பேழைக்குமுன் சேவை
அவர்கள் இறைவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்து, தாவீது அதற்கென அமைத்த கூடாரத்திற்குள் வைத்தார்கள். பின்பு அவர்கள் இறைவனுக்குமுன் தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினார்கள். 1 நாளாக 15:12 நாளாக 1:42 சாமு 6:17-19எஸ்றா 6:16-181 நாளாக 15:122 நாளாக 5:6-71 இராஜா 8:5-6சங் 132:8 தாவீது தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தி முடித்தபின்பு, அவன் மக்களை யெகோவாவினுடைய பெயரில் ஆசீர்வதித்தான். ஆதி 47:102 நாளாக 30:18-202 நாளாக 30:27யோசு 22:61 இராஜா 8:55-562 நாளாக 29:292 சாமு 6:18ஆதி 14:19 பின்பு அவன் ஒவ்வொரு இஸ்ரயேலின் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியே ஒரு அப்பத்தையும், ஒரு பேரீச்சம்பழ அடையையும், ஒரு திராட்சைப்பழ அடையையும் கொடுத்தான். எசேக் 45:171 பேது 4:9நெகே 8:102 நாளாக 30:242 நாளாக 35:7-8
தாவீது சில லேவியர்களை யெகோவாவின் பெட்டிக்குமுன் பணிசெய்யவும், வேண்டுதல் செய்யவும், நன்றி செலுத்தவும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைத் துதிப்பதற்குமென நியமித்தான். 1 நாளாக 24:3சங் 103:2சங் 105:5சங் 106:48சங் 72:181 நாளாக 15:161 நாளாக 16:37-421 நாளாக 16:8 அவர்களுக்கு தலைவனாக ஆசாப்பும், இரண்டாவதாக சகரியாவும், அவனுக்கு அடுத்ததாக ஏயேல், செமிராமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத் ஏதோம், ஏயேல் ஆகியோரும் இருந்தார்கள். இவர்கள் யாழ், வீணை வாசிக்க நியமிக்கப்பட்டார்கள். கைத்தாளம் போடுவதற்காக ஆசாப் நியமிக்கப்பட்டான். 1 நாளாக 6:391 நாளாக 15:16-241 நாளாக 25:1-62 நாளாக 29:25 அத்துடன் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் ஒழுங்காக எக்காளம் ஊதுவதற்காக ஆசாரியர்களான பெனாயாவும், யாகாசியேலும் நியமிக்கப்பட்டார்கள். 2 நாளாக 29:26-282 நாளாக 13:122 நாளாக 5:12-13எண் 10:8
அன்றையதினம் தாவீது யெகோவாவுக்கு நன்றி செலுத்தும்படி ஆசாப்பிடமும், அவனுடைய உதவியாளர்களிடமும் முதன்முதலாக கொடுத்த பாடல் இதுவே: 2 சாமு 22:12 சாமு 23:1-2சங் 18:12 நாளாக 29:30நெகே 12:24சங் 12:1
யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; சங் 105:1-15ஏசா 12:42இராஜா 19:19சங் 145:5-61 நாளாக 16:341 நாளாக 16:8-221 கொரி 1:21 இராஜா 8:43
அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள்.
அவரைப் பாடுங்கள். அவருக்குத் துதி பாடுங்கள்; கொலோ 3:16யாக் 5:13சங் 96:1-3சங் 98:1-4மத் 26:30சங் 95:1-2எபே 5:19சங் 40:10
அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.
அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்; மத் 7:7-8எரே 29:13நீதி 8:17சங் 34:2ஏசா 55:6-7ஏசா 45:25எரே 9:23-241 நாளாக 28:9
யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்; சங் 27:8-9செப்ப 2:2-3சங் 68:35சங் 24:6சங் 67:1சங் 4:62 நாளாக 6:41ஆமோ 5:6
எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள்.
அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், சங் 111:4சங் 103:2சங் 119:20சங் 119:137சங் 119:75ரோம 11:331 நாளாக 16:8-9சங் 119:13
அவர் கொடுத்த நியாயத்தீர்ப்புகளையும் நினைவிற்கொள்ளுங்கள்.
அவருடைய ஊழியராம் இஸ்ரயேலின் சந்ததிகளே, 1 பேது 2:9யாத் 19:5-6சங் 135:4உபா 7:6ஆதி 17:7ஆதி 28:13-14ஆதி 35:10-12
அவர் தெரிந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே,
அவரே நமது இறைவனாகிய யெகோவா; ஏசா 26:9சங் 48:10-11யாத் 15:2சங் 100:31 நாளாக 16:12சங் 118:28சங் 63:1சங் 95:7
அவரது நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் உள்ளன.
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருகிறார்; சங் 105:8உபா 7:9மல்கி 4:4சங் 25:10சங் 44:17
ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் செய்த வாக்குறுதியையும்,
ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், ஆதி 17:2ஆதி 26:3ஆதி 35:11கலா 3:15-17ஆதி 15:18அப் 3:25யாத் 3:15ஆதி 12:7
ஈசாக்கிற்கு அவர் இட்ட ஆணையையும் நினைவுகூருகிறார்.
அவர் அதை யாக்கோபுக்கு ஒரு விதிமுறையாகவும், ஆதி 17:7-8ஆதி 35:11-122 சாமு 23:5யாத் 3:17எபி 13:20ஏசா 55:3எரே 11:2யோசு 24:11-13
இஸ்ரயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி சொன்னதாவது:
“உங்களுடைய உரிமைச்சொத்தாக, ஆதி 13:15உபா 32:8எண் 26:53-56ஆதி 12:7ஆதி 17:8ஆதி 28:13-14ஆதி 35:11-12மீகா 2:5
கானான் நாட்டை நான் உனக்குக் கொடுப்பேன்.”
அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாய், உபா 7:7ஆதி 34:30எபி 11:13அப் 7:5
உண்மையிலேயே மிகச் சிலராகவும் வேற்று நாட்டினராகவும் இருந்தபோது,
அவர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், ஆதி 46:3ஆதி 46:6ஆதி 12:10ஆதி 20:1
ஒரு அரசிலிருந்து இன்னொரு அரசிற்கும் அலைந்து திரிந்தார்கள்.
அவர்களை ஒடுக்குவதற்கு அவர் யாரையும் அனுமதிக்கவில்லை; ஆதி 20:3ஆதி 12:17ஆதி 31:29யாத் 7:15-18யாத் 9:13-18ஆதி 31:24ஆதி 31:42
அவர்களுக்காக அவர் அரசர்களைக் கண்டித்துச் சொன்னதாவது:
“நான் அபிஷேகம் செய்தவர்களைத் தொடவேண்டாம்; ஆதி 20:7சங் 105:15ஆதி 49:8-101 யோவா 2:271 இராஜா 19:16ஆதி 48:19-20ஆதி 27:39-40
என் இறைவாக்கினருக்குத் தீமை செய்யவேண்டாம்.”
பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், சங் 96:1-13சங் 71:15ஏசா 51:6-8ஏசா 12:51 நாளாக 16:9சங் 30:4சங் 40:10யாத் 15:21
நாள்தோறும் அவருடைய இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்துங்கள்.
நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும், ஏசா 12:2-6சங் 22:27தானி 4:1-32இராஜா 19:19
மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள்.
ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; எரே 10:6-10சங் 66:3-5சங் 89:7வெளி 15:3-4யாத் 15:11சங் 144:3-6சங் 76:7ஏசா 40:12-17
எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே.
நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன; ஏசா 42:5ஏசா 44:24சங் 102:25ஏசா 40:26லேவி 19:41 கொரி 8:4அப் 19:26ஏசா 44:9-20
ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார்.
மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; சங் 96:6சங் 16:11சங் 28:7-8சங் 43:2-4சங் 63:2-3சங் 8:1யோவா 17:24சங் 27:4-6
வல்லமையும் மகிழ்ச்சியும் அவரது உறைவிடத்தில் இருக்கின்றன.
நாடுகளின் குடும்பங்களே, 1 கொரி 15:10பிலி 4:13சங் 100:1-22 கொரி 12:9-10எபே 1:17-19சங் 29:1-2சங் 115:1-2சங் 66:1-2
யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;
யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள்.
யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; சங் 100:4சங் 96:9ஏசா 6:3சங் 108:3-5சங் 96:6சங் 95:2சங் 29:2சங் 72:15
காணிக்கையை எடுத்துக்கொண்டு அவர்முன் வாருங்கள்.
அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்.
பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள்; எபி 1:3சங் 33:9சங் 148:5-6சங் 93:1வெளி 11:151 நாளாக 16:231 நாளாக 16:25கொலோ 1:17
உலகம் உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசையாது.
வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்; சங் 96:10சங் 97:1சங் 99:1வெளி 19:6சங் 93:1-2ஏசா 49:13சங் 98:4ஏசா 33:22
அவைகள், “யெகோவா ஆளுகை செய்கிறார்!” என்று நாடுகளுக்குள்ளே சொல்லட்டும்.
கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும்; சங் 98:7-8ஏசா 44:23சங் 148:9-10சங் 93:4
வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்!
காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும், சங் 96:12-13சங் 98:92 பேது 3:142 தெச 1:8எசேக் 17:22-24வெளி 11:17-182 தெச 1:10
அவை யெகோவாவுக்கு முன்பாக மகிழ்ந்து பாடட்டும்,
ஏனெனில் யெகோவா பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர். சங் 106:12 நாளாக 7:3எஸ்றா 3:11சங் 107:1சங் 136:1-262 நாளாக 5:13எரே 33:11சங் 118:1
அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
“இறைவனே, எங்கள் இரட்சகரே, எங்களைக் காப்பாற்றும்; சங் 106:47-481 பேது 2:9சங் 79:9-101 பேது 2:5ஏசா 43:21சங் 14:71 நாளாக 16:9-101 கொரி 1:31
பிற நாடுகளிடமிருந்து எங்களை விடுவித்து சேர்த்துக்கொள்ளும்.
அப்பொழுது நாங்கள் உமது பரிசுத்த பெயருக்கு நன்றி செலுத்தி,
உம்மைத் துதிப்பதில் மேன்மைபாராட்டுவோம்” என்று சொல்லுங்கள்.
இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு 1 இராஜா 8:15சங் 72:18-191 இராஜா 8:56நெகே 8:6எபே 1:31 கொரி 14:161 பேது 1:3எரே 28:6
நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் துதி உண்டாகட்டும்.
அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென், யெகோவாவுக்கு துதி உண்டாவதாக” என்று சொன்னார்கள்.
பின்பு தாவீது ஆசாப்பையும், அவனுடைய உதவியாளர்களையும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியின் முன்னே, அன்றாட தேவைகளுக்கேற்றபடி ஒழுங்காகப் பணிசெய்யும்படி விட்டான். 2 நாளாக 8:14எஸ்றா 3:41 நாளாக 15:17-241 நாளாக 16:4-61 நாளாக 25:1-6 அவர்களோடு சேர்த்து ஓபேத் ஏதோமையும், அவனுடைய உதவியாளர்கள் அறுபத்தெட்டுபேரையும் பணிசெய்யும்படி விட்டான். எதுத்தூனின் மகன் ஓபேத் ஏதோமும் அவனோடு ஓசாவும் வாசல் காவலர்களாக இருந்தார்கள். 1 நாளாக 26:101 நாளாக 13:141 நாளாக 25:31 நாளாக 26:4-8
தாவீது ஆசாரியன் சாதோக்கையும் அவனுடைய உதவி ஆசாரியர்களையும், கிபியோனிலுள்ள உயர்ந்த மேட்டிலே யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்திற்கு முன்பாக விட்டான். 1 இராஜா 3:41 நாளாக 15:111 நாளாக 12:281 நாளாக 21:292 நாளாக 1:132 நாளாக 1:3-4 இஸ்ரயேலுக்கு யெகோவா எழுதிக்கொடுத்த சட்டத்தின்படியெல்லாம், காலையிலும் மாலையிலும் ஒழுங்காக பலிபீடங்களில் யெகோவாவுக்கு தகன காணிக்கைகளைச் செலுத்தும்படி இவர்கள் எல்லோரையும் விட்டான். எண் 28:3-8யாத் 29:38-421 இராஜா 18:292 நாளாக 2:42 நாளாக 31:3ஆமோ 4:4தானி 9:21எசேக் 46:13-15 அவர்களோடு ஏமானும், எதுத்தூனும், பெயரின்படி தெரிந்துகொள்ளப்பட்டு நியமிக்கப்பட்ட மற்றவர்களும், “அவரது அன்பு என்றைக்கும் நிலைத்திருக்கிறது” என்று யெகோவாவுக்கு நன்றி செலுத்தும்படி இருந்தார்கள். 2 நாளாக 5:131 நாளாக 25:1-61 நாளாக 16:341 நாளாக 6:332 நாளாக 20:212 நாளாக 7:3எஸ்றா 3:11எண் 1:17 இறைவனைப் பாடும் பரிசுத்த பாடல்களுக்காக எக்காளங்களையும் கைத்தாளங்களையும் ஒலிக்கவும், மற்ற வாத்தியங்களை மீட்டவும் ஏமானும் எதுத்தூனும் பொறுப்பாக இருந்தார்கள். எதுத்தூனின் மகன்கள் வாசலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். சங் 150:3-6சங் 84:101 நாளாக 25:6-72 நாளாக 29:25-282 நாளாக 7:6
பின்பு ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள், தாவீது தன் குடும்பத்தை ஆசீர்வதிப்பதற்காக தன் வீட்டிற்குப் போனான். 2 சாமு 6:19-201 இராஜா 8:66ஆதி 18:19யோசு 24:15சங் 101:2