சங்கீதங்கள் 77

Psalms 77
சங்கீதம் 77

பாடகர் குழுத் தலைவன் எதுத்தூனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்.

நான் உதவிக்காக இறைவனை நோக்கி அழுதேன்; சங் 3:4சங் 142:1-3சங் 50:1சங் 39:1சங் 62:1சங் 34:61 நாளாக 25:31 நாளாக 25:6

எனக்குச் செவிகொடுக்கும்படியாக நான் இறைவனை நோக்கி அழுதேன்.

நான் துன்பத்தில் இருந்தபோது ஆண்டவரைத் தேடினேன்; ஏசா 26:9சங் 50:15ஆதி 37:35ஏசா 26:16எபி 5:7எஸ்த 4:1-4யோனா 2:1-2ஓசி 5:13

இரவில் என் கைகளைத் தளராமல் உயர்த்தினேன்,

என் ஆத்துமாவோ ஆறுதலடைய மறுத்தது.

இறைவனே, உம்மை நான் நினைவுகூர்ந்தேன், நான் புலம்பினேன்; சங் 142:2-3சங் 61:2யோபு 31:23யோபு 7:11எரே 17:17யோபு 23:15-16யோபு 6:4புலம் 3:39

நான் தியானித்தேன், என் ஆவியோ சோர்ந்துபோயிற்று.

நீர் என் கண்களை மூடாதபடி தடுத்தீர்; யோபு 7:13-15சங் 6:6யோபு 2:13எஸ்த 6:1யோபு 6:3

நான் பேசமுடியாதபடி மிகவும் கஷ்டப்பட்டேன்.

முந்தின நாட்களையும், உபா 32:7ஏசா 51:9சங் 143:5சங் 44:1ஏசா 63:9-15மீகா 7:14-15சங் 74:12-18

கடந்துபோன வருடங்களைப்பற்றியும் நான் நினைத்தேன்;

நான் இரவில் என் பாடல்களை நினைவுகூர்ந்தேன். சங் 42:8சங் 4:4சங் 139:23-24புலம் 3:40அப் 16:25பிரச 1:16யோபு 10:2யோபு 35:10

என் இருதயம் தியானித்தது, என் ஆவியோ இப்படி விசாரணை செய்தது:

“யெகோவா என்றென்றும் புறக்கணிப்பாரோ? சங் 85:1புலம் 3:31-32சங் 89:46ரோம 11:1-2சங் 85:5சங் 13:1-2சங் 37:24சங் 89:38

அவர் மீண்டும் ஒருபோதும் தயவு காண்பிக்கமாட்டாரோ?

அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் ஒழிந்துபோயிற்றோ? எண் 23:192 பேது 3:9ரோம 9:6எரே 15:18லூக் 16:25-26எண் 14:34ஏசா 27:11

அவருடைய வாக்குத்தத்தம் தலைமுறை தலைமுறைக்கும் அற்றுப்போயிற்றோ?

இறைவன் தயைசெய்ய மறந்துவிட்டாரோ? ஏசா 49:14-15சங் 40:111 யோவா 3:17ஏசா 40:27ஏசா 63:15லூக் 13:25-28சங் 25:6சங் 51:1

அவர் தமது கோபத்தில் இரக்கங்காட்ட மறுத்துவிட்டாரோ?”

அப்பொழுது நான்: “மகா உன்னதமானவரின் வலதுகரம், யோபு 42:3யாத் 15:6மாற் 9:24சங் 31:22ஆப 3:2-13சங் 77:5உபா 4:34புலம் 3:18-23

எனக்காக செயலாற்றுகிறது,

யெகோவாவின் செயல்களை நான் நினைவுகூருவேன்; சங் 143:51 நாளாக 16:12சங் 105:5ஏசா 5:12சங் 28:5சங் 78:11சங் 111:4சங் 77:10

ஆம், முற்காலத்தில் நீர் செய்த அற்புதங்களை நான் நினைவிற்கொள்வேன்.

உமது செய்கைகளையெல்லாம் நான் தியானிப்பேன்; சங் 71:24சங் 145:11உபா 6:7சங் 105:2லூக் 24:14-32சங் 104:34சங் 143:5சங் 145:4

உமது வல்லமையான செயல்களை நான் சிந்திப்பேன்” என்றேன்.

இறைவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை; யாத் 15:11சங் 73:17ஏசா 40:25உபா 32:31ஏசா 40:18சங் 89:6-8ஏசா 46:5சங் 27:4

நம்முடைய இறைவனைப்போல் பெரிய தெய்வம் யார்?

அற்புதங்களைச் செய்கிற இறைவன் நீரே; தானி 6:27சங் 136:4யாத் 15:11யாத் 13:14ஏசா 51:9சங் 72:18யோசு 9:9-10வெளி 15:3

நீர் மக்கள் மத்தியில் உமது வல்லமையை வெளிப்படுத்துகிறீர்.

உமது வல்லமையுள்ள புயத்தினால் உபா 9:29யாத் 6:6ஏசா 63:9உபா 9:26சங் 74:2ஆதி 48:3-20சங் 136:11-12

யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் சந்ததியான உமது மக்களை நீர் மீட்டுக்கொண்டீர்.

இறைவனே, சமுத்திரம் உம்மைக் கண்டது, யாத் 14:21ஆப 3:15யோசு 3:15-16சங் 114:3-6ஆப 3:8-10

சமுத்திரம் உம்மைக் கண்டு தத்தளித்தது;

மகா ஆழங்களும் நடுங்கின.

மேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன, சங் 18:142 சாமு 22:15நியாயாதி 5:4சங் 144:6சங் 68:33சங் 68:8-9ஆப 3:11

ஆகாயங்கள் முழங்கி அதிர்ந்தன;

உமது அம்புகள் அங்கும் இங்கும் மின்னிப் பாய்ந்தன.

உமது இடியொலி சுழற்காற்றில் கேட்டது, சங் 97:4வெளி 11:192 சாமு 22:14யாத் 19:16ஆப 3:4நியாயாதி 5:4மத் 27:51மத் 28:2

உமது மின்னல் உலகத்திற்கு வெளிச்சம் கொடுத்தது;

பூமி நடுங்கி அதிர்ந்தது.

உமது பாதை கடலிலும், யாத் 14:28ஆப 3:15நெகே 9:11சங் 29:10நாகூ 1:3-4சங் 97:2ரோம 11:33

உமது வழி பெருவெள்ளத்திலும் இருந்தது;

ஆனாலும் உமது அடிச்சுவடுகள் காணப்படவில்லை.

மோசே, ஆரோன் என்பவர்களுடைய கையினால் யாத் 13:21சங் 78:52யாத் 14:19ஏசா 63:11-12சங் 80:1ஓசி 12:13அப் 7:35-36

நீர் உமது மக்களை ஒரு மந்தையைப்போல் நடத்தினீர்.