“காலைப் பெண்மான்” என்ற இராகத்தில் பாடும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? மாற் 15:34மத் 27:46எபி 5:7சங் 22:16யோபு 3:24லூக் 24:44சங் 10:1சங் 43:1-5
என்னைக் காப்பாற்றாமல்,
நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளை நீர் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
என் இறைவனே, நான் பகலில் கூப்பிடுகிறேன், ஆனால் நீர் பதில் தருகிறதில்லை; லூக் 18:7சங் 42:3லூக் 22:41-46சங் 55:16-17சங் 88:11 தெச 3:102 தீமோ 1:3புலம் 3:44
இரவிலும் நான் மன்றாடுகிறேன், எனக்கு அமைதியில்லை.
ஆனாலும் இஸ்ரயேலின் துதி சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் உபா 10:21சங் 50:23ஏசா 6:3வெளி 4:8சங் 99:9சங் 65:1சங் 145:17
நீர் பரிசுத்தர்.
உம்மிலேயே எங்கள் முன்னோர்கள் நம்பிக்கை வைத்தார்கள்; யாத் 14:31யாத் 14:13-14ஆதி 15:6ஆதி 32:28எபி 11:8-32ரோம 4:18-22சங் 44:1-71 சாமு 7:9-12
நம்பிக்கை வைத்த அவர்களை நீர் விடுவித்தீர்.
அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிட்டார்கள், நீர் அவர்களைக் காப்பாற்றினீர்; ரோம 10:11ஏசா 49:231 பேது 2:6ரோம 9:33ஏசா 45:17நியாயாதி 10:10-16நியாயாதி 6:6சங் 106:44
உம்மில் நம்பிக்கை வைத்து அவர்கள் வெட்கப்பட்டுப் போகவில்லை.
ஆனால் நானோ ஒரு புழு, மனிதனேயல்ல; ஏசா 53:3யோபு 25:6ஏசா 41:14ஏசா 49:7சங் 69:7-12சங் 69:19-20மத் 11:19மத் 27:20-23
மனிதரால் பழிக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
என்னைக் காண்பவர்கள் அனைவரும் என்னை ஏளனம் செய்கிறார்கள்; மாற் 15:29மத் 27:39-40லூக் 23:11சங் 109:25மத் 26:66-68மத் 27:29மாற் 15:20ஏசா 53:3
அவர்கள் தங்கள் தலைகளை அசைத்து பரியாசம்செய்கிறார்கள்
“அவன் யெகோவாவை நம்பியிருக்கிறான், மத் 27:42-43மாற் 15:30-32சங் 91:14நீதி 16:3சங் 18:19ஏசா 42:1மத் 17:5மத் 3:17
யெகோவா அவனை இரட்சிக்கட்டும்.
அவரிலே அவன் மகிழ்ச்சியாக இருக்கிறபடியால்
அவர் அவனை விடுவிக்கட்டும்” என்கிறார்கள்.
ஆனாலும், நீரே என்னைத் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே கொண்டுவந்தவர். சங் 71:6ஏசா 49:1-2சங் 71:17சங் 139:15-16மத் 2:13-15ஏசா 9:6ஏசா 7:14-15வெளி 12:4-5
நான் என் தாயின் மார்பின் அணைப்பில் இருக்கும்போதே
என்னை உம்மில் நம்பிக்கையாய் இருக்கப்பண்ணினீர்.
நான் பிறப்பிலிருந்தே உமது பாதுகாப்பில் இருந்தேன்; கலா 1:15எரே 1:5ஏசா 49:1ஏசா 46:3-4யோவா 20:17லூக் 2:40லூக் 2:52
நான் என் தாயின் கர்ப்பத்தில் இருந்ததுமுதல் நீரே என் இறைவனாக இருக்கிறீர்.
நீர் என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்; சங் 71:12எபி 5:7யோவா 16:32சங் 10:1சங் 72:12சங் 38:21சங் 142:4-6சங் 35:22
ஏனென்றால் துன்பம் நெருங்கியுள்ளது,
உதவிசெய்ய ஒருவருமில்லை.
அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன; அப் 4:27ஆமோ 4:1-3சங் 68:30மத் 27:1உபா 32:14-15எசேக் 39:18எரே 50:11ஏசா 34:7
பாசான் நாட்டு பலத்த காளைகள் என்னை வளைத்து கொள்கின்றன.
தங்கள் இரையை கிழிக்கிற கெர்ச்சிக்கும் சிங்கங்களைப் போல, 1 பேது 5:8சங் 35:21யோபு 16:10புலம் 2:16புலம் 3:46மத் 26:3-4மத் 26:59-65சங் 17:12
அவர்கள் எனக்கு விரோதமாக தங்கள் வாய்களை விரிவாய்த் திறக்கிறார்கள்.
என் பெலன் தரையில் ஊற்றப்பட்ட தண்ணீரைப்போல் இருக்கிறது; தானி 5:6யோபு 30:16சங் 22:17சங் 31:10யோபு 23:16யோவா 12:27யோசு 7:5லூக் 22:44
என் எலும்புகளெல்லாம் மூட்டுகளை விட்டுக் கழன்று போயின;
என் இருதயம் மெழுகு போலாகி
எனக்குள்ளே உருகிப் போயிற்று.
என் பெலன் ஓட்டுத்துண்டைப் போல் வறண்டுபோயிற்று; யோவா 19:28சங் 69:3சங் 69:21ஏசா 53:12சங் 104:29சங் 32:3-4சங் 38:101 கொரி 15:3
என் நாவும் மேல்வாயுடன் ஒட்டிக்கொண்டது;
என்னை சவக்குழியின் தூசியில் போடுகிறீர்.
நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன; யோவா 19:37சகரி 12:10மத் 27:35யோவா 20:25யோவா 19:23யோவா 19:34மாற் 15:24யோவா 20:27
தீயவர்களின் கூட்டம் என்னை வளைத்து கொண்டது;
என் கைகளையும் என் கால்களையும் ஊடுருவக் குத்தினார்கள்.
என் எலும்புகள் எல்லாவற்றையும் என்னால் எண்ண முடியும்; லூக் 23:35யோபு 33:21மத் 27:39-41ஏசா 52:14லூக் 23:27மாற் 15:29-32சங் 102:3-5மத் 27:36
மக்கள் என்னை உற்றுப்பார்த்து ஏளனம் செய்து மகிழுகிறார்கள்.
அவர்கள் என் அங்கிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு, மத் 27:35லூக் 23:34யோவா 19:23-24மாற் 15:24
என் உடைக்காக சீட்டுப் போடுகிறார்கள்.
ஆனால் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாகாதிரும்; சங் 22:11சங் 40:13சங் 40:17சங் 10:1சங் 21:1சங் 18:1சங் 70:5சங் 69:13-18
என் பெலனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்.
என்னை வாளுக்குத் தப்புவியும்; சங் 35:17சகரி 13:7சங் 17:13
என் விலைமதிப்பற்ற உயிரை நாய்களின் வலிமையிலிருந்து விடுவியும்.
சிங்கங்களின் வாயிலிருந்து என்னைத் தப்புவியும்; 2 தீமோ 4:171 பேது 5:8அப் 4:27யோவா 14:30எண் 23:22ஏசா 34:7யோவா 8:59அப் 5:30-32
காட்டெருதுகளின் கொம்புகளிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
அப்பொழுது நான் என் ஜனங்களுக்கு உம்முடைய பெயரை அறிவிப்பேன், எபி 2:11-12மத் 12:48-49ரோம 8:29மத் 28:10சங் 40:9-10சங் 71:18-19மத் 25:40சங் 22:25
திருச்சபையில் நான் உம்மைத் துதிப்பேன்.
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; சங் 135:19-20வெளி 15:4சங் 107:1-2லூக் 1:50சங் 50:231 கொரி 6:19-20சங் 115:111 நாளாக 16:8-13
யாக்கோபின் சந்ததிகளே, நீங்கள் அனைவரும் அவரைக் கனம்பண்ணுங்கள்;
இஸ்ரயேலின் சந்ததிகளே, நீங்கள் அவரிடத்தில் பயபக்தியாய் இருங்கள்.
ஏனெனில் யெகோவா துன்புறுத்தப்பட்டவனுடைய வேதனையை, எபி 5:7ஏசா 50:6-9சங் 116:3-6சங் 118:5லூக் 23:46சங் 34:6சங் 69:29-34சங் 22:6
அலட்சியம் பண்ணவுமில்லை அவமதிக்கவுமில்லை.
அவனிடத்திலிருந்து தமது முகத்தை மறைத்துக் கொள்ளவுமில்லை;
ஆனால் அவன் உதவிகேட்டுக் கதறுகையில் அவர் செவிகொடுத்தார்.
நீர் செய்த செயல்களுக்காக மகா சபையில் நான் உம்மைத் துதிப்பேன்; சங் 35:18சங் 40:9-10சங் 111:1சங் 116:14-19சங் 66:13சங் 22:22சங் 56:12பிரச 5:4-5
உமக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக
நான் என் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.
ஏழைகள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; சங் 69:32ஏசா 65:13சங் 40:16சங் 105:3-4ஏசா 25:6யோவா 6:48-58சங் 107:9யோவா 4:14
யெகோவாவைத் தேடுகிறவர்கள் எல்லோரும் அவரைத் துதிப்பார்கள்;
அவர்கள் இருதயங்கள் என்றும் வாழ்வதாக.
பூமியின் கடைசிகளெல்லாம் சங் 86:9ஏசா 45:22வெளி 7:9-12சங் 2:8ஏசா 49:6வெளி 15:4சங் 72:11சங் 96:7
யெகோவாவை நினைத்து அவரிடம் திரும்பும்;
நாடுகளின் குடும்பங்கள் எல்லாம்
அவருக்கு முன்பாகத் தாழ்ந்து வணங்கும்.
ஏனென்றால், அரசாட்சி யெகோவாவினுடையது; சகரி 14:9சங் 47:7-8தானி 7:14வெளி 11:15ஒபதி 1:21மத் 6:13
அவர் நாடுகளை ஆளுகை செய்கிறார்.
பூமியிலுள்ள செல்வந்தர் அனைவரும் விருந்துண்டு யெகோவாவை வழிபடுவார்கள்; பிலி 2:10ஏசா 26:19யோவா 11:25-26சங் 113:7சங் 45:12ஏசா 45:23வெளி 20:12-15ரோம 14:10-12
மரித்து மண்ணுக்குத் திரும்புவோரும், தன் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும்
அவருக்கு முன்பாக முழங்காற்படியிடுவார்கள்.
பிள்ளைகள் அவரை சேவிப்பார்கள்; 1 பேது 2:9எபி 2:13கலா 3:26-29சங் 102:28ஏசா 53:10மத் 3:9சங் 14:5சங் 24:6
வருங்கால சந்ததியினருக்கு, யெகோவாவைப் பற்றிச் சொல்லப்படும்.
அவர்கள் அவருடைய நீதியை, சங் 78:6சங் 86:9ரோம 1:17ஏசா 44:3-5சங் 102:18சங் 145:4-7சங் 40:92 கொரி 5:21
இன்னும் பிறவாமல் இருக்கும் மக்களுக்கு பிரசித்தப்படுத்துவார்கள்:
அவரே இதையெல்லாம் செய்து முடித்தார்! என்பார்கள்.