யோசேப்பின் கனவு
யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் நாட்டிற்குத் திரும்பவும் வந்து அங்கே வாழ்ந்தான். ஆதி 17:8ஆதி 23:4ஆதி 28:4ஆதி 36:7எபி 11:9-16
யாக்கோபின் வம்சவரலாறு இதுவே: ஆதி 35:25-261 கொரி 11:181 சாமு 2:22-24ஆதி 35:221 கொரி 1:111 கொரி 5:1ஆதி 10:1ஆதி 30:4
யோசேப்பு பதினேழு வயது வாலிபனாய் இருந்தபோது, தன் தகப்பனின் மனைவிகளான பில்காள், சில்பாள் ஆகியோரின் மகன்களாகிய தனது சகோதரருடன் மந்தை மேய்ப்பது வழக்கம். அவர்களின் கெட்டசெயல்களைப் பற்றி யோசேப்பு தன் தகப்பனுக்கு அறிவித்தான்.
இஸ்ரயேல் வயது முதிர்ந்தவனாய் இருக்கையில் யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், அவனைத் தன் மற்ற மகன்களைவிட அதிகமாக நேசித்தான்; இதனால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஒரு மேலுடையை அவனுக்காக செய்வித்தான். ஆதி 37:32யோவா 3:352 சாமு 13:18ஆதி 37:23யோவா 13:22-23எசேக் 16:16ஆதி 44:20-30சங் 45:13-14 தங்கள் தகப்பன் தங்களைப்பார்க்கிலும் யோசேப்பை அதிகமாக நேசித்ததை அவன் சகோதரர் கண்டார்கள்; அதனால் அவர்கள் அவனுடன் தயவாய்ப் பேசாமல் அவனை வெறுத்தார்கள். ஆதி 27:411 யோவா 3:121 யோவா 4:201 யோவா 2:11சங் 69:41 சாமு 17:28ஆதி 37:5ஆதி 4:5
யோசேப்பு ஒரு கனவு கண்டான், அதை அவன் தன் சகோதரருக்குச் சொன்னபோது, அவர்கள் அவனை இன்னும் அதிகமாக வெறுத்தார்கள். ஆதி 28:12ஆதி 42:9தானி 4:5யோவா 17:14ஆமோ 3:7ஆதி 37:4எண் 12:61 இராஜா 3:5 அவன் தன் சகோதரரிடம், “நான் கண்ட கனவைக் கேளுங்கள்: ஆதி 44:18நியாயாதி 9:7 நாம் வயலில் அறுவடை செய்த கதிர்களைக் கட்டிக்கொண்டிருந்தோம், அப்பொழுது திடீரென எனது கதிர்க்கட்டு எழுந்து நிமிர்ந்து நின்றது; அந்நேரம் உங்கள் கதிர்க்கட்டுகள் என் கதிர்க்கட்டைச் சுற்றி நின்று குனிந்து வணங்கின” என்றான். ஆதி 42:6ஆதி 44:14ஆதி 43:26ஆதி 42:9கொலோ 1:18ஆதி 44:19பிலி 2:10
அப்பொழுது அவன் சகோதரர் அவனிடம், “நீ எங்கள்மேல் ஆளுகைசெய்ய எண்ணம் கொண்டிருக்கிறாயோ? நீ உண்மையாகவே எங்களை ஆளப்போகிறாயோ?” என்று கேட்டார்கள். அவர்கள் அவனுடைய கனவின் நிமித்தமும், அவன் சொன்னவற்றின் நிமித்தமும் அவனை மேலும் வெறுத்தார்கள். 1 சாமு 10:27அப் 7:35ஆதி 49:261 சாமு 17:28அப் 4:27-28யாத் 2:14ஆதி 37:4எபி 10:29
யோசேப்பு இன்னுமொரு கனவு கண்டான், அதையும் அவன் தன் சகோதரரிடம் சொன்னான். “கேளுங்கள், நான் இன்னுமொரு கனவு கண்டேன்; இம்முறை சூரியனும், சந்திரனும், பதினோரு நட்சத்திரங்களும் என்னைக் குனிந்து வணங்கின” என்றான். அப் 7:9-14ஆதி 46:29தானி 8:10ஆதி 37:7ஆதி 37:10ஆதி 41:25ஆதி 41:32ஆதி 43:28
இதை அவன் தன் தகப்பனுக்கும், தனது சகோதரருக்கும் சொன்னான். அப்பொழுது அவனுடைய தகப்பன், “நீ என்ன கனவு கண்டிருக்கிறாய்? உன் தாயும் நானும் உன் சகோதரரும் உனக்கு முன்பாக தரையில் வீழ்ந்து உன்னை வணங்குவோம் என்று நினைக்கிறாயா?” என்று அவனைக் கடிந்துகொண்டான். ஆதி 27:29ஆதி 37:7ஏசா 60:14பிலி 2:10-11 அவன் சகோதரர் அவன்மீது பொறாமை கொண்டார்கள், அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டான். அப் 7:9லூக் 2:19லூக் 2:51தானி 7:28அப் 13:45பிரச 4:4கலா 5:21ஆதி 26:14-16
யோசேப்பு தன் சகோதரர்களால் விற்கப்படுதல்
யோசேப்பின் சகோதரர் தங்கள் தகப்பனின் மந்தையை மேய்ப்பதற்காகச் சீகேமுக்கு அருகே போயிருந்தார்கள்; ஆதி 33:18ஆதி 34:25-31ஆதி 37:1 அப்பொழுது இஸ்ரயேல் யோசேப்பிடம், “உன் சகோதரர் சீகேமுக்கு அருகே மந்தை மேய்த்துக் கொண்டிருப்பது உனக்குத் தெரியும்தானே, வா இப்பொழுது நான் உன்னை அவர்களிடத்திற்கு அனுப்பப்போகிறேன்” என்றான். எபே 6:1-31 சாமு 17:17-201 சாமு 3:161 சாமு 3:4-61 சாமு 3:8ஆதி 22:1ஆதி 27:1ஆதி 27:18
அதற்கு அவன், “நல்லது, நான் போகிறேன்” என்றான்.
எனவே, அவன் யோசேப்பிடம், “நீ போய் உன் சகோதரர் நலமாயிருக்கிறார்களா என்றும், மந்தைகள் எப்படியிருக்கின்றன என்றும் பார்த்து எனக்கு வந்து சொல்” என்றான். அப்படியே யோசேப்பை எப்ரோன் பள்ளத்தாக்கிலிருந்து வழியனுப்பினான். ஆதி 35:27லூக் 19:42சங் 125:51 இராஜா 2:331 சாமு 17:17-182 சாமு 18:32ஆதி 13:18ஆதி 23:2
யோசேப்பு சீகேமுக்கு வந்துபோது, அவன் வயல்வெளியில் அலைந்து கொண்டிருப்பதை ஒரு மனிதன் கண்டு, “நீ என்ன தேடுகிறாய்?” என்று அவனிடம் கேட்டான். நியாயாதி 4:22யோவா 4:272இராஜா 6:19ஆதி 21:14யோவா 1:38யோவா 18:4யோவா 18:7யோவா 20:15
அதற்கு யோசேப்பு, “நான் என் சகோதரரைத் தேடுகிறேன். அவர்கள் எங்கே மந்தை மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உம்மால் சொல்லமுடியுமா?” என்று கேட்டான். லூக் 19:10உன்னத 1:7
அதற்கு அவன், “அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், ‘தோத்தானுக்குப் போவோம்’ என்று அவர்கள் பேசிக்கொண்டதை நான் கேட்டேன்” என்றான். 2இராஜா 6:13
யோசேப்பு தன் சகோதரரைத் தேடிச்சென்று, தோத்தானுக்கு அருகே அவர்களைக் கண்டான். ஆனால் அவர்களோ, அவனைத் தூரத்திலேயே கண்டார்கள், அவன் அவர்கள் அருகே வருவதற்கு முன்பு அவர்கள் அவனைக் கொல்வதற்குச் சதித்திட்டம் போட்டார்கள். அப் 23:121 சாமு 19:1மாற் 14:1சங் 37:12சங் 37:32யோவா 11:53சங் 31:13லூக் 20:14-15
அவர்கள், “இதோ, கனவுக்காரன் வருகிறான்!” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள். ஆதி 28:12ஆதி 37:11ஆதி 37:5ஆதி 49:23 அவர்கள், “வாருங்கள், இப்பொழுது அவனைக் கொன்று, இங்குள்ள குழிகள் ஒன்றில் போட்டுவிடுவோம்; கொடிய மிருகம் அவனைத் தின்றுவிட்டது என்று சொல்வோம். அதன்பின் அவனுடைய கனவுகள் எப்படி நிறைவேறுமென்று பார்ப்போம்” என்றார்கள். தீத் 3:3நீதி 27:42இராஜா 2:24மத் 2:2-16நீதி 1:11-121 இராஜா 13:241 சாமு 26:2அப் 4:16-18
ரூபன் அதைக் கேட்டபோது, அவனை அவர்களுடைய கைகளிலிருந்து தப்புவிக்க முயற்சித்தான். அவன், “நாம் அவனைக் கொல்லாமல் விடுவோம். ஆதி 42:22ஆதி 35:22ஆதி 9:5யோசு 10:28மத் 10:28 நீங்கள் இரத்தத்தைச் சிந்தாமல் காடுகளிலுள்ள இந்தக் கிணற்றில் அவனைப் போட்டுவிடுவோம், அவன்மேல் கைவைக்க வேண்டாம்” என்றான். யோசேப்பை அவர்களிடமிருந்து தப்புவித்துத் தன் தகப்பனிடத்திற்கு மறுபடியும் கூட்டிச்செல்லவே ரூபன் அவ்வாறு சொன்னான். அப் 12:1உபா 13:9யாத் 24:11ஆதி 22:12ஆதி 42:22மத் 27:24
யோசேப்பு தன் சகோதரரிடம் வந்தவுடனே அவர்கள் அவன் அணிந்திருந்த, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அங்கியை உரிந்து போட்டார்கள். ஆதி 37:3ஆதி 37:31-33ஆதி 42:21மத் 27:28சங் 22:18 அவர்கள் அவனைத் தூக்கி, அங்கே இருந்த கிணற்றிலே போட்டார்கள். அப்பொழுது அந்தக் கிணறு தண்ணீர் இல்லாமல் வெறுமையாயிருந்தது. எரே 38:6சங் 130:1-2சகரி 9:11புலம் 3:52-55புலம் 4:20சங் 35:7சங் 40:2சங் 88:6
பின்பு அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள், அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது, இஸ்மயேலரின் வியாபாரிகளின் கூட்டமொன்று கீலேயாத்திலிருந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டார்கள். அவர்களுடைய ஒட்டகங்களிலே வாசனைப் பொருட்களும், தைல வகைகளும், வெள்ளைப்போளமும் ஏற்றப்பட்டிருந்தன. அவர்கள் அவற்றை எகிப்திற்குக் கொண்டுசெல்லும்படி பயணம் செய்துகொண்டிருந்தார்கள். ஆதி 37:28ஆதி 43:11எரே 8:22ஆதி 16:11-12எரே 46:11ஆதி 25:1-4ஆதி 25:16-18ஆதி 31:23
அப்பொழுது யூதா தன் சகோதரரிடம், “நம்முடைய சகோதரனைக் கொன்று, அவனுடைய இரத்தத்தை மறைப்பதினால் நமக்கு என்ன லாபம்? ஆதி 37:20ஆதி 4:102 சாமு 1:16உபா 17:8எசேக் 24:7ஆதி 25:32எரே 41:8யோபு 16:18 வாருங்கள், அவன்மேல் நமது கையை வைக்காமல், அவனை இந்த இஸ்மயேலருக்கு விற்போம்; எப்படியும் அவன் நம்முடைய சகோதரனும், நமது சொந்த இரத்தமுமாய் இருக்கிறானே” என்றான். அதற்கு அவன் சகோதரர்கள் சம்மதித்தார்கள். ஆதி 42:21மத் 16:261 சாமு 18:171 தீமோ 1:102 சாமு 11:14-172 சாமு 12:9யாத் 21:16யாத் 21:21
மீதியான் நாட்டு இஸ்மயேல் வியாபாரிகள் அங்கே வந்தபோது, யோசேப்பின் சகோதரர், கிணற்றிலிருந்து அவனை வெளியே எடுத்து, இருபது சேக்கல் வெள்ளிக்கு 1 இஸ்மயேலரிடம் அவனை விற்றார்கள், அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள். அப் 7:9சங் 105:17ஆதி 25:2ஆதி 45:4-5ஆதி 37:25ஆதி 37:36நியாயாதி 6:1-3மத் 26:15
ரூபன் அந்தக் கிணற்றுக்குத் திரும்பிப்போய், யோசேப்பு அங்கே இல்லை என்பதைக் கண்டு, அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான். ஆதி 37:34யோபு 1:20அப் 14:14ஆதி 44:13யோவே 2:13எண் 14:62இராஜா 19:1ஆதி 34:13 அவன் தன் சகோதரரிடம் திரும்பிப்போய், “யோசேப்பு அங்கே இல்லையே! நான் எங்கே போய் தேடுவேன்?” என்றான். ஆதி 42:13ஆதி 42:32எரே 31:15ஆதி 37:20ஆதி 42:35-36
பின்பு அவர்கள் ஒரு வெள்ளாட்டை வெட்டி, அதன் இரத்தத்தில் யோசேப்பின் மேலுடையைத் தோய்த்தார்கள். ஆதி 37:23ஆதி 37:3நீதி 28:13 அலங்கரிக்கப்பட்ட அந்த மேலுடையைத் தங்கள் தகப்பனிடம் கொண்டுபோய், “இந்த உடையை நாங்கள் வழியில் கண்டெடுத்தோம். இது உமது மகனுடையதா என்று பாரும்” என்றார்கள். லூக் 15:30ஆதி 37:3ஆதி 44:20-23
யாக்கோபு அதைக்கண்டு, “இது என் மகனுடைய மேலுடைதான்! ஏதோ ஒரு கொடிய மிருகம் அவனைக் கொன்று தின்றிருக்க வேண்டும், யோசேப்பு நிச்சயமாகத் துண்டுதுண்டாகக் கிழிக்கப்பட்டிருப்பான்” என்றான். ஆதி 37:20ஆதி 44:281 இராஜா 13:242இராஜா 2:24யோவா 13:7நீதி 14:15
யாக்கோபு தன் உடையைக் கிழித்து, துக்கவுடை உடுத்தி, தன் மகனுக்காகப் பல நாட்கள் துக்கமாயிருந்தான். ஆதி 37:292 சாமு 3:311 நாளாக 21:161 இராஜா 20:311 இராஜா 21:272இராஜா 19:12 சாமு 1:11அப் 14:14 அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோருமே அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்தார்கள். ஆனால் அவனோ ஆறுதலடைய மறுத்து, “இல்லை, நான் என் மகனிடத்தில் கல்லறையில் சேரும்வரை துக்கித்துக் கொண்டேயிருப்பேன்” என்றான். இவ்வாறாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுது புலம்பினான். ஆதி 42:382 சாமு 12:17யோபு 2:11ஆதி 31:43ஆதி 35:22-26ஆதி 42:31ஆதி 44:29-31ஆதி 45:28
இதற்கிடையில், மீதியானிய வியாபாரிகள் எகிப்திலே பார்வோனின் அலுவலர்களில் ஒருவனும், மெய்க்காவலர் தலைவனுமான போத்திபாருக்கு யோசேப்பை விற்றார்கள். ஆதி 37:28ஆதி 40:42இராஜா 25:8ஆதி 25:1-2ஆதி 39:1-23ஏசா 56:3எஸ்த 1:10