உபாகமம் 33

Deuteronomy 33

மோசே கோத்திரங்களை ஆசீர்வதித்தல்

இறைவனின் மனிதனாகிய மோசே தான் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்கள்மேல் கூறிய ஆசீர்வாதம் இதுவே. யோசு 14:61 இராஜா 13:11 இராஜா 13:61 சாமு 2:271 சாமு 9:6-71 தீமோ 6:112 பேது 1:212 தீமோ 3:17 அவன் சொல்லியதாவது: ஆப 3:3யூதா 1:14வெளி 5:11அப் 7:53நியாயாதி 5:4-5சங் 68:17சங் 68:7-8எபி 2:2

“யெகோவா சீனாயிலிருந்து வந்து,

சேயீரிலிருந்து அவர்கள்மேல் உதித்தார்.

பாரான் மலையிலிருந்து அவர் பிரகாசித்தார்.

ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்களுடன் தெற்கிலிருந்தும்,

மலைச்சரிவுகளிலிருந்தும் வந்தார்.

நிச்சயமாக நீரே மக்களில் அன்பு செலுத்துகிறீர். லூக் 10:39உபா 7:6-8மல்கி 1:21 பேது 1:5அப் 22:3கொலோ 3:3-4எபே 2:4-5லூக் 8:35

எல்லா பரிசுத்தவான்களும் உமது கரத்திலே இருக்கிறார்கள்.

அவர்கள் உம்முடைய பாதங்களில் விழுந்து வணங்குகிறார்கள்.

உம்மிடமிருந்து அறிவுறுத்தலை பெற்றுக்கொள்கிறார்கள்.

மோசே எங்களுக்குக் கொடுத்த சட்டமே அந்த அறிவுறுத்தல். யோவா 1:17யோவா 7:19சங் 119:111உபா 9:26-29சங் 119:72

அது யாக்கோபின் சபையாருக்கு உடைமையாய் இருக்கிறது.

இஸ்ரயேலின் கோத்திரங்களுடன். உபா 32:15நியாயாதி 17:6யாத் 18:16யாத் 18:19ஆதி 36:31நியாயாதி 8:22நியாயாதி 9:2எண் 16:13-15

மக்களின் தலைவர்கள் ஒன்றாய் கூடியபோது,

யெஷூரன்மேல் யெகோவாவே அரசனாய் இருந்தார்.

“ரூபன் வாழட்டும்; அவன் சாகக்கூடாது, ஆதி 49:8எண் 32:31-32யோசு 22:1-9ஆதி 49:3-4

அவனுடைய மனிதர் குறையாமல் இருக்கட்டும்.”

அவன் யூதாவைப்பற்றிச் சொன்னதாவது: ஆதி 49:8-12சங் 20:2சங் 21:81 கொரி 15:252 சாமு 7:9-12எபி 7:14ஏசா 9:17லூக் 19:27

“யெகோவாவே, யூதாவின் கதறுதலைக் கேளும்;

அவனை அவனுடைய மக்களிடம் கொண்டுவாரும்.

அவன் தன் சொந்தக் கரங்களால் அவனுடைய உரிமைகளுக்காகப் போராடுகிறான்.

அவனுடைய பகைவருக்கு எதிராக அவனுக்குத் துணையாய் இரும்.”

லேவியைப்பற்றி அவன் சொன்னதாவது: யாத் 17:7யாத் 28:30எண் 20:13லேவி 8:8சங் 106:161 சாமு 28:62 நாளாக 23:6உபா 8:16

“நீர் தயவுகாட்டிய மனிதனுக்கே

உமது தும்மீம், ஊரீம் உரியவை.

நீர் மாசாவில் அவனைத் சோதித்தீர்.

மேரிபாவின் தண்ணீர் அருகே அவனுடன் வாக்குவாதம் பண்ணினீர்.

அவன் தன் தகப்பனையும், தாயையும்பற்றி, யாத் 32:25-29மத் 10:37எரே 18:18லேவி 21:11லூக் 14:26மத் 12:481 நாளாக 17:172 கொரி 5:16

‘நான் அவர்களைக் கவனத்தில் கொள்ளமாட்டேன்’ என்றான்.

அவன் தன் சகோதரர்களை அங்கீகரிக்கவில்லை.

தன் பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் அவன் உம்முடைய வார்த்தையைக் கண்காணித்து,

உம்முடைய உடன்படிக்கையைக் காவல்செய்தான்.

அவன் உமது ஒழுங்குவிதிகளை யாக்கோபுக்கும், லேவி 10:11சங் 51:191 சாமு 2:28உபா 17:9-11யாத் 30:7-8எசேக் 43:272 நாளாக 17:8-102 நாளாக 26:18

உமது சட்டத்தை இஸ்ரயேலுக்கும் போதிக்கிறான்.

உமது முன்னிலையில் தூபங்காட்டுகிறான்.

உமது பலிபீடத்தில் முழுமையான தகன காணிக்கையைச் செலுத்துகிறான்.

யெகோவாவே, அவனுடைய திறமைகளை ஆசீர்வதியும். 2 சாமு 24:23எசேக் 20:40-41எசேக் 43:271 தெச 4:8ஆமோ 5:10உபா 18:1-5ஏசா 29:21எரே 15:10

அவனுடைய கைகளின் வேலையில் பிரியமாயிரும்.

அவனுக்கு எதிரே எழும்புவோரின் இடுப்புகளை அடித்து நொறுக்கும்.

அவனுடைய பகைவர்கள் இனி ஒருபோதும் எழும்பாதபடி அவர்களை அடியும்.”

பென்யமீனைப்பற்றி அவன் சொன்னது: 2 நாளாக 15:2மத் 23:37சங் 91:4ஏசா 51:161 இராஜா 12:212 நாளாக 11:12 நாளாக 17:17-19உபா 12:10

“யெகோவாவினால் அன்புகூரப்பட்டவன் அவரில் பாதுகாப்பாய் இளைப்பாறட்டும்.

ஏனெனில் அவர் அவனை நாள்முழுவதும் பாதுகாக்கிறார்.

யெகோவா அன்புகூரும் அவன் அவருடைய தோள்களுக்கிடையில் இளைப்பாறுகிறான்.”

யோசேப்பைப்பற்றி அவன் சொன்னது: ஆதி 49:22-26மீகா 5:7ஆதி 27:28-29ஓசி 14:5ஏசா 18:4நீதி 19:12நீதி 3:20உபா 32:2

“யெகோவா அவனுடைய நாட்டை,

மேலே வானத்திலிருந்து வரும் பனியினாலும்,

கீழே பூமியின் ஆழத்திலிருந்துவரும் தண்ணீர்களாலும் ஆசீர்வதிப்பாராக.

சூரியன் விளைவிக்கும் சிறந்த விளைச்சலினாலும், 1 தீமோ 6:172 சாமு 23:4அப் 14:17உபா 28:8லேவி 26:4மல்கி 4:2மத் 5:45சங் 104:19

சந்திரன் விளைவிக்கும் அருமையான பொருட்களாலும் ஆசீர்வதிப்பாராக.

பூர்வகால மலைகளின் மிகச்சிறந்த கொடைகளாலும், ஆப 3:6ஆதி 49:26யாக் 5:7

அழியாத குன்றுகளின் செழிப்பினாலும் ஆசீர்வதிப்பாராக.

பூமியின் மிகச்சிறந்த கொடைகளினாலும், நிறைவினாலும் ஆசீர்வதிப்பாராக. அப் 7:35யாத் 3:2-4ஆதி 49:26சங் 24:12 கொரி 12:7-10அப் 7:30-33ஆதி 37:28ஆதி 37:36

எரிகின்ற புதரில் வாழ்ந்தவரின் தயவினாலும் ஆசீர்வதிப்பாராக.

இவை எல்லாம் யோசேப்பின் தலையின்மேல் தங்கட்டும்.

தனது சகோதரருள் இளவரசனாயிருந்தவனின் உச்சந்தலையிலும் தங்குவதாக.

மாட்சிமையில் அவன் தலையீற்று காளைபோல் இருக்கிறான். எண் 23:221 இராஜா 22:11சங் 44:5ஆதி 48:191 நாளாக 5:1எண் 24:8சங் 92:102 நாளாக 18:10

அவன் கொம்புகளோ காட்டு எருதின் கொம்புகள்போல் இருக்கின்றன.

அவற்றால் நாடுகளைக் குத்திக் கிழிப்பான்.

பூமியின் கடையாந்தரங்களில் இருப்பவர்களைக்கூட குத்திக் கிழிப்பான்.

எப்பிராயீமின் பத்தாயிரம்பேரும் இப்படிப்பட்டவர்களே.

மனாசேயின் ஆயிரம்பேரும் இப்படிப்பட்டவர்களே.”

செபுலோனைப்பற்றி அவன் சொன்னதாவது: ஆதி 49:13-15நியாயாதி 5:14யோசு 19:11

“செபுலோனே நீ வெளியே போகையில் களிகூரு.

இசக்காரே நீ கூடாரங்களிலிருந்து களிகூரு.

அவர்கள் மக்களை மலைக்கு அழைப்பிப்பார்கள். ஏசா 2:3ஏசா 60:5சங் 4:5யாத் 15:17சங் 50:13-15சங் 51:16-171 பேது 2:5உபா 32:13

அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்.

அவர்கள் கடல்களின் நிறை வளங்களிலும்,

மண்ணுள் மறைந்திருக்கும் செல்வங்களிலும் விருந்து உண்பார்கள்.”

காத்தியரைப்பற்றி அவன் சொன்னதாவது: 1 நாளாக 12:8-14ஆதி 49:191 நாளாக 12:37-381 நாளாக 4:101 நாளாக 5:18-21ஆதி 9:26-27யோசு 13:10யோசு 13:24-28

“காத்தியரின் ஆளுகைகளை விரிவுபடுத்துபவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

காத் சிங்கத்தைப்போல் படுத்திருப்பான்.

அவன், புயத்தையும் தலையையும் கிழிக்கும் சிங்கத்தைப்போல் படுத்திருப்பான்.

அவன் சிறந்த நிலத்தை தனக்கென்று தெரிந்துகொண்டான். யோசு 4:12-13நியாயாதி 5:11நியாயாதி 5:2யோசு 1:14யோசு 22:1-4எண் 32:1-6எண் 32:16-42

தலைவருக்கான பங்கு அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

மக்களின் தலைவர்கள் ஒன்றுகூடியபோது,

அவன் யெகோவாவின் நீதியையும்,

இஸ்ரயேலருக்கான யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளையும் நிறைவேற்றினான்.”

தாணைப்பற்றி அவன் சொன்னதாவது: யோசு 19:47நியாயாதி 18:271 நாளாக 12:35ஆதி 49:16-17நியாயாதி 13:2நியாயாதி 13:24-25நியாயாதி 14:19நியாயாதி 14:6

“தாண் பாசானிலிருந்து,

பாய்கிற சிங்கக்குட்டி.”

நப்தலியைப்பற்றி அவன் சொன்னதாவது: ஆதி 49:21எரே 31:14மத் 4:16சங் 36:8மத் 4:13யோசு 19:32-39சங் 90:14ஏசா 9:1-2

“நப்தலி யெகோவாவின் தயவில் பெருகி

அவரின் ஆசீர்வாதத்தால் நிறைந்திருக்கிறான்.

அவன் கலிலேயா கடலின் தெற்குப் பக்கமாக உள்ள பகுதியை உரிமையாக்கிக்கொள்வான்.”

ஆசேரைப்பற்றி அவன் சொன்னதாவது: ஆதி 49:20யோபு 29:6நீதி 3:3-4ரோம 14:18சங் 128:6அப் 7:10சங் 128:3யாத் 12:10

“ஆசேர் மகன்களுக்குள் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

சகோதரரிடமிருந்து அவனுக்கு ஆதரவு கிடைக்கும்.

அவன் தன் பாதங்களை எண்ணெயில் குளிப்பாட்டட்டும்.

உன் வாயிற்கதவுகளின் தாழ்ப்பாள்கள் இரும்பும் வெண்கலமுமாய் இருக்கும். ஏசா 41:10கொலோ 1:11ஏசா 40:29பிலி 4:13சங் 138:32 நாளாக 16:9எபே 6:102 கொரி 12:9-10

நீ வாழும் காலமெல்லாம் உன் பெலனும் நீடித்திருக்கும்.

“யெஷூரனின் இறைவனைப்போல் வேறொருவரும் இல்லை. யாத் 15:11ஏசா 43:11-13ஆப 3:8எரே 10:6ஏசா 19:1சங் 104:3சங் 68:33-34உபா 32:15

அவர் உனக்கு உதவிசெய்ய வானங்களிலும்,

அவருடைய மகத்துவத்துடன் மேகங்களிலும் ஏறிவருவார்.

என்றும் வாழ்கிற இறைவன் உன் அடைக்கலம். சங் 90:1-2சங் 18:2ஏசா 25:4சங் 46:1சங் 91:1-2நீதி 18:10சங் 91:9ரோம 16:20

அவரின் நித்திய புயங்கள் உன்னைத் தாங்கும்.

அவர், ‘பகைவனை அழித்துவிடு!’ என்று சொல்லி,

உன் பகைவனை உனக்கு முன்பாகத் துரத்திவிடுவார்.

இஸ்ரயேல் தனிமையாய் பாதுகாப்புடன் வாழும். எண் 23:9ஆதி 27:28யாத் 33:16எரே 23:6வெளி 21:27உபா 11:11எரே 33:16சங் 68:26

தானியமும், புது திராட்சை இரசமும் உள்ள நாட்டில்,

யாக்கோபின் நீரூற்று 1 பாதுகாப்பாய் இருக்கிறது.

அங்கே வானம் பனியைப் பெய்கின்றது.

இஸ்ரயேலேரே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! ஏசா 12:2ஏசா 45:17உபா 4:7-8சங் 115:9-112 சாமு 7:23ஆதி 15:1எண் 23:20-242 சாமு 22:45

யெகோவாவினால் மீட்கப்பட்ட மக்களான உங்களைப்போல் வேறு யார் இருக்கிறார்கள்?

அவரே உங்கள் கேடயமும்,

உங்களுக்கு உதவி செய்பவருமாயிருக்கிறார்.

அவரே உங்களது மகிமையான வாளுமாயிருக்கிறார்.

உங்களது பகைவர் உங்களுக்கு முன்பாக அஞ்சி ஒதுங்குவார்கள்.

நீங்கள் அவர்களின் தொழுகைமேடுகளை 2 மிதிப்பீர்கள்.”