சகரியா 2

Zechariah 2

அளவுநூல் பிடிக்கும் மனிதன்

அதன்பின் நான் பார்த்தபோது, தன் கையில் அளவுநூலைப் பிடித்திருக்கும் ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றான். எசேக் 40:3சகரி 1:16எசேக் 40:5எசேக் 47:4வெளி 11:1வெளி 21:15சகரி 1:18 “நீ எங்கே போகிறாய்?” என நான் கேட்டேன். எசேக் 45:6எரே 31:39வெளி 21:15-17வெளி 11:1எசேக் 48:15-17சகரி 5:10எசேக் 40:3எசேக் 48:30-35

அதற்கு அவன், “எருசலேமின் நீளமும், அகலமும் என்ன என்று அறிவதற்காக அதை அளப்பதற்குப் போகிறேன் எனப் பதிலளித்தான்.”

என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதன் என்னைவிட்டுப் போனான். அப்பொழுது அவனைச் சந்திக்க வேறொரு தூதன் வந்தான். சகரி 1:19சகரி 1:13-14சகரி 1:8-11சகரி 4:5சகரி 5:5சகரி 4:1 வந்தவன் அவனிடம், “நீ ஓடிப்போய் அந்த இளைஞனிடம் சொல்லவேண்டியதாவது: ‘எருசலேம் மதில்களற்ற பட்டணமாயிருக்கும். ஏனெனில், அங்கு மக்களும் அவர்களின் ஆடுமாடுகளும் திரளாகப் பலுகி நகரத்திற்கு வெளியேயும் இருப்பார்கள். சகரி 1:17எசேக் 38:11எரே 33:22மீகா 7:11எசேக் 36:10-11ஏசா 44:26ஏசா 49:20எரே 31:27 நானே அதைச் சுற்றி அக்கினி சுவராயிருந்து, நானே அதற்குள்ளே அதன் மகிமையாகவும் இருப்பேன்’ என யெகோவா அறிவிக்கிறார்” என்றான். ஏசா 4:5சங் 3:3சகரி 9:8ஏசா 60:18-19வெளி 21:23ஏசா 12:6ஏசா 26:1-2ஏசா 33:21

“வானத்தின் நான்கு திசைகளிலும் நான் உங்களைச் சிதறடித்தேன். ஆனால் இப்போது வாருங்கள்! வாருங்கள்! வடநாட்டிலிருந்து ஓடி வாருங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். எசேக் 17:21ஏசா 48:20உபா 28:64எசேக் 11:16ஆதி 19:17ஏசா 52:11-12வெளி 18:42 கொரி 6:16-17

“இப்பொழுது வா! பாபிலோன் மகளிடத்தில் குடியிருக்கிற சீயோனே, தப்பி வா” ஏசா 48:20அப் 2:40ஆதி 19:17ஏசா 52:11எரே 51:6வெளி 18:4ஏசா 52:2எரே 50:8 சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அவர் என்னைக் மகிமைப்படுத்திய பின், உங்களைச் சூறையாடின பிற மக்களுக்கு எதிராக என்னை அனுப்பியிருக்கிறார். ஏனெனில் உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். சங் 17:8உபா 32:10யோவா 15:21-23யோவா 14:262 தெச 1:6சங் 105:13-15மத் 25:40எரே 50:17-18 நான் நிச்சயமாய் என் கையை அவர்களுக்கு எதிராக உயர்த்துவேன். அவர்களின் அடிமைகள் அவர்களைச் சூறையாடுவார்கள். அப்பொழுது சேனைகளின் யெகோவாவே என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ஏசா 19:16எசேக் 39:10ஏசா 14:2சகரி 4:9சகரி 6:15ஏசா 11:15ஏசா 13:2ஆப 2:17

“சீயோன் மகளே, சத்தமிட்டு களிகூரு; இதோ, நான் வருகிறேன். உன் மத்தியில் வாழ நான் வருகிறேன்” என யெகோவா அறிவிக்கிறார். யோவா 1:14மத் 28:20சகரி 9:9எசேக் 37:27சகரி 8:3செப்ப 3:14-152 கொரி 6:15-16ஏசா 51:11 “அந்நாளிலே அநேக நாடுகள் யெகோவாவிடம் இணைந்துகொள்வார்கள். அவர்களும் என் மக்களாவார்கள். அப்பொழுது நான் உன் நடுவில் வாழ்வேன். சேனைகளின் யெகோவாவே என்னை உன்னிடம் அனுப்பினார் என்பதை அப்பொழுது நீ அறிந்துகொள்வாய். வெளி 11:151 பேது 2:9-10அப் 28:28ஏசா 45:14லூக் 2:32சகரி 2:9-10ஏசா 19:24-25ஏசா 52:10 யெகோவா பரிசுத்த தேசத்திலே யூதாவை தம் உரிமைப் பங்காக்கி, திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார். சகரி 1:17உபா 32:9எரே 10:16சங் 33:12யாத் 19:5-6ஏசா 41:9எரே 51:19சங் 135:4 மனுக்குலமே, நீங்கள் யாவரும் யெகோவா முன்பாக அமைதியாய் இருங்கள். ஏனெனில் அவர் தம் பரிசுத்த இருப்பிடத்திலிருந்து எழுந்திருக்கிறார்.” ஆப 2:20செப்ப 1:7சங் 68:5சங் 78:65சங் 46:10செப்ப 3:8ஏசா 26:20-21ஏசா 42:13-15