சங்கீதங்கள் 72

Psalms 72
சங்கீதம் 72

சாலொமோனின் சங்கீதம்.

இறைவனே, அரசனுக்கு உமது நியாயமான தீர்ப்பையும் 2 நாளாக 1:10எரே 23:5-61 நாளாக 22:12-131 நாளாக 29:191 இராஜா 1:39ஏசா 11:2சங் 127:1எபி 1:8-9

இளவரசனுக்கு உமது நீதியையும் கொடும்.

அப்பொழுது அவர் உமது மக்களை நீதியோடும், ஏசா 32:1ஏசா 32:17சங் 72:12-141 இராஜா 3:5-10ஏசா 11:2-5ஏசா 9:7யோபு 34:19சங் 12:5

துன்பப்பட்ட உம்முடையவர்களை நேர்மை தவறாமலும் நியாயந்தீர்ப்பார்.

மலைகள் அனைவருக்கும் செழிப்பை உண்டாக்கட்டும், ஏசா 52:72 கொரி 5:19-21தானி 9:24எசேக் 34:13-14ஏசா 32:16-17யோவே 3:18சங் 65:12சங் 72:16

குன்றுகள் நீதியின் பலனைக் கொண்டுவரட்டும்.

மக்கள் மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களை அவர் பாதுகாத்து, ஏசா 11:4எசேக் 34:15-16சங் 109:31சகரி 9:8-10தானி 2:34-35ஏசா 9:4யோபு 34:24மத் 11:5

ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாற்றட்டும்;

ஒடுக்குவோரை அவர் நொறுக்கிப்போடட்டும்.

சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும், சங் 89:36-37தானி 7:14சங் 72:17வெளி 11:151 கொரி 15:24-251 இராஜா 3:281 சாமு 12:18தானி 2:44

தலைமுறை தலைமுறையாக அவர்கள் உமக்குப் பயந்திருப்பார்கள்.

அரசர் புல்வெட்டப்பட்ட வயலின்மேல் பொழியும் மழையைப்போலவும், ஓசி 6:3உபா 32:22 சாமு 23:4ஓசி 14:5-7ஏசா 14:3-5சங் 65:10எசேக் 34:23-26ஏசா 5:6

பூமியை நீர்ப்பாய்ச்சும் மழைத்தூறலைப் போலவும்

அரசரின் ஆட்சி புத்துணர்ச்சி அடையட்டும்.

அவருடைய நாட்களில் நீதிமான்கள் செழிப்பார்கள்; ஏசா 2:4மல்கி 4:2சங் 92:12ஏசா 60:22ஏசா 54:11-17லூக் 2:141 நாளாக 22:8-91 இராஜா 4:25

சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.

ஒரு கடலில் இருந்து மறுகடல் வரைக்கும், யாத் 23:31சகரி 9:101 இராஜா 4:21-24சங் 2:8சங் 80:11சங் 89:25சங் 22:27-28சங் 89:36

நதிதொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அரசர் ஆளுகை செய்யட்டும்.

பாலைவன வாசிகள் அவருக்குமுன் பணிவார்கள்; ஏசா 49:23மீகா 7:17லூக் 19:271 இராஜா 9:181 இராஜா 9:20-21ஏசா 35:1-2சங் 110:1சங் 110:6

அவருடைய பகைவர்கள் மண்ணை நக்குவார்கள்.

தர்ஷீசு மற்றும் தூரத்து தீவுகளின் அரசர்கள் ஏசா 60:6சங் 68:29ஏசா 49:71 இராஜா 10:1சங் 45:122 நாளாக 9:21ஏசா 60:9ஆதி 10:7

அவருக்கு காணிக்கைகளைக் கொண்டுவரட்டும்;

ஷேபாவும், சேபாவின் அரசர்களும்

அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கட்டும்.

எல்லா அரசர்களும் அவரை வணங்கட்டும்; சங் 86:9ஏசா 49:22-23வெளி 11:15வெளி 17:14ஏசா 54:5சங் 138:4-5வெளி 20:1-6வெளி 21:24

எல்லா நாடுகளும் அவருக்குப் பணிவிடை செய்யட்டும்.

ஏனெனில் கதறுகின்ற ஏழைகளையும் யோபு 29:12சங் 102:17வெளி 3:17-18பிரச 4:1எபி 7:25சங் 10:17ஏசா 41:17சங் 82:3-4

உதவி செய்வாரின்றித் தவிக்கும் எளியோரையும் அவர் விடுவிப்பார்.

பலவீனருக்கும் எளியோருக்கும் அவர் அனுதாபங்காட்டி, எசேக் 34:16மத் 5:3சங் 109:31யோபு 5:15-16யாக் 2:5-6மத் 18:10

எளியோரை மரணத்திலிருந்து காப்பாற்றுவார்.

அவர்களை ஒடுக்குதலுக்கும் வன்செயலுக்கும் தப்புவிப்பார்; சங் 116:151 தெச 2:15-16லூக் 1:68-75வெளி 19:22 சாமு 4:9சங் 69:18சங் 130:8வெளி 17:6

ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கை அவருடைய பார்வையில் விலையுயர்ந்ததாய் இருக்கும்.

அவர் நீடித்து வாழ்வாராக! 1 இராஜா 10:14ஏசா 60:6யூதா 1:25பிலி 2:11வெளி 1:18வெளி 5:8-141 கொரி 1:2-31 யோவா 1:2

சேபாவின் தங்கம் அவருக்குக் கொடுக்கப்படுவதாக;

மக்கள் எக்காலத்திலும் அவருக்காக மன்றாடி,

நாள்தோறும் அவரை ஆசீர்வதிப்பார்களாக.

நாட்டிலே தானியம் மிகுதியாக விளையட்டும்; 1 இராஜா 4:20வெளி 7:91 கொரி 3:6-9அப் 1:15அப் 2:41அப் 4:4ஓசி 14:5-7ஏசா 2:2-3

குன்றுகளின் உச்சியில் தானியக்கதிர்கள் அசையட்டும்;

அதின் உற்பத்தி லெபனோனைப்போல செழிக்கட்டும்;

அதின் பட்டணத்தார் வெளியின் புல்லைப்போல் செழித்து வளருவார்களாக.

அவருடைய பெயர் என்றும் நிலைத்திருப்பதாக; ஏசா 7:14மத் 1:23சங் 89:36ஆதி 12:3லூக் 1:48ஆதி 22:18லூக் 1:31-331 பேது 1:3

சூரியன் உள்ளமட்டும் அது தொடர்ந்திருப்பதாக.

எல்லா நாடுகளும் அவர்மூலம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்;

அவர்கள் அவரை ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று அழைப்பார்கள்.

இஸ்ரயேலின் இறைவனாயிருக்கிற, யெகோவாவாகிய இறைவனுக்குத் துதி உண்டாவதாக; சங் 41:13சங் 106:481 நாளாக 29:10யாத் 15:11சங் 86:10சங் 136:4சங் 77:14யோபு 5:9

அவர் அதிசயமான செயல்களைச் செய்கிறார்.

அவருடைய மகத்துவமான பெயர் என்றென்றும் துதிக்கப்படுவதாக; எண் 14:21மத் 6:10ஆப 2:14சங் 41:13மத் 6:13வெளி 5:13ஏசா 6:3ஏசா 11:9

பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிரம்புவதாக.

ஆமென், ஆமென்.

ஈசாயின் மகன் தாவீதின் மன்றாட்டுகள் இத்துடன் நிறைவுபெறுகின்றன. 2 சாமு 23:1எரே 51:64யோபு 31:40லூக் 24:51