ஆதியாகமம் 39

Genesis 39

யோசேப்பும் போத்திபாரின் மனைவியும்

யோசேப்பு எகிப்திற்குக் கொண்டுபோகப்பட்டிருந்தான். பார்வோனுடைய அதிகாரிகளில் ஒருவனும், காவல் அதிகாரியுமாகிய போத்திபார் என்னும் எகிப்தியன், யோசேப்பைக் கொண்டுசென்ற இஸ்மயேலரிடம் அவனை விலைக்கு வாங்கினான். ஆதி 37:28சங் 105:17ஆதி 37:25ஆதி 37:36அப் 7:9ஆதி 45:4

யெகோவா யோசேப்புடன் இருந்தார், அதனால் அவன் செய்த எல்லாவற்றிலும் வெற்றிபெற்றான்; அவன் எகிப்திய எஜமானுடைய வீட்டில் தங்கியிருந்தான். 1 சாமு 18:14சங் 91:15எரே 15:20ஆதி 26:28அப் 7:9-10ஆதி 21:22ஆதி 26:24ஏசா 43:2 யெகோவா அவனோடு இருக்கிறார் என்றும், அவன் செய்யும் எல்லாவற்றிலும் யெகோவா அவனுக்கு வெற்றியைக் கொடுக்கிறார் என்றும் அவன் எஜமான் கண்டான். சங் 1:31 சாமு 18:142 நாளாக 26:5ஆதி 30:27மத் 5:16ஆதி 21:22ஆதி 26:24ஆதி 26:28 அப்போது யோசேப்புக்கு அவனுடைய எஜமானின் கண்களில் தயவு கிடைத்தால், அவன் அவனுடைய எஜமானின் தனிப்பட்ட உதவியாளன் ஆனான். போத்திபார் அவனைத் தன் வீட்டுக்குப் பொறுப்பாக வைத்து, தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அவன் பொறுப்பில் கொடுத்தான். ஆதி 39:21-22அப் 20:28ஆதி 19:19ஆதி 24:2ஆதி 39:8நீதி 27:18ஆதி 18:3ஆதி 33:10 இவ்வாறாக அவனுடைய வீட்டுக்கும், அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றிற்கும் பொறுப்பாக யோசேப்பை அவன் நியமித்ததுமுதல், யோசேப்பின் நிமித்தம் அந்த எகிப்தியனின் வீட்டை யெகோவா ஆசீர்வதித்தார். போத்திபாருக்கு அவனுடைய வீட்டிலும், வயல்வெளியிலும் உள்ள எல்லாவற்றிலும் யெகோவாவினுடைய ஆசீர்வாதம் இருந்தது. ஆதி 30:272 சாமு 6:11-12அப் 27:24ஆதி 12:2சங் 72:17எபே 1:3சங் 21:6உபா 28:3-6 அதனால் அவன் தனக்குள்ள எல்லாவற்றையும் யோசேப்பிடம் ஒப்படைத்து, அவனை அதிகாரியாக நியமித்தான். போத்திபாரோ தான் உண்ணும் உணவைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்தவில்லை. 1 சாமு 16:12ஆதி 29:17லூக் 19:17நீதி 31:11அப் 7:20ஆதி 12:14-15ஆதி 39:23ஆதி 39:4

யோசேப்பு நல்ல உடற்கட்டும் அழகிய தோற்றமும் உடையவனாய் இருந்தான். சிலநாள் சென்றபின் போத்திபாரின் மனைவி யோசேப்பின்மீது ஆசைகொண்டு, “என்னுடன் உறவுகொள்ள வா!” என அழைத்தாள். 2 பேது 2:142 சாமு 13:11எசேக் 16:341 யோவா 2:16எசேக் 16:32எசேக் 23:12-16எசேக் 23:5-6யோபு 31:1

அவனோ அதை மறுத்தான். அவன் அவளிடம், “என் எஜமான் தன் வீட்டிலுள்ள எதைக் குறித்தும் கவனிப்பதில்லை; தனக்குச் சொந்தமாயுள்ள அனைத்தையும் என்னுடைய பராமரிப்பில் ஒப்புவித்துள்ளார். நீதி 22:14நீதி 23:26-28நீதி 1:10நீதி 7:5நீதி 9:13-18நீதி 18:24நீதி 2:10நீதி 5:3-8 இந்த வீட்டில் என்னைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை. நீ அவருடைய மனைவி என்பதால் உன்னைத்தவிர, வேறொன்றையும் அவர் என்னிடமிருந்து விலக்கி வைக்கவில்லை. அப்படியிருக்க, இவ்வாறான கொடுமையான செயலைச் செய்து, இறைவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்ய என்னால் எப்படி முடியும்?” என்றான். 2 சாமு 12:13ஆதி 20:6ஆதி 42:181 யோவா 3:9கலா 5:19-21லூக் 12:48சங் 51:41 கொரி 4:2 அவள் நாளுக்குநாள் யோசேப்பைக் கட்டாயப்படுத்திய போதிலும், அவளோடு படுக்கைக்குச் செல்லவோ, அவளோடு இருக்கவோ அவன் உடன்படவில்லை. 1 பேது 2:111 கொரி 15:331 கொரி 6:181 தெச 5:222 தீமோ 2:22ஆதி 39:8நீதி 2:16நீதி 1:15

ஒரு நாள் யோசேப்பு தன் கடமைகளைச் செய்வதற்காக வீட்டுக்குள் போனான், வீட்டு வேலைக்காரர் யாரும் உள்ளே இருக்கவில்லை. எபே 5:12எபே 5:3எரே 23:24யோபு 24:15மல்கி 3:5நீதி 9:17 அப்பொழுது அவள் யோசேப்பின் மேலுடையைப் பிடித்துக்கொண்டு, “என்னுடன் படுக்கைக்கு வா” என்றாள். அவனோ தன் மேலுடையை அவள் கையிலேயே விட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டான். 2 தீமோ 2:22நீதி 7:13-271 பேது 2:11பிரச 7:26நீதி 5:8நீதி 6:51 கொரி 15:33ஆதி 39:10

அவன் தன்னுடைய மேலுடையைத் தன் கையிலே விட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, தன் வீட்டு வேலைக்காரரைக் கூப்பிட்டு, “இதோ பாருங்கள், இந்த எபிரெயன் நம்மை அவமானப்படுத்தும்படி இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறான்! அவன் என்னுடன் உறவுகொள்ளும்படி உள்ளே வந்தான். நான் கூச்சலிட்டேன். 1 பேது 2:201 பேது 3:14-181 பேது 4:14-19ஆதி 10:21ஆதி 14:13ஆதி 39:17ஆதி 39:7ஆதி 40:15 நான் உதவிகேட்டுக் கூச்சலிட்டதை அவன் கேட்டவுடன், தன் மேலுடையை இங்கே விட்டுவிட்டு வெளியே ஓடிவிட்டான்” என்றாள்.

அவள் அவனுடைய எஜமான் வீட்டுக்கு வரும்வரை அந்த மேலுடையை தன்னருகிலேயே வைத்திருந்தாள். சங் 37:32எரே 4:22எரே 9:3-5சங் 37:12தீத் 3:3 அவன் வந்ததும் அவனிடம் இந்தக் கதையைச் சொன்னாள்: “நீர் நம்மிடம் கொண்டுவந்த அந்த எபிரெய அடிமை என்னை அவமானப்படுத்தும்படி இங்கு வந்தான். யாத் 23:11 இராஜா 18:171 இராஜா 21:9-13யாத் 20:16ஆதி 39:14மத் 26:65நீதி 12:19நீதி 19:5 நான் உதவிக்காகக் கூச்சலிட, உடனே அவன் தன் மேலுடையை என் அருகே விட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டான்” என்றாள்.

“இப்படித்தான் உம்முடைய அடிமை என்னை நடத்தினான்” என்று தன் மனைவி தனக்குச் சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டதும், அவனுடைய கோபம் பற்றி எரிந்தது. 2 தெச 2:11அப் 25:16ஆதி 4:5-6யோபு 29:16நீதி 18:17நீதி 29:12நீதி 6:34-35உன்னத 8:7 யோசேப்பின் எஜமான் அவனைக் கைதுசெய்து, அரச கைதிகளை அடைத்துவைக்கும் சிறையில் போட்டான். ஆதி 40:151 பேது 2:192 தீமோ 2:9தானி 3:21-22ஆதி 40:1-3ஆதி 41:9-14ஏசா 53:8சங் 105:18-19

யோசேப்பு சிறையில் இருக்கும்போதும், யெகோவா யோசேப்போடே இருந்தார்; அவர் அவனுக்கு இரக்கங்காட்டி, சிறைச்சாலைத் தலைவனின் கண்களில் அவனுக்குத் தயவு கிடைக்கச்செய்தார். ஏசா 41:10யாத் 3:211 பேது 3:17அப் 7:9-10ஏசா 43:2ரோம 8:31-321 பேது 3:13-141 பேது 4:14-16 அதனால் சிறைக்காவல் அதிகாரி யோசேப்பைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எல்லோருக்கும் அதிகாரியாக்கினான்; அங்கு செய்யப்படவேண்டிய எல்லாவற்றுக்கும் அவனையே பொறுப்பாகவும் வைத்தான். ஆதி 39:4ஆதி 40:3-41 சாமு 2:30ஆதி 39:6-7ஆதி 39:9சங் 37:11சங் 37:3 யெகோவா யோசேப்போடு இருந்து, அவன் செய்த அனைத்திலும் வெற்றியைக் கொடுத்தார்; அதனால் சிறைச்சாலைத் தலைவன் யோசேப்பின் பொறுப்பிலிருந்த எதையும் மேற்பார்வை செய்யவில்லை. ஏசா 43:2சங் 1:3ஆதி 39:2-3தானி 6:221 சாமு 2:30ஆதி 49:23-24சங் 37:3-11ஆதி 40:3-4