கோராகியரின் சங்கீதப் பாட்டு.
யெகோவா மிகவும் பெரியவர், மீகா 4:1சகரி 8:3ஏசா 2:2-3சங் 96:4சங் 46:4சங் 145:3வெளி 21:2சங் 87:3
நமது இறைவனுடைய நகரத்தில், அவருடைய பரிசுத்த மலையில்
அவர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
சீயோன் மலை தன் கம்பீரத்தில் அழகாய், சங் 50:2மத் 5:35புலம் 2:15எபி 12:22தானி 11:16எசேக் 20:6ஏசா 14:13தானி 8:9
முழு பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது,
வடதிசையின் மிக உயர்ந்த மேடுகளைப் போல இருக்கிற அது
மகா அரசரின் நகரம்.
இறைவன் அதின் கோட்டைப் பட்டணங்களில் வீற்றிருந்து, சகரி 2:4-5சங் 125:1சங் 46:7ஏசா 37:33-36ஏசா 4:5-6சங் 76:1-52 நாளாக 12:72 நாளாக 14:9-15
அவர்தாமே அதின் கோட்டை எனக் காண்பிக்கிறார்.
அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து 2 சாமு 10:6-19வெளி 17:12-14வெளி 20:8-9ஏசா 10:8ஏசா 29:5-8ஏசா 7:1ஏசா 8:8-10சங் 83:2-8
முன்னேறி வந்தபோது,
சீயோன் மலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, யாத் 14:252இராஜா 19:35-372இராஜா 7:6-7
திகிலடைந்து தப்பி ஓடினார்கள்.
அங்கே நடுக்கம் அவர்களைப் பிடித்தது; ஓசி 13:13ஏசா 13:6-8தானி 5:6யாத் 15:15-16ஏசா 21:3எரே 30:6-7
பிரசவிக்கும் பெண்ணுக்கு உண்டாகுவதைப் போன்ற வேதனை அவர்களைப் பிடித்தது.
யெகோவாவே, நீர் கிழக்குக் காற்றினால், எரே 18:171 இராஜா 22:48எசேக் 27:25-261 இராஜா 10:22ஏசா 2:16
தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறீர்.
நாம் கேள்விப்பட்டது போலவே, சங் 87:5மீகா 4:1ஏசா 2:2மத் 16:18சங் 44:1-2சங் 46:5சங் 48:1-2சங் 78:3-6
சேனைகளின் இறைவனுடைய பட்டணத்தில்,
நம்முடைய யெகோவாவின் பட்டணத்தில்
நாம் கண்டும் இருக்கிறோம்:
இறைவன் அந்தப் பட்டணத்திற்கு
என்றென்றைக்கும் பாதுகாப்பு கொடுக்கிறார்.
இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பைக்குறித்து, சங் 26:3சங் 40:10சங் 77:10-142 நாளாக 20:5-13சங் 63:2-3லூக் 22:19-20சங் 104:34உன்னத 1:4
உமது ஆலயத்தில் நாங்கள் தியானிக்கிறோம்.
இறைவனே, உமது பெயரைப் போலவே மல்கி 1:11சங் 113:3உபா 28:58ஏசா 41:10யோசு 7:9சங் 138:2-4வெளி 19:11யாத் 3:13-15
உமது துதியும் பூமியின் கடைசிவரை எட்டுகிறது;
உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.
உமது நியாயத்தீர்ப்பின் நிமித்தம் சங் 97:8வெளி 18:20வெளி 15:4வெளி 16:5-7வெளி 19:1-3லூக் 23:28சகரி 9:92 நாளாக 20:26-27
சீயோன் மலை களிகூருகிறது,
யூதாவின் கிராமங்கள் மகிழ்கிறது.
சீயோனைச் சுற்றி உலாவுங்கள்; ஏசா 33:18-20மத் 24:1-2நெகே 12:31-40
அதின் கோபுரங்களைக் கணக்கிடுங்கள்.
அவற்றைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு சங் 71:18சங் 122:7உபா 11:19யோவே 1:3சங் 78:4-6அப் 15:14-16ஆமோ 9:11ஏசா 58:12
நீங்கள் சொல்லும்படி,
அதின் காவல் அரண்களை நன்றாய் கவனியுங்கள்;
கோட்டைப் பட்டணங்களைப் பார்வையிடுங்கள்.
ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்; ஏசா 58:11சங் 23:3-4சங் 73:24சங் 25:9யோவா 16:13சங் 73:26சங் 16:2சங் 31:14
மரணம் வரையும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருப்பார்.