலை செய்தான். இயேசுவையோ சவுக்கினால் அடித்து சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான். ஏசா 50:6யோவா 19:1மத் 27:26மாற் 10:34நீதி 29:25சங் 129:31 பேது 2:24யோவா 19:16

போர்வீரர்கள் இயேசுவைப் பரிகாசம் செய்தல்

போர்வீரர்கள் இயேசுவை அரண்மனை முற்றத்திலுள்ள ஆளுநர் தலைமையகத்திற்குக் கொண்டுசென்று, மற்ற எல்லா படைவீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள். மத் 27:27-31யோவா 19:9யோவா 18:28மத் 26:3அப் 10:1யோவா 18:33 அவர்கள் இயேசுவுக்கு கருஞ்சிவப்பு உடையை உடுத்தி, முட்களினால் ஒரு கிரீடத்தைப் பின்னி, அதை அவருடைய தலையின்மேல் வைத்தார்கள். மத் 27:28-30யோவா 19:2-5லூக் 23:11 பின்பு அவர்கள், “யூதருடைய அரசனே வாழ்க!” என்று சொல்லி இயேசுவை ஏளனம் செய்தார்கள். மத் 27:42-43ஆதி 37:10ஆதி 37:20யோவா 19:14-15லூக் 23:36-37மாற் 15:2மாற் 15:29-32 அவர்கள் ஒரு தடியினால் திரும்பத்திரும்ப அவரைத் தலையில் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்காற்படியிட்டு, அவரை வணங்கினார்கள். மாற் 14:65ஏசா 53:3-51 இராஜா 19:18எஸ்த 3:2-5ஆதி 24:52ஆதி 43:28எபி 12:2-3எபி 13:13 இவ்வாறு அவரை ஏளனம் செய்தபின்பு, அந்தக் கருஞ்சிவப்பு உடையைக் கழற்றிவிட்டு, அவரது உடையையே அவருக்கு உடுத்தினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். யோவா 19:16மத் 27:31

இயேசு சிலுவையில் அறையப்படுதல்

போகும் வழியில், சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் என்னும் ஒரு மனிதன் நாட்டுப் புறத்திலிருந்து வந்து, அவனும் அவ்வழியாய்ப் போய்க்கொண்டிருந்தான். இந்த சீமோன் அலெக்சாந்தருக்கும், ரூபுவுக்கும் தகப்பன். அவனைச் சிலுவையைத் தூக்கிச்செல்லும்படி படைவீரர் வற்புறுத்தினார்கள். லூக் 23:26மத் 27:32ரோம 16:13அப் 11:20அப் 13:1அப் 2:10அப் 6:9லூக் 14:27 பின்பு அவர்கள் இயேசுவை கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். கொல்கொதா என்பதன் அர்த்தம், “மண்டையோட்டின் இடம்” என்பதாகும். மத் 27:33-44யோவா 19:17-27லூக் 23:27-38 அப்பொழுது அவர்கள், வெள்ளைப்போளம் கலந்த திராட்சை இரசத்தை, அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் இயேசுவோ அதைக் குடிக்க மறுத்தார். மத் 27:34யோவா 19:28-30லூக் 22:18லூக் 23:36மத் 26:19மாற் 14:25 பின்பு அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள். உடையில் எதை யார் எடுத்துக்கொள்வது என்று தீர்மானிப்பதற்காகச் சீட்டுப்போட்டார்கள். யோவா 19:23-24லூக் 23:34மத் 27:35-36ஏசா 53:4-8சங் 22:16-181 பேது 2:242 கொரி 5:21அப் 5:30

அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோது, காலை ஒன்பது மணியாய் இருந்தது. யோவா 19:14லூக் 23:44மத் 27:45மாற் 15:33அப் 2:15 அவருக்கு எதிராக சிலுவையில் குற்றச்சாட்டு இப்படியாக எழுதப்பட்டிருந்தது. மத் 27:37யோவா 19:18-22லூக் 23:37-38மத் 2:2சகரி 9:9ஏசா 10:7மாற் 15:2நீதி 21:1

யூதரின் அரசன்.

அவர்கள் இயேசுவுடன் இரண்டு கள்வர்களை, ஒருவனை வலதுபக்கத்திலும், மற்றவனை இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள். லூக் 23:32-33மத் 27:38யோவா 19:18 அவர் குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற வேதவசனம் இதன் மூலமாய் நிறைவேறிற்று. 1 அவ்வழியாகக் கடந்து போனவர்கள் ஏளனமாய் தங்கள் தலைகளை அசைத்து, “ஆலயத்தை அழித்து, அதை மூன்று நாளில் கட்டுவேன் என்று சொன்னவனே, மாற் 14:58சங் 109:25யோவா 2:18-22புலம் 1:12புலம் 2:15ஆதி 37:19-20மத் 26:61மத் 27:39-40 நீ சிலுவையிலிருந்து இறங்கிவந்து உன்னை நீயே விடுவித்துக்கொள்!” என்று பழித்துரைத்தார்கள். அவ்விதமாகவே தலைமை ஆசாரியர்களும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், ஒருவரோடொருவர் அவரைக்குறித்து ஏளனமாய் பேசினார்கள். அவர்கள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான், ஆனால் தன்னையோ இரட்சித்துக்கொள்ள முடியாதிருக்கிறான்! யோவா 12:23-241 பேது 3:17-18யோவா 11:47-52லூக் 23:35-37மத் 27:41-43சங் 2:1-4சங் 22:16-17 இஸ்ரயேலின் அரசனான இந்த கிறிஸ்து, இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது அதைக்கண்டு, நாங்கள் விசுவாசிப்போம்” என்றார்கள். இயேசுவுடனே சிலுவையில் அறையப்பட்டவர்களுங்கூட அவரை ஏளனம் செய்தார்கள். லூக் 23:39-43மத் 27:442 தீமோ 2:18ஏசா 44:6மத் 1:17சகரி 9:9செப்ப 3:15யோவா 1:49

இயேசுவின் மரணம்

மத்தியான வேளையில், பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது. மத் 27:45ஆமோ 8:9-10லூக் 23:44-45மாற் 15:25ஏசா 50:3-4சங் 105:28 மாலை மூன்றுமணியானபோது, இயேசு உரத்த குரலில், “ஏலோயீ, ஏலோயீ, லாமா சபக்தானி?” என்று அதிக சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதன் அர்த்தம், “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” 2 என்பதாகும். சங் 22:1மத் 27:46எபி 5:7சங் 27:9ஏசா 41:17சங் 71:11தானி 9:21சங் 42:9

அருகே நின்றவர்களில் சிலர், இதைக் கேட்டபோது, “கேளுங்கள், இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றார்கள். மத் 27:47-49மத் 17:11-13மாற் 9:11-13

அப்பொழுது ஒருவன் ஓடிப்போய், கடற்காளானை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, ஒரு தடியில் கட்டி, அதை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். அவன், “இப்பொழுது அவனை அப்படியே விடுங்கள். அவனைக் கீழே இறக்குவதற்கு எலியா வருகிறானோ என்று பார்ப்போம்” என்றான். சங் 69:21மாற் 15:23யோவா 19:28-30லூக் 23:36

அப்பொழுது இயேசு சத்தமிட்டுக் கதறி, தமது கடைசி மூச்சைவிட்டார். யோவா 19:30லூக் 23:46மத் 27:50

அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. எபி 10:19-23லூக் 23:45எபி 9:3-12மத் 27:51-53லேவி 16:2-19யாத் 26:31-34எபி 4:14-16எபி 6:19 இயேசுவுக்கு முன்பாக அங்கு நின்றுகொண்டிருந்த நூற்றுக்குத் தலைவன் அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டான். அப்பொழுது அவன், “நிச்சயமாகவே இந்த மனிதன் இறைவனுடைய மகனே தான்” என்றான். லூக் 23:47-48மத் 27:54மத் 27:43அப் 10:1அப் 27:1-3மத் 8:5-10மாற் 15:44-45அப் 27:43

சில பெண்கள் தூரத்தில் நின்று, அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபு, யோசே என்பவர்களின் தாயாகிய மரியாளும், சலோமியும் இருந்தார்கள். மத் 27:55-56லூக் 23:49லூக் 8:2-3மத் 13:55மத் 27:61மத் 28:1மாற் 15:47மாற் 16:9 இந்தப் பெண்கள் இயேசுவின் தேவைகளை கவனிப்பதற்கு கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்தார்கள். அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த வேறு அநேகம் பெண்களுங்கூட அங்கிருந்தார்கள். லூக் 8:2-3மத் 27:55-56

இயேசுவின் அடக்கம்

அந்த நாள் ஓய்வுநாளுக்கு முந்தின நாளான, ஆயத்த நாளாயிருந்தது. மாலை வேளையானபோது, லூக் 23:50-56யோவா 19:31யோவா 19:38-42மத் 27:57-62 அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவனும், நீதிமன்றத்தின் முக்கிய உறுப்பினருமான யோசேப்பு துணிச்சலுடன் பிலாத்துவிடம் போய், இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான். இவன் இறைவனின் அரசுக்காகக் காத்துக்கொண்டிருந்த ஒருவன். லூக் 2:25லூக் 2:38லூக் 23:51அப் 17:12யோவா 19:38மத் 27:57அப் 13:50அப் 4:8-13 இயேசு அதற்குள்ளாகவே இறந்துவிட்டார் எனக்கேட்ட பிலாத்து வியப்படைந்தான். அவன் நூற்றுக்குத் தலைவனை கூப்பிட்டு, “இயேசு இறந்து விட்டாரா?” என்று கேட்டான். யோவா 19:31-37 நூற்றுக்குத் தலைவனிடமிருந்து அதை உறுதி செய்துகொண்ட பின்பு, அவன் இயேசுவின் உடலை யோசேப்பிடம் கொடுத்தான். யோவா 19:38மத் 27:58மாற் 15:39 எனவே யோசேப்பு மென்பட்டுத் துணியைக் கொண்டுவந்து, அவரது உடலைக் கீழே இறக்கி, அதை அந்தத் துணியினால் சுற்றினான். பின்பு, அதை கற்பாறையில் வெட்டியிருந்த ஒரு கல்லறையில் வைத்து, அதன் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி மூடினான். ஏசா 53:9மத் 27:59-60ஏசா 22:16யோவா 11:38மாற் 16:3-4யோவா 19:38-42லூக் 23:53மத் 28:2 மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும், இயேசு எங்கு கிடத்தப்பட்டார் என்று பார்த்தார்கள். மாற் 15:40மாற் 16:1லூக் 23:55மத் 27:61மத் 28:1