பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். தாவீது பத்சேபாளுடன் விபசாரம் செய்தபின், இறைவாக்கினன் நாத்தான் அவனிடம் வந்து, அவன் பாவத்தை உணர்த்திய பின்பு பாடிய சங்கீதம்.
இறைவனே, உமது அன்பின் நிமித்தம் அப் 3:19ஏசா 44:22ஏசா 43:25சங் 51:9கொலோ 2:14சங் 69:162 சாமு 11:2எபே 1:6-8
எனக்கு இரக்கம் காட்டும்,
உமது பெரிதான கருணையின் நிமித்தம்
என் மீறுதல்களை நீக்கிவிடும்.
என் அநியாயங்கள் எல்லாவற்றையும் நீர் கழுவி, 1 யோவா 1:7-9எபி 10:21-22எசேக் 36:25எரே 4:14சங் 51:7ஏசா 1:16வெளி 1:51 கொரி 6:11
என் பாவத்திலிருந்து என்னைச் சுத்தமாக்கும்.
என் மீறுதல்களை நான் அறிவேன்; நீதி 28:13ஏசா 59:12சங் 38:18சங் 32:5லேவி 26:40-41லூக் 15:18-21எரே 3:25யோபு 33:27
என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
உமக்கு எதிராக, உமக்கு எதிராக மட்டுமே நான் பாவம் செய்தேன்; 2 சாமு 12:13-14லூக் 15:21ஆதி 20:6ஆதி 39:9ரோம 3:4அப் 17:31வெளி 16:5ஆதி 9:6
உமது பார்வையில் தீமையானதைச் செய்திருக்கிறேன்;
ஆதலால், உம்முடைய தீர்ப்பில் நீர் சரியானவர்,
உம்முடைய நியாய விசாரணையில் நீர் நீதியானவராயிருக்கிறீர்.
நிச்சயமாகவே நான் பிறந்ததிலிருந்து பாவியாயிருக்கிறேன்; ரோம 5:12யோபு 14:4சங் 58:3யோபு 15:14-16எபே 2:3யோவா 3:6ஆதி 5:3ஆதி 8:21
என் தாய் என்னைக் கர்ப்பந்தரித்ததில் இருந்தே நான் பாவியாய் இருக்கிறேன்.
ஆனாலும், நான் கருப்பையிலிருந்தே உண்மையாயிருக்க நீர் விரும்புகிறீர்; 1 சாமு 16:7சங் 15:21 பேது 3:4ரோம 7:22யோபு 38:36நீதி 2:6யாக் 4:8லூக் 11:39
அந்த மறைவான இடத்திலிருந்தே நீர் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
ஈசோப்புத் தளையினால் என்னைச் சுத்தப்படுத்தும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; 1 யோவா 1:7ஏசா 1:18எபி 9:13-14எண் 19:18-20எபி 9:19வெளி 1:5எபே 5:26-27யாத் 12:22
என்னைக் கழுவும், அப்பொழுது நான் வெண்பனியைப் பார்க்கிலும் வெண்மையாவேன்.
நான் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கேட்கும்படிச் செய்யும்; ஓசி 6:1-2யோபு 5:17-18மத் 5:4சங் 6:2-3சங் 119:81-82சங் 126:5-6லூக் 4:18சங் 30:11
நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூரட்டும்.
என் பாவங்களைக் காணாதபடி உமது முகத்தை மறைத்து, எரே 16:17மீகா 7:18-19கொலோ 2:14ஏசா 38:17சங் 51:1
என் எல்லா அநியாயத்தையும் நீக்கிவிடும்.
இறைவனே, தூய்மையான இருதயத்தை என்னில் படைத்து, எசேக் 11:192 கொரி 5:17எபே 4:22-24மத் 5:8எசேக் 18:31ரோம 12:2எசேக் 36:25-27அப் 15:9
நிலையான ஆவியை எனக்குள் புதுப்பியும்.
உமது சமுகத்தில் இருந்து என்னைத் தள்ளிவிட வேண்டாம், எபே 4:302இராஜா 13:23ஏசா 63:10-11ரோம 8:9ஆதி 6:3யோவா 14:26லூக் 11:13சங் 71:18
உமது பரிசுத்த ஆவியானவரை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளவும் வேண்டாம்.
உமது இரட்சிப்பின் மகிழ்ச்சியைத் எனக்குத் திரும்பத்தாரும்; ஏசா 41:10சங் 13:5ஏசா 61:102 கொரி 3:17யூதா 1:24லூக் 1:47சங் 119:116-117சங் 35:9
விரும்பி நடக்கும் ஆவியை தந்து என்னைத் தாங்கும்.
அப்பொழுது நான் குற்றம் செய்கிறவர்களுக்கு உமது வழிகளைப் போதிப்பேன்; லூக் 22:32அப் 3:19யாக் 5:19-20அப் 26:18-20யோவா 21:15-17அப் 15:3அப் 2:38-41எரே 31:18
பாவிகள் உம்மிடம் மனந்திரும்புவார்கள்.
இறைவனே, இரத்தப்பழியிலிருந்து என்னை விடுவியும்; 2 சாமு 12:9சங் 35:28அப் 20:26ஆதி 9:6ஓசி 4:2சங் 26:9ரோம 10:32 சாமு 11:15-17
நீர் என்னை இரட்சிக்கும் இறைவன்.
எனது நாவு உமது நீதியைப் பாடும்.
யெகோவாவே, என் உதடுகளைத் திறந்தருளும்; எபி 13:15சங் 63:3-5எசேக் 29:21சங் 119:13சங் 9:14யாத் 4:11எசேக் 3:271 சாமு 2:9
அதினால் என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
நீர் பலியை விரும்புவதில்லை, விரும்பினால் நான் அதைக் கொண்டுவருவேன்; ஓசி 6:6சங் 40:6எபி 10:5-61 சாமு 15:22சங் 51:6ஏசா 1:11-15நீதி 21:27ஆமோ 5:21-23
தகன காணிக்கையிலும் நீர் மகிழ்வதில்லை.
இறைவனுக்கு உகந்த பலி உடைந்த ஆவிதான்; சங் 34:18ஏசா 66:2சங் 147:3லூக் 15:10மாற் 12:33மத் 5:32 நாளாக 33:12-13சங் 102:17
இறைவனே, குற்றத்தை உணர்ந்து உடைந்த இதயத்தை
நீர் புறக்கணிக்கமாட்டீர்.
உமது தயவின்படி சீயோனுக்கு நன்மை செய்யும்; சங் 102:16பிலி 2:13எபே 1:5லூக் 12:32சங் 122:6-9சகரி 2:52 தெச 1:11ஏசா 51:3
எருசலேமின் மதில்களைக் கட்டும்.
அப்பொழுது முழு தகன காணிக்கைகளிலும், சங் 4:5எபே 5:2மல்கி 3:3சங் 66:13-15ரோம 12:1சங் 118:27
சர்வாங்க தகன காணிக்கையான நீதி பலிகளிலும் நீர் மகிழ்ச்சியடைவீர்;
உமது பலிபீடத்தின்மேல் காளைகளை அர்ப்பணிப்பார்கள்.